கண் திறக்கும் கரிவரதர்!

அரசன் இந்திரத்யும்னன் அரியணையில் அமர்ந்து, சங்கு சக்ரதாரியான மகா விஷ்ணுவை எண்ண அவன் மனதில் உவகை பொங்கியது. கண்கள் மூடி,உதடுகள் மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தன. அறையின் வாயிலில் நிழலாடியதையோ அகத்தியர் உள்ளே வந்ததையோ கவனிக்கும் மனநிலையில் அவன் இல்லை.
கத்தியர் வந்தார். அரசனின் கண்கள் மூடியிருப்பதைப் பார்த்தார். பொறுமையுடன் காத்திருந்தார். மணித்துளிகள் கழிந்தன. அரசன் கண்களைத் திறப்பதாக இல்லை. அகத்தியர் பொறுமை இழக்கத் துவங்கினார். தன்னை வேண்டுமென்றே உதாசீனம் செய்வதற்காக அரசன் இவ்வாறு நடந்து கொள்வதாக எண்ணினார். கோபம் கொண்டு அவனை யானையாகுமாறு சபித்தார். அகத்தியரின் கோபக்குரலைக் கேட்டு கண் திறந்தான் அரசன். தான் அவரை கவனிக்கவில்லை என்றும், இறை சிந்தனையில் இருந்ததாகவும் தெரிவித்து தன் தவறை மன்னிக்கும்படி இறைஞ்சினான். அகத்தியரோ கொடுத்த சாபத்தை திரும்பப் பெற முடியாது எனவும் அந்த பரந்தாமனிடமே சாப விமோசனம் கோரு மாறும் கூறிவிட்டு அகன்றார்.
அதற்குள் யானையாக மாறி இருந்த இந்திரத்யும்னன் பூலோகத்துக்கு வந்தான். எங்கு மஹாவிஷ்ணுவை வழிபடுவது என்று அறியாமல் தவித்தான். அப்போது இறைவன் அசரீரியாகத் தன்னை நெல் குன்றம் எனக் குவிந்திருக்கும் இடத்தில் வந்து வழிபடுமாறு கூறினார். அவ்வாறே, யானையாகிய அரசனும் நெற்குன்றத்துக்கு வந்து புஷ்கரணிக்கு அருகே வரதராஜப் பெருமாள் ஆலயம் இருப்பதைக் கண்டு, தினமும் புஷ்கரணியில் நீராடி அங்கிருந்த தாமரை மலரால் அர்ச்சனை செய்து இறை வனை வழிபட்டு வந்தான்.
ஒரு சமயம் ஹூஹூ என்ற ஒரு கந்தர் வன் தன் மனைவியுடன் பூலோகத்துக்கு வந்தான். நெற்குன்றம் வரதராஜ பெருமாள் ஆலயத்துக்கு அருகே உள்ள புஷ்கரணியைக் கண்டு அதில் இருவரும் நீராடினர். அப் போது யானை ஒன்று தாமரை மலரைக் கொது இறைவனை வழிபடுவதைக் கண்டு வியந்த ஹூ ஹூ, என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக தன் மனைவி யுடன் முதலையாக மாறி அந்தத் தடாகத் தில் நீந்தத் தொடங்கினான்.
அப்போது பரத்துவாஜ மகரிஷி சந்தியா வந்தனம் செய்வதற்காக அந்தத் தடாகத்துக்கு வந்தார். நீரில் இறங்கி நின்று மந்திரங்களைச் சொல்லத் துவங்கினார். அப்போது தன் மனைவியுடன் தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்த ஹூஹூ தெரியாமல் முனிவரின் மேல் மோதினான். கோபம் கொண்ட பரத்துவாஜர், ஒரு நொடியில் அந்த முதலை யார் என உணர்ந்து ‘எப்போது ஒரு விலங்கைப்போல நடந்து கொண்டாயோ அப்போதே நீ முதலையாகக் கடவது’ என்று சபித்தார். அதிர்ச்சி அடைந்த கந்தர்வன், ‘தெரியாமல் தவறு செய்து விட்டதாக வருத்தம் தெரிவித்து தன்னை மன்னிக்குமாறு இறைஞ்சினான். அப்போது பரத்துவாஜ மகரிஷி, ‘எப்போது நீ ஒரு விஷ்ணு பக்தனின் காலைப் பிடிக்கிறாயோ அப்போதுதான் உனக்கு சாப விமோசனம் என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றார்.
விளையாட்டு வினையாகி விட்டதே என்று வருந்திய ஹூஹூ, என்ன செய்வது என்று யோசித்தான். அப்போது அவனுக்கு ஒரு உபாயம் தோன்றியது. தீவிர விஷ்ணு பக்தனான யானையின் காலைப் பிடித்தால் என்ன? பரத்துவாஜர் அது மனிதனாகத்தான் இருக்க வேண்டும் என்று கூறவில்லையே என்று யோசித்தான்.
மறுநாள் காலை எப்போதும்போல யானை புஷ்கரணிக்கு வந்தது. தண்ணீரில் இறங்கி தாமரை மலரைக் கொதது. இதற்காகவே காத்திருந்த முதலை விரைந்து சென்று யானையின் காலைப் பிடித்துக் கொண்டது. யானை வலி தாங்காமல் பிளிறியது. ஆதிமூலமே" என்று அலறியது. யானையின் அலறலைக் கேட்ட இறைவன் தன் சக்ராயுதத்தை பிரயோகம் செய்தார். அது விரைந்து சென்று இருவரையும் தூக்கி தரையில் போட்டது. தரைக்கு வந்தவுடன் முதலையின் பலம் குறைந்தது. யானையால் எளிதில் தன் காலை விடுவித்துக் கொள்ள முடிந்தது. வரதராஜ பெருமாள் இருவருக்கும் சாப விமோசனம் அளித்தார். அவர்கள் இருவரும் அரசன் இந்திரத்யும்னன் மற்றும் ஹூஹூவாக மாறி இறைவனை வழிபட்டு தேவலோகம் திரும்பினார். கரியாகிய யானைக்கு அருளியதால் இறைவன் கரிவரதராஜன் என்று அழைக்கப்படலானார்.
இன்று, குன்று போல் குவிந்த நெல்லும் இல்லை, புஷ்கரணி யும் இல்லை. மாட வீதிகளும் கோயில் நிலங்களும் ஆக்கிரமிக் கப்பட்டு கரிவரதராஜர் மட்டுமே எஞ்சியுள்ளார். ஆனாலும், அவரைப்போன்ற ஓர் இறைவனை நாம் எங்குமே காண முடியாது. இங்குள்ள இறைவன் கண் திறந்து நம்மைப் பார்த்து நம் துன்பங்களைத் தீர்ப்பவர். பிள்ளை வரமா, திருமணத் தடையா, நேரடியாக அவர் கண்களைப் பார்த்து நாம் தீர்வினை அடையலாம். இங்கு தீபாராதனை காட்டப்படும்போது, கதவுகள் மூடப்பட்டு விளக்குகள் அணைக்கப்பட்டு, தீப ஒளியில் இறை தரிசனம் நிகழ்கிறது. அப்போது நடக்கிறது அந்த அதிசயம். தீப ஒளியில் அதுவரை மூடியிருந்த இறைவனின் கண்கள்திறந்து அவர் நம்மைப் பார்க்கும் அதிசயம் நிகழ்கிறது. அந்த ஒருகணம் நம்மைச் சுற்றி நடப்பது எல்லாம் மறந்து போய் இறைவனுடன் நாம் ஒன்றிப்போய் நிற்பது நிஜம்.
கரி வரதராஜ பெருமாள் 27 நட்சத்திரங்களின் இறைவன். ஒன்பதாம் எண்ணுக்கு உரியவர். தங்கள் பிரார்த்தனைகளை மனதில் நினைத்து பக்தர்கள் ஒன்பது ரூபாய் நாணயங்களை இறைவனின் பாதத்தில் வைக்கின்றனர். இதேபோல் ஒன்பது நாள், ஒன்பது வாரம் என்று வேண்டிக்கொண்டு வழிபட பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன. தங்கள் ஜன்ம நட்சத்திரத்தில் 27 மாதங்கள் வந்து வழிபட, தடை பட்ட காரியங்கள் அனைத்தும் நடைபெறுகின்றன.
இறைவனின் ஜன்ம நட்சத்திரம் ஹஸ்தம். எனவே, ஹஸ்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இங்கு வந்து
சிறப்புப் பிரார்த்தனைகள் செது பலன் பெறுகின்றனர். இறைவன் பிரம்மாண்ட வடிவமாக ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மற்றும் மார்பில் மஹாலக்ஷ்மியுடன் காட்சி தருகிறார். வலதுகரம் அபய ஹஸ்தம் காட்ட இடது கரம் கதாயுதம் தாங்கி உள்ளது. மேலிரு கரங்களில்
சங்கும் சக்கரமும். நாபியிலே சிம்ம முகம் இருப்பது சிறப்பு. ஹஸ்த நட்சத்திர நாட்களில் இங்கு இறைவனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, புது வஸ்திரங்கள் சாற்றப்படுகின்றன. ஒன்பது கஜ புடைவைகள் பெருமாளுக்கு வஸ்திரங்கள் ஆகின்றன.
இங்குள்ள உற்ஸவர் சத்யநாராயண பெருமாள். இவருக்கு ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் சத்ய நாராயண பூஜை அனுஷ்டிக்கப்படுகிறது. மேலும், இக் கோயிலின் மற்றொரு சிறப்பு அம்சம் சந்தான கோபாலகிருஷ்ண விக்கிரகம். குழந்தை இல்லாதவர் கள் இக்கோயிலுக்கு வந்து சந்தானகோபால கிருஷ்ணனை மடியில் ஏந்தி சீராட்டி மகிழ்ந்தால் விரைவில் வீட்டில் மழலைச் செல்வம் தவழ்வது நிச்சயம்.
இங்கு ஒவ்வொரு செவ்வாய் மற்றும் சனிக்கிழமை அன்றும் கூட்டு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன. இக்கூட்டு பிரார்த்தனைகள் மூலம் பலரின் கோரிக்கைகள் நிறைவேறி அவர்கள் நன்றி செலுத்த இனிப்புகளுடன் வருவதை நாம் காண முடிகிறது.

இரண்டு ஆண்டுகள் முன்பு வரை கீற்றுக் கொட்ட கையில் செயல்பட்டு வந்த இந்த ஆலயம் இப்போது பக்தர்கள் உதவியுடன் ஷெட் அமைக்கப் பட்டு அதில் விளங்குகின்றது. மேலும், இங்கு பூமியில் கண்டெடுக் கப்பட்ட வராஹ ஆஞ்சநேயர் மிகவும் வரப்பிரசாதி. கொடிமரம் அருகில் அவர் பிரதிஷ்டை செயப்பட்டுள்ளார். புதிதாக அமைந்த சன்னிதிகளில் நம்மாழ்வார், தேசிகர், ஆஞ்சநேயர், பெருந்தேவி தாயார், ஆண்டாள் ஆகியோர் வீற்றிருக்கின்றனர். இந்த புரட்டாசி நன்னாளில், கண்திறக்கும் கரிவரதராஜ பெருமாளை தரிசனம் செய்து மகிழுங்கள்.
அமைவிடம்: சென்னை கோயம்பேட்டிலிருந்து மதுரவாயல் செல்லும் சாலையில் வெங்காய மண்டி பேருந்து நிறுத்தத்தில் இறங்கி, இடதுபுறம் திரும்பி சற்று தொலைவு சென்றால் கோயில்.
தரிசன நேரம்: காலை 8.30 மணி முதல் 12.30 வரை. மாலை 5.30 மணி முதல் 8.30 வரை.
தொடர்புக்கு: 99625 59123, 99628 11792

Comments