உன்னத பலன் தரும் சிவ வடிவங்கள்

தென்னாடுடைய சிவபெருமானின் அருட்கடாட்சம் நிறைந்த  திருவடிவங்களை அறுபத்துநான்காக வகுத்துவைத்துள்ளனர், நம் முன்னோர். அவற்றுள் அதிகம் வழிபாட்டில் திகழும் மூர்த்தங்கள்  பன்னிரண்டு. இந்த சிவவடிவங்களை வழிபட்டால் என்னென்ன பலன் தெரியுமா?

ருத்ரன்:  வல்லஃமை மிகும்

உமா மகேசுவரர்: கல்யாண வரம் கிடைக்கும்

அர்த்தநாரீசுவரர்: தாம்பத்திய ஒற்றுமை மேலோங்கும்

சோம சுந்தரர்: நன் மக்கட்பேறு வாய்க்கும்

தட்சிணாமூர்த்தி: ஞானமும் மன அமைதியும் ஸித்திக்கும்

பிட்சாடனர்: காமம் அகலும்

கங்காள மூர்த்தி : வைராக்கியம் கிடைக்கும்

காமதகன மூர்த்தி: மெய்ஞானம் வந்துசேரும்

சரபர்: அகங்காரம், தீவினைகள் அழியும்

நீலகண்டர் : சிந்தனை ஒருமுகப்படும்; செயல்கள் சிறக்கும்

பைரவர்: வீண் பயம் நீங்கும்; விருப்பங்கள் நிறைவேறும்

நடராச பெருமான்: ஐம்புலன்களையும் அடக்கலாம்.


விசேஷ லிங்கங்கள்!
சிவலிங்கங்களை ஐவகையாகச் சொல்வார்கள். தாமாகத் தோன்றியவை சுயம்பு லிங்கங்கள். தேவர்கள் பூஜித்தவை தைவீக லிங்கங்கள். மனிதர்கள் வழிபட்டது மானுட லிங்கம், முனிவர்களால் பூஜிக்கப்பட்டது ஆரிட லிங்கம், அசுரர்களால் வழிபடப்பட்டது ஆசுர லிங்கம் ஆகும். அதேபோல் பஞ்சபூத தலங்களில் அருளும் லிங்கங்களை பஞ்சபூத லிங்கங்களாகப் போற்றுவர். இவற்றுடன் சூரியன், சந்திரன் மற்றும் ஆத்மாவுக்கான தலம் ஆகியவற்றையும் சேர்த்து எண்வகை லிங்க மூர்த்தங்களை விசேஷமாகச் சொல்வார்கள்.

அப்புலிங்கம்: திருவானைக்கா

அக்னிலிங்கம்: திருவண்ணாமலை

ஆகாசலிங்கம்:  சிதம்பரம்

பிருத்விலிங்கம்: திருவாரூர் (காஞ்சீ)

வாயுலிங்கம்: காளஹஸ்தி

சந்திர லிங்கம்: மதுரை

சூரிய லிங்கம்:
திருச்சி

ஆத்மலிங்கம்: திருப்பெருந்துறை

- எம்.சரவணபெருமாள், தூத்துக்குடி


எண் வகை சயனங்கள்
திருக்கோயில்களில் திகழும் பெருமாளின் சயனக் கோலங்கள்  எட்டு வகையாகும். அவை: உத்யோக சயனம், மாணிக்க சயனம், தவ சயனம், தர்ப்ப சயனம், போக சயனம், வீர சயனம், வடபத்ர சயனம், புஜங்க சயனம். இந்தக் கோலங்களில் பெருமாள் சேவை சாதிக்கும் தலங்கள் என்னென்ன தெரியுமா?

உத்யோக சயனம்: குடந்தை சார்ங்கபாணி திருக்கோயில்

மாணிக்க சயனம்: திருநீர்மலை

தவ சயனம்: திருக்கடல் மல்லை

தர்ப்ப சயனம்: திருப்புல்லாணி

போக சயனம்: தில்லை சித்ரகூடம்

வீர சயனம்:
திருவழுந்தூர் (மயிலாடுதுறை)
வடபத்ர சயனம்:
திருவில்லிப்புத்தூர் (வடபத்ரசாயி கோயில்)

புஜங்க சயனம்: திருவரங்கம், அன்பில், ஆதனூர், திருவள்ளூர், உத்தமர் கோயில், கபிஸ்தலம், திருக்கோட்டியூர், திருக்கோளுர், திருச்சிறுபுலியூர், திருப்புள்ளம்பூதங்குடி, திருவிதாங்கூர், வைகுந்த விண்ணகரம், திருத்தெற்றியம்பலம், திருப்பேர்நகர் (கோயிலடி) திருவெற்றிக்குடி, திருவெஃகா முதலான தலங்களில்.


இப்படித்தான் வணங்க வேண்டும்...

ணங்கும் முறை குறித்து ஞானநூல்கள் பலவாறு போதித்துள்ளன. அதாவது, இறைவனை வணங்கும்போது, தலைக்கு மேலாக 12 அங்குலம் உயரத்தில் கரங்களைக் குவித்து வணங்க வேண்டும். தேவர்களை தலைக்குமேல் கரம் குவித்து வணங்க வேண்டும். குருவை நெற்றிக்கு இணையாக கரங்களைக் குவித்தும், சான்றோர்களை நெஞ்சுக்கு நேராக கரம் குவித்தும் வணங்க வேண்டும். அன்னையை வயிற்றுக்கு நேர் கைகூப்பி தொழ வேண்டும் என்கின்றன ஞான நூல்கள்.

அதேபோல் சிவாலயத்தில் அருளும் சண்டிகேஸ்வரரை வணங் குவதிலும் ஒரு நியதி உண்டு. அவர் எப்போதும் சிவ தியானத்தில் இருப்பவர் ஆதலால், அதை கலைக்காத விதம் மெள்ள கைதட்டி, ‘ஸ்வாமி! சிவாலய வழிபாட்டின் பலன் கிடைக்கும்படி அருள் செய்யுங்கள்’ என்று மனதுக்குள் பிரார்த்தித்தபடி வணங்கி வழிபட வேண்டும்.

Comments