என்னுடைய நண்பர் வாரந்தோறும் தினமலரில் சிங்கப்பூரில்
இருந்து வெளிநாட்டுச் செய்திகளை தந்து கொண்டிருக்கும் திரு. புருஷோத்தமன் அவர்கள்
தொலைபேசியில் தொடர்பு கொண்டு திருமூர்த்தி மலைக்கு வரச் சொன்னார்கள். நான் கொஞ்சம்
யோசித்தபோது இல்லை இல்லை நீங்கள் அவசியம் திருமூர்த்தி மலைக்கு வந்து குருபகவானைச்
சந்திக்கிறீர்கள் உங்களுக்கு ஒரு புது அனுபவம் ஏற்படும் என்று சொன்னார்கள். அவரின்
அன்பு வேண்டுகோளை ஏற்றுத் திருமூர்த்தி மலைக்குச் சென்றேன்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இயற்கை எழில் சூழ்ந்த மலைச்சாரலில் அமைந்து உள்ள திருமூர்த்தி அணைக்கட்டிற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது யூனிவர்சல் பீஸ் பவுண்டேஷன்.
பிரபஞ்சத் தோற்றத்திற்கு முன்பு சுத்த சிவமாக இருந்தது ஆதியில் இருந்த சிவமே தன் சங்கல்பத்தால் நினைத்து, அந்த நினைப்பால் ஓங்கார நாதமாகி, அந்த நாதமே ஜோதியாகி அதுவே இறைவனின் சொரூபம் என்ற பரஞ்ஜோதியே எங்கும் வியாபித்து அணுமையமாக இருக்கிறது. அந்த பரஞ்ஜோதியை ஒப்பற்ற ஜோதி வடிவை திருமூர்த்தி மலையில் நான் கண்டேன். இதனை என் நண்பர் திரு. புருஷோத்தமன் அவர்களிடம் தொலைபேசியில் தெரிவித்தேன்.
பரஞ்ஜோதி மகான் அவர்கள் குடில் ஒன்றை அமைத்து அன்பர்களுக்கு மெய் உணர்வை ஊட்டிக் கொண்டிருக்கும் ஒரு இடம்தான் திருமூர்த்தி மலை. அழகிய இயற்கைச் சூழல், மிக அகாமையில் பிரம்மாண்டமான நீர் நிலை, மயிலும், குயிலும் ஆடிப் பாடித் திரியும் அற்புத நந்தவனம். இவையெல்லாம் நம் மனதிற்கு ரம்மியத்தைக் கொடுக்கும் இடமாகத் திருமூர்த்தி மலை ஆசிரமம் விளங்குகிறது.
திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே இயற்கை எழில் சூழ்ந்த மலைச்சாரலில் அமைந்து உள்ள திருமூர்த்தி அணைக்கட்டிற்கு மிக அருகாமையில் அமைந்துள்ளது யூனிவர்சல் பீஸ் பவுண்டேஷன்.
பிரபஞ்சத் தோற்றத்திற்கு முன்பு சுத்த சிவமாக இருந்தது ஆதியில் இருந்த சிவமே தன் சங்கல்பத்தால் நினைத்து, அந்த நினைப்பால் ஓங்கார நாதமாகி, அந்த நாதமே ஜோதியாகி அதுவே இறைவனின் சொரூபம் என்ற பரஞ்ஜோதியே எங்கும் வியாபித்து அணுமையமாக இருக்கிறது. அந்த பரஞ்ஜோதியை ஒப்பற்ற ஜோதி வடிவை திருமூர்த்தி மலையில் நான் கண்டேன். இதனை என் நண்பர் திரு. புருஷோத்தமன் அவர்களிடம் தொலைபேசியில் தெரிவித்தேன்.
பரஞ்ஜோதி மகான் அவர்கள் குடில் ஒன்றை அமைத்து அன்பர்களுக்கு மெய் உணர்வை ஊட்டிக் கொண்டிருக்கும் ஒரு இடம்தான் திருமூர்த்தி மலை. அழகிய இயற்கைச் சூழல், மிக அகாமையில் பிரம்மாண்டமான நீர் நிலை, மயிலும், குயிலும் ஆடிப் பாடித் திரியும் அற்புத நந்தவனம். இவையெல்லாம் நம் மனதிற்கு ரம்மியத்தைக் கொடுக்கும் இடமாகத் திருமூர்த்தி மலை ஆசிரமம் விளங்குகிறது.
ஆசிரமத்தின் மையப்பகுதியில் பிரம்மாண்டமாய்க் கண்ணுக்குத் தெரியும் பிரமிடு. அதற்குள் எங்களை அழைத்துக் கொண்டு போனார் பரஞ்ஜோதி மகானின் சீடர்களான திரு. சி.எம். சுப்பிரமணியம், திரு.கே. விநாயகம் மற்றும் தி.கே. பொன்னுசாமி ஆகியோர். பிரமிட்டிற்குள் சுமார் அரை மணி நேரம் நானும் என் நண்பர்களான மாஸ் திரு. சுரேஷ், தேஜஸ் திரு. பி.டி.டி. ராஜன், கல்கி வெளியீடான தீபம் ஆசிரியர் திரு. ஸ்ரீராம், மலேசிய நேதாஜி மையத்தலைவர் திரு. சுப. நாராயணசாமி ஆகியோர். கண்ணை மூடி தியானத்தில் அமர்ந்து இருந்தோம்.
பிரமிட்டுக்குள் இருந்தது புது அனுபவத்தை தந்தது. பரஞ்ஜோதி மகான் அவர்கள் தன்னுடைய பக்தர்களை மிகுந்த கட்டுப்பாட்டுடனும் ஒழுக்க நெறியுடனும் தூய சுன்மிகச் சிந்தனைகளுடனும் உருவாக்கி இருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். அதோடு மட்டுமல்ல, ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மணி நேர இடைவேளையிலும் ஓம் என்ற நாதம் ஆசிரமத்திற்குள் எழும்புகிறது. இ்நத நேரத்தில் பக்தர்கள் எந்த வேலை இருந்தாலும் மவுனம் காக்கிறார்கள். அதோடு மட்டுமல்ல உலக அமைதிக்காக ஒவ்வொரு மணி நேரத்திற்கு தங்கள் பிரார்த்தனைகளைச் செவ்வனே செய்கிறார்கள். ஒவ்வொரு நாளும் காலை 11 மணி 11 நிமிடம் 11 விநாடி அளவில் தங்களுடைய ஆதிகுருநாதரின் மறைவை எண்ணி மானசீகமாக அவருக்கு அஞ்சலி செலுத்தி உலக நன்மைக்காகப் பிரார்த்தனை செய்கிறார்கள். இதனை இப்போதைய பதஞ்சலி மகான் அவர்கள் செய்ததையும் நான் கண்ணால் கண்டேன்.
பதஞ்சலி சுவாமிகளுடன் பேசிக் கொண்டிருக்கும்போது இரண்டு விஷயத்தைத் தௌ்ளத் தெளிவாகச் சொன்னார்கள். தமிழ்நாட்டிற்கு மழை வேண்டும் என்றால் நமம் கன்னட தேசம் நன்றாக இருக்க வேண்டும். மலையாள தேசம் நன்றாக இருக்க வேண்டம், ஆந்திர தேசம் நன்றாக இருக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த வேண்டுதலின் காரணமாக அந்த தேசங்களில் மழை பெய்து செழிப்புற்றால் நம்முடைய தமிழ் தேசத்தின் நீர்நிலைகளில் செழிப்பு ஏற்படும் என்பது இவரின் தீர்க்கமான எண்ணம். அடுத்தவர்கள் நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்பதுதான் இவருடைய பிரார்த்தனையின் பரம ரகசியம் என்று நமக்குப் பட்டது. அதனால்தான். இவருடைய பிரார்த்தனைகளை மதம் இனம் கடந்து பக்தர்கள் மனமுருகிப் பார்க்கிறார்கள்.
பஞ்சபூதத்தில்தான் இந்த உலகம் இயங்குகிறது. நமது உடல் + மனம் + அறிவு இந்த மூன்றுடன் நான்காவது நிலையாக இருப்பது மேலாண்மை அறிவு. அதாவது ஆன்மிகத்தில் தெளிந்த நீரோட்டப் புத்திசாலித்தனம். இந்த நான்கும்தான் தனிமனிதனுக்குப் பெருமை சேர்க்கிறது. இந்தப் பெருமை முழுமையாக எப்பொழுது கிடைக்கும் என்றால் சரியான குரு ஒருவர் தனிமனிதன் ஒருவனுக்குக் கிடைக்கும்பொழுது.
காலம் நேரம் கூடிவரும்போதெல்லாம் நல்லது தானாகவே நடக்கும், உங்கள் சித்தம் இறையை .ணரவேண்டும் என்று எண்ணினால் உடனே ஒரு குருவைத் தெரிவு செய்து அவருக்கு விசுவாசமாக இருந்து சரணாகதி அடையுங்கள் என்கிறார் மகரிஷி பரஞ்ஜோதியார்.
பூட்டுகள் தயாரிக்கப்படும்பொழுதே சாவிகளும் தயாரிக்கப்பட்டு விடுகின்றன என்பதை நாம் உணர வேண்டும். துன்பத்தைத் துடைக்க வழி கண்டிப்பாக இருக்கிறது என்பதுதான் .ண்மை, துன்பத்தைக் கண்டு அஞ்சாதவனே இன்பத்தை எய்துவான். திரி எரிந்து வேதனையுற்ற போதுதான் ஒளிர்கிறது. நாமும் பிரகாசமாக எதிர்காலத்தில் ஒளிருவதற்காகத்தான் துன்பக்காற்று நம்மைக் கடந்து செய்கிறது என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும் என்று நாசூக்காக நமக்கு மறைபொருளாக உரைக்கின்றார் திருமூர்த்தி மலையில் உள்ள பரஞ்ஜோதி மகான்.
ஒரு உயிருக்கு ஒரு தாய், ஒரு தந்தை, ஒரு கரு, ஒரு விந்து, ஒரு உடல் என்பதைப்பால ஒர குரு, ஒரு இறை என்றுதான் இருக்க முடியும். சைவர்கள் சிவனைத்தவிர வேறொரு தெய்வத்தை வணங்க மாட்டார்கள். வைணவர்கள் விஷ்ணுவைத் தவிர வேறொன்றையும் ஏற்கமாட்டார்கள். பொதுவாகப் பார்த்தால் இது பிரிவினை வேறுபாடு என்றுதான் தோன்றும். ஆனால் மனதைக் கொண்டு மனதைக் கடப்பதற்கு உள் அறிவைச் செலுத்திப் பார்த்தால் சிவனும், ஹரியும் ஒன்றே என்று நமக்கு விளங்கும். சனாதனா தர்மமம் தான் உலகில் உயர்வானது. நமது வேதங்களும் உபநிஷதங்களும் பல விஷயங்களை நமக்குச் சொல்லுகின்றன. சிவரூபமும், வைணவ மூர்த்தங்களும் உருவ அமைப்பில் தெரிந்தாலும் அதை வழிபடுவது தேவையானது. அந்த நிலையில் வேண்டும் அதைத்தாண்டி சுத்த ஒளியாய் உருவமற்ற ஒருவர் இருக்கிறார் என்பதை ஞான நிலை வரும்பொழுது வேதத்தின் அடிப்படையில் சனாதன தர்மத்தின் அடிப்படையில் நாம் அறிந்து கொள்வோம் என்கிறார் பரஞ்ஜோதி மகான்.
என்னுடைய நண்பர் திரு. ஸ்ரீராம் அவர்கள் குண்டலினியைப் பற்றி கேட்டபோது அதற்காக ஒர அற்புதமான விளக்கத்தைத் தந்தார். அந்த அற்புதமான விளக்கம் அடுத்த இதழில் ஒரு கட்டுரையாகப் பிரசுரம் ஆக உள்ளது.
இந்த ஆசிரமத்தில் சுமார் 6 மணி நேரம் இருந்தபொழுது ஆசிரம அன்பர்கள் அன்புடன் எங்களைக் கவனித்துக் கொண்டதோடு நல்ல முறையில் உண்ண உணவும் வழங்கினார்கள். இறை பிரசாதமும் (நல்ல சத்சங்கம்) சாப்பாட்டிற்கு நல்ல உணவு வகைகளும் எங்களுக்குக் கிடைத்தன. என்னை கவர்ந்த இன்னொரு விஷயம் என்னவென்றால் இந்த ஆசிரமத்தில் தினசரி உணவு தயாரிக்கப்பட்டு இந்த மலையில் உள்ள வசதியற்றவர்களுக்கு அன்னதானமாகப் படைக்கிறார்கள். இவர்களிடம் அன்பும் இருக்கிறது. தலை குணமும் இருக்கிறது என்பதை நேரிடையாகக் கண்டு கொண்டேன்.
பருவுடல், நுண்உடல், அறிவுடல் ஆகியவற்றைக் கடந்து அப்பால் உள்ள ஜோதியைக் கண்டு அதற்கும் அப்பால் உள்ள நாதம், நினைவு ஆகியவற்றைக் கடந்து இருளில் பூரணமாக உறையும் இறையை உணரவேண்டுமானால் இந்த ஆசிரமத்திற்கு ஒருமுறையாவது விஜயம் செய்ய வேண்டும். பரஞ்ஜோதி மகானின் அருளுரைகள் நம் மனதிற்குள் ஒரு தெளிவையும் கொடுக்கும்.
Comments
Post a Comment