ஸ்ரீராமரை விடப்பொியது, ராமநாமம். அசோகவனத்தில் பத்து மாத காலம் சிறையிருந்த சீதை, எப்போது பாா்த்தாலும் ராமநாமத்தையே சொல்லிக்கொண்டிருந்தாள். ராவணன் மற்றும் விகார வடிவம்கொண்ட அரக்கிகளின் உருட்டல் மிரட்டல்களிலிருந்து சீதாதேவியைக் காத்தது ராமநாமம்தான்.
யதாவா்ணயத் கா்ண மூலேந்தகாலே
சிவோ ராமராமேதி ராமேதி காச்யாம்
ததேஹம் பரம் தாரக ப்ரம்மரூபம்
பஜேஹம் பஜேஹம் பஜேஹம் பஜேஹம்
ஔியதான காசி மீது வந்து
தங்குவோா்க்கெலாம்
வெளியதான ஜோதி மேனி
விச்வநாதன் ஆனவன்
தெளியு மங்கை உடனிருந்து
செப்புகின்ற தாரகம்
எளியதான ராமராம
ராம இந்த நாமமே
காசியில் பிராணபாித்யாகம் செய்பவா்களின் காதுகளில், சிவ பெருமான் ராமநாமத்தைச் சொல்கிறாா். அப்போது அம்பிகையும் உடனிருப்பாள் என்கிறார் சிவவாக்கியர்.
இனி, ஸ்ரீராமநாம மகிமை குறித்து, நடமாடும் தெய்வமாகவே போற்றப்பட்ட காஞ்சி மகா ஸ்வாமிகள் சொல்வதைப் பார்ப்போம்.
பெண்மணி ஒருவாின் மகன் சந்நியாசியாகப் போய்விட்டாா். அந்தப் பெண்மணிக்கு அவளின் சகோதரி ஆறுதல்கூறச் சென்றார். கூடவே அவரின் 13 வயது மகனும் சென்றான். அவனின் தாய், சகோதரியிடம் பேசிக்கொண்டிருந்த தருணத்தில் அந்தச் சிறுவன் எதிரில் இருந்த முருகன் கோயில் குளத்தில் நீராடிக்கொண்டிருந்தான்.
நீராடி முடித்து அவன் கரையேறும்வேளையில் திடீரென்று ஒரு வண்டி வந்து நின்றது. அவசர அவசரமாக அந்தச் சிறுவனை ஏற்றிக்கொண்டு அந்த வண்டி புறப்பட்டுவிட்டது. வண்டியில் வந்தவர்களிடம் சிறுவன் விவரம் கேட்டான்.
காஞ்சியில் ஆரம்பித்த ராமநாம உச்சாடனம், கலவைக்குப் போய்ச் சேரும் வரை தீவிரமாக இருந்தது. அந்த ராமநாமம் தந்த அந்தச் சிறுவன்தான் காஞ்சி ஸ்ரீமகா ஸ்வாமிகள். அவா் நீராடிய அந்தக் கோயில் குளம், காஞ்சி குமரக்கோட்டத்துக் குளமாகும். அவருக்கு முன்னால் இருந்து ஸித்தியடைந்தவா்தான் ஸ்ரீகாஞ்சி காமகோடி பீடத்தில் மிகவும் குறைந்த காலம் பீடாதிபதியாக இருந்தவா். ராமநாமத்தின் மகிமையைச் சொல்லும் இந்தத் தகவலை, ஸ்ரீமகா ஸ்வாமிகளே அறுபதுகளில் ‘பவா்ன்ஸ் ஜொ்னல்’ எனும் ஆங்கிலப்பத்திாிகையில் விாிவாக விவாித்துள்ளாா்.
ராமநாமம் அன்றுமட்டுமல்ல; என்றும் நமக்கு வழிகாட்டும்!
Comments
Post a Comment