நம்முடைய வாழ்க்கையை நிர்ணயிக்கும் ஆற்றல் கொண்டவை நவகிரகங்கள். இந்த நவகிரகங்களின் ஆதிக்கத்தில்தான் பன்னிரண்டு ராசிகளும் அமைந்திருக்கின்றன. அதனால், பன்னிரண்டு ராசி அன்பர்களுமே இங்கே திருஞானசம்பந்தப் பெருமான் அருளிய கோளறு பதிகத்தின் சில பாடல்களைப் பாராயணம் செய்து, கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம்.
வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
என்பொடு கொம்பொ டாமை இவைமார் பிலங்க எருதேறி ஏழை உடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டாறும் உடனாய நாள்கள் அவைதான்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளை விடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசைதெய்வமான பலவும்
அருநிதி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
மதிநுதல் மங்கையோடு வடவால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன்
நதியடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
கொதியுறு காலனங்கி நமனோடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுண நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
நஞ்சணி கண்டன் எந்தை மடவான் தனோடும் விடைஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

Comments
Post a Comment