தமிழகத்தில் உள்ள பல பெரிய முக்கிய அம்மன் கோவில்கள் பற்றி அனைவரும் அறிந்ததே, அறியாத சில வித்தியாசமான அம்மன்களை இந்த ஆடி மாதத்தில் அறிந்து வணங்குவோம்.
ஆடிமாதம் அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். தமிழகம் முழுவதும் ஏராளமான அம்மன் கோவில்கள் இருக்கின்றன. அனைத்து அம்மன்களும் தன்னை அண்டி வரும் பக்தர்களுக்கு நற்பலன்களை அள்ளி வழங்குகின்றன. தமிழகத்தில் உள்ள பல பெரிய முக்கிய அம்மன் கோவில்கள் பற்றி அனைவரும் அறிந்ததே, அறியாத சில வித்தியாசமான அம்மன்களை இந்த ஆடி மாதத்தில் அறிந்து வணங்குவோம்.
சயன கோலத்தில் அருள்பாலிக்கும் மாசாணி அம்மன்
அம்மன்கள் அனைவரும், நின்ற கோலத்திலும், அமர்ந்த கோலத்திலும் அருள் பாலிப்பர். ஆனால் மிக வித்தியாசமான வடிவில் சயன கோலத்தில் 15 அடி உயரத்தில் அருள் புரிகிறாள். மாசாணி அம்மன் என்ற பெயரில் அற்புத அன்னையாய் ஆனைமலையில் மல்லாந்து படுத்து பக்தர்களுக்கு காட்சி தருகிறாள். பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ தொலைவில் உள்ள ஆனைமலையில் உப்பாற்றங்கரையில் கோவில் கொண்டுள்ளாள் மாசாணி அம்மன்.
நான்கு கரத்துடன், கரங்களில் திரிசூலம், முரசு, அறவம் மற்றும் மண்டையோடு தாங்கி சயன கோலத்தில் படுத்திருக்கிறாள். வேண்டுவோர்க்கு வேண்டிய அருளும், தீய சக்திகள் மற்றும் தீயவர்களிடம் இருந்து காக்கும் நீதி தேவதையாகவும் அருள்புரிகிறாள். பக்தர்கள் வேண்டுதலை ஒரு துண்டு சீட்டில் எழுதி மாசாணி அம்மன் பாதத்தில் சமர்ப்பித்தால் அவை நிறைவேறி விடுகிறது.
மேலும் இங்குள்ள நீதிக்கல் எனும் சக்தியின் சொரூபத்தில் மிளகாய் அரைத்து பூசி வேண்டி கொண்டால் உடனே அந்த குறைகளை நிவர்த்தி செய்கிறாள் மாசாணி அம்மன்.
நான்கு முகத்துடன் காட்சி தரும் தில்லைக்காளி
சிதம்பரத்தில் உள்ள தில்லை காளி கோவிலில் உக்கிர கோலத்துடன் தில்லை காளி கிழக்கு நோக்கி அருள் புரிகிறாள். மேற்கு நோக்கி நான்கு முகத்துடன் பிரம்ம சாமூண்டீஸ்வரி சாந்த சொரூபிணியாக அருள்புரிகிறாள்.
வித்தியாசமான வடிவில் நான்கு முகத்துடன் அம்மன் அருள் பாலிப்பது இங்கு மட்டும் தான். இக்கோவிலில் “வீணை வித்யாம்பிகை” என சரஸ்வதி தேவியும், “கடம்பவன தஷ்ணரூபிணி” என பெண் தட்சிணாமூர்த்தியாகவும் அருள்வது கூடுதல் சிறப்பு. தில்லை காளியான பிரம்ம சாமூண்டிஸ்வரியை தினமும் அபிஷேகம் செய்து வணங்களாம். மக நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு தில்லை காளி தான் ஆதி தேவதை.

Comments
Post a Comment