அர்த்த மேரு ஸ்ரீசக்ர தரிசனம்

சென்னை, புறநகர் பகுதியான மாங்காடு தலத்தில் அமைந்துள்ளது அருள்மிகு ஸ்ரீகாமாட்சியம்மன் திருக்கோயில். இக்கோயிலில் அர்த்த மேரு ஸ்ரீசக்ர தரிசனம் மிகவும் விசேஷம்.
45 திரிகோணங்களுடன் திகழும் இந்தச் சக்கரம் ‘அஷ்ட கந்தம்’ எனும் எட்டு வகை மூலிகைகளால் செயப்பட்டது என்பதால், இதற்கு அபிஷேகம் கிடையாது; சந்தனம், புனுகு மட்டுமே சாத்தி வழிபடுகின்றனர். விஜயதசமியன்று அஷ்டகந்த மூலிகை சாத்தப்படுகிறது.


வழக்கில் வெற்றி தரும் அம்மன்!
கடலூர் புதிய பேருந்து நிலையத்துக்கு அருகில் உள்ள பாலத்தின் கீழ் அமைந்துள்ளது கரைகாத்த காளியம்மன் திருக்கோயில். ஒரு சமயம் இங்கு வெள்ளம் பெருக்கெடுத்து வந்தபோது, வெள்ளத்தைத் தடுத்து, மக்களைக் காத்த தெய்வம் என்று இந்த அம்மனைப் போற்றுவர். எனவே, ‘கரை காத்தகாளி அம்மன்’ என்றும் இந்த அம்மனை அழைக்கின்றனர். நியாயமான வழக்குகளில் வெற்றி கிடைக்க, இந்த அம்மனுக்கு விசேஷ பூஜைகள் செய்து புடைவை சாத்தி பக்தர்கள் வழி படுகின்றனர்!
லிங்க வடிவ அம்பாள்!
உடுமலைப்பேட்டையிலிருந்து 18 கி.மீ. தொலைவில், கொழுமம் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் மாரியம்மன் லிங்க வடிவில் காட்சி தருகிறாள். ‘கோட்டை மாரியம்மன்’ என்றும் இந்த அம்மனை அழைப்பர். இரண்டரை அடி உயரத்தில் ஆவுடையாருடன் கூடிய லிங்க சோரூபியாகக் காட்சி தந்தாலும், அம்மனுக்குரிய அடையாளங்கள் ஏதும் காணப்பட வில்லை. எனினும், இந்த லிங்கத்தை அம்மனாகவே பாவித்து, புடைவை அணிவித்து, பூஜைகள் மற்றும் அபிஷேகங்கள் செயப்படுகின்றன. கண் நோய்களைத் தீர்ப்பதில் மிகச்சிறந்த வரப்ரசாதியாக திகழ்கிறாள் இந்த மாரியம்மன்.
மான் வாகன துர்கை!
கஞ்சிபுரம் மாவட்டம், பெரும் பேர் கண்டிகையிலுள்ள அருள்மிகு தான்தோன்றீஸ்வரர் திருக்கோயிலில் அருள்பாலிக்கும் கனகதுர்கை அம்மன் வித்தியாசமாக, மான்வாகனத்துடன் காட்சி தருகிறாள்.

 

Comments