இரு வாசல் தரிசனம்

இரு வாசல் தரிசனம்
திருச்சியிலிருந்து துறையூர்
செல்லும் சாலையில், திருவெள்ளறையில் உள்ளது ஸ்ரீ புண்டரீகாக்ஷப் பெருமாள் திருக்கோயில். இக்கோயிலில், உத்தராயண வாசல் மற்றும் தக்ஷிணாயண வாசல் என இரண்டு வாசல்கள் உள்ளன. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தக்ஷிணாயண வாசல் வழியாகவும் பெருமாளை தரிசிக்க வேண்டும். சிபிச் சக்கரவர்த்திக்கு ஸ்வேத வராஹனாக பெருமாள்காட்சி தந்ததால் பெருமாளுக்கு ‘ஸ்வேதபுரி நாதன்’ என்ற திருநாமம் ஏற்பட்டது. இதனாலேயே இந்தத் திருத்தலம் ‘ஸ்வேதபுரி கே்ஷத்ரம்’ எனவும் அழைக்கப் படலாயிற்று. இக்கோயிலின் தென்மேற்கே உள்ள, ‘ஸ்வஸ்திக் குளம்’ சக்கர குளத்தில் ஒரு துறையில்
நீராடுபவர்களை மற்றொரு துறையில் உள்ளவர்கள் பார்க்க முடியாது என்பது சிறப்பம்சம்.
சுகப் பிரசவமாக...
திருச்சி மலைக்கோட்டை, உச்சிப்பிள்ளையார் கோயிலில் அருள்புரியும் ஸ்ரீதாயுமானவர் சன்னிதியில் சுகப்பிரசவம் நிகழ வேண்டி வாழைத்தார் கட்டும் பிரார்த்தனை மிகவும் விசேஷம். குழந்தைப் பேற்றுக்காகக் காத்திருக்கும் கர்ப்பிணிப்பெண்கள்,
‘ஹே ஸங்கர ஸ்மரஹர ப்ரமதாதீ நாத மன்னாத
ஸாம்ப சசிசூட ஹர த்ரிசூரினீ
சம்போ ஸுகப்ரஸவக்ருத் பவமே த்யாயோ
ஸ்ரீ மாத்ரு பூத சிவ, பாலய மாம் நமஸ்தே’
எனும் ஸ்லோகத்தை தினமும் பூஜை யறையில் நான்கு முறை சொல்லி வர, ஸ்ரீதாயுமானவர் அருளால் சுகப்பிரசவம் நிகழும். சுகப்பிரசவத்துக்குப் பிறகு குழந்தையுடன் ஸ்ரீதாயுமானவர் சன்னிதிக்கு வந்து சுவாமிக்கு வாழைத்தார் படைத்து, அதை பக்தர்களுக்கு விநியோகம் செய்திட வேண்டும்.

திருமணத் தடை நீங்க...
திருச்சி - சமயபுரம் டோல்கேட்டுக்கு அருகில், கொள்ளிடக் கரையையொட்டி அமைந்துள்ளது துடையூர் ஸ்ரீவிஷமங்களேஸ்வரர் திருக்கோயில். இக்கோயிலில் ஸ்ரீமங்களாம்பிகை சமேத ஸ்ரீவிஷ மங் களேஸ்வரர், ஸ்ரீலக்ஷ்மி நாராயணர், ஸ்ரீபிரம்மா -
ஸ்ரீசரஸ்வதி தேவி, ஸ்ரீவள்ளி- தெய்வானை சமேத ஸ்ரீசுப்ரமணியர், ஸ்ரீஉஷா- பிரத்யுஷா சமேத சூரிய பகவான் மற்றும் ஸ்ரீகாத்யாயினி சமேத ஸ்ரீகல்யாண சுந்த ரேஸ்வரர் என ஒவ்வொரு சன்னிதியிலும் மொத்தம் 11 தீபங்களை ஏற்றி, 11 முறை பிராகார வலம் வர, தோஷங்கள் அகன்று கல்யாணத் தடைகள் விலகும் என்பது ஐதீகம்.
 

Comments