சத்குரு தியாகராஜ ஸ்வாமியின் கீர்த்தனைகள் இன்று உலகு முழுதும் பரவியிருப்பது எப்படி?கிளீவ்லாந்தில் தியாகராஜ உற்ஸவம் நடக்கிறதே, எப்படி? அவரது சிஷ்ய பரம்பரையினர் வாழையடி வாழையாக அந்தக் கீர்த்தனைகளைப் பாடி, சொல்லிக் கொடுத்து வளர்த்து வருவதால்தான்! சங்கீத மும்மூர்த்திகளில் சத்குரு தியாகராஜருக்கு சிஷ்யர்கள் அநேகர்.
ஞிமையாள்புரம் பரம்பரை, லால்குடி பரம்பரை, தில்லை ஸ்தானம் பரம்பரை, வாலாஜாபேட்டை பரம்பரை என்று அடுக்கிச் சொல்லலாம்!
பூசணிக்காய்கள் எட்டையும்...‘செய்யும் தொழிலெல்லாம் சீர்தூக்கிப் பார்த்தால் நெய்யும் தொழிலுக்கு ஈடில்லை’ என்பர். சௌராஷ்டிர சமூகத்தினர் பெரும்பாலானவர் நெசவுத் தொழிலில் ஈடுபட்டவர். ‘பட்டு நூல்காரர்’ என்றே அவர்களை அழைப்பதுண்டு. தன்னை நாயகியாகப் பாவித்துப் பக்திப் பாடல்கள் பல தந்த நடன கோபால நாயகி இச்சமூகத்து மகான். இவர்கள் காலப்போக்கில் காஞ்சி, வாலாஜாபேட்டை, கும்பகோணம், தஞ்சை, அய்யம்பேட்டை, திண்டுக்கல், மதுரை என்று தமிழகத்தின் பல ஊர்களில் பரவி வசிக்கலாயினர்.
வாலாஜாபேட்டை வெங்கட்ரமண பாகவதர் அப்படி அய்யம்பேட்டைக்கு வந்தவர்! சத்குரு தியாகராஜரின் சரிதமும், ஜாதகமும் கிடைத்திருப்பது அவரது மகன் கிருஷ்ணசாமி பாகவதரால் தான்! வெங்கட்ரமணர் சத்குருவின் வீட்டுத் திண்ணையில் நின்றவாறு தான் இசை கற்பாராம். சுவாமிகள் உட்காரச் சொன்னால்கூட உட்கார மாட்டாராம்.
ஒரு நாள் எட்டு பூசணிக் காய்களைக் கட்டித் தூக்கிக் கொண்டு, கடும் கோடையில் ஆற்றைக் கடந்து, மணலில் நடந்து, சத்குருவின் இல்லத்து வாசலில் வைத்துவிட்டு அப்படியே மயங்கி விட்டாராம். சத்குரு வெளியில் வந்து பார்த்து, துளஸி தீர்த்தம் தெளித்து, செம்பில் நீர் தந்து பருகச் சொல்லி, சற்று இளைப்பாறச் செய்த பின்னர், ஏன் இப்படி எட்டு பூசணிக் காய்களைக் கட்டிச் சுமந்து வந்தீர்பாக வதரே!" என்றாராம்.
சுவாமி ராம நவமி சமாராதனைக்குத்
தோட்டக்காரனிடம் எட்டு பூசணிக் காய்க்கும் ஒரு ரூபாய் விலை பேசி விட்டேன். நான் எடுத் துக் கொண்டு வரவில்லை என்றால், யாராவது அதிக விலைக்குக் கேட்டால் தோட்டக்காரன் கொடுத்து விடுவான். அவனுக்கு அபசாரம் வந்துவிடுமே! அதனால்தான் தலையில் ஒன்று, தோளில் இரண்டு, கையில் நான்கு, முதுகில் ஒன்று என்று கயிறு கட்டிச் சுமந்து வந்தேன்" என்றாராம். எத்தனை குரு பக்தி! எத்தனைப் பரிவு! அவரும் பல கிருதிகள் பாடியுள்ளார்.
‘பரவச மாயனுரா - நா தேகமு
பரவச மாயனுரா!’ என்று குருவை எண்ணிப் பரவசப்பட்டுள்ளார்!
அத்தனையும் மலர்களாயின!
தினம்தோறும் சுவாமிகளின் பூஜைக்குக் குடலை நிறையத் துளசி கொண்டு வந்து வைப்பார் வெங்கட் ரமண பாகவதர். சுவாமிகள் மாயா மாளவ கௌள ராகத்தில்,‘துளஸி தளமுலசே சந்தோஷமுகா பூஜிந்து - துளஸி’
என்று தன்னை மறந்து பாடிக்கொண்டே குடலை யிலிருந்த துளசி தளங்களை அள்ளிப் போட்டாராம். ‘ஸரஸீ ருக, புன்னாக, சம்பக,’ எனச் சரணம் பாடப் பாட, துளஸி இலைகளே அந்தந்தப் பூக்களாக மலர்ந்து ஸ்ரீசீதாராம விக்ரஹங்களின் மேல் விழுந்தனவாம். குருவின் தெய்வ பக்தியா? சிஷ்யரின் குரு பக்தியா? எது பெரிது? ஆராய்ச்சி தேவையில்லை! சத்குரு கிருதிகளில் ஆஹிரியில் அற்புதமான பாடல் ஒன்று:
பல்லவி:‘சல்லரே ராமச்சந்த்ருனி பைநீ பூல
சரணம் ஸொம்பைன மனஸுதோ நிம்பைன பங்காரு
கம்பலதோ மஞ்சி
சம்பக முலனு (சல்லரே)
எந் நரானிஜனன மரண முலே குண்டே
மனஸார த்யாகராஜ ராஜநுதுநி பைநீபூல’
(சல்லரே)
பொருள்: பொழியுங்கள். ராமன் மீது நன் மலர்களைச் சொரியுங்கள். நிறைவான மனத்துடன் அழகிய தங்கக் கூடைகளில் நறுமணமிக்க சண்பக மலர்கள் கொண்டு வந்து ராமன் மீது சொரியுங்கள். பிறப்பு, மரணம் இவற்றைத் தவிர்க்க, மனதார தியாகராஜன் வணங்கும் ஸ்ரீஹரி மீது மலர்களைப் பொழியுங்கள். பாடும்போதே மலர் மழையில் பூக்களால் சுவாமி நனைவதுபோல நம் மனதும் குளிர்கிறதே!
திரை விலகாதா?
நாதஜோதி ஸ்ரீமுத்துஸ்வாமி தீட்சிதர் கீழ்வேளூர் அட்சயலிங்க சுவாமி ஆலயத்துக்கு வந்தபோது கதவு சாத்திவிட்டு குருக்கள் படியிறங்கிக் கொண்டிருந்தார். சுவாமி! நெடுந்தூரம் நடந்து யாத்திரை வருகிறேன். சற்றுக் கதவைத் திறக்கலாகாதா?" எனக் கெஞ்சினார் தீட்சிதர். அவர் மகிமையறியாத குருக்கள் முடியாதென்று சென்று விட்டார். சங்கராபரணத்தில் ‘அக்ஷயலிங்க விபோ’ கீர்த்தனை பாடினார் தீட்சிதர். கதவுகள் மணி ஒலிக்கத் தாமேதிறந்தன. (தீட்சிதர் குறித்த கட்டுரையில் இதுகுறித்து தீபத்தில் எழுதப்பட்டுள்ளது.)
சத்குரு தியாகராஜர் திருமலைக்குச் சென்றபோது திரை போட்டிருந்தார்கள். (இப்போதெல்லாம் திருவேங்கடமுடையானை அன்பர்கள் இரண்டு மணி நேரம்கூட ஓய்வெடுக்க விடுவதில்லை. முன்பு அடிக்கடி திரை போடுவார்கள்!) சுவாமி தரிசனம் கிடைக்காத ஏக்கம். அத்துடன், ‘என் ராமனை விடத் திருமலையப்பனுக்கு ஏன் இத்தனைக் கூட்டம்! இத்தனை உற்ஸவம்! இத்தனை வருமானம்!’ என்று சற்று மனதினுள்ளே ஒரு பொறாமை வந்து விட்டது! ராமன் மீது கொண்ட அத்யந்த பக்திதான் அது! என்ன ஆனால் என்ன? நமக்கு ஒரு கீர்த்தனை கிடைக்க மலையப்பன் வழி வகுத்து விட்டான். கௌளிபந்து ராகத்தில்.
பல்லவி: தெரதீயக ராதா லேர்நிதிருபதி வேங்கடரமண
மதஸ ராமநு (தெர)
அனுபல்லவி:பரமபுருஷ தர்மாதி மோக்ஷமுல
பாரதோலு சுந்நதி நாலோநிதெர)
சரணம் 1:
இரவொந்த க பு ஜியிஞ்சு ஸமயமுந
ஈக தகு லு ரீதி யுந்நதி
ஹரித் யாநமு சேயுவேள சித்தமு
அந்த்யஜூவாட கு போயிநட்லுந்நதி (தெர)
சரணம் 2:
மத்ஸ்யமு ஆகலிகொநி கால முசே
மக்நமைந ரீதியுந்நதி
அச்சமைந தீப ஸந்நிதி மரு-
க ட்டப டி செறிசி நட் லுந்நதி (தெர)
சரணம் 3:
வாகு ரமநி தெலியக ம்ருக க ணமுலு
வச்சி தகுலு ரீதி யுந்நதி
வேக மே நீ மதமுநநு ஸரிஞ்சிந
த் யாகராஜநுத மதமத்ஸரமநு (தெர)
திருப்பதி வேங்கடரமணா! என் உள்ளத்தில் பொறாமை என்ற திரை விலக அருள் செய்யலாகாதா? உணவு உண்ணும்போது ஈ வந்து விழுந்த மாதிரி, விளக்கு வெளிச்சத்தைத் திரை கட்டி மறைத்தது போல உன்னைத் தரிசிக்க விடாமல் மறைக்கும் திரை விலக அருளாயோ! பாடல் கேட்டதும் திரை தானாக அவிழ்ந்து விழுந்தது. பட்டர் கள் ஓடி வந்து சத்குருவை உள்ளே அழைத்துச் சென்று தீபாராதனை காட்டி, சடாரி வைத்து, பிரசாதம் தந்தனர். பாடல் கேட்டு அருளும் பரந்தாமன் மறைவிலிருந்து
கேட்டது போதாதென்று நேரிலும் கேட்டு மகிழ்ந்தான்.
மறைகளால் தாழிடப்பட்ட
வேதாரண்ய ஆலயக் கதவை ஞானசம்பந்தர் சுவாமிகள், ‘பண்ணினேர் மொழியாள் உமை பங்கரோ!’ என்ற தேவாரம் பாடித் திறக்கவைத்தாரே!
ஊருக்கு மறைக்கும் உண்மை களை அறியும் திருமலையப் பனைக் காணத்திரையைப் பாடலாலேயே சத்குரு, விலகச் செய்தது அற்புதம்! மனதில் பொறாமை, அகந்தை, கோபம், காமம், களவு எனப் பல திரைகள் தெய்வக் காட்சியை மறைக்கின்றன. அவை விலகினால் அருட் ஜோதி தரிசனம் கிடைக்கும் என்பதுதானே வள்ளலார் அருளிய தத்துவம்! மனதை நிர்மலமாக வைத்திருப்போம்! மகேசனை உள்ளே வரவழைப்போம்!

Comments
Post a Comment