`முருகன், தனது தேரில் கோழியைக் கொடியாகக் கொண்டிருந்தார்' என்கிறது கந்தபுராணம்.
முருகனுக்கு அக்னிதேவன் கோழியைத் தந்ததாகப் புராணங்கள் சொல்கின்றன. அதுபோல சூரியன், குறவர்கள், தேவர்கள் ஆகியோரும் கோழிகளைச் சமர்ப்பித்த தகவல் உண்டு.
சூரியன் முருகனுக்கு அளித்த சேவலுக்குத் `தாம்ர சூடன்' என்று பெயர். இலக்கியங்கள் காலைச் சூரியனை முருகனாகக் கூறுகின்றன!
‘கொக் கரக் கோ' என்று சேவல் கூவும். இதை `கொக்கு அறு கோ' என விரித்துப் பொருள் காண்பர், ஞானியர். `கொக்கு' எனும் சொல் மாமரத்தைக் குறிக்கும். `போரின் இறுதியில் மாமரமாகி நின்ற சூரபத்மனை சம்ஹரித்து, சேவலும் மயிலுமாகக் கொண்ட கோ' என்பது இதன் பொருளாகும்.
Comments
Post a Comment