கயிலையே மயிலை’ எனப் போற்றித் துதிக்கப்படும் திருமயிலையில், வீரபத்திரர் என்பவர் இருந்தார். தமிழில் மிகுந்த புலமை பெற்றவர் அவர். அருந்தமிழில் ஆர்வம் கொண்டதோடு, ஆறுமுக வள்ளலிடம் ஆழ்ந்த பக்தியும் கொண்டிருந்த அவர், அவ்வப்போது திருப்போரூர் சென்று முருகப் பெருமானைத் தரிசித்துத் திரும்புவார். வீரபத்திரர் வீட்டில் இல்லை என்றால், ‘அவர் திருப்போரூர்ல இருப்பாரு!’ என்கின்ற அளவுக்கு வீரபத்திரரின் திருப்போரூர் பக்தி பரவியிருந்தது.
அடிக்கடி சென்று ஆறுமுகனைத் தரிசித்து வந்த வீரபத்திரருக்கு, நாளடைவில் இல்வாழ்வில் வெறுப்பு உண்டானது. துறவியைப் போல வாழத் தொடங்கினார். திருப்போரூருக்குத் தரிசனம் செய்யச் சென்று வந்தவர், அங்குள்ள வள்ளையாரோடை என்னும்
சரவண தீர்த்தத்துக்கு, நீராழி மண்டபம் கட்டும் திருப்பணியைத் தொடங்கினார். அந்த நேரத்தில், ‘நந்தன வருஷப் பஞ்சம்’ என்று சொல்லும் அளவுக்கு, பஞ்சம் ஏற்பட்டது. அதன் காரணமாக வீரபத்திரர் செய்து வந்த திருப்பணி தடைபெறலாயிற்று. அது போதா தென்று, வீரபத்திரருக்கு நோயும் உண்டானது.
நோயின் கொடுமை தாங்காது, வீரபத்திரர் துயரப் பட்டபோது, ஒரு நாள் வீரபத்திரர் மனைவியும் வேறோர் பெண்மணியும் வீட்டின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் கனவில் முருகப்பெருமான் எழுந்தருளினார். உடனே விழித்தெழுந்த இருவரும், ‘ஆகா! முருகக் கடவுளே நம் கனவில் எழுந்தருளி தரிசனம் தந்திருக்கிறார். இனி மேல் வீரபத்திரருடைய நோய் நீங்கி விடும்’ என்று மகிழ்ந்தார்கள்.
ஆனால், மறுநாள் பொழுது விடிந்ததே தவிர, வீரபத்திரரின் நோய் நீங்கியபாடில்லை. தேடி வந்த அடியார் ஒருவர், ‘முருகப் பெருமானுக்குத் தொண்டு செய்வதாக உறுதிமொழி கூறுங்கள்! உங்கள் நோய் நீங்கி விடும்’ என்று கூறிச் சென்றார். வல்லார் வாச்சொல் உணர்ந்த வீரபத்திரர் அவ்வாறே செய்வதாக உறுதி கூற, விளக்கை ஏற்றியவுடன் இருள் ஓடுவதைப் போல, வீரபத்திரரின் நோய் நீங்கியது.
அக்காலத்தில், திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள் ஆதீனத்தில், முருகேசத் தம்பிரான் எனும் பெரியவர் எட்டாவது பட்டமாக எழுந்தருளி இருந்தார். அவர் தமக்குப்பின் ஆதீனத்துக்குத் தலைவராக ஒரு வரைத்தேர்ந்தெடுக்கும்படி, தம் அடியார்களுக்குக் கட்டளையிட்டார். அந்த அடியார்களுக்கு வீரபத்திரரைப் பற்றியும், அவர் செய்து வந்த திருத்தொண்டுகள் பற்றியும் நன்கு தெரியும். ஆகையால், அவ்வடியார்கள் வீரபத்திரரைத் தேடிச் சென்றார்கள். வீரபத்திரரை வணங்கி, ஆதீன கர்த்தரின் உத்தரவைச் சொல்லி, தங்கள் எண்ணத்தையும் வெளிப்படுத்தினார்கள். வீரபத்திரரோ, நீங்கள் சொல்வதை ஏற்க எம்மால் ஆகாது" என்று கூறி மறுத்து விட்டார். வந்தவர்கள் எல்லாம் வருத்தத் தோடு திரும்பினார்கள்.
ஏதோ இவர் வீம்பில் சொல்லி விட்டால் ஆயிற்றா? அன்று இரவு, வீரபத்திரர் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். அப்போது கடுமையான கனவு ஒன்று வந்தது. அதில் முருகப்பெருமான் தம் திருவடிவைக் காட்டி, அச்சுறுத்துவதாகக் கனவு கண்டார்.
அதே விநாடியில், வீரபத்திரருக்குக் கடுமையான மார்பு வலி உண்டானது. படுக்கவோ, நிற்கவோ, உட்காரவோ, பேசவோ இயலாமல் தவித்தார். அந்த அளவுக்கு மார்பு வலி அவரை ஆட்டிப்படைத்தது. வீரபத்திரர் வியப்படைந்தார். முருகா! எம்பெருமானே! உம் திருப்பணியை ஏற்க மறுத்ததற்காக இக்கொடிய நோயைக் கொடுத்தா என்னை ஆராகின்றீர்? அப்பா! உம் சொதனையில் இருந்து நாங்கள் தப்ப முடியுமா? என்னை மன்னித்து விடுமையா! உம் திருவுளப்படியேயான் வந்து, திருப்போரூரில் திருத்தொண்டு செய்து கொண்டிருப்பேன்" என்று வாய் விட்டுப் புலம்பி, தட்டுத் தடுமாறி விபூதியை எடுத்து, ஆறு முகம்! ஆறுமுகம்" என்று சொல்லி அணிந்து கொண்டார்.
அவ்வளவில் மார்பு வலி மறைந்தது. அதே சமயம் அவரை அழைப்பதற்காக வந்து தோற்றுப்போத் திரும்பியவர்கள் திருப்போரூர்
சென்று, முருகேசத் தம்பிரானைக் கண்டு, ஸ்வாமி! இங்கே நீராழி மண்டபத் திருப்பணி செய்த வீரபத்தி ரர் அவர்களைத்தான், இந்த ஆதீனத்தில் அடுத்த ஆதீனகர்த்தராக நாங்கள் முடிவு செய்து, அவரைக் கண்டு அழைத்தோம். அவரோ, ‘வர முடியாதெ’ன்று மறுத்து விட்டார். தாங்கள் ஒரு திருமுகம் விடுத்தால் வருவார் என எங்களுக்குத் தோன்றுகிறது. ஆகையால், தாங்கள் அவருக்கு ஒரு திருமுகம் விடுக்க வேண்டும்’ என நடந்ததை விவரித்து, ஆதீனகர்த்தரிடம் வேண்டினார்கள். அதன்படியே திருமுகம் அனுப்பப்பட்டது. அன்பர்கள் சிலரும் நேரே சென்று, வீரபத்திரரிடம் விவரம் சொல்லி, அவரை ஆதீனகர்த்தராகச் சம்மதிக்கச் செய்தார்கள்.
வீரபத்திரர் மயிலையில் இருந்து புறப்பட்டு, திருப்போரூர் அடைந்து, ஆதீனகர்த்தர் திருவடிகளில் வீழ்ந்து வணங்கினார். ஆதீனகர்த்தர் வீரபத்திரரிடம், யாம் முருகப்பெருமான் திருவடிகளை அடையும் காலம் நெருங்கி விட்டது. முருகப்பெருமானின் திருப்பணியைச் செய்வதற்கு நீர் உரியவராக இருக்க வேண்டும்" எனக் கூறி, வீரபத்திரருக்குத் திருமுழுக்கு செவித்து, அவருக்கு, ‘முத்துக்குமாரத் தம்பிரான்’ எனும் திருநாமமும் சூட்டினார்.
அதன்பின் சில நாட்களில் ஆதீன கர்த்தர் ஆறுமுகன் திருவடிகளை அடைய, (இனி, வீர பத்திரரை, ‘முத்துக்குமாரத் தம்பிரான்’ என்றே பார்க்கலாம்) முத்துக்குமாரத் தம்பிரான் ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டார். அதிவிரைவில் கும்பாபிஷேகமும் செய்தார். அதன்பின் புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார் என்பவரைக் கொண்டு, திருப்போரூர்த் தல புராணத்தைப் பாடல்களாகவே எழுதச் செய்து வெளியிட்டார். மேலும், அவரைக் கொண்டே, திருப்போரூர் நான்மணி மாலை, திருப்போரூர்ச் சிலேடை வெண்பா, திருப்போரூர்க் கலம்பகம், திருப்போரூர் யமக அந்தாதி, திருப்போரூர்ச் சதகம், திருப்போரூர் அலங்காரப் பஞ்சகம், பிரணவாசல சதகம், இசைப் பாடல்கள், வண்ணங்கள் எனப் பலவற்றை இயற்றச் செய்து வெளியிட்டார்.
இவ்வாறு ஆலயத்தின் பெருமைகளை வெளிப்படுத்தியதுடன், பல செல்வந்தர்களின் உதவியோடு முருகப்பெருமானுக்கும் வள்ளி- தெய்வானைக்கும் அடுக்குப் பதக்கங்கள், மகர கண்டிகை, பொன்னர் மாலை, மணிக்கடகங்கள், தலைக் கோலம், ரத்தினக் குதம்பைகள் எனப் பலவிதமான ஆபரணங்களும்; பூஜைக்கான வெள்ளிப் பாத்திரங்கள், கிளை விளக்குகள் முதலானவற்றைச் செய்து, கோயிலுக்கு வேண்டிய மற்றவைகளையும் தேடி வைத்தார்.
ஆலய நிர்வாகத்துக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்ததுடன் ஆறுமுகப்பெருமானுக்கு திருப்போரூர் வெண்பா, திருப்போரூர் அந்தாதி, திருப்போரூர் கலித்துறை அந்தாதி, பிரணவ சைல மாலை, சமரபுரி மாலை, யுத்தபுரி மாலை,
பூசாவிதிய அகவல், இசைப் பாடல்கள் என்னும் நூல் களையும் தாமே எழுதி வெளியிட்டார்.
ஆறுமுக வள்ளலால் தடுத்தாட்கொள்ளப்பட்ட இவர், தன்னைப் பிரியாது பணி செய்யும் அன்பர் ஒரு வரைத்தகுதியானவராகத் தீர்மானித்து, அவரை ஆதீன கர்த்தராக்கி, ‘சிவசங்கரத் தம்பிரான்’எனும் திருநாமம் சூட்டினார். அதன்பின் சிலகாலம் வாழ்ந்திருந்த முத்துக்குமாரத் தம்பிரான் முருகப்பெருமானின் திருவடிகளை அடைந்தார்.
அடிக்கடி சென்று ஆறுமுகனைத் தரிசித்து வந்த வீரபத்திரருக்கு, நாளடைவில் இல்வாழ்வில் வெறுப்பு உண்டானது. துறவியைப் போல வாழத் தொடங்கினார். திருப்போரூருக்குத் தரிசனம் செய்யச் சென்று வந்தவர், அங்குள்ள வள்ளையாரோடை என்னும்
சரவண தீர்த்தத்துக்கு, நீராழி மண்டபம் கட்டும் திருப்பணியைத் தொடங்கினார். அந்த நேரத்தில், ‘நந்தன வருஷப் பஞ்சம்’ என்று சொல்லும் அளவுக்கு, பஞ்சம் ஏற்பட்டது. அதன் காரணமாக வீரபத்திரர் செய்து வந்த திருப்பணி தடைபெறலாயிற்று. அது போதா தென்று, வீரபத்திரருக்கு நோயும் உண்டானது.
நோயின் கொடுமை தாங்காது, வீரபத்திரர் துயரப் பட்டபோது, ஒரு நாள் வீரபத்திரர் மனைவியும் வேறோர் பெண்மணியும் வீட்டின் உள்ளே உறங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்கள் கனவில் முருகப்பெருமான் எழுந்தருளினார். உடனே விழித்தெழுந்த இருவரும், ‘ஆகா! முருகக் கடவுளே நம் கனவில் எழுந்தருளி தரிசனம் தந்திருக்கிறார். இனி மேல் வீரபத்திரருடைய நோய் நீங்கி விடும்’ என்று மகிழ்ந்தார்கள்.
ஆனால், மறுநாள் பொழுது விடிந்ததே தவிர, வீரபத்திரரின் நோய் நீங்கியபாடில்லை. தேடி வந்த அடியார் ஒருவர், ‘முருகப் பெருமானுக்குத் தொண்டு செய்வதாக உறுதிமொழி கூறுங்கள்! உங்கள் நோய் நீங்கி விடும்’ என்று கூறிச் சென்றார். வல்லார் வாச்சொல் உணர்ந்த வீரபத்திரர் அவ்வாறே செய்வதாக உறுதி கூற, விளக்கை ஏற்றியவுடன் இருள் ஓடுவதைப் போல, வீரபத்திரரின் நோய் நீங்கியது.
அக்காலத்தில், திருப்போரூர் சிதம்பர ஸ்வாமிகள் ஆதீனத்தில், முருகேசத் தம்பிரான் எனும் பெரியவர் எட்டாவது பட்டமாக எழுந்தருளி இருந்தார். அவர் தமக்குப்பின் ஆதீனத்துக்குத் தலைவராக ஒரு வரைத்தேர்ந்தெடுக்கும்படி, தம் அடியார்களுக்குக் கட்டளையிட்டார். அந்த அடியார்களுக்கு வீரபத்திரரைப் பற்றியும், அவர் செய்து வந்த திருத்தொண்டுகள் பற்றியும் நன்கு தெரியும். ஆகையால், அவ்வடியார்கள் வீரபத்திரரைத் தேடிச் சென்றார்கள். வீரபத்திரரை வணங்கி, ஆதீன கர்த்தரின் உத்தரவைச் சொல்லி, தங்கள் எண்ணத்தையும் வெளிப்படுத்தினார்கள். வீரபத்திரரோ, நீங்கள் சொல்வதை ஏற்க எம்மால் ஆகாது" என்று கூறி மறுத்து விட்டார். வந்தவர்கள் எல்லாம் வருத்தத் தோடு திரும்பினார்கள்.
அதே விநாடியில், வீரபத்திரருக்குக் கடுமையான மார்பு வலி உண்டானது. படுக்கவோ, நிற்கவோ, உட்காரவோ, பேசவோ இயலாமல் தவித்தார். அந்த அளவுக்கு மார்பு வலி அவரை ஆட்டிப்படைத்தது. வீரபத்திரர் வியப்படைந்தார். முருகா! எம்பெருமானே! உம் திருப்பணியை ஏற்க மறுத்ததற்காக இக்கொடிய நோயைக் கொடுத்தா என்னை ஆராகின்றீர்? அப்பா! உம் சொதனையில் இருந்து நாங்கள் தப்ப முடியுமா? என்னை மன்னித்து விடுமையா! உம் திருவுளப்படியேயான் வந்து, திருப்போரூரில் திருத்தொண்டு செய்து கொண்டிருப்பேன்" என்று வாய் விட்டுப் புலம்பி, தட்டுத் தடுமாறி விபூதியை எடுத்து, ஆறு முகம்! ஆறுமுகம்" என்று சொல்லி அணிந்து கொண்டார்.
அவ்வளவில் மார்பு வலி மறைந்தது. அதே சமயம் அவரை அழைப்பதற்காக வந்து தோற்றுப்போத் திரும்பியவர்கள் திருப்போரூர்
சென்று, முருகேசத் தம்பிரானைக் கண்டு, ஸ்வாமி! இங்கே நீராழி மண்டபத் திருப்பணி செய்த வீரபத்தி ரர் அவர்களைத்தான், இந்த ஆதீனத்தில் அடுத்த ஆதீனகர்த்தராக நாங்கள் முடிவு செய்து, அவரைக் கண்டு அழைத்தோம். அவரோ, ‘வர முடியாதெ’ன்று மறுத்து விட்டார். தாங்கள் ஒரு திருமுகம் விடுத்தால் வருவார் என எங்களுக்குத் தோன்றுகிறது. ஆகையால், தாங்கள் அவருக்கு ஒரு திருமுகம் விடுக்க வேண்டும்’ என நடந்ததை விவரித்து, ஆதீனகர்த்தரிடம் வேண்டினார்கள். அதன்படியே திருமுகம் அனுப்பப்பட்டது. அன்பர்கள் சிலரும் நேரே சென்று, வீரபத்திரரிடம் விவரம் சொல்லி, அவரை ஆதீனகர்த்தராகச் சம்மதிக்கச் செய்தார்கள்.
அதன்பின் சில நாட்களில் ஆதீன கர்த்தர் ஆறுமுகன் திருவடிகளை அடைய, (இனி, வீர பத்திரரை, ‘முத்துக்குமாரத் தம்பிரான்’ என்றே பார்க்கலாம்) முத்துக்குமாரத் தம்பிரான் ஆலயத் திருப்பணிகளை மேற்கொண்டார். அதிவிரைவில் கும்பாபிஷேகமும் செய்தார். அதன்பின் புரசை அட்டாவதானம் சபாபதி முதலியார் என்பவரைக் கொண்டு, திருப்போரூர்த் தல புராணத்தைப் பாடல்களாகவே எழுதச் செய்து வெளியிட்டார். மேலும், அவரைக் கொண்டே, திருப்போரூர் நான்மணி மாலை, திருப்போரூர்ச் சிலேடை வெண்பா, திருப்போரூர்க் கலம்பகம், திருப்போரூர் யமக அந்தாதி, திருப்போரூர்ச் சதகம், திருப்போரூர் அலங்காரப் பஞ்சகம், பிரணவாசல சதகம், இசைப் பாடல்கள், வண்ணங்கள் எனப் பலவற்றை இயற்றச் செய்து வெளியிட்டார்.
இவ்வாறு ஆலயத்தின் பெருமைகளை வெளிப்படுத்தியதுடன், பல செல்வந்தர்களின் உதவியோடு முருகப்பெருமானுக்கும் வள்ளி- தெய்வானைக்கும் அடுக்குப் பதக்கங்கள், மகர கண்டிகை, பொன்னர் மாலை, மணிக்கடகங்கள், தலைக் கோலம், ரத்தினக் குதம்பைகள் எனப் பலவிதமான ஆபரணங்களும்; பூஜைக்கான வெள்ளிப் பாத்திரங்கள், கிளை விளக்குகள் முதலானவற்றைச் செய்து, கோயிலுக்கு வேண்டிய மற்றவைகளையும் தேடி வைத்தார்.
ஆலய நிர்வாகத்துக்குச் செய்ய வேண்டியவற்றைச் செய்ததுடன் ஆறுமுகப்பெருமானுக்கு திருப்போரூர் வெண்பா, திருப்போரூர் அந்தாதி, திருப்போரூர் கலித்துறை அந்தாதி, பிரணவ சைல மாலை, சமரபுரி மாலை, யுத்தபுரி மாலை,
பூசாவிதிய அகவல், இசைப் பாடல்கள் என்னும் நூல் களையும் தாமே எழுதி வெளியிட்டார்.
ஆறுமுக வள்ளலால் தடுத்தாட்கொள்ளப்பட்ட இவர், தன்னைப் பிரியாது பணி செய்யும் அன்பர் ஒரு வரைத்தகுதியானவராகத் தீர்மானித்து, அவரை ஆதீன கர்த்தராக்கி, ‘சிவசங்கரத் தம்பிரான்’எனும் திருநாமம் சூட்டினார். அதன்பின் சிலகாலம் வாழ்ந்திருந்த முத்துக்குமாரத் தம்பிரான் முருகப்பெருமானின் திருவடிகளை அடைந்தார்.
Comments
Post a Comment