- Get link
- X
- Other Apps
சென்னைக்கு மிகத் தொன்மையான ஆன்மிக வரலாறு உண்டு. சோழர்களும், பல்லவர்களும் ஏராளமான கோயில்களை இந்த மண்ணில் நிர்மானித்தார்கள். ஏராளமான மகான்கள் இந்த மண்ணில் பிறந்திருக்கிறார்கள். எங்கே பிறந்து, இங்கு வந்து ஜீவசமாதி அடைந்திருக்கிறார்கள். அப்படியான 9 மகான்களைப் பற்றிய தரிசனம்தான், இந்தக் கட்டுரை.
கலிய நாயனார்
பெயர் | கலிய நாயனார் |
காலகட்டம் | 8-ம் நூற்றாண்டுக்கு முன்னர் பிறந்தவர் |
பிறப்பு | திருவொற்றியூர் |
சிறப்பு | தினமும் திருவொற்றியூர் தியாகராஜ பெருமானுக்கு விளக்கேற்றும் கைங்கரியத்தைச் செய்து வந்தவர் கலிய நாயனார். இதனால் செல்வம் முழுக்க கரைந்தது. மனம் கலங்கிய கலிய நாயனார், தனது திருவிளக்குச் சேவையைத் தொடர எண்ணி எண்ணெய்க்குப் பதில் தன் ரத்தத்தை ஊற்றி விளக்கேற்ற முனைந்து ஈசனோடு கலந்ததாக இவரது வரலாறு சொல்கிறது. |
முக்தி பெற்ற இடம் | திருவொற்றியூர் |
மூர்க்க நாயனார்
பெயர் | மூர்க்க நாயனார் |
காலகட்டம் | எட்டாம் நூற்றாண்டுக்கு முந்தியவர். |
பிறப்பு | சென்னை திருவேற்காட்டில் பிறந்தவர் |
சிறப்பு | எந்த சூழலிலும் இறை அடியார்களுக்கு உணவிடுவதை நிறுத்தாதக் கொள்கை கொண்டவர். செல்வம் எல்லாம் இழந்தபிறகும் சூதாடி பெற்ற பொருளைக்கொண்டு அடியார்களுக்கு அமுது படைத்தவர். கோபத்தில் ஆழ்ந்து போகக்கூடியவர் என்பதால் மூர்க்க நாயனார் என்று அழைக்கப்படுகிறார். கார்த்திகை மாத மூல நட்சத்திர நாளில் இவரது குருபூஜை தினம் கொண்டாடப்படுகிறது. |
முக்தி பெற்ற இடம் | கும்பகோணம் |
வால்மீகி முனிவர்
பெயர் | வால்மீகி முனிவர் |
காலகட்டம் | கி.மு. 4-ம் நூற்றாண்டு |
பிறப்பு | உத்தப்பிரதேசத்தின் கான்பூர் அருகே உள்ள பித்தூர் என்று சொல்லப்படுகிறது. |
சிறப்பு | ராமாயணம் எழுதியதோடு மட்டும் இல்லாமல் ராமரின் பிள்ளைகளான லவன், குசனை தனது ஆசிரமத்தில் வளர்த்தார் என்றும் கூறப்படுகிறது. சிவபக்தி கொண்ட வால்மீகி முனிவர் தனது இறுதிக்காலத்தில் புற்றில் இருந்த சிவனை வணங்கி முக்தி அடைந்தார் என்றும், அவர் முக்தி பெற்ற இடம் திருவான்மியூர் என்றும் சொல்லப்படுகிறது. திருவான்மிகியூரே பிற்காலத்தில் திருவான்மியூர் ஆனது, கிழக்கு கடற்கரை சாலையில் இவருக்கு தனிக்கோயில் உள்ளது. |
முக்தி பெற்ற இடம் | திருவான்மியூர் |
பாம்பன் ஸ்வாமிகள்
பெயர் | பாம்பன் ஸ்வாமிகள் |
காலகட்டம் | 1848-ம் ஆண்டு - 1929-ம் ஆண்டு வரை |
பிறப்பு | ராமேஸ்வரம் |
சிறப்பு | பிரப்பன்வலசை என்ற இடத்தில் நிஷ்டையில் இருந்த இவருக்கு முருகப்பெருமான் காட்சி தந்து அருள் செய்தார். ஆன்மமிக குருவாகவும் கவிகள் இயற்றும் புலவராகவும் எண்ணற்ற மக்களுக்கு வேண்டியதை அருளும் ஞானியாகவும் விளங்கி வருகிறார். |
முக்தி பெற்ற இடம் | திருவான்மியூர் |
சக்கரை அம்மாள்
பெயர் | சக்கரை அம்மாள் |
காலகட்டம் | 1854-ம் ஆண்டு - 1901-ம் ஆண்டு வரை |
பிறப்பு | திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகேயுள்ள தேவிகாபுரம். |
சிறப்பு | இளம்வயதிலேயே கணவனை இழந்து துன்பப்பட்ட அனந்தாம்பாள் என்ற சாமானியப்பெண், ஞானியர்கள் தொடர்பால் பல சக்திகள் பெற்று தெய்வ நிலையை அடைந்தார். ஸ்ரீசக்கர வழிபாட்டை செய்ததால் சக்கரை அம்மாள் என்று மருவி இன்றும் பக்தர்களுக்கு வழிகாட்டி வருகிறார். |
முக்தி பெற்ற இடம் | சென்னை திருவான்மியூர் |
பேயாழ்வார்
பெயர் | பேயாழ்வார் |
காலகட்டம் | ஐந்தாம் நூற்றாண்டுக்கு முந்தியவர் என்கிறார்கள். சரியான காலகட்டம் சொல்லப்படவில்லை |
பிறப்பு | மயிலாப்பூர் கச்சேரி சாலை அருகே |
சிறப்பு | திருமாலின் நந்தகம் என்ற வாளின் அம்சமாக பிறந்த முதலாழ்வார்களில் முக்கியமானவர் பேயாழ்வார். மூத்தப்பாசுரமான மூன்றாம் திருவந்தாதியைப் பாடியவர் இவர். பூதத்தாழ்வார், பொய்கையாழ்வார் காலத்தில் வாழ்ந்தவர். இந்த மூவரும்தான் நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களை ஆரம்பித்து வைத்த பெரியோர்கள். |
முக்தி பெற்ற இடம் | சரியான இடம் அறியப்படவில்லை. |
வாயிலார் நாயனார்
பெயர் | வாயிலார் நாயனார் |
காலகட்டம் | எட்டாம் நூற்றாண்டுக்கு முந்தியவர் |
பிறப்பு | மயிலாப்பூர் |
சிறப்பு | சுந்தரரின் திருத்தொண்டத்தொகையும், பெரியபுராணமும் போற்றிய நாயன்மார் இவர். சிவனைத் தியானித்து சிறப்பான பேறுபெற்றவர். கபாலீஸ்வரர் ஆலயத்தில் இவருக்குத் தனி சந்நிதி அமைந்துள்ளது. மார்கழி மாத ரேவதி நட்சத்திர நாளில் இவரது குருபூஜை தினம் கொண்டாடப்படுகிறது |
முக்தி பெற்ற இடம் | மயிலாப்பூர் |
சேக்கிழார்
பெயர் | சேக்கிழார் |
காலகட்டம் | 12-ம் நூற்றாண்டுக்கு முன்னர் பிறந்தவர் |
பிறப்பு | குன்றத்தூர் |
சிறப்பு | அநபாய சோழரின் அமைச்சராக இருந்த சேக்கிழார் தான் சைவ சமயத்தின் பன்னிரெண்டாம் திருமுறையான பெரிய புராணத்தை இயற்றியவர். அதற்கு சிவனே "உலகெலாம்" என்று முதல் அடி எடுத்துக்கொடுத்தார். சோழ அரசன் இவரை யானையின் மீது ஏற்றி, வெண் சாமரம் வீசி இந்த புராணத்தை அரங்கேற்ற செய்தார் என்பது சிறப்பானது. |
முக்தி பெற்ற இடம் | குன்றத்தூர் |
பூசலார் நாயனார்
பெயர் | பூசலார் நாயனார் |
காலகட்டம் | 8-ம் நூற்றாண்டுக்கு முன்னர் பிறந்தவர் |
பிறப்பு | திருநின்றவூர் |
சிறப்பு | அல்லும் பகலும் சிவனையே எண்ணி வாழ்ந்த பூசலார், தனது ஊரில் சிவனுக்கான கோயில் கட்ட எண்ணினார். பொருள் வசதி இல்லாதால் மனதிலேயே படிப்படியாகக் கட்டத்தொடங்கினார். அதேவேளையில் பல்லவ மன்னன் காடவர்கோன் பிரமாண்டமாக ஒரு கோயிலைக் கட்டி முடித்தான். ஆனால் கோயிலின் கும்பாபிஷேக தினத்துக்கு வரமுடியாது என்றும், அதே நாளில் பூசலாரின் கோயிலுக்கு செல்ல இருப்பதாகவும் ஈசன் கூறினார். வியந்து போன, காடவர் கோன் திருநின்றவூர் வந்து பூசலாரின் பாதம் பணிந்து பரவசமடைந்தான். திருநின்றவூர் ஹிருதயவிலாசர் ஆலயத்தின் கருவறையில் ஈசனுக்கு அருகிலேயே பூசலார் இருப்பது சிறப்பு. |
முக்தி பெற்ற இடம் | திருநின்றவூர் |
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment