சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் விருதுநகரில் ரெயில்வே
பீடர்ரோடு பகுதியில் வரிசையாய் வளர்ந்து நின்றன புளிய மரங்கள். அங்கே குரங்கு ஒன்று
வசித்து வந்தது.
அங்குமிங்கும் தாவித் திரிந்த அந்த வானரத்தை ஆரம்பத்தில் சிலர் விரட்ட முற்பட்டபோதும், அது அங்கேயே மீண்டும் மீண்டும் வந்ததில் மக்கள் இரக்கப்பட்டு அதனை அங்கேயே இருக்கவிட்டனர். காலப்போக்கில் அது அப்பகுதியினரின் செல்லப் பிராணியாகவே ஆகிப் போனது.
நாட்கள் நகர்ந்தன. ஒருநாள் திடீரென யாரும் எதிர் பாராதவிதமாக உடல் நலிவுற்று உயிரிழந்தது குரங்கு. மனம் வருந்திய மக்கள் சம்பிரதாயப்படி குரங்கின் உடலை அதே வீதியில் ஓரிடத்தில் புதைத்து, அதன் மேல் ஒரு பீடம் எழுப்பி, மரத்தாலான குரங்கு சிற்பம் ஒன்றையும் அதன் மலே் நிறுவினர். தற்செயலாக அந்தப் பகுதி மக்கள் அதனை வழிபடத் துவங்க, பலரும் தத்தம் வாழ்க்கை, அனுபவத்தில் பல புதிய அனுகூலங்கள் நடக்கத் துவங்கியதை உணர்ந்தனர்.
அனுமனே தங்கள் பகுதிக்கு வானர ரூபமாக வந்து கோயில் கொண்டிருப்பதாகக் கருதி அதி ்ளவில் மக்கள் வழிபடத் தொடங்க, புதிய கற்சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு கோயில் வேகமாக வளர்ச்சி பெற்றது. படிப்படியாக அங்கே ராமரும், பெருமாளும் கோயில் கொண்டனர்.
வடகிழக்கு எனும் ஈசானிய மூலையில் கோயிலின் பிரதான வாசல் அமைந்திருப்பது வித்தியாசமானது. சாலக் கோபுரம் வாசலில் வலதுபுறம் ஆஞ்சநேயர் கோயில் அமைந்துள்ளது. தினமும் அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்படுகிறது. சனிக்கிழமைகளில் சிறப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. அனுமனை ஆத்மார்த்தமாக வணங்கிவிட்டு ராமர் கோயிலக்குள் நுழைகிறோம்.
உயர்ந்து நிற்கும் கொடிமரம், பலிபீடம், கருடாழ்வார் சன்னதியை அடுத்து மகாமண்டபம், அர்த்த மண்டபம், கரவறை அமைந்துள்ளது. மகாமண்டப வாலில் துவாரபாலகர் சிற்பங்கள் உள்ளன. அர்த்த மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளாக சக்கரத்தாழ்வார், லட்சுமி ஹயக்ரீவர், கிருஷ்ணர் விக்ரகங்கள் காணப்படுகின்றன. கருவறையில் சீதா, லட்சுமணன் சமேத ராமபிரான் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இவர்களை வணங்கிய வண்ணம் அனுமன் திருமேனி காணப்படுகிறது.
மூலவர் விமானம் சுதைக் கட்டுமானமாக அமைந்துள்ளது. மகாமண்டப வடபுற உச்சியில் திருமாலின் தசாவதாரத்தை சுதைச் சிற்பமாக அமைத்துள்ளனர்.
புனர்பூச நட்சத்திரத்தன்று ராமருக்கு சிறப்ப அபிஷேகம் நடத்தப்படுகிறது. ஆண்டுதோறும் ஸ்ரீ ராமநவமி திருவிழா 13 நாள் உற்சவமாக வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தெற்கு பிராகாரத்தில் சக்கரத் தாழ்வார் சன்னதி அமைந்துள்ளது. ஆனி மாதம், சித்திரை நட்சத்திர நன்னாளில் சக்கரத்தாழ்வாரின் அவதாரத் திருவிழாவினை ஒட்டி விசேஷ வழிபாடு நடைபெறுகிறது. கருவறைச் சுற்றில் கிருஷ்ணர், தன்வந்திரி, ஹயக்ரீவர் திருமேனிகள் உள்ளன. ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று பள்ளி இறுதித் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்காக ஹயக்ரீவர் சன்னதியில் யாகபூஜை நடத்தப்படுகிறது. இதில் கலந்து கொள்ளும் மாணவர்கள் தேர்வில் அதிக மதிப்பெண் பெறுகிறார்களாம். மேற்குச் சுற்றில் தும்பிக்கை ஆழ்வார் சன்னதியும், வடக்கே பரமபத வாசலும் அமைந்துள்ளன.
ராமர் கோயிலுக்கு மேற்கே பத்மாவதி தாயார் சமேத சீனிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. கிழக்க மேற்கு வடக்கு என மூன்று வாசல்கள். பிரதான வாசலான வடக்கு வாசல் வழியே நுழைந்ததும் கொடி மரம், பலிபீடம், கருடாழ்வாரை தொடர்ந்து விஸ்தாரமான மகா மண்டபத்திலேயே கருவறை அமைந்துள்ளது.
கருவறை வாசலில் துவாரபாலகர்கள் உள்ளனர். மொத்தம் மூன்று சன்னதிகள் வடக்குப் பார்த்த வண்ணம் பிரமாண்டமாய் அமைந்துள்ளன. நடுநாயகமாக ஸ்ரீனிவாசப் பெருமாள் நின்ற திருக்கோலத்தில் எழுந்தருளியுள்ளார். இவர் செழிப்பான வாழ்வு அருள்பவர். பெருமாளுக்கு வலதுபுறம் பத்மாவதித் தாயார். இடதுபுறம், உற்சவ மூர்த்திகள் சன்னதிகள் அமைந்துள்ளன. மூலவர் விமானம் தங்கத் தகடுகளால் போத்தப்பட்டுள்ளன. அபிஷேக, ஆரத்தி வேளையில் மின்சார விளக்கை நிறுத்தி விடவதால் தீப ஒளியில் பெருமாளை தரிசிக்கும் போது மனதிற்குள் ஒருவித பரவசத்தை நம்மால் உணரமுடிகிறது.
பத்மாவதி தாயாருக்கு ஆடி மாத கடைசி வெள்ளிக் கிழமை 108 திருவிளக்கு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் பிரம்மோற்சவ வைபவம் ஒன்பது நாள் கொண்டாடப்படுகிறது.
மணப்பேறு, மகப்பேறு கிட்ட, ஆயுள், ஆரோக்யம்கூட இத்தலம் வந்து இங்குள்ள தெய்வங்களை தரிசித்து பலன் பெற்றுச் செல்கிறார்கள். ஏராளமான பக்தர்கள், நீங்கள் எப்போது வரப்போகிறீர்கள்?
எங்கே இருக்கு: விருதுநகர் பழைய பேருந்து நிலையத்திலிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்லும் வழியில் கந்தபுரம் தெருவில் இக்கோயில் அமைந்துள்ளது.
தரிசன நேரம்: காலை 6-11; மாலை 4.30 - 9; சனிக் கிழமைகளில் காலை 6-12; மாலை 4.30- 10.

Comments
Post a Comment