தருமபுரியில் இருந்து சேலம் செல்லும் வழியில், நல்லம்பள்ளி - அதியமான்கோட்டை உள்ளது. இங்கே, காசியம்பதிக்கு அடுத்தாற் போல், தனிக்கோயிலில் இருந்தபடி அனைவருக்கும் அருளும் பொருளும் அள்ளித் தருகிறார் ஸ்ரீகாலபைரவர். இங்கே, உன்மத்த பைரவராகக் காட்சி தரும் அழகே அழகு!
அதியமான் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலின் விதானத்தில், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கான நவகிரகச் சக்கரங்கள் உள்ளன என்பது சிறப்பு. மேலும் இந்த பைரவரின் திருமேனியிலும் 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் அடங்கியிருப்பதாக ஐதீகம். எனவே, 27 நட்சத்திரக் காரர்களும் இவரை வணங்கி வழிபட்டால், நவகிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்!
தொடர்ந்து 12 ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் தேய்பிறை அஷ்டமி ஆகிய நாட்களில், மாணவர்கள் விளக்கேற்றி வழிபட, கல்வி - கேள்வியில் சிறந்து விளங்குவார்கள்; தடைப்பட்ட திருமணத்தால் கலங்குவோர், மஞ்சள்கிழங்கு மாலை அணிவித்து வேண்டிக்கொள்கின்றனர். குடும்பத்தில் கடனும் கஷ்டமும் தீர வேண்டும் என்று சாம்பல் பூசணி விளக்கேற்றி ஸ்ரீகாலபைரவரை வழிபட்டுப் பலன் பெறலாம்; நினைத்தது நிறைவேறும் எனப் போற்றுகின்றனர் தருமபுரி வாழ் மக்கள்.
அதியமான் காலத்தில் கட்டப்பட்ட இந்தக் கோயிலின் விதானத்தில், 12 ராசிகள் மற்றும் 27 நட்சத்திரங்களுக்கான நவகிரகச் சக்கரங்கள் உள்ளன என்பது சிறப்பு. மேலும் இந்த பைரவரின் திருமேனியிலும் 12 ராசிகளும் 27 நட்சத்திரங்களும் அடங்கியிருப்பதாக ஐதீகம். எனவே, 27 நட்சத்திரக் காரர்களும் இவரை வணங்கி வழிபட்டால், நவகிரக தோஷங்கள் யாவும் விலகும் என்பது ஐதீகம்!
Comments
Post a Comment