நவரசமும், நவபக்தியும்!

நாட்டிய சாஸ்திரத்தில் அபிநயம் எனப்படும் பாவங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. நாட்டியத் தின் முதுகெலும்பே அபிநயங்கள்தான். சிருங்காரம், ஹாஸ்யம், ரௌத்ரம், காருண்யம், பீபத்ஸம், அற்புதம், பயம், வீரம், சாந்தம் என்று நவரசங் களும் கலந்ததுதான் நாட்டியம். ஒவ்வொரு ரசத்திற்கும் ஒவ்வொரு நிறமும், ஒவ்வொரு கடவுளும் உண்டு" என்கிறார் பிரபல நாட்டியக் கலைஞரும், கலாகே்ஷத்ராவின் நடன ஆசிரியையுமான நித்யகல்யாணி வைத்தியநாதன்.


பரதக் கலைஞர்கள் கலாநிதி நாராயணன் மற்றும் அடையாறு கே.லட்சுமணன் ஆகியோரிடம் முறைப்படி பரத நாட்டியம் பயின்றவரான நித்ய கல்யாணி, நவரசங்களையும், நவபக்தியையும் பற்றி உரிய எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்:


சூழ்நிலைகளுக்கும், சந்தர்ப்பங்களுக்கும் ஏற்பபல்வேறு பாவங்களை வெளிப்படுத்துவது மனிதர்களின் இயல்பு. இந்த பாவங்களை நவரசங்களுக்குள் அடக்கிவிடலாம். நவரசங்களில் முதல் ரசம், சிருங்காரம். காதலன்-காதலிக்குள்ளான அன்பு (ரதி சிருங்காரம்), தாய்- குழந்தைக்கிடையிலான அன்பு (வாத்ஸல்ய சிருங்காரம்), கடவுள்-பக்தனுக்கு இடையிலான அன்பு (சாக்ய சிருங்காரம்) என்று மூன்று வகையாக இதைப் பிரிக்கலாம். ரதி சிருங்காரத்துக்கு உதாரணமாக ராதை- கிருஷ்ணன் அன்பைச் சோல்லலாம். வாத்ஸல்ய சிருங்காரத்துக்கு யசோதை- கிருஷ்ணனையும், சாக்ய சிருங்காரத்துக்கு நந்தனார் - சிவபெருமான் பக்தியையும் உதாரணமாகச் சோல்லலாம். சிருங்கார ரசத்துக்கான கடவுள் - விஷ்ணு; நிறம் - பச்சை.


அடுத்த ரசம், ஹாஸ்யம். சிரிப்பு, கேலி, கிண்டல், ஊடல், நையாண்டி என்று பலவித பாவங்களையும் வெளிப்படுத்தும் ரசம் இது. நண்பர்களுக்கிடையிலான கேலி, கிண்டலையும், கடவுளர்களுடனான மகிழ்ச்சியையும் இதற்கு உதாரணமாகச் சோல்ல லாம். மகிழ்ச்சிதான் இந்த ரசத்துக்கான மூலம். இந்த ரசத்துக்குரிய கடவுள் - கணேசர்; நிறம் -வெள்ளை.
அடுத்து, ரௌத்ரம். கோபம், ஆணவம், ஆக் ரோஷம் என்று பலவித பாவங்களையும் உள்ளடக்கிய ரசம், ரௌத்ரம். இதற்கான கடவுள் - ருத்ரன்; நிறம் - சிவப்பு.


கஷ்டம், துன்பம் போன்றவற்றில் இருந்து பிறக்கும் இரக்க குணமே கருணையாக வெளிப்படு கிறது. கருணை பாவங்களை வெளிப்படுத்துவது, காருண்ய ரசம். நம் கஷ்டங்களைத் தீர்க்கச் சோல்லி கடவுளிடம் கண்ணீர்விட்டு மன்றாடுவது, நாயகன்- நாயகிக்கிடையிலான பிரிவுத் துயரம் என்று பல உதாரணங்களை இதற்குக் கூறலாம். இதற்குரிய தெய்வம் -எமன்; நிறம் - சாம்பல்.


பீபத்ஸம் எனப்படும் வெறுப்புணர்வும் ஒருவித ரசம்தான். சௌந்தர்யலஹரியில் ஒரு பாடலில்
சிவபெருமானின் உருவத்தைப் பார்த்து பார்வதி தேவி மிரளுவதாக வரும். இந்த ரசத்துக்குரிய கடவுள் - சிவன்; நிறம் - நீலம்.
அடுத்த ரசம், பயானகம். பயம், அச்சம் போன்ற பாவங்களின் வெளிப்பாடுதான் இது. ராமனின் வீரத்தை அறிந்த மண்டோதரி, அச்சமடைந்து ராவணனுக்கு புத்திமதி கூறி எச்சரிப்பதை உதாரண மாகக் கூறலாம். இதற்குரிய கடவுள் - காலன்;
நிறம் - கறுப்பு.


கம்பீரம், வீரம் போன்ற பாவங்கள் வீர ரசத்துக் குரியவை. ஹீரோயிசத்துடன் திகழும் கதாநாயகனை இதற்கு உதாரணமாகச் சோல்லலாம். அர்ஜுனன், ராமன் போன்ற வீர புருஷர்களே இதற்கு எடுத்துக் காட்டு. இதற்குரிய கடவுள் - இந்திரன்; நிறம் - மஞ்சள் கலந்த ஆரஞ்சு.


வியக்கத்தக்க நிகழ்வே, அற்புத ரசத்துக்கு ஆதாரம். புரந்தரதாசரின் ‘ஜகதோதாரண’ பாடல், உலகத்தையே காத்து ரட்சிக்கும் ஸ்ரீகிருஷ்ணரை, கடவுள் என்றறியாமல், குழந்தையாக் கருதும்
யசோதையைப் பற்றி வியந்து பாராட்டுவதுபோல் அமைந்திருக்கிறது. இந்த ரசத்துக்கான கடவுள் - பிரம்மா; நிறம் - மஞ்சள் கலந்த பொன் நிறம்.
நாட்டிய சாஸ்திரங்களை வகுத்தளித்த பரதமுனி, உண்மையில் 8 ரசங்களைத்தான் அஷ்டரசங்களாக வெளிப்படுத்தியுள்ளார். அவருக்குப் பிறகு வந்தவர்கள், பல்வேறு விளக்கங்களையும், விவாதங்களையும் மேற்கொண்டு ஒன்பதாவதாக சாந்தம் என்ற ரசத்தை முன்வைத்தார்கள். மற்ற எட்டு ரசங்களின் இறுதியான வெளிப்பாடாக இருப்பது சாந்த ரசம். அமைதி, நிம்மதியைக் குறிக்கும் பாவம் இது. இந்த ரசத்துக்கான கடவுள் - விஷ்ணு; நிறம் - வெள்ளை.


ஒன்பது ரசங்களைப் போன்றே, கடவுள் மீது நாம் காட்டும் பக்தியை, ஸ்ரவணம், கீர்த்தனம், ஸ்மரணம், பாத சேவனம், அர்ச்சனம், வந்தனம், தாஸ்யம், சஜ்யம், ஆத்ம நிவேதனம் என்று பக்தியின் தன்மைக்கேற்ப ஒன்பது வகையாகப் பிரிக்கலாம். ஸ்ரவணம்: கடவுளைப் பற்றிய
சோற்பொழிவுகளை, நாமசங்கீர்த்தனங்களைக் கேட்பதிலேயே பக்தி பெருக்கெடுத்தோடும் நிலையே ஸ்ரவணம். ஒரு வாரம் மட்டுமே உயிரோடு இருக்கும்படியான சாபம் பெற்ற பரீட்சித்து மகாராஜா, ஸ்ரீமத் பாகவதத்தைக் காதால் கேட்டே அந்த ஒரு வாரத்தையும் கழிக்கிறார். அதற்குப் பிறகு அவர் நற்கதியடைந்து மோட்சத்துக்குச் சென்ற
தாக புராணம் சோல்கிறது. இந்த பக்தியே ஸ்ரவணம்.


கீர்த்தனம்: மந்திர உச்சாடனங்கள், பாடல்கள் மூலம் இறைவனை வழிபடுபதே கீர்த்தனம். ம்ருகரி என்பவன், கொடுமையானவேடன். அவனைத் திருத்த நினைத்த நாரதர், ‘நீ நற்குணங்களை அடைய வேண்டுமானால் ராம நாமத்தை உச்சரித்து வா’ என்கிறார். ஆனால் ராம நாமத்தை உச்சரிப்பது தன்னால் இயலாத காரியம் என்கிறான் ம்ருகரி. உடனே நாரதர், ‘மரா மரா என்று மட்டும் தொடர்ந்து சோல்லி வா’ என்கிறார். ம்ருகரியும் ‘மரா மரா’ என்று தொடர்ந்து உச்சரித்து வருகையில் அது ‘ராம ராம’ என்ற மந்திரச் சோல்லாக வெளிப் படுகிறது. பின்னர் இறைவனின் அருளால் ராமாய ணத்தை எழுதும் ஆற்றல் பெறுகிறார் ம்ருகரியாக இருந்து மனம் திருந்திய வால்மீகி முனிவர்.


ஸ்மரணம்: கடவுளே எல்லாம் என்று கருதும் மனநிலையே, ஸ்மரணம். காணும் இடமெல்லாம் நான் வணங்கும் நரசிம்மனே என்று அழுத்தமான அன்பு காட்டிய பக்தப் பிரகலாதனே இந்த பக்திக்கு அருமையான சான்று.
பாத சேவனம்: கடவுளிடம் தன் னையே அர்ப்பணிக்கும் பக்தி இது. உலகத்திற்கெல்லாம் செல்வத்தை அள்ளி வழங்குபவள் மகாலட்சுமி. உலகம் செழிப்பாக இருப்பதே அவளால்தான். ஆனால், மகாலட்சுமியோ, பெருமாளின் திருவடி நிழலில் அமர்ந்து
சேவை செய்வதையே பெரும் பாக்கிய மாகக் கருதுகிறாள்.
அர்ச்சனம்: பூஜை, அர்ச்சனை, ஆரத்தி, சத்சங் கம், ஸ்தோத்திரம் என்று மந்திரங்களால் கடவுளை வழிபட்டு வணங்குதல் இந்த பக்திக்குள் அடங்கும். எந்தவித படாடோபமும் இல்லாமல், ஒரு பழம், சிறிது தீர்த்தம் கொண்டு அர்ச்சித்தாலும்கூட அது அர்ச்சனம் என்னும் பக்தி வளையத்துக்குள் வந்துவிடும். புலவர்கள், ஆழ்வார்கள், நாயன்மார்கள், சாமானிய மனிதர்கள் செய்வது இதைத்தான்.


வந்தனம்: நாம் எதைப் பார்த்தாலும், நம் கண்களுக்கு நம் இஷ்ட தெய்வமே தோன்றும் நிலை இது. அவரைத் தவிர, வேறு எவரையும், எதையும் நினைத்துக்கூடப் பார்க்காத பக்தி இது. கஜேந்திர மோட்சம் இதற்கு நல்ல உதாரணம். கஜேந்திர யானை ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது, முதலை ஒன்று அதன் காலைப் பிடித்துக்கொண்டு விட மறுத்தது. கஜேந்திரன், பெருமாளை நினைத்துக் கதறி அழைத்தபோது, தம் கையிலிருந்த சக்ரத்தால் முதலையை சம்ஹாரம் செய்து கஜேந்திரனுக்கு மோட்சம் அளித்தார் பெருமாள்.


தாஸ்யம்: இறைவனிடம் முழுமையாக சரணாகதி அடையும் நிலை. ராமபிரானிடம் அனுமன் கொண் டிருந்த புனிதமான பக்தி இதற்குச் சிறந்த உதாரணம்.
சாக்யம்: கிருஷ்ணன்-அர்ச்சுனன், குசேலன்- கிருஷ்ணர் இடையிலான நட்பு இந்த பக்திக்கு மிகச் சிறந்த உதாரணங்கள். நண்பனாப் பழகி, தெய்வ மாத்தன்னை வெளிப்படுத்திய பக்தி பாவம் இது.
ஆத்மநிவேதனம்: முழுமையாகத் தன்னையே இறைவனுக்கு ஒப்படைக்கும் பக்தி இது. மகாபலிச் சக்ரவர்த்தியே இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டு. வாமனனாக உருவமெடுத்து வந்து மூன்றடி
மண் கேட்ட திருமாலிடம் தன் தலையைக் காண்
பித்து, ‘மூன்றாவது அடியை என் தலையில்வை’ என்று சோல்லி, தன்னையே அர்ப்பணித்தவன் மகாபலி. Ž

 

Comments