மும்பையின் புறநகராக விளங்கும்'அம்பர்நாத்’என்ற இடத்தில் பழங்கால சிவன் கோயில் ஒன்று உள்ளது. தலத்தின் பெயரும் அம்பர்நாத். நான்கு வாயில் களைக் கொண்ட கோயில். சுற்றிலும் மாமரங்கள் உள்ளன. மேற்கு வாயிலில் மட் டும் நந்திதேவர் உள்ளார். இதன் வழியாக உள்ளே செல்லும் பக்தர்களுக்கு அர்ச்சகர் கையில் மஞ்சள் கயிறு கட்டி விடுகிறார். எங்கும் சாம்பிராணி, ஊதுபத்தி வாசனை. இங்கே மூலஸ்தானத்தில் சிவலிங்கமோ, நடராஜர் சிலையோ காணப்படவில்லை. ஈசன் அணியும் புலித்தோல் போலத் தரை அமைந்துள்ளது. கருவறையில் சிறிய பள்ளம் காணப்படுகிறது. இந்தப் பள்ளத்தைத்தான் சிவபெருமான் என்று கூறு கின்றனர். ஆனால் பள்ளத்திற்கு பூஜைகள் எதுவும் கிடையாது. சிவபக்தர் கள் பாடிக்கொண்டே ஆலயத்தை வலம்வந்து கொண்டிருக்கிறார்கள்.
மகாராஷ்டிராவில், கொங்கன் என்ற பகுதியை ஆட்சி செய்த‘சில்கார’அரச பரம்பரையில் வந்த சித்தராஜன், கடம்பவன அரசர்களைப் போர் செய்து வெற்றி பெற்றான். அந்த வெற்றிக்குக் காணிக்கையாக இந்த ஆலயத்தை கி.பி. 1060-ல் அமைத்ததாகக் கல்வெட்டு கூறுகிறது. காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை ஆலயம் திறந்திருக்கும்.
சித்தி விநாயகர் ஆலயம்
மும்பையில் மிகவும் பிரசித்தி பெற்றது சித்தி விநாயகர் ஆலயம். பிரபாதேவி என்ற இடத்தில் 1801-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பிரதிஷ்டை செய்து கட்டப்பட்டது. கேட்ட வரம் அருளும் இந்த விநாயகரை பொதுமக்கள் மட்டுமல்லாது, அரசியல் வாதிகளும், திரைப்படத் துறையினரும் அடிக்கடி வந்து தரிசிப்பது வழக்கம். இக் கோயில் கதவுகளில் அஷ்ட விநாயகர்கள் அழகாகச் செய்துக்கப் பட்டுள்ளனர். பிராகாரத்தின் உள்கூரை தங்கத் தால் ஜொலிக்கிறது. சங்கடஹர சதுர்த்தியில் (செவ்வாய்க்கிழமையும், சங்கடஹர சதுர்த்தி யும் சேர்ந்து வரும் தினம்) சித்தி விநாயகரைத் தரிசித்தால், நினைத்த காரியம் கைகூடும் என் பது மும்பை மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
மும்பா தேவி ஆலய புராணம்!
மும்பையின் செல்வச் செழிப் புக்கு மும்பா தேவியே காரணம் என்பது மும்பை வாசிகளின் நம் பிக்கை. இந்த ஆலயம் தோன்றியதற் கான புராணக்கதை ஒன்று உண்டு. பல்லாண்டுகளுக்கு முன் ‘மும்பாரக்’ என்ற அசுரன் பிரம்மாவை நோக்கிக் கடும் தவம் புரிந்து இறவாத வரத்தைப் பெற்றான். அந்த ஆணவத்தால் தேவர் களையும், பூவுலக மக்களையும்
கொடுமைப்படுத்தினான். அனைவரும் மகாவிஷ்ணுவிடம் முறையிட்டனர்.
சிவன் மற்றும் தன்னுடைய அம்சமாக எட்டு கரங்கள் கொண்ட சக்தி தேவியை அவனை அழிக்க அனுப்பினார் விஷ்ணு. நடைபெற்ற நீண்ட போரின் இறுதியில் மும்பாரக்கின் இறுதிக் காலம் வந்தது. அப்போது தேவியை வணங்கி ஒரு வரம் கேட்டான். தன்னுடைய பெயராலேயே, தேவி அவ்விடத்தில் கோயில் கொண்டு தீயோரை அழித்து, நல்லோரை வாழவைக்க வேண்டும் என்றான். அதன்படியே, ‘மும்பாரக் தேவி’ என்ற பெயரில் தேவி அருள்புரிந்தாள். நாளடைவில் அது ‘மும்பா தேவி’யாகி விட்டது.
Comments
Post a Comment