முருகனுக்கு தாராபிஷேகம்!

ரோடு மாவட்டம், கோபிச்செட்டிப்பாளையத்துக்கு அருகில் உள்ளது பச்சைமலை முருகன் கோயில். பழநி முருகனைப் போலவே மேற்கு நோக்கி தங்க பீடத்தில் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார், இங்குள்ள கல்யாண சுப்ரமணியர். இவருக்கு தாராபிஷேகம் செய்வது விசேஷம் என்கிறார்கள். 108 லிட்டர் பால் கொண்டு அபிஷேகித்து, 11 முறை ருத்ரம் ஓதி வழிபடுவதால் நீண்ட ஆயுள், குழந்தை பாக்கியம் ஆகிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

ஆந்திர மாநிலம் கொத்தப்பபேட்டை தாலுகாவில் உள்ளது வடவிஜயபுரம். இங்குள்ள மலையின் மீது சுயம்பு மூர்த்தியாக கோயில் கொண்டிருக்கிறார் முருகப்பெருமான். ஆகவே அவரை தான்தோன்றி முருகன் என்று அழைத்து வழிபடுகிறார்கள் பக்தர்கள்.

செங்கல்பட்டு அருகிலுள்ள உத்திரமேரூர் கல்வெட்டுத் தகவல்களுக்கு பிரசித்திபெற்றது என்பதை நாமறிவோம். இங்குள்ள திருக்கோயிலில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான், சுமார் ஆறடி உயரத்துடன், ஒருமுகமும் நான்கு திருக்கரங்களுடனும் காட்சி தருகிறார். சற்றே சாய்ந்த நிலையில்  சிவபெருமானை பூஜிக்கும் கோலத்தில் அருள்கிறாராம் இந்த முருகப்பெருமான்.





நாளென் செயும் வினைதான் என்செயும் எனை நாடிவந்த
    கோளென் செயும் கொடுங்கூற்றென் செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும் தண்டையும் சண்முகமும்
    தோளும் கடம்பும் எனக்கு முன்னே வந்து தோன்றிடினே

    - கந்தர் அலங்காரம்

Comments