குபேரன் செல்வத்தின் அதிபதி. அவருடைய திசை வடக்கு. நமது உடலில் வடக்கு திசை சிரசைக் குறிக்கும். எண்சாண் உடம்புக்கும் சிரசே பிரதானம். இறைவன் குடியிருக்கும் இடம் சிரசு. குபேர முத்திரையின் மூலம் சிரசின் சக்கரங்கள் இயக்கப்படுகின்றன. எனவே, இந்த முத்திரையின் மூலம் நமது வேண்டுதல்களை இறைவனிடம் நேரடியாகச் சமர்ப்பிப்பதாகவே கொள்ளலாம்.
எப்படிச் செய்வது?: இந்த முத்திரையை அதிகாலையில் செய்வது சிறப்பு. சப்பணம் இட்டு நிமிர்ந்த நிலையில் அமர்ந்து, கண்களை மூடி, ஆள்காட்டி விரல் நுனி, நடு விரல் நுனி மற்றும்கட்டை விரல் நுனி ஆகியவற்றை சேர்த்துவைக்கவும்.
மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் நுனிகளை மடக்கி உள்ளங்கை பகுதியில் அழுத்தி வைத்துக்கொள்ளவும். இந்த நிலையில் உள்ளங்கை மேல்நோக்கி இருக்கவேண்டும். முதலில் செய்ய சிரமமாக இருக்கும். பழகப் பழக எளிதாகிவிடும்.
முத்திரையின்போது எதை மனதில் நிறுத்தலாம்?
உங்களது குறிக்கோளை மூன்று சொற்கள் அடங்கிய வாக்கியமாக மாற்றிக் கொள்ளுங்கள். கண்களை மூடி அந்த வாக்கியத்தைச் சொல்லத் தொடங்கலாம். அதிலிருந்து ஒரு காட்சி விரியும்.
உங்கள் மனதுக்கு இனிமையும், மகிழ்ச்சியும் ஏற்படுத்தும் அக் காட்சியை ஓர் அசையாத சித்திரமாக மனக்கண்ணில் நிறுத்துங்கள். உதாரணத்துக்கு, ‘சகல சௌபாக்கியங்களோடு, மங்களகரமான மனைவியும், குழந்தைகளும் உள்ள ஒரு வீட்டின் சித்திரம்’. இதை மனதில் நிறுத்தியவுடன் கைகளில் முத்திரையை வைக்க லாம். பின்னர் இதே நிலையில் 5 முதல் 20 நிமிடங்கள் வரை அமர்ந்திருக்கவும். கவனத்தைக்கலைக்காமல், உங்களால் எவ்வளவு நேரம் இயலுமோ அவ்வளவு நேரம் இந்த முத்திரையைச் செய்யலாம்.
Comments
Post a Comment