ஆன்மிகம்! - நாயடியார்!

சிவபெருமான் வேட்டைக்காரனாக அருள வரும் போது, வேதங்கள் நான்கும் நாய் வடிவம் கொண்டு அவரைத் தொடர்ந்து வருவதாகப் புராணங்கள் கூறுகின்றன.

*திருவிடைமருதூரில் `நாயடியார்' கோயில் உள்ளது. இந்த நாயடியார் எனும் பெண், பட்டினத்தார்  மற்றும் பத்திரிகிரியாரது வரலாற்றுடன் தொடர்புடையவள்.

*ல்லவர் காலத்து `கங்காதரர்' சிற்பங்களில்,  சிவபெருமானின் சடைக்கு நேராக நாய் வடிவம் இருப்பதைக் காணலாம். கங்கை பூமிக்கு வந்த போது, தரும தேவதை நாய் வடிவில் கங்கைக்குத் துணையாக வந்ததாகக் கூறுவர்.

*சிவபெருமானின் மகேசுவர வடிவங்களில் ஒன்றான ஸ்ரீ பைரவருக்கு நாய் வாகனமாக உள்ளது. பைரவரின் கொடியும் நாய் உருவம் பொறித்த கொடியாகும்.

*மும்மூர்த்திகளின் சக்திகளும் ஒன்றுதிரண்டு அத்திரி- அனுசுயா ரிஷி தம்பதிக்கு புதல்வனாகத் தோன்றியது. ஸ்ரீதத்தாத்ரேயர் எனும் திருப்பெயர்கொண்ட இவரைச் சுற்றிலும் வேதங்கள் நாய் வடிவில் திகழ்கின்றன.

*வேட்டைக்கார சுவாமி எனப்படும் வேடப்பர், கிராமப்புறங்களில் போற்றி வணங்கப்படுகிறார். இவருக்கு வாகனமாகவும் வழிகாட்டியாகவும் நாய் திகழ்வதாக ஐதீகம்.

Comments