கடன் தீர்க்கும் ஸ்ரீகால பைரவாஷ்டகம்!



பலன் தரும் ஸ்லோகம்

கால பைரவாஷ்டகம் என்ற சுலோகம், ஸ்ரீஆதிசங்கரர் அருளியது. மிகவும் சக்தி வாந்த இந்த அஷ்டகத்தை சனிக்கிழமைகளில் அல்லது அஷ்டமி நாளில் பாராயணம் செய்ய, பிணிகள் அகலும். வாழ்க்கை வளம் பெருகும். குறிப்பாக, துரத்தும் கடன்கள் விரைவில் அடையும்.
ஸ்ரீகாலபைரவாஷ்டகம்
தேவராஜ ஸேவ்யமான பாவநாங்க்ரி பங்கஜம்
வ்யால யஜ்ஞஸூத்ர மிந்துஸேகரம் க்ருபாகரம்
நாரதாதி யோகி ப்ருந்த வந்திதம் திகம்பரம்
காஸிகா புராதி நாத கால பைரவம் பஜே॥
பானு கோடி பாஸ்வரம் பவாப்தி தார கம்பரம்
நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோஸனம்
கால காலமம் புஜாக்ஷ மஸ்த ஸூல மக்ஷரம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
ஸூல டங்க பாஸ தண்ட பாணி மாதி காரணம்
ஸ்யாம காய மாதி தேவ மக்ஷரம் நிராமயம்
பீம விக்ர மம் ப்ரபும் விஸித்ர தாண்டவ ப்ரியம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
புக்தி முக்தி தாயகம் ப்ரஸஸ்த சாரு விக்ரஹம்
பக்த வத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்த லோக விக்ரஹம்
நிக்வணத் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
தர்ம ஸேது பாலகம் த்வதர்ம மார்க்க நாஸகம்
கர்மபாஸ மோசகம் ஸுசர்ம தாயகம் விபும்
ஸ்வர்ண வர்ண கேஸ பாஸ ஸோபிதாங்க
நிர்மலம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
ரத்ன பாதுகா ப்ரபாபி ராம பாத யுக்மகம்
நித்ய மத்வி தீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்
ம்ருத்யு தர்ப்ப நாஸனம் கரால தம்ஷ்ட்ர பூஷணம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
அட்டஹாஸ பின்ன பத்மஜாண்ட கோஸ ஸந்ததிம்
த்ருஷ்டி பாத நஷ்ட பாப ஜாலமுக்ர ஸாஸனம்
அஷ்ட ஸித்தி தாயகம் கபால மாலி காதரம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
பூத ஸங்க நாயகம் விஸால கீர்த்தி தாயகம்
காஸி வாஸி லோக புண்ய பாப ஸோதகம் விபும்
நீதி மார்க்க கோவிதம் புராதனம் ஜகத் பதிம்
காஸிகாபுராதி நாத கால பைரவம் பஜே॥
கால பைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
ஜ்ஞான முக்தி ஸாதனம் விஸித்ர புண்ய வர்த்தனம்
ஸோக மோஹ லோப தைன்ய கோப தாப
நாஸனம்
தே ப்ரயாந்தி கால பைரவாங்க்ரி ஸந்நிதிம்
த்ருவம்॥
பொதுவாக, அஷ்டமி நாளில் பைரவ வழிபாடு
சிறந்தது என்றாலும், தேபிறை அஷ்டமி நாளே, பைரவரை வழிபட மிகவும் உகந்தது. அன்று விரதமிருந்து மாலையில் ஸ்ரீபைரவருக்கு வடை மாலை
சாத்தி, அர்ச்சனை செய்து வழிபட்டால் வழக்குகள், அபவாதங்கள், வீண் தொல்லைகளிலிருந்து மீளலாம்.
ஒருவரைத் துரத்தும் ஏவல் முதலிய செவினைகள் அகல, ஸ்ரீபைரவருக்கு புது வஸ்திரம் சாத்தி, ஜவ்வாது, புனுகு போன்றவற்றால் வழிபட்டால் பைரவர் எதிரிகளிடம் இருந்து நம்மைக் காப்பார். நம் துன்பங்களையும் நீக்குவார் என்பது அனுபவக் கூற்று.
திருமணத் தடைகள் நீங்க, புத்திர பாக்கியம் பெற, நல்ல வேலை கிடைக்க, ஸ்ரீபைரவரை ஞாயிற்றுக் கிழமைதோறும் தொடர்ந்து ஒன்பது வாரங்கள் வழி பட்டு, கடைசி வாரத்தில் அர்ச்சனை, அபிஷேகம் செய்து வழிபட, கைமேல் பலன் உண்டு.
பெரும்பாலும் சிவாலயங்களில், அம்மன் சன்னிதியின் திருச்சுற்றில் பைரவர் சன்னிதியைக் காணலாம். இப்பெருமானை நாடி வழிபட்டால் வாழ்வில் எல்லா வளமும் பெறலாம்.

 

Comments