ஏரி காத்த ராமர் என்றதும் அனைவரின்
நினைவுக்கும் வருவது மதுராந்தகம்
ஏரி காத்த ராமர்தான். கர்னல்லியோநெல் பிளெஜ் என்பவர் செங்கல்பட்டு மாவட்டக் கலெக்டராக இருந்தபோது பெரு வெள்ளத்தில் ஏரி உடையாமல் காவல் காத்த இரண்டு இளைஞர்கள் கோயிலில் வழிபடப்படுவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டு
ஜனகவல்லித் தாயாருக்கு சன்னிதி அமைத்துக் கொடுத்த தலம். இன்றும் ஏரி காத்த ராமர் என்று பெருமாள் அழைக்கப்படும் தலம் இது.
இதேபோல் திருநின்றவூர் பக்தவத்சலப் பெருமாள் கோயில் அருகேயும் அருள்பாலிக்கிறார் அழகிய ஏரிகாத்த ராமர். திவ்ய தேசமான பக்தவத்சலப் பெருமாள் கோயிலுக்கும் பூசலார் நாயனாரால் மனக்கோயில் கட்டி வழிபடப்பட்ட இரு தயாலீஸ்வரர் கோயிலுக்கும் இடையே உள்ளது இத்தலம். அருளாளன் பக்தவத் சலப் பெருமாள் கோயிலை விட, திரு நின்றவூர் ஏரிக்கரையில் உள்ள இக்கோயில் மிகப் பிரசித்தமானது என்கிறார்கள்.
ஒருமுறை மிகப்பெரிய மழை பெய்தது. இதனால் அவ்வூர் ஏரி நிரம்பி, உடைந்து ஊரே அழியக்கூடிய தறுவாயில் மக்கள் ராமரிடம் முறையிட்டனர். தங்கள் ஊரை சேதத்தில் இருந்து காத்தால் கோயில் கட்டி வழிபடுவதாக வேண்டிக் கொண்டனர். ஆனால், மழையோ விடுவ தாக இல்லை. ஒரு கட்டத்தில், ‘எப்படியும் இன்று இரவு ஏரி உடைந்து தண்ணீர் ஊருக்குள் வந்து விடும். ராமா, நீயே துணை’ என்று ஜபித்தவாறே அவரவர் தத்தமது வீடுகளை அடைந்தனர். நேரமான தால் கண்ணயர்ந்தும் விட்டனர்.
பொழுது புலர்ந் தது. திடுக்கிட்டு எழுந்த மக்கள் வெள்ளத்தின் நிலைமை யைக்காண வெளியே வந்தனர். அப்போது சிலர் ஏரிக்கரையில் இருந்து, ராமர் நம் மைக் கைவிட வில்லை. பாருங்கள் இந்த அதிசயத்தை" என்று கூவியவாறு தலை மேல் கரம் குவித்து ஓடி வந்தனர். அவர்களைக் கண்ட மற்றவர்களும் ஏரியை நோக்கி ஓடினர். அங்கு அவர்கள் கண்டகாட்சி அவர்களை உவகையில் ஆழ்த்தியது.
கரை முழுவதும் ஒரே சீராக அம்புகள் தைக்கப் பட்டிருந்தன. இதனை சக்கரவர்த்தித் திருமகனை அல் லாமல் வேறுயார் செய்திருக்க முடியும்? அம்பு அணைக்குள் தண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது. பேரானந்தம் கொண்ட மக்கள், உடனே ஏரிக்கரையில் ராமபிரானுக்குக் கோயில் அமைக்கும் பணிகளைத்துவக்கினர்.
இன்றும் காண்போர் கண்களையும் கருத்தையும் கவரும் வகையில் கிட்டத்தட்ட எட்டடி உயரத்தில் ஆஜானுபாகுவாகக் கைகளில் வில்லும் அம்பும் ஏந்தி, இதழோரத்தில் குறுநகை பொலியக் காட்சி தருகிறார் ஸ்ரீராமபிரான். உடன் ஆயுதமின்றி லக்ஷ்மணர் தனது வலது கரம் வில்லைப் பிடிப்பதைப் போன்ற பாவனையிலும், சீதா பிராட்டி கையில் தாமரை மலர் ஏந்திய கோலத்திலும் விளங்குகின்றனர். இந்த விக்ரகங்கள் அனைத்தும்
சுதையால் செயப்பட்டுள்ளன.
கோயிலுக்குப் பின்னே மிகப் பிரம்மாண்டமான வருண புஷ்கரணி. இன்று நீரின்றி வறண்டு காணப்படுகிறது. நடுவே தீர்த்தவாரி மண்டபம். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் ஸ்ரவண நட்சத்திரத்தின் போது தீர்த்தவாரி மிக விமரிசையாக நடைபெறுகிறது.
இத்தலம் ஸ்ரீராமானுஜரின் பிரதம சீடர் முதலியாண்டான் சுவாமியின் பிறப்புடன் சம்பந்தப்பட்டது. ஒரு நாள் ஸ்ரீராமானுஜரின் சகோதரி நாச்சியாரம்மாள் தனது கணவர் வாதூலகுல திலக ஸ்ரீ அனந்தநாராயண தீக்ஷிதருடன் நசரத்பேட்டையில் இருந்து திருமலை நோக்கிப் பயணமானார். இரவு நேரமாகிவிட்டதால் இருவரும் திருநின்றவூர் ஏரி காத்த ராமர் கோயிலில் தங்கினர். அப்போது ராம பக்தரான அனந்த நாராயண தீட்சிதரின் கனவில் தோன்றிய ஏரி காத்த ராமர், ‘தனது அம்சத்துடன் ஒரு ஆண் வாரிசு அவர்களுக்குப் பிறக்கும்’ என்று அருளினார். அவ்வாறே பிறந்த குழந்தைக்கு ஸ்ரீராமனின் பெயரான தாசரதி என்பதைச் சூட்டி வளர்த்தனர். பின்னாளில் தனது தாமாமனான ராமானுஜரின் சீடராக மாறி அவருக்கு விஷ்வக்சேனர் போல்
(சேனை முதல்வர்) விளங்கியதால் அவர் முதலியாண்டான் என்று வழங்கப்பட்டார்.
இங்குள்ள ஆஞ்சநேயர் சன்னிதியின் வெளியே உள்ள விளக்குத் தூண் இக்கோயிலின் புராதனத் தன் மையை பறைசாற்றுகிறது. இதில் சங்கு, சக்கர
சின்னங்களுடன் ஆஞ்சநேயர் உருவமும் காணப் படுகிறது. தவிர, அர்த்த மண்டபத்தில் காணப்படும் ஆஞ்சநேயர், தனது தோள்களில் ராம, லட்சுமணரை ஏந்தி, அரக்கி லங்கிணியை தனது பாதத்தின் கீழ் மிதித்தபடி, கையில் கதை, கேடயம் தாங்கி காணப்படு கிறார். இக்கோல ஆஞ்சநேயரை நைமிசாரண்யத்தில் மட்டுமே காண முடியும். மேலும், இவரைச்சுற்றி வந்து பின்புறம்ராம, லக்ஷ்மணரின் பாத தரிசனத்தையும் காண முடிகிறது. தினசரி இக்கோயில் வழிபாட்டுக்குத் தேவைப்படும் கைங்கரியங்களைச் செய்ய நினைக்கும் நல்ல உள்ளங்கள் உதவலாமே.
அமைவிடம்: சென்னையில் இருந்து திருநின்றவூர் சுமார் 32 கி.மீ. கார், பேருந்து மற்றும் மின்சார ரயிலில் செல்லலாம். பக்தவத்சலப் பெருமாள் கோயிலுக்கு மிக அருகில் உள்ளது.
தரிசன நேரம்: காலை 8.30 - 11.30, மாலை 5.30 - 7
தொடர்புக்கு: 78457 85715 / 98408 37689
நினைவுக்கும் வருவது மதுராந்தகம்
ஏரி காத்த ராமர்தான். கர்னல்லியோநெல் பிளெஜ் என்பவர் செங்கல்பட்டு மாவட்டக் கலெக்டராக இருந்தபோது பெரு வெள்ளத்தில் ஏரி உடையாமல் காவல் காத்த இரண்டு இளைஞர்கள் கோயிலில் வழிபடப்படுவதைக் கண்டு ஆச்சர்யப்பட்டு
ஜனகவல்லித் தாயாருக்கு சன்னிதி அமைத்துக் கொடுத்த தலம். இன்றும் ஏரி காத்த ராமர் என்று பெருமாள் அழைக்கப்படும் தலம் இது.
ஒருமுறை மிகப்பெரிய மழை பெய்தது. இதனால் அவ்வூர் ஏரி நிரம்பி, உடைந்து ஊரே அழியக்கூடிய தறுவாயில் மக்கள் ராமரிடம் முறையிட்டனர். தங்கள் ஊரை சேதத்தில் இருந்து காத்தால் கோயில் கட்டி வழிபடுவதாக வேண்டிக் கொண்டனர். ஆனால், மழையோ விடுவ தாக இல்லை. ஒரு கட்டத்தில், ‘எப்படியும் இன்று இரவு ஏரி உடைந்து தண்ணீர் ஊருக்குள் வந்து விடும். ராமா, நீயே துணை’ என்று ஜபித்தவாறே அவரவர் தத்தமது வீடுகளை அடைந்தனர். நேரமான தால் கண்ணயர்ந்தும் விட்டனர்.
பொழுது புலர்ந் தது. திடுக்கிட்டு எழுந்த மக்கள் வெள்ளத்தின் நிலைமை யைக்காண வெளியே வந்தனர். அப்போது சிலர் ஏரிக்கரையில் இருந்து, ராமர் நம் மைக் கைவிட வில்லை. பாருங்கள் இந்த அதிசயத்தை" என்று கூவியவாறு தலை மேல் கரம் குவித்து ஓடி வந்தனர். அவர்களைக் கண்ட மற்றவர்களும் ஏரியை நோக்கி ஓடினர். அங்கு அவர்கள் கண்டகாட்சி அவர்களை உவகையில் ஆழ்த்தியது.
கரை முழுவதும் ஒரே சீராக அம்புகள் தைக்கப் பட்டிருந்தன. இதனை சக்கரவர்த்தித் திருமகனை அல் லாமல் வேறுயார் செய்திருக்க முடியும்? அம்பு அணைக்குள் தண்ணீர் ததும்பிக் கொண்டிருந்தது. பேரானந்தம் கொண்ட மக்கள், உடனே ஏரிக்கரையில் ராமபிரானுக்குக் கோயில் அமைக்கும் பணிகளைத்துவக்கினர்.
சுதையால் செயப்பட்டுள்ளன.
கோயிலுக்குப் பின்னே மிகப் பிரம்மாண்டமான வருண புஷ்கரணி. இன்று நீரின்றி வறண்டு காணப்படுகிறது. நடுவே தீர்த்தவாரி மண்டபம். ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் ஸ்ரவண நட்சத்திரத்தின் போது தீர்த்தவாரி மிக விமரிசையாக நடைபெறுகிறது.
இத்தலம் ஸ்ரீராமானுஜரின் பிரதம சீடர் முதலியாண்டான் சுவாமியின் பிறப்புடன் சம்பந்தப்பட்டது. ஒரு நாள் ஸ்ரீராமானுஜரின் சகோதரி நாச்சியாரம்மாள் தனது கணவர் வாதூலகுல திலக ஸ்ரீ அனந்தநாராயண தீக்ஷிதருடன் நசரத்பேட்டையில் இருந்து திருமலை நோக்கிப் பயணமானார். இரவு நேரமாகிவிட்டதால் இருவரும் திருநின்றவூர் ஏரி காத்த ராமர் கோயிலில் தங்கினர். அப்போது ராம பக்தரான அனந்த நாராயண தீட்சிதரின் கனவில் தோன்றிய ஏரி காத்த ராமர், ‘தனது அம்சத்துடன் ஒரு ஆண் வாரிசு அவர்களுக்குப் பிறக்கும்’ என்று அருளினார். அவ்வாறே பிறந்த குழந்தைக்கு ஸ்ரீராமனின் பெயரான தாசரதி என்பதைச் சூட்டி வளர்த்தனர். பின்னாளில் தனது தாமாமனான ராமானுஜரின் சீடராக மாறி அவருக்கு விஷ்வக்சேனர் போல்
(சேனை முதல்வர்) விளங்கியதால் அவர் முதலியாண்டான் என்று வழங்கப்பட்டார்.
சின்னங்களுடன் ஆஞ்சநேயர் உருவமும் காணப் படுகிறது. தவிர, அர்த்த மண்டபத்தில் காணப்படும் ஆஞ்சநேயர், தனது தோள்களில் ராம, லட்சுமணரை ஏந்தி, அரக்கி லங்கிணியை தனது பாதத்தின் கீழ் மிதித்தபடி, கையில் கதை, கேடயம் தாங்கி காணப்படு கிறார். இக்கோல ஆஞ்சநேயரை நைமிசாரண்யத்தில் மட்டுமே காண முடியும். மேலும், இவரைச்சுற்றி வந்து பின்புறம்ராம, லக்ஷ்மணரின் பாத தரிசனத்தையும் காண முடிகிறது. தினசரி இக்கோயில் வழிபாட்டுக்குத் தேவைப்படும் கைங்கரியங்களைச் செய்ய நினைக்கும் நல்ல உள்ளங்கள் உதவலாமே.
அமைவிடம்: சென்னையில் இருந்து திருநின்றவூர் சுமார் 32 கி.மீ. கார், பேருந்து மற்றும் மின்சார ரயிலில் செல்லலாம். பக்தவத்சலப் பெருமாள் கோயிலுக்கு மிக அருகில் உள்ளது.
தரிசன நேரம்: காலை 8.30 - 11.30, மாலை 5.30 - 7
தொடர்புக்கு: 78457 85715 / 98408 37689
Comments
Post a Comment