புண்ணிய தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபடுவதால் தாங்கள் புனிதம் அடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர். புண்ணிய தீர்த்தங்களில் நீராடுவதன் அவசியத்தை வேதங்களும் புராணங்களும் வலியுறுத்துகின்றன. இத்தகைய புண்ணிய தீர்த்தங்களுக்கு நம் நாட்டில் பஞ்சமே இல்லை. தமிழகத்தில் பல முக்கியமான புண்ணியதீர்த்தங்கள் உள்ளன. அவற்றுள் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்தம், கும்பகோணத்தில் உள்ள மகாமக தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் நமக்குத் தெரிந்தவைதான். அதேபோல் முக்கியத்துவம் வாய்ந்த வேறு சில தீர்த்தங்களையும் அவற்றின் மகிமையையும் காண்போம்.
சர்வதீர்த்தம் - காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அருகில் காஞ்சி புரம் - வேலூர் சாலையில் அமைந்துள்ளது சர்வதீர்த்தம். சகல தோஷங்களையும் நீக்கி, முக்தியைத் தரும் சக்தி கொண்டது சர்வதீர்த்தம்.
அம்பிகை மணலால் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அம்பிகையின் மன உறுதியை சோதிக்க நினைத்த சிவபெருமான், அனைத்து நதிகளையும் காஞ்சியில் வெள்ளமாகப் பெருக்கெடுக்கச் செய்தார். வெள்ளப் பெருக்கைக் கண்டு அச்சம் கொண்ட அம்பிகை, பெருமானின் லிங்கத் திருமேனியைக் காக்கும் பொருட்டு, ஆரத் தழுவிக் கொண்டார். சிவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றாள். எனினும் நதிகள் வருந்தின. அன்னையின் சிவ பக்தியை சோதிக்கும் பொருட்டு சிவனாரின் ஆணைக்கு இணங்கவே, நதிகள் பெருக்கெடுத்து வந்தன. எனினும் தங்களுடைய அந்தச் செயல் உகந்தது அல்ல எனக்கருதி விமோசனம் பெற முற்பட்டன. அதனால் அத்திருத்தலத்திலேயே சர்வ தீர்த்தங்களும் இறைவனைச் சரணடைந்து, இறைவனை தீர்த்தேஸ்வரராக வழிபட்டன. அவற்றின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், ‘‘நீங்கள் எல்லோரும் இங்கேயே சர்வதீர்த்தம் என்ற பெயருடன் திகழ்வீர்கள். உங்களில் நீராடி தர்ப்பணம், தானம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி, அனைத்து நன்மைகளும் பெற்று, நிறைவில் முக்தியும் பெறுவர்’’ என்று அருள்புரிந்தார்.
நாழிக்கிணறு - திருச்செந்தூர்
அழகன் முருகனின் அருளாட்சி நடக்கும் திருச்செந்தூரில் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கும் தீர்த்தம்தான் நாழிக்கிணறு.
சூரபதுமனுடன் போர்புரிந்து அவனை சம்ஹாரம் செய்து ஆட்கொண்டது நமக்குத் தெரியும். கடுமையாகப் போர் புரிந்து களைத்திருந்த தன் படை வீரர்களின் தாகம் தணிவிக்க திருவுள் ளம் கொண்ட முருகப் பெருமான், தன்னுடைய வேலினால் ஏற்படுத்திய தீர்த்தமே நாழிக்கிணறு.
அள்ள அள்ளக் குறையாத புண்ணிய தீர்த்தமான இந்த நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகில் இருந்தாலும், உவர்ப்பாக இல்லாமல் இனிப்புச் சுவையுடன் திகழ்கிறது.
ஆதி தீர்த்தம் – மதுரை
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் பொற்றாமரைக் குளமே ஆதி தீர்த்தம். இந்திரன் முதலான தேவர்கள் இந்தக் குளத்தில் இருந்து பொன்மலர்கள் பறித்து சொக்கநாதரை வழிபட்டதால் பொற்றாமரைக் குளம் என்ற பெயர் ஏற்பட்டது. கங்கை முதலான புண்ணிய நதிகள் தோன்றுவதற்கு முன்பே தோன்றியதால், பொற்றாமரைக் குளம் ஆதி தீர்த்தம் என்ற பெயர் பெற்றது.
முக்தி வேண்டி தவம் இருந்த நாரைக்கு முக்தி அருளியதால், பொற்றாமரைக் குளத்துக்கு ஞான தீர்த்தம், முக்தி தீர்த்தம் போன்ற பெயர்களும் உண்டு.
சங்கு தீர்த்தம் - திருக்கழுக்குன்றம்
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் உள்ள தீர்த்தம் சங்கு தீர்த்தம். என்றும் பதினாறாக சிரஞ்சீவித்துவம் அருளிய சிவபெருமானை, தலங்கள் தோறும் சென்று வழிபட்டபடி வந்த மார்க்கண்டேயர், திருக்கழுக் குன்றத்துக்கு வந்தபோது, இறைவனுக்கு அபிஷேகம் செய்ய பாத்திரம் எதுவும் இல்லாததால், இறைவனைப் பிரார்த்தித்தார். ஈசனின் அருளால் திருக்குளத்தில் வலம்புரிச் சங்கு தோன்றியது. அந்த சங்கில் தீர்த்தம் எடுத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார்.
ஒருமுறை புண்ணிய நதிகளுக்குள் தங்களுக்குள் யார் சிறப்பானவள் என்ற போட்டி ஏற்பட்டபோது, தீர்ப்பு சொல்ல வருணபகவானிடம் சென்று முறையிட்டன. அவர்களுடைய பொறாமையைச் சமாளிக்க முடியாத வருணன் ஈசனிடம் முறையிட, அனைத்தும் தன்னுள் அடங்கி இருக்கும்போது நதிகள் பெருமை கொள்ள எதுவும் இல்லை என்று நதிகளுக்குப் புரிய வைத்தார் ஈசன். பொறாமையினால் களங்கப் பட்ட நதிகள் தங்களுடைய களங்கம் தீர சங்கு தீர்த்தத்தில் நீராடி, களங்கம் நீங்கப் பெற்றதாக தலவரலாறு.
இன்றைக்கும் 12 வருடத் துக்கு ஒருமுறை இக்குளத்தில் ஒரு வலம்புரிச் சங்கு தோன்றுவதாக நம்பப்படு கிறது. இக்குளத்தில் நீராடி உமையவள் சமேத சிவனாரை தரிசித்து, சங்கு தரிசனம் செய்து வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கும்; சங்கடங்கள் விலகும் என்பது ஐதீகம்!
வேத தீர்த்தம் - வேதாரண்யம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அமைந்துள்ள வேதாரண்யேஸ்வரர் கோயில் தீர்த்தம் வேத தீர்த்தம். இந்தத் தீர்த்தத்துக்கு மணிகர்ணிகை தீர்த்தம் என்ற பெயரும் உண்டு.
நான்கு வேதங்களும் ஆரண்யங்களாக இந்தத் தலத்தில் தவம் இருந்த காரணத்தினால், இறைவனுக்கு வேதாரண்யேஸ்வரர் என்ற பெயரும், தீர்த்தத்துக்கு வேத தீர்த்தம் என்ற பெயரும் ஏற்பட்டது.
ராமபிரான் ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேத தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால், பல்லாயிரம் வருடங்கள் தவம், தானம் செய்த பலனைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கே நீராடுவது மகா புண்ணியம் வாய்ந்த சேது சமுத்திரத்தில் நீராடியதற்குச் சமம் என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள்.
பிரம்ம தீர்த்தம் - சீர்காழி
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயிலின் பிரதான தீர்த்தமாகத் திகழ்வது பிரம்ம தீர்த்தம்.
முன்னொரு காலத்தில் பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் இடையே தங்களில் யார் பெரியவர் என்ற போட்டி எழுந்ததும், போட்டியில் பிரம்மா தாழம்பூவை சாட்சியாகக் கொண்டு பொய் சொன்னதும் நமக்குத் தெரிந்ததே. பொய் சொன்ன தன்னுடைய பாவம் நீங்கவேண்டி, பிரம்மா இந்தத் தலத்துக்கு வந்து தீர்த்தம் ஏற்படுத்தி நீராடி இறைவனை வழிபட்டார். பிரம்மாவினால் ஏற்படுத்தப்பட்டது என்பதால், இந்தத் தீர்த்தம் பிரம்ம தீர்த்தம் என்று பெயர் பெற்றது. இந்தக் கோயிலில் நடைபெறும் சித்திரைத் திருவிழாவை பிரம்மதேவரே நடத்துவதாக ஐதீகம்.
சித்திரை மாதம் நடைபெறும் தீர்த்தவாரித் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், சகல பாவங்களும் தோஷங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
கல்யாண தீர்த்தம் - பாபநாசம்
தண்பொருநை தவழ்ந்தோடும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தலத்தில் உள்ள திருக்கோயிலின் தீர்த்தம் கல்யாண தீர்த்தம்.
கயிலையில் சிவபெருமானின் திருக் கல்யாணம் நடைபெற்ற சமயம், முப்பத்து முக்கோடி தேவர்களும் உலக மக்களும் வட பகுதிக்கு சென்றதால், வடபகுதி தாழ்ந்து தென் பகுதி உயர்ந்துவிட்டது. சிவபெருமானின் ஆணையின்படி, அகத்திய மாமுனிவர் தென்பகுதிக்கு வந்து பூமியின் பாரத்தை சமநிலைக்குக் கொண்டுவந்தார்.
கயிலையில் இருந்து புறப்பட்டபோது அகத்தியர் கேட்டுக்கொண்டபடியே, இந்தத் தலத்தில் இறைவன் அகத்தியருக்கு அம்மையப்பராக கல்யாணக் கோலத்தில் திருக்காட்சி தந்தனர். அகத்தியருக்கு ஈசன் திருமணக்கோலத்தில் காட்சி தந்த தலமாதலால், இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் தடைப்பட்டு வரும் கல்யாணம் நல்லபடி நிறைவேறும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். மூலிகைகள் நிறைந்த பொதிகைமலையில் தோன்றும் தாமிரபரணி முதலில் பூமியைத் தொடும் இடம்தான் பாபநாசம் கல்யாண தீர்த்தம். இங்கு நீராடுவதால் உள்ளத் தூய்மையுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.
தாராமங்கலம் தீர்த்தங்கள்
சேலம் மாவட்டத்தில் உள்ள தாராமங்கலம் அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில், அற்புதங்களின் உறைவிடம்! பேருந்து நிலையம் அருகில் அமைந்திருக்கும் இந்த ஆலயம், 13-ம் நூற்றாண்டில் கெட்டிமுதலி என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாம். அமைப்பில் சிறப்புற்று திகழ்கின்றன இங்குள்ள தீர்த்தங்கள்.
ஆம்! இந்தக் கோயிலுக்கு இரண்டு திருக் குளங்கள். ஒன்று, சுமார் 180 அடி சுற்றளவிலான சுற்றுச் சுவர்களுடன், அவற்றின் மீது 36 நந்திகள் அமைந்திருக்கும் வண்ணம் கட்டப்பட்டுள்ளது. மற்றொரு குளம் வட்ட வடிவிலும், படிக்கட்டுகள் எண்கோண வடிவிலும் அமைந்துள்ளது.
ஞான தீர்த்தம் - தென்சேரி மலை
கோவை மாவட்டம் சூலூருக்கு அருகில் உள்ள தென்சேரி என்னும் செஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள மந்திரகிரி முருகன் கோயிலில் உள்ள தீர்த்தம் ஞான தீர்த்தம்.
சுவாமிமலையில் முருகன் தந்தையான ஈசனுக்கு உபதேசம் செய்தது நமக்குத் தெரியும். அதேபோல், மாயாஜாலங்களில் வல்லவனான சூரபதுமனை அழிப்பதற்காக சத்ருசம்ஹார மந்திரத்தை சிவபெருமானிடம் உபதேசம் பெற விரும்பினார் முருகப்பெருமான். தவம் இயற்ற உரிய இடம் தேடி பூமிக்கு வந்தபோது, நான்கு வேதங்களுக்கு நிகரான கடம்ப வனமும், கங்கைக்கு நிகரான ஞானச் சுனையும் அமைந்த தென்சேரி மலையைத் தேர்ந்தெடுத்து தவம் புரிந்து மந்திர உபதேசத்தையும் பெற்றார்.
ஞானச் சுனையில் ஸ்நானம் செய்தால், வாழ்க்கையில் தோஷங்கள், இன்னல்கள் நீங்குவதுடன், நல்ல சிந்தனைகளுடன் நல்ல வாழ்க்கையும் அமையும்.
பிரசவ நந்தி!
புதுவை மாநிலத்தின் பெரிய கோயிலாக விளங்குகிறது வில்லியனூர் காமீசுவரன் கோயில். இக்கோயிலைப் பற்றி பல வருடங்கள் வெளி உலகிற்குத் தெரியாமல் இருந்தது.
இங்கு இறைவனை நோக்கி ஒரு நந்தியும் அம்மன் சந்நிதியில் ‘பிரசவ நந்தி’ என்ற பெயர் கொண்ட நந்தியும் உள்ளன. சுகப்பிரசவம் நடைபெற இந்த நந்தியை பலரும் வணங்கிச் செல்கின்றனர்.
சர்வதீர்த்தம் - காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலுக்கு அருகில் காஞ்சி புரம் - வேலூர் சாலையில் அமைந்துள்ளது சர்வதீர்த்தம். சகல தோஷங்களையும் நீக்கி, முக்தியைத் தரும் சக்தி கொண்டது சர்வதீர்த்தம்.
அம்பிகை மணலால் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டபோது, அம்பிகையின் மன உறுதியை சோதிக்க நினைத்த சிவபெருமான், அனைத்து நதிகளையும் காஞ்சியில் வெள்ளமாகப் பெருக்கெடுக்கச் செய்தார். வெள்ளப் பெருக்கைக் கண்டு அச்சம் கொண்ட அம்பிகை, பெருமானின் லிங்கத் திருமேனியைக் காக்கும் பொருட்டு, ஆரத் தழுவிக் கொண்டார். சிவன் அருளைப் பரிபூரணமாகப் பெற்றாள். எனினும் நதிகள் வருந்தின. அன்னையின் சிவ பக்தியை சோதிக்கும் பொருட்டு சிவனாரின் ஆணைக்கு இணங்கவே, நதிகள் பெருக்கெடுத்து வந்தன. எனினும் தங்களுடைய அந்தச் செயல் உகந்தது அல்ல எனக்கருதி விமோசனம் பெற முற்பட்டன. அதனால் அத்திருத்தலத்திலேயே சர்வ தீர்த்தங்களும் இறைவனைச் சரணடைந்து, இறைவனை தீர்த்தேஸ்வரராக வழிபட்டன. அவற்றின் வழிபாட்டில் மகிழ்ந்த ஈசன், ‘‘நீங்கள் எல்லோரும் இங்கேயே சர்வதீர்த்தம் என்ற பெயருடன் திகழ்வீர்கள். உங்களில் நீராடி தர்ப்பணம், தானம் செய்பவர்கள் சகல பாவங்களும் நீங்கி, அனைத்து நன்மைகளும் பெற்று, நிறைவில் முக்தியும் பெறுவர்’’ என்று அருள்புரிந்தார்.
நாழிக்கிணறு - திருச்செந்தூர்
அழகன் முருகனின் அருளாட்சி நடக்கும் திருச்செந்தூரில் கோயிலுக்கு அருகில் அமைந்திருக்கும் தீர்த்தம்தான் நாழிக்கிணறு.
அள்ள அள்ளக் குறையாத புண்ணிய தீர்த்தமான இந்த நாழிக்கிணறு கடலுக்கு மிக அருகில் இருந்தாலும், உவர்ப்பாக இல்லாமல் இனிப்புச் சுவையுடன் திகழ்கிறது.
ஆதி தீர்த்தம் – மதுரை
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் அமைந்திருக்கும் பொற்றாமரைக் குளமே ஆதி தீர்த்தம். இந்திரன் முதலான தேவர்கள் இந்தக் குளத்தில் இருந்து பொன்மலர்கள் பறித்து சொக்கநாதரை வழிபட்டதால் பொற்றாமரைக் குளம் என்ற பெயர் ஏற்பட்டது. கங்கை முதலான புண்ணிய நதிகள் தோன்றுவதற்கு முன்பே தோன்றியதால், பொற்றாமரைக் குளம் ஆதி தீர்த்தம் என்ற பெயர் பெற்றது.
முக்தி வேண்டி தவம் இருந்த நாரைக்கு முக்தி அருளியதால், பொற்றாமரைக் குளத்துக்கு ஞான தீர்த்தம், முக்தி தீர்த்தம் போன்ற பெயர்களும் உண்டு.
சங்கு தீர்த்தம் - திருக்கழுக்குன்றம்
காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலில் உள்ள தீர்த்தம் சங்கு தீர்த்தம். என்றும் பதினாறாக சிரஞ்சீவித்துவம் அருளிய சிவபெருமானை, தலங்கள் தோறும் சென்று வழிபட்டபடி வந்த மார்க்கண்டேயர், திருக்கழுக் குன்றத்துக்கு வந்தபோது, இறைவனுக்கு அபிஷேகம் செய்ய பாத்திரம் எதுவும் இல்லாததால், இறைவனைப் பிரார்த்தித்தார். ஈசனின் அருளால் திருக்குளத்தில் வலம்புரிச் சங்கு தோன்றியது. அந்த சங்கில் தீர்த்தம் எடுத்து இறைவனுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டார்.
ஒருமுறை புண்ணிய நதிகளுக்குள் தங்களுக்குள் யார் சிறப்பானவள் என்ற போட்டி ஏற்பட்டபோது, தீர்ப்பு சொல்ல வருணபகவானிடம் சென்று முறையிட்டன. அவர்களுடைய பொறாமையைச் சமாளிக்க முடியாத வருணன் ஈசனிடம் முறையிட, அனைத்தும் தன்னுள் அடங்கி இருக்கும்போது நதிகள் பெருமை கொள்ள எதுவும் இல்லை என்று நதிகளுக்குப் புரிய வைத்தார் ஈசன். பொறாமையினால் களங்கப் பட்ட நதிகள் தங்களுடைய களங்கம் தீர சங்கு தீர்த்தத்தில் நீராடி, களங்கம் நீங்கப் பெற்றதாக தலவரலாறு.
இன்றைக்கும் 12 வருடத் துக்கு ஒருமுறை இக்குளத்தில் ஒரு வலம்புரிச் சங்கு தோன்றுவதாக நம்பப்படு கிறது. இக்குளத்தில் நீராடி உமையவள் சமேத சிவனாரை தரிசித்து, சங்கு தரிசனம் செய்து வழிபட்டால் சகல பாவங்களும் நீங்கும்; சங்கடங்கள் விலகும் என்பது ஐதீகம்!
வேத தீர்த்தம் - வேதாரண்யம்
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யத்தில் அமைந்துள்ள வேதாரண்யேஸ்வரர் கோயில் தீர்த்தம் வேத தீர்த்தம். இந்தத் தீர்த்தத்துக்கு மணிகர்ணிகை தீர்த்தம் என்ற பெயரும் உண்டு.
நான்கு வேதங்களும் ஆரண்யங்களாக இந்தத் தலத்தில் தவம் இருந்த காரணத்தினால், இறைவனுக்கு வேதாரண்யேஸ்வரர் என்ற பெயரும், தீர்த்தத்துக்கு வேத தீர்த்தம் என்ற பெயரும் ஏற்பட்டது.
ராமபிரான் ராவணனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க வேத தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடினால், பல்லாயிரம் வருடங்கள் தவம், தானம் செய்த பலனைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கே நீராடுவது மகா புண்ணியம் வாய்ந்த சேது சமுத்திரத்தில் நீராடியதற்குச் சமம் என்றும் பக்தர்கள் கூறுகிறார்கள்.
பிரம்ம தீர்த்தம் - சீர்காழி
நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழி சட்டநாதர் கோயிலின் பிரதான தீர்த்தமாகத் திகழ்வது பிரம்ம தீர்த்தம்.
சித்திரை மாதம் நடைபெறும் தீர்த்தவாரித் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். இந்தத் தீர்த்தத்தில் நீராடினால், சகல பாவங்களும் தோஷங்களும் நீங்கும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள்.
கல்யாண தீர்த்தம் - பாபநாசம்
தண்பொருநை தவழ்ந்தோடும் திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் தலத்தில் உள்ள திருக்கோயிலின் தீர்த்தம் கல்யாண தீர்த்தம்.
கயிலையில் சிவபெருமானின் திருக் கல்யாணம் நடைபெற்ற சமயம், முப்பத்து முக்கோடி தேவர்களும் உலக மக்களும் வட பகுதிக்கு சென்றதால், வடபகுதி தாழ்ந்து தென் பகுதி உயர்ந்துவிட்டது. சிவபெருமானின் ஆணையின்படி, அகத்திய மாமுனிவர் தென்பகுதிக்கு வந்து பூமியின் பாரத்தை சமநிலைக்குக் கொண்டுவந்தார்.
கயிலையில் இருந்து புறப்பட்டபோது அகத்தியர் கேட்டுக்கொண்டபடியே, இந்தத் தலத்தில் இறைவன் அகத்தியருக்கு அம்மையப்பராக கல்யாணக் கோலத்தில் திருக்காட்சி தந்தனர். அகத்தியருக்கு ஈசன் திருமணக்கோலத்தில் காட்சி தந்த தலமாதலால், இந்தத் தீர்த்தத்தில் நீராடினால் தடைப்பட்டு வரும் கல்யாணம் நல்லபடி நிறைவேறும் என்று பக்தர்கள் நம்பிக்கையுடன் சொல்கிறார்கள். மூலிகைகள் நிறைந்த பொதிகைமலையில் தோன்றும் தாமிரபரணி முதலில் பூமியைத் தொடும் இடம்தான் பாபநாசம் கல்யாண தீர்த்தம். இங்கு நீராடுவதால் உள்ளத் தூய்மையுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது.
தாராமங்கலம் தீர்த்தங்கள்
சேலம் மாவட்டத்தில் உள்ள தாராமங்கலம் அருள்மிகு கயிலாசநாதர் திருக்கோயில், அற்புதங்களின் உறைவிடம்! பேருந்து நிலையம் அருகில் அமைந்திருக்கும் இந்த ஆலயம், 13-ம் நூற்றாண்டில் கெட்டிமுதலி என்பவரால் நிர்மாணிக்கப்பட்டதாம். அமைப்பில் சிறப்புற்று திகழ்கின்றன இங்குள்ள தீர்த்தங்கள்.
ஞான தீர்த்தம் - தென்சேரி மலை
கோவை மாவட்டம் சூலூருக்கு அருகில் உள்ள தென்சேரி என்னும் செஞ்சேரி பகுதியில் அமைந்துள்ள மந்திரகிரி முருகன் கோயிலில் உள்ள தீர்த்தம் ஞான தீர்த்தம்.
சுவாமிமலையில் முருகன் தந்தையான ஈசனுக்கு உபதேசம் செய்தது நமக்குத் தெரியும். அதேபோல், மாயாஜாலங்களில் வல்லவனான சூரபதுமனை அழிப்பதற்காக சத்ருசம்ஹார மந்திரத்தை சிவபெருமானிடம் உபதேசம் பெற விரும்பினார் முருகப்பெருமான். தவம் இயற்ற உரிய இடம் தேடி பூமிக்கு வந்தபோது, நான்கு வேதங்களுக்கு நிகரான கடம்ப வனமும், கங்கைக்கு நிகரான ஞானச் சுனையும் அமைந்த தென்சேரி மலையைத் தேர்ந்தெடுத்து தவம் புரிந்து மந்திர உபதேசத்தையும் பெற்றார்.
ஞானச் சுனையில் ஸ்நானம் செய்தால், வாழ்க்கையில் தோஷங்கள், இன்னல்கள் நீங்குவதுடன், நல்ல சிந்தனைகளுடன் நல்ல வாழ்க்கையும் அமையும்.
பிரசவ நந்தி!
புதுவை மாநிலத்தின் பெரிய கோயிலாக விளங்குகிறது வில்லியனூர் காமீசுவரன் கோயில். இக்கோயிலைப் பற்றி பல வருடங்கள் வெளி உலகிற்குத் தெரியாமல் இருந்தது.
இங்கு இறைவனை நோக்கி ஒரு நந்தியும் அம்மன் சந்நிதியில் ‘பிரசவ நந்தி’ என்ற பெயர் கொண்ட நந்தியும் உள்ளன. சுகப்பிரசவம் நடைபெற இந்த நந்தியை பலரும் வணங்கிச் செல்கின்றனர்.
Comments
Post a Comment