மஞ்சள் - மங்கலத்தின் அடையாளம்; குரு பகவானுக் குரிய நிறம். மஞ்சள் நிறம் மனதுக்கு மகிழ்ச்சி தரும். இயல்பான மஞ்சள் நிறம் ஓர் அற்புத ஒளிக் கடத்தி.
ஆயுர்வேதம், மஞ்சளை ‘இயற்கை உலோகம்’ என்
கிறது. மஞ்சள் கிழங்கை ஒடித் தால் உலோக நாதம் உண்டாகிறது. மஞ்சள் என்பது சுத்த தங்கத்தின் நிறம் என்பதோடு, தங்கத்தைப் போன்றே ஆன்மிகஅதிர்வலைகளை வசீகரிக்கும் ஆற்றல் பெற்றது. தீய அலைகளைத் தடுக்கும் பாதுகாப்புக் கவசம்.
இந்து கலாசாரத்தில், சமையலில் பயன்படுத்தப் படுவது போல் மற்றவர்கள் மஞ்சளைப் பயன்படுத்த வில்லை. ஆனாலும், உலகின் பெரும்பாலான நாடு களில் அதன் மருத்துவ குணம் கருதி, மருந்துகளில் மஞ்சளைக் கலந்து தயாரிக்கின்றனர். மஞ்சள் நிறத்துக்கு அறிவையும், சாதுர்யத்தையும் வளர்க்கும் ஆற்றல் உண்டு. எனவேதான், போட்டிகள், தேர்வுகள், நேரடித் தேர்வுகளைச் சந்திக்கும் நாட்களில் மஞ்சள் நிற ஆடை அணிவது நல்லது என்கின்றனர்.
ஆண்கள் மஞ்சளை அதிகம் பயன்படுத்துவதில்லை. ஆனால், ஆற்றலின் வடிவமா விளங்கும் பெண்களுக்கு மஞ்சள் அவசியம் என்பர். ஆகவேதான், தேர்வுகளில் பெண்கள் பிரகாசிக்க, மஞ்சள்தான் காரணமாக அமைகிறது போலும்!
பொங்கல் பண்டிகையின்போது, மஞ்சள் கட்டப் பட்ட பானையில் பொங்கும் பொங்கல், அந்த வீட்டின் வளத்தைக் குறிக்கிறது. பண்டிகைகள், கொண்டாட்டங்கள், நற்செயல்கள் அனைத்திலும் சிறப்பிடம் பெறுகிறது மஞ்சள். குங்குமம், வெற்றிலை, பாக்கு, பிளவுஸ் பிட்துணி, பழங்கள், பரிசுப் பொருட்களுடன் மஞ்சள் கிழங்கு வைத்து, இல்லத்துக்கு வரும் பெண்களுக்கு, குறிப்பாக திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளின்போது வழங்குவது வழக்கம். திருமணத்தில் பெண்ணுக்கு அணிவிக்கப்படும் தாலிக் கயிறில், மஞ்சளின் மங் கலத் தன்மை ஏற்றப்படுகிறது.
பெண்கள் தங்கள் முகத்தையும் உடலையும் அழகுபடுத்த மஞ்சளைப் பூசுகின்றனர். முகத்தில் மாசு, மரு நீக்கி இயற்கையான ‘ப்ளீச்’சாக செயல்படுகிறது. அனைத்து பூஜைகளிலும், ஹோமங்களிலும், வீட்டு சுப நிகழ்ச்சிகளிலும் முதலில் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து பூஜிக்கிறோம். பூஜையின்போது, ‘ஹரித்ராபிம்பம்’ எனும் பிடித்து வைத்த மஞ்சள் பிள்ளையாரை வழிபடுவதே சிறந்தது. ஏனெனில், இது சுயம்பு வடிவம், மேரு வடிவம், கோபுர வடிவம், ரத்த செல்வடிவம், உயிர் வடிவம், பிரமீடுகளுக்கு முந்தைய ஆற்றல் வடிவம், ஆதி தெய்வ இயற்கையின் வடிவம், சக்தி அதிர்வுகளை ஆகர்ஷிக்கும் வடிவம்.
‘ஓம் சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்புஜம்
பிரசன்னவதனம் த்யாயேத் சர்வ
விக்னோபவ சாந்தயே’
- என்று சொல்லி தலையில் குட்டிக் கொள்ளும் பொழுது சகஸ்ரா அமிர்த துளிகள் உடல் முழுவதும் பரவி, மூளையை எழுப்பி உடலையும், மனதையும் விழிப்புணர்வாக்குகிறது.
Comments
Post a Comment