தலைப்பாகையை துறந்த ராமானுஜர்

ஜாதி வித்தியாசம் பாராமல் திட சித்தமுள்ளவராக இருந்து உலகில் இணையற்ற ஒரு மதத்தை ஸ்தாபித்து அருளிய ராமானுஜர் தலைப்பாகை துறந்த காரணத்தை பார்க்கலாம்.
தலைப்பாகையை துறந்த ராமானுஜர்
பருத்திக்கொல்லை நாச்சியார் என்ற பெண் பரம ஏழை. ஆனால் பக்தி மணம் கமழும் குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒருநாள் அந்த ஊரின் வீதிவழியே ராமானுஜர் வந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு வீட்டிலிருந்தும் பெண்கள் வெளியே வந்து அவரை சேவித்தனர்.

நாச்சியாருக்கு சேவிக்க ஆர்வம் இருந்தும் மாற்றுடை இல்லாத காரணத்தால் குளியல் அறையிலேயே வருத்தத்துடன் இருந்தார். இதைக் குறிப்பால் உணர்ந்த எம் பெருமானார் தன் தலைப்பாகையை கழற்றி வீட்டின் உள்ளே வீசினார்.

அதை எடுத்து நாச்சியார் சேலைபோல் உடுத்திக்கொண்டு ராமானுஜரை சேவித்தார். அன்றிலிருந்து ராமானுஜர் தன் தலைப்பாகையை துறந்தார் என்று கூறுவர்.

சக்தி வழிபாட்டுக்குரிய முக்கியமான விரதம்

Comments