யாகம் எனும் தியாகம்!

தானமும் தவமும் என்று தியாகத்தின் வேறுவித வடிவங்களைப் பரவலாக அறிவோம். ஆனால், யாகம் என்ற தியாகத்தின் சிறப்பு எப்படிப்பட்டது, ஹோமம் வளர்த்தலும், அக்னியில் ஆகுதியாக இடுதலும் எத்தகைய தியாகத்தை வெளிப்படுத்தும் என்பதை அறிய உபநிடதக் கதைகள் உதவுகின்றன" என்றார் தமது சொற்பொழிவில் சுதா சேஷையன்.
அஹம் பிரம்மாஸ்மி’ என்ற வாக்கியம் நமது இந்து மதத்தில் மிகவும் பிரசித்தம். வேதவாக்கு. நானே பிரம்மம் என்பது இதன் பொருள். ஆனால், இந்த வாக்கியத்தை அடக்கத்துடன் சொல்ல வேண்டும். ஹிரண்யகசிபு, பிரஹலாதனிடம் இதைத்தான் சொன்னான். ஆனால், ஆணவத்துடன் சொன்னான். ‘நானே கடவுள். என்னைத் தவிர வேறு கடவுளே இல்லை’ என்பதாக அவன் சொன்னது ஒலித்தது.
ஆனால், இந்த உலகமே கடவுளால் படைக்கப் பட்டது. எல்லா இடங்களிலும் கடவுள் நிறைந்திருக்கிறார். நானும் இந்த உலகில் இருக்கிறேன். அதனால் நானும் கடவுள்தான் என்ற அர்த்தத்தில், ‘அஹம் பிரம்மாஸ்மி’என்று பணிவுடனும், பக்தியுடனும், தன்னடக்கத்துடனும் சொன்னால், அதுதான் உண்மையான பொருள் கொண்டதாக இருக்கும்.
ஒரு மரத்தில் இரண்டு பறவைகள் வசித்து வந்தன. மேல்கிளையில் ஒரு பறவை, சயூஜா என்று அதற்குப் பெயர். கீழ்க்கிளையில் ஒரு பறவை. அதன் பெபர்சகாயா! கீழ்க்கிளையில் இருக்கும் பறவை அருகிலுள்ள கிளையில் பழம் ஒன்றைக் கொத்தித்தின்றது. ஒரே புளிப்பு. இன்னொரு கிளைப் பழத்தைக் கொத்தினால் ஒரே கசப்பு! வேறு ஒரு கிளைப் பழத்தைத்தின்றால் இரண்டும் கெட்டான் சுவை. ஆக, எந்தப் பழமுமே சரியில்லை. சுவையாக இல்லை.
ஆனால், மேல் கிளையில் இருந்த பறவையான சயூஜா இப்படியெல்லாம் மனதை அலைய விடாமல் வெறும் சாட்சியாக அமைதியாக இருந்தது. அந்தப் பறவைதான் பரமாத்மா. கீழே இருந்தது ஜீவாத்மா.
உலகப் பற்றுகளில் எல்லாம் கொஞ்சமும் மனம் ஈடுபடாமல், வெறும் சாட்சியாக இருக்கும் தன்னைக் குறித்ததொரு கருத்தை, போர்க் களத்தில் உபதேசித்த பகவத் கீதையில் இந்தக் கதையை அர்ஜுனனுக்கு
சொல்லிப் புரிய வைக்கிறார் கிருஷ்ண பரமாத்மா.
யாகம் என்ற வார்த்தை ‘யுஜ்’என்ற பதத்திலிருந்து வந்தது. யோகம் என்றால் பயிற்சி என்று பொருள். ‘தியஜ்’என்பதிலிருந்து வந்ததுதான் தியாகம். நமக்குப் பிடித்ததாகவே இருந்தாலும்கூட, ஒவ்வொன்றாகத் தியாகம் செய்ய வேண்டும் என்பதைக் காட்டவேயாகம் உருவாக்கப்பட்டது.
பட்டுப் புடவையையும் கூடயாகத் தீயில் போட்டு விடுவார்கள். அதற்கு எப்படிப்பட்ட மனது வேண்டும். ஆக, தியாக மனப்பான்மை வளரவேயாகம் உண்டாயிற்று. அன்றைய நாளில் பழங்காலத்தில் பல பொருள்களையும் ஆகுதியாக அக்னி பகவானுக்கு வழங்கினார்கள். அதனை இப்போது குறை கூற வேண்டாம். இன்றைய நாளில் நமக்கு என்ன முடியுமோ, எந்த அளவுக்கு தியாகம் செய்ய முடியுமோ அதை அக்னியில் சேர்த்து யாகம் செய்வது உத்தமம்."

Comments