சிறிது நேரம் எடுத்துக்கொண்டு நிதானமாக படிக்கவும். ஏதாவது சந்தேகமாய் இருந்தால் சொல்லிதரலாம்.தவிர உங்களுக்கும் ஏதாவது புதுமை புலப்பட்டால் கட்டாயமாக பகிர்ந்து கொள்ளவும்.
ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் சொல்லி இருக்கிறார். நாம் ஆத்ம சாதனை என்ற கடலில் மூழ்கும்போது முதலில் சங்கு, சிப்பி முதலிய கிடைக்கும் . அதோடு நின்று விடாமல் இன்னும் உள்ளே சென்றால் முத்து, ரத்தினங்கள் கிடைக்கும் இன்னும் முன்னேறினால் மேலும் அரிய வஸ்துக்கள் கிடைக்கும் நமது முடிவான லட்சியம் கடவுளை அடைவதாக இருக்கவேண்டும் , என்பார்.
ஒரு விறகு வெட்டிக்கு தண்ணீரிலிருந்து ஒரு தேவதை வந்து வெள்ளி, தங்கம் என்று ஒவ்வொரு கோடரியாக அவனிடம் இது உன்னுடையதா என்று கேட்ட கதையை சிறு வயதில் படித்த ஞாபகம் இருக்கலாம்.
நேற்று திடீரென்று சந்தியாவந்தனத்தில் பொதிந்திருக்கும் அநேக உண்மைகள் பளிச்சிட்டன.எண்ணிக்கை வரிசயில் அதன் சிறப்புக்கள் புலப்பட்டன.
ஒன்று என்ற ஓம்காரத்தத்துவத்தின் சாரத்தை அதன் மூலம் உபாசிக்கிறோம்.
இரண்டு பிறப்பாளன் என்ற பெயரை உடைய பிராமணர்கள் இந்த அனுஷ்டானத்தை செய்கிறோம். (பூணல் போட்ட பிறகே நமக்கு மறு ஜன்மம் கிடைக்கிறது )
மூன்று காலங்களிலும் செய்யப்படுவது இந்த அனுஷ்டானம். (விரிஞ்சி, நாராயண, சங்கராத்மனே என்று சூரியனை 3 முக்கிய தேவர்களின் வடிவாக உபாசிக்கின்றோம்)
சந்தியாயை நாம: ,சாவித்திரி, காயத்தரி, சரஸ்வதி என்று 4 தேவிகளுக்கு நமஸ்காரம் பண்ணுகிறோம்.
ஐந்து முகங்கள் கொண்ட ஸ்ரீ காயத்ரி தேவியை உபாசிக்கின்றோம்.,
ருதகும்சத்யம் என்ற மந்திரத்தில் 6 விதமாக ஸ்ரீ சங்கரநாராயண மூர்த்தத்தை ஸ்தோத்ரம் பண்ணுகிறோம். தவிர மனசு, வாக்கு , கைகள், பிறப்புறுப்பு முதலிய 6 வழிகள் மூலமாக செய்த பாபங்களை நசிக்கும் படி மந்திரம் சொல்லி தீர்த்தம் அருந்துவோம்.
காயத்திரி ஜபம் பண்ணுவதற்கு முன்னால் சப்த ரிஷிகள் முதலியவர்களை ஆவாஹனம் செய்கிறோம் .
நாம் தியானம் பண்ணும்போது அநேக இடங்களில் அநேக இதழ்களை கொண்ட தாமரை மலர்கள் இருப்பதாக உபாசிப்போம். ஆனால் சட் என்று கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்தால் நமக்கு ஞாபகம் வருகிறது 8 இதழ் தாமரை தான். வீடுகளில் கூட இந்த 8 இதழ் தாமரை கோலம் போடுவோம்.
நவக்ரஹங்களுக்கு சந்த்யாவன்தனம் சமயம் அர்க்கியம் 3 வேளைகளிலும் கொடுப்போம்.
ப்ராச்சை திசைய நமஹ என்று ஒவ்வோர் திசை யாக , மேலே, கீழே , நடுவில் என்று 10 முறை வந்தனங்கள் மந்திரத்துடன் சொல்லுவோம்.
ஜபம் பண்ணுவதற்கு முன்பு பிராணாயாமம் 10 முறை பண்ணுவோம்.
பரமேஸ்வரன், மித்திரன், வருணன் மற்றும் மும்மூர்த்திகள் ஆக 6 தேவதைகள், 5 முகங்கள் கொண்ட ஸ்ரீ காயத்ரி தேவி ஆக 11 மூர்த்தங்கள் முக்கியமாக ஆராதிக்கப்படுகின்றன.
கேசவா, நாராயணா, மாதவா ,கோவிந்தா முதலிய 12 முக்கியமான ஸ்ரீமன் நாராயணரை நம் உடலில் பல பாகங்களில் ஆவாஹனம் செய்து கொள்ளுகிறோம். தவிர அவர்களுக்கு அரிக்யமும் கொடுக்கிறோம்.
பிரதோஷம் என்பது முக்கியமாக திரயோதசி (13ம் நாள்) அன்று கொண்டாடப்படுகிறது. நமக்கு வரும் பாபங்கள் அன்று மாலை சிவனை பூஜை செய்தால் நசிந்துவிடும் என்று சொல்லப்படுகிறது . நிதமுமே மாலை வேளையை நித்ய பிரதோஷ சமயம் என்பார்கள். அந்த சமயம் சந்தியாவந்தனம் செய்தால் நம் பாபங்கள் நசிந்துவிடும்.
யமாய நமஹ என்று ஸ்ரீ எமதர்மராஜரை துதிக்கும் மந்திரத்தில் 14 நாமங்கள் சொல்லி வணங்குகிறோம்.
காயத்ரி மந்திரத்தை 32, 64, 108, 1008 என்ற கணக்கில் ஜபம் செய்தால் நல்லது.
எல்லாவற்றிக்கும் சிகரம் வைத்தது போல் நாம் சொல்லும் மாத்யானிக மந்திரத்தில் ஸ்ரீ சூர்ய நாராயணரை பார்த்து நூற்றுக்கணக்கான வருடங்கள் நாங்கள் வாழ்வோம்,
நூற் ற்றுக்கணக்கான வருடங்கள் உன்னை தரிசித்துக்கொண்டே இருப்போம் என்று அடுக்கிக்கொண்டே போகும். இதில் நம் நம்பிக்கையும் , பக்தியும் பளிச்சிடுகிறது.
மேலே கூறிய அதிசயங்கள் அந்தந்த வேளைகளில் நாம் பண்ணினால் 15, 20 நிமிஷங்களில் செய்யக்கூடிய அபாரமான, சக்திவாய்ந்த, உபாசனை இந்த சந்தியா வந்தனம்.
__._,_.___
Comments
Post a Comment