துவாபர யுகம்! பிரளயத்தின்போது உயிர்கள் தீயில் கருகி இறக்காமல் இருக்க சப்த ரிஷிகள் யாகம் செய்து கொண்டிருந்தனர். இதனால் தமது சக்தியை இழந்து விடுவோம் என்று நினைத்த அக்னி, யாகத் தீயை எரிய விடாமல் தடுத்தான். கோபம் அடைந்த ரிஷிகள், ‘அக்னி தனது இயல்புகளை இழக்கட்டும்’ என்று சாபம் அளித்தனர்.
இந்த சாபஹத்தியின் பிடியில் இருந்து தப்பிக்க, அக்னி மீன் உரு எடுத்து, பாத நதிக்கு அருகே ஹேரம் பய தீர்த்தத்தில் ஒளிந்து கொண்டான். இதனால் சாப ஹத்தி, அக்னியை எளிதில் அடையாளம் கண்டு அவனைப் பீடித்துக் கொண்டது. இதனிடையே அக்னியைக் காணாத சப்த ரிஷிகள், அவனது மூன்று மூத்த சகோதரர்களை அழைத்து, யாகத்தின் அவிர் பாகத்தை சிவனிடம் சேர்ப்பிக்கும்படி கேட்டனர். ஆனால், அவிர்பாகத்தைத் தாங்கிச் செல்லும் சக்தி அவர்களிடம் இல்லாததால் அவர்கள் மாண்டனர். எவ்வாறு அவிர் பாகத்தை சிவனிடம் சேர்ப்பிப்பது என்று தெரியாமல் சப்த ரிஷிகள் குழம்பினர்.
இந்நிலையில், சாபஹத்தியால் பீடிக்கப்பட்ட அக்னி, தனது ஒளி, சக்தி, சுட்டெரிக்கும் தன்மை அனைத்தையும் இழந்தான். தனது நிலையைக் கண்டு மனம் வருந்திய அவன், நீரை விட்டு வெளியே வரா மல் உள்ளேயே வாடி இருந்தான். அப்போது ஒரு நாள் அந்தத் தீர்த்தத்தில் நீராட சூத மகரிஷி வந்தார். அவரைக் கண்ட அக்னி, அவர் பாதங்களைப் பணிந்து தனது சாபம் தீர யோசனை கூறுமாறு வேண்டினான்.
அக்னியின் நிலையைக் கண்டு வருந்திய சூத மகரிஷி, ‘இந்தத் தீர்த்தக் கரையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கும்படியும், அவ்வாறு செய்தால் அக்னியை பிடித்த சாபஹத்தி விலகும்’ என்றும் கூறினார். இதனைக் கேட்டு பேருவகை அடைந்த அக்னி, அவ்வாறே செய்தான். அக்னியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈசன், ‘அக்னீஸ்வரர்’ என்று வழங்கப்பட்டார். அக்னி ஒளிந்திருந்த தீர்த்தம் ‘அக்னி தீர்த்தம்’ என்று வழங்கப்பட்டது. காலப்போக்கில் அக்னியின் சாபம் தீர்ந்தது. சப்த ரிஷிகளின் அவிர் பாகத்தை அக்னி சிவனிடம் கொண்டு சேர்ப்பித்தான். அக்னி பிரதிஷ்டை செய்தலிங்கத்தைச் சுற்றி பாத நதி பாந்து இறைவனை நீராட்டி வந்தது. ரிஷிகளும் முனிவர்களும் சித்தர்களும் அக்னீஸ்வரரை தொழுது வந்தனர்.
பிற்காலத்தில் வந்த விஜயேந்திர பூபதி முதலியார் என்பவர் அடிக்கடி பாத நதியில் வெள்ளம் வந்து, பெருமானை பக்தர்கள் வழிபட முடியாமல் போனதால், அனைவரும் வழிபடும் வகையில் அக்னீஸ் வரரை வன்னி மரங்கள் சூழ்ந்த ஒரு வனத்தில் பிரதிஷ்டை செய்து, சிறு கோயிலும் எடுப்பித்தார். எனவே, அக்னீஸ்வரர், ‘வன்னீஸ்வரர்’ என அழைக்கப் படலானார். பராந்தக சோழன் காலத்தில் இக்கோயில் பெரிதாக விஸ்தரிக்கப்பட்டது. பின்னர், பாண் டிய மன்னன் மாறவர்மன் சுந்தரபாண்டியன் காலத்தில் மேலும் கோயில் விரி வாக்கம் பெற்றது. அப்போது கருவறையில் இருந்த அக்னீஸ்வரரை கோயிலுக்குக் கிழக்கே ஈசான்ய லிங்கமாகப் பிரதிஷ்டை செய்து, மற்றுமொரு பெரிய லிங்கத்தை கருவறையில் பிரதிஷ்டை செய்தனர். மேலும், பாண்டியர்கள் காலத்தில் சிவகாம சுந்தரி அம்பாளுக்கு தனிச்சன்னிதி அமைக்கப் பட்டது. சோழர் கால நந்தி கருவறைக்கு முன்பும், பாண்டியர் கால நந்தி கொடி மரத்துக்கு அருகேயும் அமைந்துள்ளன. இக்கோயிலில் பெண்களுக்கு அருள் சேர்க்கும் வகையில், கல்யாணாம்பாள் மற்றும் கர்ப்பரட்சாம்பிகை கொலு வீற்றிருக்கின்றனர்.
திருமணம் நடைபெற விரும்பும் ஆணோ அல்லது பெண்ணோ முதல் வாரம் தங்கள் கையாலேயே கல்யாணாம்பாளுக்கு அபிஷேகம் செய்கின்றனர். அவர்களால் நேரில் வர முடியாதபோது, அவர்கள் சார்பாக அவர்களின் தாயார் அபிஷேகம் செய்யலாம். அடுத்த மூன்று வாரங்கள் அவர்கள் பெயர், நட்சத்திரம் கூறி பட்டர் கல்யாணாம்பாளுக்கு அர்ச்சனை செய்கிறார். விரைவில் நல்ல வரன் கைகூடி திருமணம் நடைபெறுகிறது. அதற்குப் பின் தம்பதியர் கல்யாணாம்பாளுக்கு புதிய வஸ்திரங்கள், மாலைகள் சாற்றி மகிழ்கின்றனர்.
ராகு காலம் தவிர, கோயில் திறந்திருக்கும் எந்த நேரத்திலும் பக்தர்கள் அபிஷேகம் செய்யலாம் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கர்ப்பரட்சாம் பிகைக்கு தங்கள் கைகளாலேயே அபிஷேகம், பிரார்த் தனை செய்து மூன்று வார அர்ச்சனைக்குப் பின், குழந்தை பிறந்ததும், குழந்தையுடன் கோயிலுக்கு வந்து அர்ச்சனைகளைச் செய்து மகிழ்கின்றனர். இக்கோயில் காலசர்ப்ப தோஷத்துக்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகின்றது. அர்த்தமண்டபக் கூரையின் மேல் கால சர்ப்ப யந்திரம் காணப்படுகிறது. ராகு தோஷத்தால் அவதிப்படுவோர் இங்குள்ள ஐந்து தலை நாகத்தின் கீழ் நிற்கும் ஸ்ரீகிருஷ்ணர் சிலைக்கு தங்கள் கைகளால் அபிஷேகம் செய்து பலன் பெறுகின்றனர். கேது தோஷம் உள்ள வர்கள் நாகப்படத்தின் கீழுள்ள
சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்கின்றனர். காலசர்ப்ப தோஷ நிவர்த்திக்கு ஒரே சிலையில் அமைந்த ராகு கேதுவுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இதைத் தவிர, இந்தக் கோயிலில் வேறு நவக்கிரஹங்கள் இல்லை.
கோயிலில் அமைந்துள்ள 63 நாயன்மார்களின் திருச்சிலைகள் மற்று மொரு சிறப்பம்சம். வெறும் சிலைகளாக வரிசையாக இல்லாமல் அவர்களின் வாழ்க்கை வரலாறு சம்பந்தப் பட்ட வகையில் இந்த சிலா ரூபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. உதாரணத்துக்கு சிறுத்தொண்டர் காலடியில் நிற்கிறான் சிறுவன் சீராளன். அதேபோல் புகழ்ச்சோழர் கையில் சிவனடியார் தலையுடன் நிற்கிறார். ஒரே நிகழ்வை சேர்ந்த நாயன்மார்களின் சிலா ரூபங்கள் ஒன்றாக அமைக்கப்பட்டுள்ளன. சுந்தரருடன், அவர் பெற்றோர் மற்றும் நரசிங்க முனையரையர், அதுபோல் நின்றசீர் நெடுமாறன், மங்கையர்க்கரசியார் மற்றும் குலச்சிறையார்... இவ்வாறு!
‘ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோயில்’ என்று வழங்கப்படும் இது, பஞ்சக்ரோச தலங்களுள் ஒன்று. இத்தலங்களில் வழிபடுவதால் பாவங்கள் செய்யும் எண்ணமே வராது. மற்ற நான்கு க்ரோச தலங்களாகிய பாப்பான்குளம், பாபநாசம், திருவாலீஸ்வரம் மற்றும் சிவசைலம் ஆகியவை, இக்கோயிலில் இருந்து 25 கி.மீ. தொலைவிலேயே அமைந்துள்ளன.
இத்தகு பெருமைகள் வாந்த இக்கோயிலுக்கு வந்து அக்னீஸ்வரர், வன்னீஸ்வரர் மற்றும் கல்யாணாம்பாள், கர்ப்பரட்சாம்பிகை, ராகு, கேது ஆகியோரை வணங்கி வாழ்வில் எல்லா நலமும் பெறுவோம். மேலும், கோயிலுக்கு மிக அருகில் உள்ள அக்னி தீர்த்தத்துக்கும் சென்று அங்கே ஐக்கியமான தீர்த்த பாலீஸ்வரரையும், பாலசுப்ரமணியரையும் வணங்கி எல்லா சித்தியும் பெறலாம்.
அமைவிடம்: திருநெல்வேலியில் இருந்து 35 கி.மீ., தென்காசியில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது ஆழ்வார்குறிச்சி. நெல்லையில் இருந்து தென்காசிக்கு அம்பாசமுத்திரம் வழியாகச் செல்லும் பேருந்துகள் ஆழ்வார்குறிச்சியில் நின்று செல்லும்.
தரிசன நேரம்: காலை 7 முதல் மாலை 7 மணி வரை. கோயில் வழி பராமரிப்பற்ற நிலையில் இருப்பதால் இருட்டும் முன் செல்வது நல்லது.
தகவல் பெற: 97904 01895
இந்த சாபஹத்தியின் பிடியில் இருந்து தப்பிக்க, அக்னி மீன் உரு எடுத்து, பாத நதிக்கு அருகே ஹேரம் பய தீர்த்தத்தில் ஒளிந்து கொண்டான். இதனால் சாப ஹத்தி, அக்னியை எளிதில் அடையாளம் கண்டு அவனைப் பீடித்துக் கொண்டது. இதனிடையே அக்னியைக் காணாத சப்த ரிஷிகள், அவனது மூன்று மூத்த சகோதரர்களை அழைத்து, யாகத்தின் அவிர் பாகத்தை சிவனிடம் சேர்ப்பிக்கும்படி கேட்டனர். ஆனால், அவிர்பாகத்தைத் தாங்கிச் செல்லும் சக்தி அவர்களிடம் இல்லாததால் அவர்கள் மாண்டனர். எவ்வாறு அவிர் பாகத்தை சிவனிடம் சேர்ப்பிப்பது என்று தெரியாமல் சப்த ரிஷிகள் குழம்பினர்.
இந்நிலையில், சாபஹத்தியால் பீடிக்கப்பட்ட அக்னி, தனது ஒளி, சக்தி, சுட்டெரிக்கும் தன்மை அனைத்தையும் இழந்தான். தனது நிலையைக் கண்டு மனம் வருந்திய அவன், நீரை விட்டு வெளியே வரா மல் உள்ளேயே வாடி இருந்தான். அப்போது ஒரு நாள் அந்தத் தீர்த்தத்தில் நீராட சூத மகரிஷி வந்தார். அவரைக் கண்ட அக்னி, அவர் பாதங்களைப் பணிந்து தனது சாபம் தீர யோசனை கூறுமாறு வேண்டினான்.
அக்னியின் நிலையைக் கண்டு வருந்திய சூத மகரிஷி, ‘இந்தத் தீர்த்தக் கரையில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து வணங்கும்படியும், அவ்வாறு செய்தால் அக்னியை பிடித்த சாபஹத்தி விலகும்’ என்றும் கூறினார். இதனைக் கேட்டு பேருவகை அடைந்த அக்னி, அவ்வாறே செய்தான். அக்னியால் பிரதிஷ்டை செய்யப்பட்ட ஈசன், ‘அக்னீஸ்வரர்’ என்று வழங்கப்பட்டார். அக்னி ஒளிந்திருந்த தீர்த்தம் ‘அக்னி தீர்த்தம்’ என்று வழங்கப்பட்டது. காலப்போக்கில் அக்னியின் சாபம் தீர்ந்தது. சப்த ரிஷிகளின் அவிர் பாகத்தை அக்னி சிவனிடம் கொண்டு சேர்ப்பித்தான். அக்னி பிரதிஷ்டை செய்தலிங்கத்தைச் சுற்றி பாத நதி பாந்து இறைவனை நீராட்டி வந்தது. ரிஷிகளும் முனிவர்களும் சித்தர்களும் அக்னீஸ்வரரை தொழுது வந்தனர்.
திருமணம் நடைபெற விரும்பும் ஆணோ அல்லது பெண்ணோ முதல் வாரம் தங்கள் கையாலேயே கல்யாணாம்பாளுக்கு அபிஷேகம் செய்கின்றனர். அவர்களால் நேரில் வர முடியாதபோது, அவர்கள் சார்பாக அவர்களின் தாயார் அபிஷேகம் செய்யலாம். அடுத்த மூன்று வாரங்கள் அவர்கள் பெயர், நட்சத்திரம் கூறி பட்டர் கல்யாணாம்பாளுக்கு அர்ச்சனை செய்கிறார். விரைவில் நல்ல வரன் கைகூடி திருமணம் நடைபெறுகிறது. அதற்குப் பின் தம்பதியர் கல்யாணாம்பாளுக்கு புதிய வஸ்திரங்கள், மாலைகள் சாற்றி மகிழ்கின்றனர்.
ராகு காலம் தவிர, கோயில் திறந்திருக்கும் எந்த நேரத்திலும் பக்தர்கள் அபிஷேகம் செய்யலாம் குழந்தை பாக்கியம் வேண்டுவோர், கர்ப்பரட்சாம் பிகைக்கு தங்கள் கைகளாலேயே அபிஷேகம், பிரார்த் தனை செய்து மூன்று வார அர்ச்சனைக்குப் பின், குழந்தை பிறந்ததும், குழந்தையுடன் கோயிலுக்கு வந்து அர்ச்சனைகளைச் செய்து மகிழ்கின்றனர். இக்கோயில் காலசர்ப்ப தோஷத்துக்கும் சிறந்த பரிகாரத் தலமாக விளங்குகின்றது. அர்த்தமண்டபக் கூரையின் மேல் கால சர்ப்ப யந்திரம் காணப்படுகிறது. ராகு தோஷத்தால் அவதிப்படுவோர் இங்குள்ள ஐந்து தலை நாகத்தின் கீழ் நிற்கும் ஸ்ரீகிருஷ்ணர் சிலைக்கு தங்கள் கைகளால் அபிஷேகம் செய்து பலன் பெறுகின்றனர். கேது தோஷம் உள்ள வர்கள் நாகப்படத்தின் கீழுள்ள
சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்கின்றனர். காலசர்ப்ப தோஷ நிவர்த்திக்கு ஒரே சிலையில் அமைந்த ராகு கேதுவுக்கு அபிஷேகம் செய்கின்றனர். இதைத் தவிர, இந்தக் கோயிலில் வேறு நவக்கிரஹங்கள் இல்லை.
‘ஆழ்வார்குறிச்சி வன்னியப்பர் கோயில்’ என்று வழங்கப்படும் இது, பஞ்சக்ரோச தலங்களுள் ஒன்று. இத்தலங்களில் வழிபடுவதால் பாவங்கள் செய்யும் எண்ணமே வராது. மற்ற நான்கு க்ரோச தலங்களாகிய பாப்பான்குளம், பாபநாசம், திருவாலீஸ்வரம் மற்றும் சிவசைலம் ஆகியவை, இக்கோயிலில் இருந்து 25 கி.மீ. தொலைவிலேயே அமைந்துள்ளன.
அமைவிடம்: திருநெல்வேலியில் இருந்து 35 கி.மீ., தென்காசியில் இருந்து 25 கி.மீ தொலைவில் உள்ளது ஆழ்வார்குறிச்சி. நெல்லையில் இருந்து தென்காசிக்கு அம்பாசமுத்திரம் வழியாகச் செல்லும் பேருந்துகள் ஆழ்வார்குறிச்சியில் நின்று செல்லும்.
தரிசன நேரம்: காலை 7 முதல் மாலை 7 மணி வரை. கோயில் வழி பராமரிப்பற்ற நிலையில் இருப்பதால் இருட்டும் முன் செல்வது நல்லது.
தகவல் பெற: 97904 01895
Comments
Post a Comment