ஒடிஷா மாநிலத் தலைநகர் புவனேஸ்வரிலிருந்து தெற்கே சுமார் 60 கி.மீ. தொலைவில், கடற்கரைத் தலமாக அமைந்துள்ளது பூரி நகரம். பூரி என்றாலே உடனே நினைவுக்கு வருவது ஆண்டுதோறும் அங்கு ஒடியா பஞ்சாங்கத்தின்படி ஆஷாடம் சுக்லபட்சத் துவிதியை நாளில் நடைபெறும் ரதயாத்திரை விழாதான்! அரிய ஒன்றைச் சுமந்து செல்லும் வண்டியாகவும் எதிர்கொள்ளும் அனைத்தையும் அழிக்கும் வல்லமையுடைய பெரும் சக்தியாய் ஆர்ப்பரித்து உருண்டோடி வரும் ஜகந்நாத பிரபுவின் ரதத்தை மேல் நாட்டவர் வியப்புடன் ‘ஜகர்நாட்’ எனப் பெயரிட்டல்லவோ அழைக்கின்றனர்.
தென்னகக் கோயில்களில் கொண்டாடப்படும்
தேர்த் திருவிழா போன்று வட இந்திய மாநிலங்களில் ரதோத்ஸவம் நடத்தப்படுவதில்லை என்ற ஒரு கருத்து பலரிடம் நிலவுகிறது. அது தவறு. ஜகந்நாத கே்ஷத்ரங்கள் எனப் போற்றப்படும் பூரி (ஒடிஷா) ரத யாத்திரையுடன், ஜகந்நாத்பூர் (ராஞ்சி), சீராம்பூர் (மே. வங்கம்), அசி படித்துறை ஜகந்நாதர் ஆலயம் (காசி) ஆகியவற்றில் அதேதினத்திலும் மற்றும் புவனேஸ்வர்லிங்க ராஜ் ஆலயத்திலும் ஸ்ரீராமநவமிக்கு முதல்நாள் ஸ்ரீராம ரால் முன்னின்று நடத்தப்படுவதாக அறியப்படும் ‘அசோகாஷ்டமி’ தேர்த்திருவிழாவும் மிகப் பிரபலம்.
ஸ்ரீகே்ஷத்ரம், புருஷோத்தம தாம், ஜகந்நாத் தாம், சங்கு வடிவில் அமைந்துள்ளதால் சங்கு கே்ஷத்ரம் என வெவ்வேறு பெயர்களால் இப்புண்ணியத் தலம் அறியப்படுகிறது. ஸ்கந்த புராணத்தில் கூறுவது போல், ஜகந்நாதர் ஓர் உத்தம புருஷன். மாந்தருக்குள் மாணிக்கம். ஒருவன் எப்படி நற்பண்புகள், நல் லொழுக்கம் மற்றும் உள்ளத் தூய்மையுடனும் வாழ் வில் ஈடுபட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக இங்கு சகுண - தாரு - பிரம்மமாக எழுந் தருளி சேவை சாதிக்கின்றான். தனது ‘தாவூ’ (அண்ணன்) பலராமனுக்கும், சகோதரி சுபத்ராவுக்கும்
சிறந்த சகோதரனாகவும்தன் தேவி ‘ஸ்ரீ’க்கு ஒப்புயர் வற்ற பதியாகவும் விளங்குகிறான்.
அது மட்டுமா? மார்கழி மாதம் அமாவாசையின் போது தொடர்ந்து மூன்று நாட்கள், தனது முந்தைய அவதாரங்களின்போது பெற்றோர்களாகத் திகழ்ந்தவர்களுக்குத் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆம்... முதலில் காஸ்யபர்-அதிதி (வாமனாவதாரம்), இரண் டாவதாக தசரதர்-கௌசல்யை (ராமாவதாரம்), மூன்றாவதாக, வசுதேவர்-தேவகி, நந்தகோபன்- யசோதை (கிருஷ்ணாவதாரம்) என்று! மன்னன் இந்த் ரத்யும்னன், ராணி குண்டிச்சா ‘மௌசி’யுடன் சேர்ந்து சிராத்தக் கடமையைத் தவறாது மேற்கொள்கிறான். அதேசமயம், தன்னிடம் சரணாகதி அடைந்தவர்களுக்கும் அருளுகிறான். இவ்வாலயத்தைப் பற்றிப் பல அதிசய நிகழ்வுகள் கூறப்படுகின்றன. அவற்றைப் பல நூல்கள் வாயிலாகப் படித்தும், கேட்டும், நேரடியாக அனுபவித்தும் அறிந்து கொண்ட விவரங்கள்.
பூரி நகரின் எப்பகுதியிலிருந்து பார்த்தாலும்
கோபுரத்தின் உச்சியிலிருக்கும் சுதர்சனச் சக்கரம் நம்மை நோக்கியே தரிசனம் தரும்.
கடற்கரைப் பிரதேசங்களில் சாதாரணமாக, பகலில் கடலிலிருந்து நிலம் நோக்கிக் காற்று வீசும். இரவில் நிலத்திலிருந்து கடல் நோக்கிக் காற்று வீசும். ஆனால், இங்கோ நிலைமை தலைகீழாய் இருப்பது அதிசயம்.
கோபுர உச்சியில் இருக்கும் பிப்பிலி வண்ணக் கொடி எப்போதும் காற்று வீசும் திசைக்கு எதிர் திசை யில்தான் படபடக்கும்.
பறவைகளோ, விமானங்களோ ஆலயத்தின் மேற்பகுதியில் பறப்பதில்லை.
தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுர நிழல் தரையில் விழாததுபோல், இக்கோபுர மாடத்தின் நிழலும் எந்நேரத்திலும் பூமியில் படாது.
மடைப்பள்ளியில் அன்றாடம் தயாரிக்கப்படும் உணவின் அளவு ஆண்டு முழுவதும் ஒரே சீராக, குறிப்பிட்ட விகிதத்தில்தான் இருக்கும். ஆனால், அதுவே சில ஆயிரம் பக்தர்களுக்கோ அல்லது லட்சோப லட்சம் மக்களுக்கோ அன்னமிட ஏற்றதாக அமைந்துவிடும். குறையவும் குறையாது. அதே சமயம் மிஞ்சிப் போய் வீணாகாமலும் இருக்கும்.
மடைப்பள்ளியில் நவீன உபகரணங்களைக் கொண்டு இல்லாமல், புராதன முறையில் விறகு அடுப்பில்தான் பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. ஏழு மண் கலன்களை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்து நீராவி முறையில் சமைக்கப்படுகிறது. மேல் பானையிலுள்ள உணவு முதலில் வேகும். அதன்பின் மற்றவை பதமாகும். கடைசியில்தான் அடிப்பானையி லுள்ள உணவு பத நிலையை அடையும்.
தயாரான பிரசாதம் மண் சட்டிகளில் வைத்து காவடி எடுப்பதுபோல் தோளில் சுமந்து சுவாமி கருவறைக்கு எடுத்துச் செல்லுகையில் பிரசாதத்திலிருந்து மணம் எழாது. ஆனால், கோபிநாதனுக்குப் படைக்கப்பட்டுத் திரும்பி பக்தர்களுக்கு அன்னமிட வருகையில் உணவின் மணம் காற்றில் பரவி நம் மூக்கைத் துளைக்கும். ஆம். இப்போது அது உலக நாதனால் ஏற்கப்பட்டு, ஆசீர்வதிக்கப்பட்டு விட்டதே அதற்குக் காரணம்.
ஆலயத்தின் உள்ளிருந்து சிங்கத்துவார முகப்பு
கோபுர வாசல் முதல்படியைத் தாண்டும்போது கடல் அலையோசை நம் காதுகளில் விழாது. ஆனால், அதே படியை ஆலயத்தின் வெளியிலிருந்து வந்து தாண்டும்போது அலையோசையின் இரைச்சலை முக்கியமாக மாலை வேளைகளில் நன்கு கேட்கலாம்.
ஸ்ரீஜகந்நாதர் ரத யாத்திரை மேற்கொள்ளும் வழி யெங்கும் அவரை மகிழ்விக்க கோபாலர்களான பக் தர்கள் அவனது புகழைப் போற்றித் துதித்த வண்ணம் இருக்கின்றனர். அதைக்கேட்டு மனம் குளிர்ந்துபோகும் கோவிந்தன் அவர்களுக்கு அருளாசி வழங்க விழைகிறான். அவன் ஒரு கருணைக் கடல். ஈரேழு உலகுக்கும் உற்ற தோழன். அப்படிப்பட்ட ஸ்ரீதேவி சமேத ஜகந்நாதப் பிரபு, என் கண்களுக்கு விருந்தாக எப்போதும் என் முன் சேவை சாதிக்கட்டும்!" என்று ஸ்ரீஆதிசங்கரர் தனது ஸ்ரீஜகந்நாத அஷ்டகத்தில் இறைஞ்சுவதைப் போல் நாமும் போற்றி வணங்குவோம்.
தென்னகக் கோயில்களில் கொண்டாடப்படும்
தேர்த் திருவிழா போன்று வட இந்திய மாநிலங்களில் ரதோத்ஸவம் நடத்தப்படுவதில்லை என்ற ஒரு கருத்து பலரிடம் நிலவுகிறது. அது தவறு. ஜகந்நாத கே்ஷத்ரங்கள் எனப் போற்றப்படும் பூரி (ஒடிஷா) ரத யாத்திரையுடன், ஜகந்நாத்பூர் (ராஞ்சி), சீராம்பூர் (மே. வங்கம்), அசி படித்துறை ஜகந்நாதர் ஆலயம் (காசி) ஆகியவற்றில் அதேதினத்திலும் மற்றும் புவனேஸ்வர்லிங்க ராஜ் ஆலயத்திலும் ஸ்ரீராமநவமிக்கு முதல்நாள் ஸ்ரீராம ரால் முன்னின்று நடத்தப்படுவதாக அறியப்படும் ‘அசோகாஷ்டமி’ தேர்த்திருவிழாவும் மிகப் பிரபலம்.
ஸ்ரீகே்ஷத்ரம், புருஷோத்தம தாம், ஜகந்நாத் தாம், சங்கு வடிவில் அமைந்துள்ளதால் சங்கு கே்ஷத்ரம் என வெவ்வேறு பெயர்களால் இப்புண்ணியத் தலம் அறியப்படுகிறது. ஸ்கந்த புராணத்தில் கூறுவது போல், ஜகந்நாதர் ஓர் உத்தம புருஷன். மாந்தருக்குள் மாணிக்கம். ஒருவன் எப்படி நற்பண்புகள், நல் லொழுக்கம் மற்றும் உள்ளத் தூய்மையுடனும் வாழ் வில் ஈடுபட வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் விதமாக இங்கு சகுண - தாரு - பிரம்மமாக எழுந் தருளி சேவை சாதிக்கின்றான். தனது ‘தாவூ’ (அண்ணன்) பலராமனுக்கும், சகோதரி சுபத்ராவுக்கும்
சிறந்த சகோதரனாகவும்தன் தேவி ‘ஸ்ரீ’க்கு ஒப்புயர் வற்ற பதியாகவும் விளங்குகிறான்.
அது மட்டுமா? மார்கழி மாதம் அமாவாசையின் போது தொடர்ந்து மூன்று நாட்கள், தனது முந்தைய அவதாரங்களின்போது பெற்றோர்களாகத் திகழ்ந்தவர்களுக்குத் திதி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. ஆம்... முதலில் காஸ்யபர்-அதிதி (வாமனாவதாரம்), இரண் டாவதாக தசரதர்-கௌசல்யை (ராமாவதாரம்), மூன்றாவதாக, வசுதேவர்-தேவகி, நந்தகோபன்- யசோதை (கிருஷ்ணாவதாரம்) என்று! மன்னன் இந்த் ரத்யும்னன், ராணி குண்டிச்சா ‘மௌசி’யுடன் சேர்ந்து சிராத்தக் கடமையைத் தவறாது மேற்கொள்கிறான். அதேசமயம், தன்னிடம் சரணாகதி அடைந்தவர்களுக்கும் அருளுகிறான். இவ்வாலயத்தைப் பற்றிப் பல அதிசய நிகழ்வுகள் கூறப்படுகின்றன. அவற்றைப் பல நூல்கள் வாயிலாகப் படித்தும், கேட்டும், நேரடியாக அனுபவித்தும் அறிந்து கொண்ட விவரங்கள்.
கோபுரத்தின் உச்சியிலிருக்கும் சுதர்சனச் சக்கரம் நம்மை நோக்கியே தரிசனம் தரும்.
கடற்கரைப் பிரதேசங்களில் சாதாரணமாக, பகலில் கடலிலிருந்து நிலம் நோக்கிக் காற்று வீசும். இரவில் நிலத்திலிருந்து கடல் நோக்கிக் காற்று வீசும். ஆனால், இங்கோ நிலைமை தலைகீழாய் இருப்பது அதிசயம்.
கோபுர உச்சியில் இருக்கும் பிப்பிலி வண்ணக் கொடி எப்போதும் காற்று வீசும் திசைக்கு எதிர் திசை யில்தான் படபடக்கும்.
பறவைகளோ, விமானங்களோ ஆலயத்தின் மேற்பகுதியில் பறப்பதில்லை.
தஞ்சைப் பெரிய கோயிலின் கோபுர நிழல் தரையில் விழாததுபோல், இக்கோபுர மாடத்தின் நிழலும் எந்நேரத்திலும் பூமியில் படாது.
மடைப்பள்ளியில் அன்றாடம் தயாரிக்கப்படும் உணவின் அளவு ஆண்டு முழுவதும் ஒரே சீராக, குறிப்பிட்ட விகிதத்தில்தான் இருக்கும். ஆனால், அதுவே சில ஆயிரம் பக்தர்களுக்கோ அல்லது லட்சோப லட்சம் மக்களுக்கோ அன்னமிட ஏற்றதாக அமைந்துவிடும். குறையவும் குறையாது. அதே சமயம் மிஞ்சிப் போய் வீணாகாமலும் இருக்கும்.
மடைப்பள்ளியில் நவீன உபகரணங்களைக் கொண்டு இல்லாமல், புராதன முறையில் விறகு அடுப்பில்தான் பிரசாதம் தயாரிக்கப்படுகிறது. ஏழு மண் கலன்களை ஒன்றின்மேல் ஒன்றாக வைத்து நீராவி முறையில் சமைக்கப்படுகிறது. மேல் பானையிலுள்ள உணவு முதலில் வேகும். அதன்பின் மற்றவை பதமாகும். கடைசியில்தான் அடிப்பானையி லுள்ள உணவு பத நிலையை அடையும்.
ஆலயத்தின் உள்ளிருந்து சிங்கத்துவார முகப்பு
கோபுர வாசல் முதல்படியைத் தாண்டும்போது கடல் அலையோசை நம் காதுகளில் விழாது. ஆனால், அதே படியை ஆலயத்தின் வெளியிலிருந்து வந்து தாண்டும்போது அலையோசையின் இரைச்சலை முக்கியமாக மாலை வேளைகளில் நன்கு கேட்கலாம்.
ஸ்ரீஜகந்நாதர் ரத யாத்திரை மேற்கொள்ளும் வழி யெங்கும் அவரை மகிழ்விக்க கோபாலர்களான பக் தர்கள் அவனது புகழைப் போற்றித் துதித்த வண்ணம் இருக்கின்றனர். அதைக்கேட்டு மனம் குளிர்ந்துபோகும் கோவிந்தன் அவர்களுக்கு அருளாசி வழங்க விழைகிறான். அவன் ஒரு கருணைக் கடல். ஈரேழு உலகுக்கும் உற்ற தோழன். அப்படிப்பட்ட ஸ்ரீதேவி சமேத ஜகந்நாதப் பிரபு, என் கண்களுக்கு விருந்தாக எப்போதும் என் முன் சேவை சாதிக்கட்டும்!" என்று ஸ்ரீஆதிசங்கரர் தனது ஸ்ரீஜகந்நாத அஷ்டகத்தில் இறைஞ்சுவதைப் போல் நாமும் போற்றி வணங்குவோம்.
Comments
Post a Comment