மலைக்குள் அருளும் மத்தளேஸ்வரர்!

அல்லல் போக்கும் அரன் குடிகொண்டுள்ள எண்ணற்ற தலஙகளுள் ஒன்று மேலச்சேரி.
ஊரின் வடபால் உள்ளது. சன்னியாசி ஏரி. இதன் நடுவே இயற்கையாக அமைந்துள்ளது மிருதங்கபர்வதம் என்னும் மத்தளமலை மேற்கு பார்த்த இம்மலையின் மேற்புறம் முருகன் ஆலயம் ஒன்றுள்ளது. கீழ்புறம் மேற்கு முகமாக கலைப்பொக்கிஷமாகத் திகழ்கிறது. மத்தளேஸ்வரர் ஆலயம்.
மிருதங்க பர்வதம் என்னும் மத்தள மலையின் நடுவே குடையப்பட்டு குடவரைக் கோயிலாக இச்சிவாலயம் அமைக்கப் பட்டுள்ளது. மத்தள மலையின் மையத்தில் இறைவன் அருள்பாலிப்பதால் இவருக்கு மத்தளேஸ்வரர் என்ற திருபபெயர் வழங்குகிறது.
தமிழகத்தில் எண்ணற்றக் குடைவரைக் கோயில்களை உருவாக்கிய பெருமை விசித்திரசித்தன் என்று வர்ணிக்கப்பட்ட மதலாம் மகேந்திரவர்ம பல்லவனுக்க உண்டு. கி.பி. 7ம் நூற்றாண்டில் தொண்டை நாட்டின் பெரும் பகுதியை ஆட்சிபுரிந்தவன் இவன். அவனது வம்சாவளியில் வந்த சிங்கபுரத்து சந்திராதித்தியன் என்பவன் இங்கு குடைவரைக் கோயிலைக் கட்டி.,
'ஸ்ரீ சிகாரி பல்லவேஸ்வரம்' என்று பெயரிட்டுள்ளான்.
இம்மன்னன் காலத்து கிரந்த எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு ஒன்று இங்கு காணப்படுகிறது. சிவாலயம் அமைத்திட்ட மன்னன். இத்தலத்துக்கு அருகே சிங்கவரம் ரங்கநாதர் ஆலயத்தையும் குடைவரைக் கோயிலாக அமைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது. இன்றும் இவ்விரு குடைவரை ஆலயங்களும் சைவ-வைணவ ஒற்றுமையை செவ்வனே பறைசாற்றுகின்றன.
சிம்மபுரம் என்றழைக்கப்பட்ட செஞ்சி மலை மீது கோட்டை அமைத்து, செஞ்சியை ஆண்ட குறுநில மன்னனான தேசிங்குராஜா, சிங்கவரம் ரங்கநாதரோடு இம்மேலச்சேரி மத்தளேஸ்வரரையும் வழிபடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தான். அதோடு திருப்பணிகள் பலவும் இங்கு செய்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆலயத்தின் வெளியே ஏரியில் நீராழி மண்டபம் உள்ளது. முன்புறம் பிற்காலத்தில் கட்டப்பட்ட கல்மண்டபம் ஒன்றும் காணப்படுகிறது. சன்னதிக்கு நேராக பதினெட்டு அடி உயரம் கொண்ட கல்லால் ஆன தீபஸ்தம்பம் உள்ளது. சதங்கை மாலையணிந்து, கால்களை மடக்கி அமர்ந்தபடி கம்பீரமாகக் காட்சியளிக்கிறார் நந்திதேவர். இவரின் கீழே சிவலிங்கம் ஒன்றும் அரிதாய்க் காணப்படுகின்றது.
மகா மண்டபம், இடை மண்டபம், கருவறை என்கிற அமைப்பில் அமைக்கப்பட்டுள்ளது இந்தக் குடைவரைக் கோயில்.
கருவறையில் ஐந்து அடி உயரம், கொண்ட பாணமும், ஏழு அடி சுற்றளவில், எட்டுக் கோணத்தில் ஆன ஆவுடையாரும் கொண்ட அற்புத லிங்கத் திருமேனியராக அருடகாட்சி அளிக்கிறார். மத்தளேஸ்வரர். கருணாகரப் பெருமானின் கம்பீர தோற்றம் கண்டு மனம் பூரிப்படைகின்றனது. கருவறையின் விதானத்தில் தாமரை மலர் ஒன்று அழகுற புடைக்கப்பட்டுள்ளது.
இடை மண்டபத்தின் வலப்பறம் உள்ள பாறையில் அழகிய புடைப்புச் சிற்பமாக அருள்மழை பொழிகின்றாள் அன்னை பிரகன் நாயகி. தலையில் நீண்ட கிரீடம், காதுகளில் மகர குண்டலங்கள், வலது கரத்தில் தாமரை மலரேந்தி எழில் சிந்துகிறாள். தரிசிக்கையில் தண் என்ற அருள் நம்மைக் குளிர்விப்பதை உணர முடிகிறது. இடதுபுறம் வள்ளி தெய்வானையுடன் சண்முகர் வீற்றருள்கின்றார். அருகே பலகைக் கல்லில் அர்த்த பத்மாசனத்தில் அமர்ந்து அருள்புரியும் தல கணபதி கவினுற வடிக்கப்பட்டுள்ளார்.
பைரவர், சண்டிகேஸ்வரர், விஷ்ணு பாதம் ஆகிய சிலாரூபங்களும் இங்கு காணப்படுகின்றன. அற்புதமான ஆலயம் எனினும் காலக்கரங்களால் சிதைக்கப்பட்டுள்ளதைக் காணும்போது கண்கள் தாமாகவே கசிகின்றன.
ஆண்டுதோறும் கார்த்திகை தீபத்தன்று சிறப்பு அபிஷேக, அலங்காரங்கள் நடைபெறுகின்றன. மாசி சிவராத்திரியும் விசேஷமாகக் கொண்டாடப்படுகின்றன. பிரதி மாத பிரதோஷமும், பௌர்ணமியில் கிரிவலமும் சிறப்புற அனுஷ்டிக்கப்படுகின்றன.
இங்கு சுவாமி, அம்பாளுக்கு அபிஷேக, ஆராதனை செய்து, அகல் விளக்கேற்றி பிரார்த்தனை செய்தால், அனைத்து துயரங்களும் நீங்கி, வாழ்வில் முன்னேற்றம் காணலாம். அதோடு சகல சௌபாக்கியங்களும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.
எங்கே இருக்கு: விழுப்புரம் மாவட்டம், செஞ்சியிலிருந்து வடமேற்கே 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மேலச்சேரி. செஞ்சியிலிருந்து இங்கு வர பஸ் மற்றும் ஆட்டோ வசதியுள்ளது.
தரிசன நேரம்: காலை 10 மணி

Comments