எல்லா வகையிலும் உயர்ந்த முருகத்தலம் பழநி

சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம்.


சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி பழநி. மருந்தே மலையாக அமைந்த தலம். பழநியில் கால் வைத்தாலே பாதி நோய்கள் தீர்ந்து விடும். மலை ஏறிவிட்டால் முழு நோயும் நீங்கும். 12 ஆண்டுகள் தொடர்ந்து, காலை 4 மணிக்கு எழுந்து நீராடி, கிரிவலம் வந்து, மலை மீது ஏறி, முருகன் திருவடி நாடி, தியானத்தில் அமர்ந்தால் ‘உலக உயிர்கள் அனைத்தும் ஒன்றே’ என்ற அற்புத தத்துவ விளக்கம் பெறலாம்.

முருகனின் திருவடி நிழலில் வசிக்கும் வாய்ப்பும் இவர்களுக்கு உண்டு. பழநி முருகனுக்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தம், பால், தீர்த்தம் சாப்பிட்டால் நோய்கள் தீரும். ஒரு கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பவை அங்குள்ள மூர்த்தம் (சிலை), தீர்த்தம், தலம் (அமைவிடம்) ஆகியவை.

பழநி கோயிலுக்கு அபூர்வ சக்தி அளிப்பது நவபாஷாண சிலை. கோயிலின் அமைவிடம் மலை. தீர்த்தம் சரவணப்பொய்கை. ஆக, எல்லா வகையிலும் உயர்ந்த முருகத்தலம் பழநி.





கோயிலுக்குள் வேக வேகமாக வலம் வர கூடாது ஏன் தெரியுமா?


கோயில்களில் மூலவர் பிரார்த்தனை முடிந்ததும், பிரகார வலம் வந்து வணங்குவது வழக்கம். சிலர், வேலைக்குப் போக வேண்டும், என்ற நோக்கத்தில், வேக வேகமாக கோயிலை வலம் வருவார்கள்.

சிலர் ஒரு கையால் நமஸ்கரித்து விட்டு, அல்லது வாயருகே கையைக் கொண்டு வந்து முத்தம் கொடுப்பது போல் பாவனை செய்து விட்டு வேகமாக கோயிலைக் கடப்பார்கள். இவையெல்லாம் சாஸ்திரப்படி தவறு.

ஒரு நிறைமாத கர்ப்பிணி, எப்படி பவ்யமாக நடப்பாளோ, அந்தளவு வேகத்தில் தான் பிரகாரத்தை வலம் வர வேண்டும். அப்போது, அந்த தெய்வத்தின் நினைவு மட்டுமே இருக்க வேண்டும். கதை பேசிக்கொண்டும், சேஷ்டைகள் செய்தபடியும் கோயிலை வலம் வரக்கூடாது.

குழந்தைகள் சப்தம் செய்தால், அவர்களுக்கு பக்குவமாக எடுத்துச்சொல்லி, அமைதிப்படுத்த வேண்டும். இவ்வாறு வலம் வருவதால், முன் ஜென்ம பாவங்கள் எல்லாம் விலகி விடும்.

Comments