தேவகிக்கு எட்டாவதாகப் பிறந்தவர் ஸ்ரீகிருஷ்ணர். அவருக்கு முன் பிறந்த ஆறு குழந்தைகளைப் பற்றி ஸ்ரீமத் பாகவதம், தசம ஸ்கந்தம் 85-வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ளது. இவர்கள் முதல் மன்வந்தரமான ஸ்வாயம்புவ மன்வந்தரத்தில் மரீசி மகரிஷிக்கும், ஊர்ணை என்பவளுக்கும் பிறந்தனர். பிரம்மாவின் சாபத்தினால் ஹிரண்யகசிபுவுக்குப் புத்திரர்களாகப் பிறந்தனர். பிறகே, பகவானின் யோகமாயை மூலம் தேவகி - வசுதேவருக்குப் பிறந்து கம்சனால் கொல்லப்பட்டனர். பின்னர் இந்த ஆறு ஜீவன்களும் மகாபலி வசமிருந்த பாதாள லோகத்தில் இருந்தனர். ஸ்மரன், உத்கீதன், பரிஷ்வங்கன், பதங்கன், க்ஷுத்ரபிருத், க்ருணி என்ற அந்த ஆறு பேர் குறித்தும், தேவகி வருந்தியதைக் கண்ட ஸ்ரீகிருஷ்ணர், மகாபலியிடம், தமது தாயின் துயரத்தைச் சொல்லி, இந்த ஆறு பேரையும் தேவகி முன் அழைத்து வந்தார். தேவகிதன் குழந்தைகளை உச்சி முகர்ந்து மகிழ்ந்தாளாம்.
* கம்சனின் மனைவிகளான அஸ்தி, பிராப்தி இரு வரும் ஜராசந்தனின் மகள்கள். ஸ்ரீகிருஷ்ணர் கம்சனைக் கொன்றதால், பழி வாங்கும் எண்ணத்தில் ஜராசந்தன் மதுராபுரி மீது படையெடுத்தான். ஜராசந்தன் பீமன் கரத்தால் மடிய வேண்டும் என்று இருந்ததால், துவாரகாபுரியை உருவாக்கி, மக்களை அங்கே குடியேற்றினார்.
* ஸ்ரீமத் பாகவதம், தசம ஸ்கந்தம், எட்டாவது அத்தி யாயம் ஐந்தாவது ஸ்லோகத்தில், ‘ஜ்யோதிஷாமயனம் ஸாக்ஷாத் யத்தக்ஞான மதீந்த்ரியம்; ப்ரணீதம் பவதாயோர புமான்வேத பராவரம்...’ என்று கூறப்பட்டுள்ளது. யாதவ குல புரோகிதரும், தவசியுமான கர்காசாரியரே ஜோதிட சாஸ்திரத்தை இயற்றியதாக நந்தகோபர் சொல்கிறார். ஒளி மண்டலங்களான சூரியன் முதலான விஷயங்களும், புலனறிவுக்கு அப்பாற்பட்ட ஜோதிடம் என்கிற விஞ்ஞான மும், கர்காசாரியரான உம்மால் தொகுக்கப்பட்டது.
அதனால், மனிதர்கள் முற்பிறவி வினைப்பயன்களான புண்ணிய, பாவங்களையும், இப்பிறவியில் அவற்றினால் பெறப்போகும் இன்ப, துன்பங்களையும் அறிய முடிகிறது" என்றார். பின்னரே, நந்தகோபர் கர்காசாரியரிடம், பலராமன், கிருஷ்ணனுக்கு ஜாதக கர்மாக்களைச் செய்து வையுங்கள்" என்று கேட்டுக் கொண்டார்.
* ஸ்ரீகிருஷ்ணரின் பரம பக்தரான அக்ரூரரின் தந்தை பெயர் ஸ்வபல்கர், தாய் காந்தினி. மழையின்றி சிரமப் பட்ட காசி மாநகருள் ஸ்வபல்கர் காலடி வைத்தவுடன் மழை பொழிந்தது. இதனால் மகிழ்ந்த காசிராஜன் தனது மகள் காந்தினியை ஸ்வபல்கருக்குத் திருமணம் செய்து வைத்தான். தமது தந்தையைப் போன்றே நற்குணம் கொண்ட அக்ரூரர், செல்லும் இடமெல்லாம் மழை பொழியும். அங்கே துன்பமோ, தீமைகளோ நெருங்காது என்கிறது ஸ்ரீமத் பாகவதம்.
* ருக்மிணி, விதர்ப்ப நாட்டு அரசனின் புதல்வி. ருக்மிணிக்கு ஐந்து சகோதரர்கள். இவர் களின் பெயர்கள், ருக்மி, கருக்மன், ருக்மபாஹு, ருக்மகேசன், ருக்மமாலி என்பவை. ஸ்ரீகிருஷ்ண ரின் பேரன் அனிருத்தன். அவன் கிருஷ்ணரின் மகன் பிரத்யும்னனுக்கும், மைத்துனனான ருக்மியின் பெண்ருக்மவதிக்கும் பிறந்தவன். ருக்மி ஸ்ரீகிருஷ்ணரை வெறுத்தாலும், தனது சகோதரி ருக்மிணி மீது கொண்டிருந்த பாசத்தால் தனது மக ளான ருக்மவதியை பிரத்யும்னனுக்குத் திருமணம் செய்து கொடுத்தான். மேலும், ருக்மவதியும் தனது சுயம்வரத்தில் பிரத்யும்னனைத் தேர்ந்தெடுத்து மாலையிட்டாள். இவ்வாறு, அத்தை மாமன் வாரிசுகளைக் கொண்டு, எடுத்து உறவை வலுப்படுத்திய காட்சிகள் பாகவதத்தில் பல!

Comments
Post a Comment