சட்டீஸ்கர் தலைநகர் ராப்பூரில் அமைந்துள்ள ஸ்ரீ ராமபஞ்சாயதன ஆலயம் வடநாட்டு ராமர் கோயில்களில் பிரபலமான ஒன்றாகத் திகழ்கிறது. கருவறையில் ஸ்ரீ ராமபிரான் தமது மூன்று சகோதரர்கள் மற்றும் ஸ்ரீ சீதா தேவியோடு சேர்த்து ஐவராகக் காட்சி தருவதால் இக்கோயில், ‘ஸ்ரீ ராம பஞ்சாயதன ஆலயம்’ என்று அழைக்கப்படுகிறது.
இந்தியில், ‘சட்டீஸ்’ என்பது 36 என்ற எண்ணைக் குறிக்கும். இங்கு 36 கோட்டைகள் உள்ளதால் சட் டீஸ்கர் (36 கோட்டைகளைக் கொண்டது) என்று அழைக்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதி பிரிந்து இந்த மாநிலம் 2000ஆம் ஆண்டில் அமைந்தது. ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த ராமச்சந்திரா என்ற மன்னரின் மகன் பிரம்ம தேவ் ரா என்பவரின் நினைவாக இம்மாநிலத் தலைநகர் ராப்பூர் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதி, ஸ்ரீ ராமபிரானின் தாய் கௌசல்யா தேவி பிறந்த கோசல ராஜ்யமாகத் திகழ்ந்தது என்றும் ஸ்ரீ ராமர் நடமாடிய பகுதி என்றும் மக்கள் நம்புகின்றனர்.
பதினேழாம் நூற்றாண்டில் ராப்பூரில் வாழ்ந்து வந்த மஹந்த் ஸ்வாமி பலபத்ர தாஸ்ஜி என்ற அனும பக்தர் இங்கிருந்த ஒரு பெரிய கல்லையே தன்னுடைய அத்யந்த தெவமான சுயம்பு அனுமனாகப் பாவித்து பக்தி சிரத்தையோடு வழிபட்டு வந்தார். மேலும், தினமும் வேறு எந்த உணவும் உட்கொள்ளாது, அனுமனுக்கு அபிஷேகம் செயும் பாலை மட்டுமே உண்டு வந்ததால் இவரை மக்கள், ‘தூத் ஆஹாரி’ (பாலை மட்டும் பருகுபவர்) என்று அழைத்தனர்.
மேலும், சுர்ஹி என்ற பசு தினமும் அந்த சுயம்பு அனுமன் மீது பாலைச் சொரிந்துவிட்டுச் சென்று கொண்டிருந்தது. அன்றிலிருந்து அந்த அபிஷேகிக்கப் பட்ட பாலை மட்டுமே மஹந்த் பருகி வந்ததால் இவரை பலரும், ‘தூத்தாரி’ என்றும் அழைத்தனர்.
சிறந்த அனும பக்தராகவும், துறவியாகவும் வாழ்ந்த இவரிடம் சீடர்கள் பலர் சேர்ந்தனர். அப்போது இப்பகுதியை ஆண்டு வந்த ரகுராவ் பாஸ்லே என்பவ ரும் இவரது சீடரானார்.
மஹந்த் பலபத்ர தாஸ் ஒரு மடத்தை அமைத்து, அதில் அனுமனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அப்போது, பாலாஜி பக்தரான ரகுராவ் பாஸ்லே அங்கேயே பாலாஜிக்கு ஓர் ஆலயம் எழுப்ப விரும்ப, 1610ஆம் ஆண்டு அனுமன் ஆலயத்துக்குப் பின்புறம் பாலாஜி ஆலயம் எழுப்பப்பட்டது. இக்கோயில் கட்டி முடிந்த பின்னர் அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அது, பாலாஜி கொலுவீற்றிருக்கும் ஆலயத்தை நோக்கி அனுமன் தனது தலையைத் திருப்பிக் கொண்டார் என்று கூறப்படுகிறது. அன்றிலிருந்து தெற்கு நோக்கி திரும்பியிருக்கும் இந்த அனுமனுக்கு எதிராக பிரதான வாயில் அமைந்திருக்க, ஆலயத்துக்குள் நுழையும் படிகள் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டன.
பக்தர்களின் சங்கடங்களை உடனுக்குடன் அகற்று வதால் இந்த அனுமனுக்கு, ‘சங்கடமோச்சன ஹனுமான்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. பக்தர்கள் மட்டைத் தேங்காயை சிவப்புத் துணியில் கட்டி அனுமனுக்குச் சமர்ப்பிக்கும், ‘முடுபு’ (முடிச்சு) காணிக்கை இங்கு மிகவும் விசேஷம். சங்கடமோச்சன் கருவறையைச் சுற்றிலும் ஏராளமான மட்டைத் தேங்காய் முடுபுகளைக் காணலாம்.
ஸ்ரீ பாலாஜி ஆலயம் கட்டப்பட்டு இருபது ஆண்டுகள் கழித்து ஸ்ரீ ஜகந்நாத் சாவ் என்ற அன்பரால் ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்திக்கும் இந்த வளாகத்தில் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டது. முதலில் ஸ்ரீ ராமர், சீதா தேவி, லட்சுமணர், பரதர் மற்றும் சத்ருக்னரின் மரச் சிற்பங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்தன. ‘ஸ்ரீ ராம் பரிவார்’ என்று அழைக்கப்படும் ஸ்ரீ ராமர், அவருடைய மூன்று சகோதரர்கள் மற்றும் ஸ்ரீ சீதா தேவி ஆகிய ஐந்து பேர் பிரதிஷ்டை செய்யப்பட்டதால் இது அக்காலத்தில், ‘ஸ்ரீ ராம்பஞ்சாயதனம்’ என்று அழைக்கப்பட்டது. 1922ஆம் ஆண்டு புனருத்தாரணம் செய்யப்பட்டபோது, மரச் சிற்பங்கள் இருந்த இடத்தில் பளிங்கு விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டன.
ஸ்ரீ ராமரும் பரதனும் கருமை நிறத்தில் காட்சி தருகின்றனர். கருவறையில் ஸ்ரீ ராமர், அவரது இடப்புறம் சீதா தேவி, வலப்புறம் லட்சுமணர் ஆகியோர் காட்சி தர, லட்சுமணருக்கு வலப் புறம் பரதனும், சீதா தேவிக்கு இடப்புறம் சத்ருக்னனும் ஒருவரையொருவர் பார்த்தபடி காட்சி தருகின்றனர்.
ஸ்ரீ ராமர், சீதா தேவியுடனும் தன் சகோதரர்கள் மற்றும் அவர்களுடைய பத்னிகளுடனும் சேர்ந்து காட்சி தருகின்ற அரிய பழைமையான ஆலயம் ஆந்திர மாநிலம், மேடக் மாவட்டம் கும்மடிதலா என்ற தலத்தில் உள்ளது. இங்கும் கருவறையில் அனுமன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராமாயண, மஹாபாரத நிகழ்வுகளைப் பிரதிபலிக்கும் வண்ண மயமான சிற்பங்களும் சித்திரங்களும் இந்த ஆலயச் சுவரில் வடிக்கப் பட்டுள்ளன. இந்த ஸ்ரீ ராம் பரிவார் (குடும்ப) கருவறையில் அனுமன் இல்லாத குறையைத் தீர்க்கும் பொருட்டு ஸ்ரீ ராமர் சன் னிதிக்கு எதிரே வீர் அனுமனுக்கு தனிச் சன்னிதியும் அமைக்கப் பட்டது. இந்த வீர் அனுமன் சஞ்சீவி பர்வதத்தை தன் இடக் கரத்திலும், கதையை வலக்கரத்திலும் ஏந்தி காட்சி தருகிறார். ராம, ராவண யுத்தத்தின்போது ராவணனின் சகோதரனான மஹி ராவணனன், ராம - லட்சுமணரை பாதாள லோகத்துக்குத் தூக்கிச் சென்றபோது அனுமன் அவனுடன் போரிட்டு ராம - லட்சுமணரைக் காப்பாற்றினார். இந்த அசுரனை அனுமன் வதைத்ததைச் சித்தரிக்கும் வகையில் இந்த வீர் அனுமன் காலடியில் மஹிராவணனைக் காணலாம். ராப்பூரில் உள்ள பிரதான ஆலயங்களைத் தவிர, மடத்தின் வளாகத்தில் மஹந்த் ஸ்ரீ பலபத்ர தாஸ் பிருந்தாவனமும் உள்ளது.
ராப்பூர் ஸ்ரீ ராம பஞ்சாயதன ஆலயத்தில் ஸ்ரீ ராம நவமி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராமர் மற்றும் வீர் அனுமன்,
சங்கட மோச்சன அனுமனை தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கே வருகை தருகின்றனர்.
அமைவிடம்: சட்டிஸ்கர் மாநிலத் தலைநகர் ராப்பூரில் புராணி பஸ்தி ராப்பூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது.
தரிசன நேரம்: காலை 9.30 முதல் மாலை 7.30 மணி வரை.
இந்தியில், ‘சட்டீஸ்’ என்பது 36 என்ற எண்ணைக் குறிக்கும். இங்கு 36 கோட்டைகள் உள்ளதால் சட் டீஸ்கர் (36 கோட்டைகளைக் கொண்டது) என்று அழைக்கப்படுகிறது. மத்தியப் பிரதேசத்தின் ஒரு பகுதி பிரிந்து இந்த மாநிலம் 2000ஆம் ஆண்டில் அமைந்தது. ஒரு காலத்தில் இப்பகுதியை ஆண்டு வந்த ராமச்சந்திரா என்ற மன்னரின் மகன் பிரம்ம தேவ் ரா என்பவரின் நினைவாக இம்மாநிலத் தலைநகர் ராப்பூர் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதி, ஸ்ரீ ராமபிரானின் தாய் கௌசல்யா தேவி பிறந்த கோசல ராஜ்யமாகத் திகழ்ந்தது என்றும் ஸ்ரீ ராமர் நடமாடிய பகுதி என்றும் மக்கள் நம்புகின்றனர்.
பதினேழாம் நூற்றாண்டில் ராப்பூரில் வாழ்ந்து வந்த மஹந்த் ஸ்வாமி பலபத்ர தாஸ்ஜி என்ற அனும பக்தர் இங்கிருந்த ஒரு பெரிய கல்லையே தன்னுடைய அத்யந்த தெவமான சுயம்பு அனுமனாகப் பாவித்து பக்தி சிரத்தையோடு வழிபட்டு வந்தார். மேலும், தினமும் வேறு எந்த உணவும் உட்கொள்ளாது, அனுமனுக்கு அபிஷேகம் செயும் பாலை மட்டுமே உண்டு வந்ததால் இவரை மக்கள், ‘தூத் ஆஹாரி’ (பாலை மட்டும் பருகுபவர்) என்று அழைத்தனர்.
சிறந்த அனும பக்தராகவும், துறவியாகவும் வாழ்ந்த இவரிடம் சீடர்கள் பலர் சேர்ந்தனர். அப்போது இப்பகுதியை ஆண்டு வந்த ரகுராவ் பாஸ்லே என்பவ ரும் இவரது சீடரானார்.
மஹந்த் பலபத்ர தாஸ் ஒரு மடத்தை அமைத்து, அதில் அனுமனை பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தார். அப்போது, பாலாஜி பக்தரான ரகுராவ் பாஸ்லே அங்கேயே பாலாஜிக்கு ஓர் ஆலயம் எழுப்ப விரும்ப, 1610ஆம் ஆண்டு அனுமன் ஆலயத்துக்குப் பின்புறம் பாலாஜி ஆலயம் எழுப்பப்பட்டது. இக்கோயில் கட்டி முடிந்த பின்னர் அங்கே ஓர் அதிசயம் நிகழ்ந்தது. அது, பாலாஜி கொலுவீற்றிருக்கும் ஆலயத்தை நோக்கி அனுமன் தனது தலையைத் திருப்பிக் கொண்டார் என்று கூறப்படுகிறது. அன்றிலிருந்து தெற்கு நோக்கி திரும்பியிருக்கும் இந்த அனுமனுக்கு எதிராக பிரதான வாயில் அமைந்திருக்க, ஆலயத்துக்குள் நுழையும் படிகள் வடக்கு நோக்கி அமைக்கப்பட்டன.
பக்தர்களின் சங்கடங்களை உடனுக்குடன் அகற்று வதால் இந்த அனுமனுக்கு, ‘சங்கடமோச்சன ஹனுமான்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. பக்தர்கள் மட்டைத் தேங்காயை சிவப்புத் துணியில் கட்டி அனுமனுக்குச் சமர்ப்பிக்கும், ‘முடுபு’ (முடிச்சு) காணிக்கை இங்கு மிகவும் விசேஷம். சங்கடமோச்சன் கருவறையைச் சுற்றிலும் ஏராளமான மட்டைத் தேங்காய் முடுபுகளைக் காணலாம்.
ஸ்ரீ ராமரும் பரதனும் கருமை நிறத்தில் காட்சி தருகின்றனர். கருவறையில் ஸ்ரீ ராமர், அவரது இடப்புறம் சீதா தேவி, வலப்புறம் லட்சுமணர் ஆகியோர் காட்சி தர, லட்சுமணருக்கு வலப் புறம் பரதனும், சீதா தேவிக்கு இடப்புறம் சத்ருக்னனும் ஒருவரையொருவர் பார்த்தபடி காட்சி தருகின்றனர்.
ஸ்ரீ ராமர், சீதா தேவியுடனும் தன் சகோதரர்கள் மற்றும் அவர்களுடைய பத்னிகளுடனும் சேர்ந்து காட்சி தருகின்ற அரிய பழைமையான ஆலயம் ஆந்திர மாநிலம், மேடக் மாவட்டம் கும்மடிதலா என்ற தலத்தில் உள்ளது. இங்கும் கருவறையில் அனுமன் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ராப்பூர் ஸ்ரீ ராம பஞ்சாயதன ஆலயத்தில் ஸ்ரீ ராம நவமி மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. ஸ்ரீ ராமர் மற்றும் வீர் அனுமன்,
சங்கட மோச்சன அனுமனை தரிசிக்க தினமும் ஏராளமான பக்தர்கள் இங்கே வருகை தருகின்றனர்.
அமைவிடம்: சட்டிஸ்கர் மாநிலத் தலைநகர் ராப்பூரில் புராணி பஸ்தி ராப்பூர் என்ற பகுதியில் அமைந்துள்ளது.
தரிசன நேரம்: காலை 9.30 முதல் மாலை 7.30 மணி வரை.
Comments
Post a Comment