லட்சுமி கடாட்சம்!

செல்வத்தின் அதிபதியாம் மகா லட்சுமியை வழிபடுவதன் மூலமும் சுக்ர பகவானின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற முடியும்.

அவ்வகையில் ஸ்ரீசூக்தம், லட்சுமி பஞ்சகம், கனகதாரா ஸ்தோத்திரம் முதலான துதிநூல்களைப் பாராயணம் செய்து, திருமகளை ஆராதிக்கலாம். தமிழில், வண்ணச் சரபம் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய திருமகள் அந்தாதி எனும் நூல் உன்னதமானது. ‘திருமகளே’ எனத் துவங்கி ‘திருமகளே’ என்றே முடியும் அந்த நூலில் 103 பாடல்கள் உண்டு. அவற்றில் கீழ்க்காணும் பாடலைப் பாடி வழிபடுவதால், நம் இல்லத்தில் லட்சுமி கடாட்சம் நீங்காது இருக்கும்.
திருமகளே திருப்பாற்கடல்
ஊடன்று தேவர்தொழ
வருமகளே உலகெல்லாமும்
என்றென்றும் வாழவைக்கும்
ஒருமகளே நெடுமால் உரத்தே
உற்று உரம் பெரிது
தருமகளே தமியேன் தலைமீது
நின்தாள் வையே

(திருமகள் அந்தாதி)
 
துர்முகி வருட வெண்பா

மிக்கான துர்முகியில் வேளாண்மை யேறுமே

தொக்க மழை பின்னே சொரியுமே மிக்கான

குச்சர தேசத்திற் குறைதீரவே விளையும்

அச்சமில்லை வெள்ளையரி தாம்


என்ற இடைக்காடர் சித்தர் பெருமான் பாடலின்படி, இந்த வருடம் உலகெங்கும் மழைப் பொழிவு அதிகரிக்கும். மண் வளம் மிகுந்து, விவசாயம் தழைத்து, மகசூல் பெருகும். தானியங்கள் பெருகுவதுடன், பால் உற்பத்தியும் அதிகரித்து மக்கள் சுபிட்சமாக வாழ்வார்கள்.

ஆதாயம் அடையப்போகும் நட்சத்திரங்கள்...

துர்முகி வருடத்தின் ராஜாவாக சுக்ரன் வருவதால், சுக்ர னின் ராசிகளான ரிஷபம், துலாம் மற்றும் சுக்கிரனின் நட்சத்திரங்களான பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் புகழ் அடைவார்கள்.

6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களும் அதிக ஆதாயம் அடைவார்கள்.

சுக்ரன் மழைக்கோள் என்பதால் அதிகம் மழை பொழியும். பசுக்கள் பெருகும். பால் மற்றும் நெல் உற்பத்தி அதிகமாகும். காம, போக இச்சை அதிகரிக்கும். நகை, வீடு, வாகனம் வாங்குவோர் எண்ணிக்கை கூடும். வழிபாட்டுத் தலங்களும் கணினி மயமாகும். அதிநவீன வசதிகள் கொண்ட வியாபார மையங்கள், குடியிருப்புக் கட்டடங்கள் அதிகரிக்கும். சுற்றுலாத் துறை வளர்ச்சி அடையும்.

வங்கி, மார்க்கெட்டிங் துறைகள் சூடுபிடிக்கும்!

மந்திரியாக புதன் வருவதால், உலகெங்கும் மாணவர் களின் பாடச்சுமை குறையும். இந்தியக் கல்வி உலகத் தரத்துக்கு உயர்த்தப்படும். சில பாடங்கள் நீக்கப்பட்டு, இன்றையச் சூழலுக் கேற்ற விஷயங்கள் பாடத் திட்டத்தில் இடம் பிடிக்கும்.

ஆடிட்டிங், வங்கித் துறை, மார்க் கெட்டிங் துறைகள் சூடுபிடிக்கும். பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே விழிப்பு உணர்வு அதிகரிக் கும்; நேர்மையான வழியில் பயணிப்பார்கள். யோகா, தியானம் செய்வோரின் எண்ணிக்கை கூடும். மாணவர்கள் கணினியில் தேர்வு எழுதும் முறை அறிமுகமாகும். காகிதத்தின் பயன்பாடு குறைந்து ட்விட்டர், முகநூல் உபயோகிப்பாளர்கள் அதிகரிப்பர். பத்திரிகையாளர்கள், மீடியாக்களின் கை ஓங்கும்.

அர்க்காதிபதியாகவும் புதன் வருவதால், பொன், கல் நகைகள், வெள்ளி, பித்தளை, ஈயம்,அலுமினியம், சிமென்ட், டைல்ஸ் ஆகியவற்றின் விலை சற்றே உயரும். அழகு சாதனங்களின் விலை உயரும்.

கூடுதல் மழை உண்டு!

மேகாதிபதியாகவும் புதன் வருவ தால் புயல் காற்று, புழுதிக் காற்று அதிகம் வீசும். சில்வர், கிரே, வெளிர் நீல நிற மேகங்களின் உற்பத்தியால் கூடுதல் மழை கிடைக் கும். பனி அதிகரிக்கும்.
உலகெங்கும் வடக்கு, வட கிழக்குப் பகுதிகள் பனியால் பாதிப்படையும். மலைப் பிரதேசங் களில் மண் சரிவு அதிகமாகும். மிளகு, ஏலக்காய் உற்பத்தி பெருகும். பச்சை நிறப் பருப்பு, தானியங்கள் அதிகம் விளையும். பச்சை வண்ணத்திலான தவளைகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். எழுத்தாளர்கள் கௌரவிக்கப்படுவார் கள். நதிகள், அருவிகளில் வெள்ளப் பெருக்கு அதிகரிக்கும்.

ஸஸ்யாதிபதியாக சனி வருவ தால், கனரக வாகனங்களின் உற்பத்தி அதிகமாகும். துறைமுகங் களில் கடத்தல் பெருகும். வெளி நாட்டு நிறுவனங்களின் முதலீடு அதிகரிக்கும். ரயில்வே மற்றும் நீதித் துறைகள் நவீனமாகும். பணத் தட்டுப்பாடு குறையும். எள், உளுந்து முதலான கறுப்பு நிற தானியங்கள் செழிக்கும். ரியல் எஸ்டேட் சூடு பிடிக்கும். பெட்ரோல், டீசல் விலை குறையும். நிலக்கரிச் சுரங்கங்கள் பாதிப்படையும்.

வெள்ளை, சிவப்பு நிற தானியங்கள் அதிகம் விளையும்

சேனாதிபதியாக புதன் வருவ தால், ராணுவத் துறையில் காலாவதி யான போர்த் தளவாடங்கள் அழிக்கப்பட்டு, அதிநவீன சாதனங்கள், பீரங்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள், ஏவுகணைகள் சேர்க்கப்படும். ராணுவ அதிகாரிகள் மாற்றப்படுவர். உளவுத் துறையின் செயல்பாடு மேம்படும். எல்லைப் பகுதியில் அடிக்கடி போர் நிகழும். நாட்டின் ராணுவ ரகசியங்கள், பாதுகாப்பு விஷயங்கள் மேம்படுத்தப் படும். ராணுவத்துக்கு அதிக நிதி ஒதுக்கப்படும். ஆளில்லா விமான சேவை அதிகரிக்கப்படும்.
இரசாதிபதியாக சந்திரன் வருவதால் வெல்லம், நெய், சர்க்கரை, பால், தயிர், இனிப்பு வகைகள், இரும்பு, வாசனை திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள் ஆகியவற்றின் விலை உயரும்.

தான்யாதிபதியாக சுக்ரன் வருவதால், காய்-கனிகளின் விளைச்சல் பெருகும்; அவற்றின் விலை குறையும். வெள்ளை, சிவப்பு நிற தானியங்கள் அதிகம் விளை யும். அரிசி உற்பத்தி கூடும். உணவுப் பதுக்கல்காரர்களும் கடத் தல் பேர்வழிகளும் பிடிபடுவார்கள்.

நீரஸாதிபதியாக சனி வருவதால், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்க புதுச் சட்டம் வரும். பிளாஸ்டிக் விலை உயரும். மீனவர் களின் வாழ்வாதாரங்கள் மேம்படும். அரசு உதவித்தொகையும் அதிகரிக் கும். நாய், குதிரை ஆகியவற்றின் விலை குறையும்.

ஆட்சியாளர்களின் ஆரோக்கியம் பாதிப்படையும்

18.9.16 வரை சனியும், செவ்வா யும் சேர்ந்திருப்பதால், அரசியல் களம் சூடு பிடிக்கும். தேர்தலில் தனிப்பெரும்பான்மை அரிதாகும். கூட்டாட்சி அமையும். அந்நிய சக்திகளால் இன, மதக் கலவரங்கள் தூண்டப்படும். மழை - வெள்ளம், நிலநடுக்கம் அதிகமாகும். ஆட்சியாளர்களின் ஆரோக்கியம் பாதிப்படையும். தலைவர்களுக்கு கண்டங்கள், விபத்துகள் ஏற்படும்.


துர்முகி வருடத்தின் மகர சங்கராந்தி தேவதை, ‘இராட்சஸம்’ என்ற பெயருடன், ஆண் யானை வாகனத்தில் ஏறி வருவதால், சாலை விபத்துக்கள் அதிகரிக்கும். வதந்திகள் பரவும். பாம்பு, தேள், பூரான் ஆகியவற்றின் தொந்தரவுகள் அதிகமாகும். அரசு சொத்துக்கள் சேதமடையும். கறுப்புப் பணம், பதுக்கல் பணம் அரசால் கண்டறியப் படும். ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகமாகும்.

எனினும், துர்முகி வருடம் மக்கள் மனதில் மகிழ்ச்சியை அதிகரிப்பதாக வும், நாட்டில் பணப்புழக்கத்தையும், வியாபார அபிவிருத்தியையும் தருவதாகவும் அமையும்.
 

Comments