மனதின் தொழில், நினைப்பதாகும். புலன் உணர்வு சார்பான பொருளை நீங்கள் அதற்கு அளித்தால் மனது அதைப் பற்றியேதான் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்...
நியாமல் அலையடித்து ஆர்ப்பரிக்கும் கடலைப் போன்றதல்லவா மனித மனம்? எப்போதும் எதையோ தேடி அலையும் இவ்வுலக வாழ்க்கையில் மனமும் அலைபாந்து கொண்டேதான் இருக்கிறது. மனதை அடக்கத்தான், ‘தியானம்’ செய்யச் சொல்கிறார்கள். ஓர் அமைதியான இடத்தில் அமர்ந்து மனதையே உற்று கவனிக்கச் சொல்கிறார்கள். மனத்தில் மிதந்து வரும் எண்ணங்களோடு நம்மை சம்பந்தப்படுத்திக் கொள்ளாமல் வெறுமனே வேடிக்கை பார்க்கச் சொல்கிறார்கள். மெதுமெதுவாக எண்ண ஓட்டம் குறைய ஆரம்பித்து எண்ணமற்ற நிலை சாத்தியப்படும்போது ஓரிரு கணங்கள் மனது அடங்குகிறது. இந்த நிலையும் எல்லோருக்கும் கைகூடி விடுவதில்லை.
இப்பொழுதெல்லாம் பாதுகாப்பு இல்லாத கட்டடங்கள் இல்லை. யாரும் லேசில் எங்கேயும் நுழைந்து விட முடியாது. உள் வாயிலில் நாகள் நடை பயின்று கொண்டிருக்கும். முதலில் ஒரு வாயிற் காப்பாளர் இருப்பார். ‘எந்த இலக்கம் கொண்ட வீட்டுக்கு நீங்கள் செல்ல வேண்டும்?’ என்று விசாரிப்பார். பிறகே, வாசலின் பிரதானக் கதவு திறக்கும். சில சமயங்களில் ஒரு ‘ரிஜிஸ்டரில்’ கையெழுத்துப் போட வேண்டியிருக்கும். இதைத் தவிர, கண்காணிப்பு கேமிராக்கள் இயங்கிக் கொண்டிருக்கும். பிறகு குறிப்பிட்ட ‘ப்ளாட்’டின் வாயிலில் உள்ள அழைப்பு மணியை அழுத்தினால் உள்ளேயிருந்து ‘கண்’ வடிவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி வழியே வெளியே நிற்பது யார் என்று கண்டறிந்து பிறகே தாழ்திறக்கும்.
பிரபலங்கள் வாழும் வீடானால் முதலில் காரிய தரிசியைத்தான் சந்திக்க முடியும். அவர் வந்திருப்பவர் அவசியம் தன் எஜமானரை சந்திக்க வேண்டுமா என்று முடிவு செய்து, பின்பே எஜமானரிடம் செய்தி சொல்வார். தன் வீட்டுக்குள் யாரும் தேவையில்லாமல் நுழைந்து விடக்கூடாது என்று இத்தனை பாதுகாப்பு வளையங்கள் அமைத்து எச்சரிக்கையாக வாழும் மனிதர்கள், தங்கள் மனதுக்குள் தேவையில்லாத எண்ணங்கள் நுழையாதிருக்க என்ன பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கிறார்கள்?
சத்குரு ஷீர்டி சாபாபா அவர்கள், ‘மனித மனம் ஓடித் திரியும் இயல்புடையது’ என்கிறார். மனம் புறத்தே தாவி ஓடும் தன்மையுடையது. நாம் நம்மையே கவனித்துப் பார்த்தோமானால் நாம் ஏதோ வேலையில் ஈடுபட்டிருப்போம். கைகள்தான் அந்த வேலையை செய்து கொண்டிருக்குமே தவிர, மனம் எங்கோ தொலைவில் அமெரிக்காவில் உள்ள பிள்ளை யைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும். அல்லது யாரிடமோ ஏற்பட்ட வாக்குவாதத்தில் நம் பக்கம் உள்ள நியாயம், எதிராளி பக்கம் உள்ள அநியாயம் என்று எதையெதையோ நினைத்துப் பொருமிக் கொண்டிருக்கும். பத்து வருடத்துக்கு முன்பு ஏற்பட்ட ஒரு சொக நிகழ்வு அல்லது நாளைக்கு நடக்கப்போகும் ஒன்றைப் பற்றிய கவலை என்று கால வித்தியாசங்களைக் கடந்து தாவித் தாவிச் சென்று கொண்டிருக்கும். மனதுக்குள் எண்ணங்கள் புகாமல் பார்த்துக் கொண்டால் இவற்றைத் தவிர்த்து விடலாமே என்கிறீர்களா? அது சரி! நாமென்ன மனதுக்கு வாயிற் காப்பாளனையா நியமித்திருக்கிறோம், எண்ணங்களைத் தடுக்க?
சத் சரித்திரத்தில் சாயி சொல்கிறார், ‘மனதின் தொழில் நினைப்பதாகும். புலன் உணர்வு சார்பான பொருளை நீங்கள் அதற்கு அளித்தால் மனது அதைப் பற்றியேதான் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்.’ பக்தர்கள் கேட்கிறார்கள், ‘இதை சரிசெய்ய முடியாதா பாபா?’ என்று! ‘நிச்சயமாக முடியும்’ என்கிறார் சாயி. மிகவும் சுலபமாக ஒரு வழியைக் காட்டுகிறார். ‘உங்கள் மனதுக்குத் தீனியாக சாயியைக் கொடுத்து விடுங்கள்’ என்கிறார்.
சத் சரித்திரத்தில் ஸ்ரீ ஹேமத்பந்த் சொல்கிறார், ‘மனதுக்கு குருவை அளித்து விட்டீர்களானால், அது குருவைப் பற்றியே எண்ணமிட ஆரம்பித்து விடும். இதுவே, மிக எளிமையான வழியாகும்.’
‘இல்லை! என்னால் முடியவில்லை. மனம் அலை பாந்து கொண்டேதான் இருக்கிறது’ என்று இயலாமையில் தவிப்பவர்கள் எத்தனை பேர்? மனதுக்குள் கெட்ட எண்ணங்கள் புக விடாமல் பார்த்துக் கொள்வதோ, அதன் தொடர்ச்சியான பாவ காரியங்கள் செய்யாமல் இருப்பதோ எல்லோருக்கும் இயலுமா?
‘ஆமாம்! இயலும். அதற்கு வழியிருக்கிறது’ என்கிறார் பாபா. ஒரு முறை ஷீர்டிக்கு ரோஹில்லா என்கிற ஒரு முரட்டு மனிதன் வந்தான். பாபாவின் நற்குணங்களின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு அவன் அங்கேயே தங்கி விட்டான். அவன் திடகாத்திரமான சரீரம் படைத்தவன். உடலில் முழங்கால் வரை எட்டும் கஃப்னி உடுத்தியிருந்தான். எவர் சொல்லும் கேட்காத பிடிவாத குணம் படைத்தவன். சாயி பாபாவிடம் மட்டற்ற அன்பு கொண்டிருந்த அவன், விருப்பப்பட்ட போதெல்லாம், அது பகலோ, இரவோ, மசூதியோ அல்லது சாவடியோ நினைத்த இடத்தில் உட்கார்ந்து குரானை ஓதி, உரக்கக் கத்து வான். அவன் குரலோ கர்ண கடூரமாக இருக்கும். அவனுக்குத் தன் குரல் இனிமையாக இருக்கிறதா அல்லது கடூரமாக இருக்கிறதா, அதனால் பிறருக்குப் பாதிப்பு இருக்குமா என்பதைப் பற்றியெல்லாம் கவலை இருந்ததில்லை. அவன் ஓதுவதோ, உச்சஸ்தாயியில். பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் நிலத்திலும் காட்டிலும் கடுமையாக உழைத்து விட்டு வந்த கிராம மக்கள், இரவில் ரோஹில்லாவால் நித்திரை கெட்டு அவதிப்பட்டனர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, முடியாமல் கிராம மக்கள் நேரே பாபாவிடம் சென்று ரோஹில்லாவின் தொந்தரவை நிறுத்தியருளும்படி வேண்டிக் கொண்டனர்.
ஆனால், அவர்கள் வேண்டுகோள் பாபாவின் காதுகளில் விழவேயில்லை. ஹரி நாமம் கேட்க விரும்பாத வர்களின் வார்த்தைகளை பாபாவால் எவ்வாறு செவி மடுக்க இயலும்? ‘எங்கு பக்தர்கள் என் பெருமையைப் பாடுகிறார்களோ, அங்கு நான் கண் கொட்டாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்’ என்பது இறைவனின் வாக்கு.
அல்லாவின் புகழை விருப்பமுடன் பாடும் ரோஹில்லாவை நாம் ஏன் விரட்ட வேண்டும்? உங்களுக்குத் தெரியுமா? ரோஹில்லாவுக்கு சாந்திப்பி என்னும் துர்புத்தியுள்ள மனைவி ஒருத்தி இருக்கிறாள். அவள் உள்ளே வர முயன்று என்னையும் ரோஹில்லாவையும் தொந்தரவு செய்ய நினைக்கிறாள். ஆனால், ரோஹில்லா உரக்க குரான் ஓதுவதைக் கேட்டதும் அவள் ஓடி விடுகிறாள். ஆதலால், ரோஹில்லாவை ஒன்றும் சொல்லாதீர்கள்" என்றார் பாபா. ஏற்கெனவே ரோஹில்லாவுக்கு யாரையும் பொருட் படுத்திப் பழக்கமில்லை. இப்போது பாபா வேறு ஊக்கமளித்து விட்டார். அவ்வளவுதான்! அதீத
உற்சாகத்துடன் தொண்டை காந்து போகும்வரை இறைவன் நாமத்தைக் கத்தித் தீர்த்தான்.
ரோஹில்லா ஒரு ஆண்டி. பிச்சை எடுத்துப் பிழைப்பவன். அவனுக்கேது மனைவி? உண்மையில் ரோஹில்லாவின் மனைவி சாந்திப்பி என்ற பெயரில் பாபா குறிப்பிட்டது, ‘துர்புத்தி’ அல்லது ‘கெட்ட எண்ணங்களை’ப் பற்றி. உரக்க நாமஸ்மரணை செய்வதும் கூச்சலிட்டுப் பிரார்த்தனைகள் செய்வதும் நம் மனதுக்கு நாம் நியமிக்கும் வாயிற்காப்பாளர்கள் என்பது பாபாவின் திடமான நம்பிக்கை. ரோஹில்லா வின் காட்டுக் கத்தலைப் பொறுத்துக் கொள்ளும்படி கூறிய அதேநேரத்தில், ‘கெட்ட எண்ணங்களை’, ‘துர் புத்தியை’ மனதுக்குள் அண்டவிடாமல் தடுக்கும் வழியையும் பாபா ஜனங்களுக்கு உபதேசித்து ‘இறைவனின் நாமத்தை இடைவிடாமல் ஜபிப்பதே மனதை அடக்கும் வழி’ என்று காண்பித்தார். மனதை அடக்க வழி சொன்னபோதே கலியுலகத்துக்கு நாம ஸ்மரணம்தான் ஒரே கதி என்று சொல்லாமல்
சொல்லி விட்டார் ஸ்ரீ ஷீர்டி சாயி பாபா.
அனந்தராவ் பாடண்கர் என்கிற பாபாவின் அடியவர் கூறுகிறார், ‘நான் ஏராளமாகப் படித்திருக்கிறேன். வேதங்கள், வேதாந்தங்கள், உபநிஷதங்கள் இவற்றைப் பயின்றும் புராணங்களைக் கேட்டும் இருக்கிறேன். என்றாலும், எனக்கு மன அமைதி கிடைக்கவில்லை. அந்த விதத்தில் ஷீர்டியில் வாழ்கிற எளிய மக்கள் கொடுத்து வைத்தவர்கள். அவர்களால் கேள்வி கேட்காமல் பாபாவை ஏற்றுக்கொண்டு மனம் அலைந்து திரியாமல் அமைதியாக, நிம்மதியாக வாழ முடிகிறது.
ஆமாம்! ‘மனதுக்குத் தீனியாக சாயியை கொடுங்கள்’ என்று பாபா சொன்னபோது எதிர்க்கேள்வி கேட்காமல், ஷீர்டியின் படிப்பறிவில்லாத எளிய மக்கள் ஏற்றுக் கொண்டார்களே? ஷீர்டி கிராமத்தவர்கள் நாள் முழுவதும் என்ன வேலையில் ஈடுபட்டிருந்த போதிலும், அது வயலில் வேலை செய்வதாக இருக்கலாம், பயணம் செய்வதாக இருக்கலாம், எப்போதும் பாபாவையே நினைத்து அவர் லீலைகளையே பாடினார்கள். ஷீர்டி கிராமப் பெண்கள் கள்ளம், கபடு இல்லாதவர்கள். அவர்களுக்கு பாபாவை மிஞ்சிய தெய்வம் இல்லை. அவர்கள் சமைக்கும்போதும், மற்ற வீட்டு வேலைகள் செய்யும்போதும் பாபாவின் புகழை மராத்திய மொழியில் எளிய கிராமியப் பாடல்களாகப் பாடி மகிழ்ந்தனர். புத்திசாலித்தனம்! அதுதானே அஹங்காரத்தை வளர்த்து எல்லா விஷயங்களிலும் வாதம் புரிய வைக்கிறது? எளிய, ஒன்றும் அறியாத, ஆனால், மன அடக்கமும் பக்தியும் நிரம்பியவர்களுக்கு பூரண சரணாகதி இயல்பான விஷயமாகி
விடுகிறது. அதனால்தான் பாபா எல்லா புத்தி சாலித்தனங்களையும் விட்டொழித்து விட்டு எப்போது, ‘சாயி, சாயி’ என்று நினைவூட்டிக் கொள்ளுங்கள் என்கிறார்.
பாபா சொல்வார், ‘நீங்கள் எங்கே இருந்தாலும், என்ன வேலை செய்து கொண்டிருந்தாலும், நீங்கள் செய்யும் எல்லா வேலைகளும் எனக்கு எப்போதும் தெரியும் என்பதை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்! எவன் தன் கவனத்தை என்மீது திருப்புகிறானோ, அவன் எந்த சங்கடமும் படமாட்டான். அதே சமயத்தில், என்னை மறந்தவன் மாயையிடம் சிக்கி அவதிப்படுவான்.’
‘பெரிய பூஜை புனஸ்காரங்களோ, ஸ்தோத்திரங்கள் சொல்வதோ, தெய்வத்தை வழிபட ஷோடச உபசார முறைகளைக் கடைபிடிப்பதோ முடியாதவர்கள் எந்தவிதமான கவலையும்படத் தேவையில்லை. ‘சாயி! சாயி’ என்று தினமும் நினைவூட்டிக் கொள்வதே போது மானதாகும். நாமஸ்மரணை ஒன்றே இவ்வுலக வாழ்க்கைக்குப் போதுமான ஒன்றாகும்’ இவ்வளவு அற்புதமான எளிய வழியை சாயியைத் தவிர வேறு யாரால் காட்ட முடியும்?
எப்போதும் நம்முடனேயே இருக்கும் பாபா நம் மனதில் எழும் வினாக்களுக்கு விடை சொல்லி, நம் வாழ்வில் தகுந்த வழிகாட்டி,அற்புதங்களை இன்றளவும் நிகழ்த்திக்
கொண்டிருக்கிறார் என்பதுதான் பாபா பக்தர்களின் அனுபவம்.
இப்பொழுதெல்லாம் பாதுகாப்பு இல்லாத கட்டடங்கள் இல்லை. யாரும் லேசில் எங்கேயும் நுழைந்து விட முடியாது. உள் வாயிலில் நாகள் நடை பயின்று கொண்டிருக்கும். முதலில் ஒரு வாயிற் காப்பாளர் இருப்பார். ‘எந்த இலக்கம் கொண்ட வீட்டுக்கு நீங்கள் செல்ல வேண்டும்?’ என்று விசாரிப்பார். பிறகே, வாசலின் பிரதானக் கதவு திறக்கும். சில சமயங்களில் ஒரு ‘ரிஜிஸ்டரில்’ கையெழுத்துப் போட வேண்டியிருக்கும். இதைத் தவிர, கண்காணிப்பு கேமிராக்கள் இயங்கிக் கொண்டிருக்கும். பிறகு குறிப்பிட்ட ‘ப்ளாட்’டின் வாயிலில் உள்ள அழைப்பு மணியை அழுத்தினால் உள்ளேயிருந்து ‘கண்’ வடிவில் அமைக்கப்பட்டுள்ள கண்ணாடி வழியே வெளியே நிற்பது யார் என்று கண்டறிந்து பிறகே தாழ்திறக்கும்.
சத்குரு ஷீர்டி சாபாபா அவர்கள், ‘மனித மனம் ஓடித் திரியும் இயல்புடையது’ என்கிறார். மனம் புறத்தே தாவி ஓடும் தன்மையுடையது. நாம் நம்மையே கவனித்துப் பார்த்தோமானால் நாம் ஏதோ வேலையில் ஈடுபட்டிருப்போம். கைகள்தான் அந்த வேலையை செய்து கொண்டிருக்குமே தவிர, மனம் எங்கோ தொலைவில் அமெரிக்காவில் உள்ள பிள்ளை யைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கும். அல்லது யாரிடமோ ஏற்பட்ட வாக்குவாதத்தில் நம் பக்கம் உள்ள நியாயம், எதிராளி பக்கம் உள்ள அநியாயம் என்று எதையெதையோ நினைத்துப் பொருமிக் கொண்டிருக்கும். பத்து வருடத்துக்கு முன்பு ஏற்பட்ட ஒரு சொக நிகழ்வு அல்லது நாளைக்கு நடக்கப்போகும் ஒன்றைப் பற்றிய கவலை என்று கால வித்தியாசங்களைக் கடந்து தாவித் தாவிச் சென்று கொண்டிருக்கும். மனதுக்குள் எண்ணங்கள் புகாமல் பார்த்துக் கொண்டால் இவற்றைத் தவிர்த்து விடலாமே என்கிறீர்களா? அது சரி! நாமென்ன மனதுக்கு வாயிற் காப்பாளனையா நியமித்திருக்கிறோம், எண்ணங்களைத் தடுக்க?
சத் சரித்திரத்தில் சாயி சொல்கிறார், ‘மனதின் தொழில் நினைப்பதாகும். புலன் உணர்வு சார்பான பொருளை நீங்கள் அதற்கு அளித்தால் மனது அதைப் பற்றியேதான் எண்ணமிட்டுக் கொண்டிருக்கும்.’ பக்தர்கள் கேட்கிறார்கள், ‘இதை சரிசெய்ய முடியாதா பாபா?’ என்று! ‘நிச்சயமாக முடியும்’ என்கிறார் சாயி. மிகவும் சுலபமாக ஒரு வழியைக் காட்டுகிறார். ‘உங்கள் மனதுக்குத் தீனியாக சாயியைக் கொடுத்து விடுங்கள்’ என்கிறார்.
சத் சரித்திரத்தில் ஸ்ரீ ஹேமத்பந்த் சொல்கிறார், ‘மனதுக்கு குருவை அளித்து விட்டீர்களானால், அது குருவைப் பற்றியே எண்ணமிட ஆரம்பித்து விடும். இதுவே, மிக எளிமையான வழியாகும்.’
‘ஆமாம்! இயலும். அதற்கு வழியிருக்கிறது’ என்கிறார் பாபா. ஒரு முறை ஷீர்டிக்கு ரோஹில்லா என்கிற ஒரு முரட்டு மனிதன் வந்தான். பாபாவின் நற்குணங்களின்பால் ஈர்ப்பு ஏற்பட்டு அவன் அங்கேயே தங்கி விட்டான். அவன் திடகாத்திரமான சரீரம் படைத்தவன். உடலில் முழங்கால் வரை எட்டும் கஃப்னி உடுத்தியிருந்தான். எவர் சொல்லும் கேட்காத பிடிவாத குணம் படைத்தவன். சாயி பாபாவிடம் மட்டற்ற அன்பு கொண்டிருந்த அவன், விருப்பப்பட்ட போதெல்லாம், அது பகலோ, இரவோ, மசூதியோ அல்லது சாவடியோ நினைத்த இடத்தில் உட்கார்ந்து குரானை ஓதி, உரக்கக் கத்து வான். அவன் குரலோ கர்ண கடூரமாக இருக்கும். அவனுக்குத் தன் குரல் இனிமையாக இருக்கிறதா அல்லது கடூரமாக இருக்கிறதா, அதனால் பிறருக்குப் பாதிப்பு இருக்குமா என்பதைப் பற்றியெல்லாம் கவலை இருந்ததில்லை. அவன் ஓதுவதோ, உச்சஸ்தாயியில். பகல் நேரத்தில் சுட்டெரிக்கும் வெயிலில் நிலத்திலும் காட்டிலும் கடுமையாக உழைத்து விட்டு வந்த கிராம மக்கள், இரவில் ரோஹில்லாவால் நித்திரை கெட்டு அவதிப்பட்டனர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்து, முடியாமல் கிராம மக்கள் நேரே பாபாவிடம் சென்று ரோஹில்லாவின் தொந்தரவை நிறுத்தியருளும்படி வேண்டிக் கொண்டனர்.
ஆனால், அவர்கள் வேண்டுகோள் பாபாவின் காதுகளில் விழவேயில்லை. ஹரி நாமம் கேட்க விரும்பாத வர்களின் வார்த்தைகளை பாபாவால் எவ்வாறு செவி மடுக்க இயலும்? ‘எங்கு பக்தர்கள் என் பெருமையைப் பாடுகிறார்களோ, அங்கு நான் கண் கொட்டாமல் விழித்துக் கொண்டிருக்கிறேன்’ என்பது இறைவனின் வாக்கு.
உற்சாகத்துடன் தொண்டை காந்து போகும்வரை இறைவன் நாமத்தைக் கத்தித் தீர்த்தான்.
ரோஹில்லா ஒரு ஆண்டி. பிச்சை எடுத்துப் பிழைப்பவன். அவனுக்கேது மனைவி? உண்மையில் ரோஹில்லாவின் மனைவி சாந்திப்பி என்ற பெயரில் பாபா குறிப்பிட்டது, ‘துர்புத்தி’ அல்லது ‘கெட்ட எண்ணங்களை’ப் பற்றி. உரக்க நாமஸ்மரணை செய்வதும் கூச்சலிட்டுப் பிரார்த்தனைகள் செய்வதும் நம் மனதுக்கு நாம் நியமிக்கும் வாயிற்காப்பாளர்கள் என்பது பாபாவின் திடமான நம்பிக்கை. ரோஹில்லா வின் காட்டுக் கத்தலைப் பொறுத்துக் கொள்ளும்படி கூறிய அதேநேரத்தில், ‘கெட்ட எண்ணங்களை’, ‘துர் புத்தியை’ மனதுக்குள் அண்டவிடாமல் தடுக்கும் வழியையும் பாபா ஜனங்களுக்கு உபதேசித்து ‘இறைவனின் நாமத்தை இடைவிடாமல் ஜபிப்பதே மனதை அடக்கும் வழி’ என்று காண்பித்தார். மனதை அடக்க வழி சொன்னபோதே கலியுலகத்துக்கு நாம ஸ்மரணம்தான் ஒரே கதி என்று சொல்லாமல்
சொல்லி விட்டார் ஸ்ரீ ஷீர்டி சாயி பாபா.
ஆமாம்! ‘மனதுக்குத் தீனியாக சாயியை கொடுங்கள்’ என்று பாபா சொன்னபோது எதிர்க்கேள்வி கேட்காமல், ஷீர்டியின் படிப்பறிவில்லாத எளிய மக்கள் ஏற்றுக் கொண்டார்களே? ஷீர்டி கிராமத்தவர்கள் நாள் முழுவதும் என்ன வேலையில் ஈடுபட்டிருந்த போதிலும், அது வயலில் வேலை செய்வதாக இருக்கலாம், பயணம் செய்வதாக இருக்கலாம், எப்போதும் பாபாவையே நினைத்து அவர் லீலைகளையே பாடினார்கள். ஷீர்டி கிராமப் பெண்கள் கள்ளம், கபடு இல்லாதவர்கள். அவர்களுக்கு பாபாவை மிஞ்சிய தெய்வம் இல்லை. அவர்கள் சமைக்கும்போதும், மற்ற வீட்டு வேலைகள் செய்யும்போதும் பாபாவின் புகழை மராத்திய மொழியில் எளிய கிராமியப் பாடல்களாகப் பாடி மகிழ்ந்தனர். புத்திசாலித்தனம்! அதுதானே அஹங்காரத்தை வளர்த்து எல்லா விஷயங்களிலும் வாதம் புரிய வைக்கிறது? எளிய, ஒன்றும் அறியாத, ஆனால், மன அடக்கமும் பக்தியும் நிரம்பியவர்களுக்கு பூரண சரணாகதி இயல்பான விஷயமாகி
விடுகிறது. அதனால்தான் பாபா எல்லா புத்தி சாலித்தனங்களையும் விட்டொழித்து விட்டு எப்போது, ‘சாயி, சாயி’ என்று நினைவூட்டிக் கொள்ளுங்கள் என்கிறார்.
‘பெரிய பூஜை புனஸ்காரங்களோ, ஸ்தோத்திரங்கள் சொல்வதோ, தெய்வத்தை வழிபட ஷோடச உபசார முறைகளைக் கடைபிடிப்பதோ முடியாதவர்கள் எந்தவிதமான கவலையும்படத் தேவையில்லை. ‘சாயி! சாயி’ என்று தினமும் நினைவூட்டிக் கொள்வதே போது மானதாகும். நாமஸ்மரணை ஒன்றே இவ்வுலக வாழ்க்கைக்குப் போதுமான ஒன்றாகும்’ இவ்வளவு அற்புதமான எளிய வழியை சாயியைத் தவிர வேறு யாரால் காட்ட முடியும்?
எப்போதும் நம்முடனேயே இருக்கும் பாபா நம் மனதில் எழும் வினாக்களுக்கு விடை சொல்லி, நம் வாழ்வில் தகுந்த வழிகாட்டி,அற்புதங்களை இன்றளவும் நிகழ்த்திக்
கொண்டிருக்கிறார் என்பதுதான் பாபா பக்தர்களின் அனுபவம்.
Comments
Post a Comment