இளமையில் சரீர பலத்தால் பல வேலைகளைத் துணிச்சலாகச் செய்கிறோம். ஆனால், வயதாகும்போது உடல் தளர்ந்து, மனோ பலம் குன்றி விடுகிறது. தெய்வ பலம் ஒன்றுதான் கடைசி வரையில் நம்மை கைதூக்கி விடும். நம்பிக்கையோடு சுவாமியை பிரார்த்தனை செய்தால், நமது நியாயமான விருப்பங்களை அவர் நிச்சயம் பூர்த்தி செய்து வைப்பார்" என்றார் தமது சொற்பொழிவில் சேங்காலிபுரம் பிரும்மஸ்ரீ ராம தீட்சிதர்.
நமது மதத்தில் சிறு குழந்தையிலிருந்தே
சுவாமியை நமஸ்காரம் செய்ய வைப்பது, கோயிலுக்கு அழைத்துச் செல்வது ஆகியவற்றைச் செய்கிறோம். சில குழந்தைகள் அழுதுகொண்டேயிருக்கும். ‘அப்பா, அம்மாவை நமஸ்காரம் பண்ணிக்கோ’ என்றவுடனே அழுகையை நிறுத்திவிட்டு நமஸ்காரம் செய்யும். திரும்பி வந்து அழுகையைத் தொடரும். ஆக, அப்படிப் பழக்கம் வந்துவிட்டால் பெரியவர் களாகும்போது தன்னம்பிக்கை, தெய்வ நம்பிக்கை இரண்டும் சேர்ந்து வாழ்க்கையை நன்றாக வைத்துக் கொள்ள முடியும்.
அம்பாளிடம் பூஜை செய்கிறோம். சுவாமியிடம் இல்லாததை நாம் என்னத்தை சமர்ப் பணம் செய்து விடப்போகிறோம். எல்லாமே பாவனைதான்! ஒரு குழந்தை அம்மாவின் அருகில் வந்து, ‘உனக்கு அப்பிச்சி தரட்டுமா?’ என்று கேட்கும். தாயும்கை
நீட்டுவாள். குழந்தை வெறுங்கையை மூடிக்கொண்டு அம்மாவின் வாயில், இல்லாத அப்பிச்சியை போட்டு
‘சாப்பிடு’ என்று சொல்லும். அம்மாவும் அதை
ரசித்து, சுவைத்து சாப்பிடு வாள். தாய் குழந்தையின் கைக்கு முத்தம் கொடுப்பாள். கட்டி அணைத்து அன்பைச் சொரிவாள். அதேபோலத் தான் நாமும் ஏதோ இருப்பதை நிறைய சமர்ப்பணம் செவதைப் போல, பூஜை செய்தால் அம்பாள் நமக்கு எல்லாம் அருள்வாள். அதற்கு பக்தி பாவனைதான் முக்கியம்.
அந்தக் காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் காடுகளில் நீண்ட காலம் தவம் செய்தார்கள். இப்போது அது சாத்தியமில்லை. பஸ்ஸுக்காக, ரயிலுக்காக, ரேஷன் கடை என பல இடங்களில் வரிசையில் நிற்கிறோம். அப்போதெல்லாம் பகவான் நாமத்தை மனதுக்குள் ஜபித்து வந்தால் வீண் பேச்சு குறையும். மனமும் தூமையாகும். இப்படி ஜபிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தால் அது, அந்தக் காலத்து ரிஷிகள் ஜபித்ததை விட அதிக முறை என கணக்கு வரும்.
இப்போதெல்லாம், ‘மரம் நடு விழா’, ‘காடுகளை பாதுகாப்போம்’ என்றெல்லாம் கோஷம் போடுகிறோம். விழா நடத்துகிறோம். ஆனால், அந்தக் காலத் தில் இயற்கையை நேசித்து, பாதுகாக்கும் சுபாவம் இயல்பாகவே நம்மிடம் இருந்திருக்கிறது. சகுந் தலையை புகுந்த வீட்டுக்கு கண்வ மகரிஷி அனுப்பி வைக்கிறார். ஒரு தந்தை ஸ்தானத்தில் இருந்து அவர் புலம்பும்போது , நான்கு ஸ்லோகங்களில் காளிதாசன் வர்ணிக்கிறார். இரண்டாவது ஸ்லோகத்தில் மரம், செடி, கொடிகளைப் பார்த்து கண்ணீர் உகுத்த படி, ‘உங்களுக்குத் தண்ணீர் விடாமல் அவள் தண்ணீர் கூட குடிக்க மாட்டாளே. அவளுக்கு அணிகலன்களை அணிவது விருப்பமென்றாலும் ஒரு இலையைக்கூட பறிக்க மாட்டாளே! செடிகள் பூக்கும் காலம் வந்தவுடன் முதல் மலர் மலர்ந்த நாளன்று அவள் எவ்வளவு சந்தோஷப்படுவாள். அப்பேற்பட்ட சகுந் தலை இன்று தனது கணவனுடன் சேர்ந்து வாழ, அரண்மனைக்குப் போகிறாள்! நீங்கள் எல்லோரும் அதற்கு அனுமதி கொடுங்கள். ஆசீர்வதியுங்கள்’ என்பதாக ஒரு பாடல் வருகிறது. இயற்கையை நமது முன்னோர்கள் எந்த அளவுக்கு ரசித்து, நேசித்து, பாது காத்திருக்கிறார்கள் என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் வேண்டுமா?
திருமணங்கள் இப்போதெல்லாம் சீக்கிரமாகவே ரத்து செயப்படுகின்றன. ஒரு வீட்டில் மனைவிக்குப் பிடிக்காத வண்ணத்தை கணவன் சுவருக்கு அடித்தான் என்பதற்காக அவனை விவாகரத்து செது விட்டாள் மனைவி! கணவன் மூன்று வேளையும் சந்தியாவந்தனம், மாத்தியான்னிகம் செய்கிறான் என்பதற்காக அவனை விட்டு ஒதுங்கி விட்டாள் மனைவி. இப்படிச் செய்வதனால் சமுதாயத்தில் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். நமது இந்து மதத்தில் திருமணம் என்பது முப்பத்து முக் கோடி தேவர்கள் சாட்சியாக நடப்பது என்பதனால் அதில் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.
கணவனும் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் அன்பும், பாசமும் செலுத்தி, விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் பிரிவு என்ற நிலை ஏன் வரப்போகிறது? கணவன் ஆபீசிலிருந்து வந்தவுடன் கோபத்துடன் சப்தம் போட ஆரம்பித்தால், ‘இந்தாங்க, காபி ஆறிப் போவிடும். சாப்பிட்ட பிறகு சண்டை போடுங்க’ என்று சொன் னால் கணவனுக்கு வந்த கோபம் பறந்தே போய்விடும். அவன் ஏதாவது பேசினாலும், ‘நீங்கள் எவ்வளவோ செய்கிறீர்கள். என்னிடம் கோபித்துக்கொள்ள உங்களுக்கு உரிமையில்லையா?’என்று மனைவி
சொல்லிப் பார்க்கட்டும். கணவன் ஆபீசுக்கு லீவ் போட்டுவிட்டு மனைவியின் எல்லா வேலைகளிலும் உதவி செய்வான். பிரிந்து போவிடுவது பெரிய விஷயமா? நம் சாஸ்திரங்கள் பிரிவு என்பதைப்
பற்றி பேசவேயில்லை. ஒற்றுமையாக இருந்து அடுத்தத் தலைமுறையை நல்லவிதமாக வளர்க்கலாமே!"
நமது மதத்தில் சிறு குழந்தையிலிருந்தே
சுவாமியை நமஸ்காரம் செய்ய வைப்பது, கோயிலுக்கு அழைத்துச் செல்வது ஆகியவற்றைச் செய்கிறோம். சில குழந்தைகள் அழுதுகொண்டேயிருக்கும். ‘அப்பா, அம்மாவை நமஸ்காரம் பண்ணிக்கோ’ என்றவுடனே அழுகையை நிறுத்திவிட்டு நமஸ்காரம் செய்யும். திரும்பி வந்து அழுகையைத் தொடரும். ஆக, அப்படிப் பழக்கம் வந்துவிட்டால் பெரியவர் களாகும்போது தன்னம்பிக்கை, தெய்வ நம்பிக்கை இரண்டும் சேர்ந்து வாழ்க்கையை நன்றாக வைத்துக் கொள்ள முடியும்.
அம்பாளிடம் பூஜை செய்கிறோம். சுவாமியிடம் இல்லாததை நாம் என்னத்தை சமர்ப் பணம் செய்து விடப்போகிறோம். எல்லாமே பாவனைதான்! ஒரு குழந்தை அம்மாவின் அருகில் வந்து, ‘உனக்கு அப்பிச்சி தரட்டுமா?’ என்று கேட்கும். தாயும்கை
நீட்டுவாள். குழந்தை வெறுங்கையை மூடிக்கொண்டு அம்மாவின் வாயில், இல்லாத அப்பிச்சியை போட்டு
‘சாப்பிடு’ என்று சொல்லும். அம்மாவும் அதை
ரசித்து, சுவைத்து சாப்பிடு வாள். தாய் குழந்தையின் கைக்கு முத்தம் கொடுப்பாள். கட்டி அணைத்து அன்பைச் சொரிவாள். அதேபோலத் தான் நாமும் ஏதோ இருப்பதை நிறைய சமர்ப்பணம் செவதைப் போல, பூஜை செய்தால் அம்பாள் நமக்கு எல்லாம் அருள்வாள். அதற்கு பக்தி பாவனைதான் முக்கியம்.
அந்தக் காலத்தில் ரிஷிகளும், முனிவர்களும் காடுகளில் நீண்ட காலம் தவம் செய்தார்கள். இப்போது அது சாத்தியமில்லை. பஸ்ஸுக்காக, ரயிலுக்காக, ரேஷன் கடை என பல இடங்களில் வரிசையில் நிற்கிறோம். அப்போதெல்லாம் பகவான் நாமத்தை மனதுக்குள் ஜபித்து வந்தால் வீண் பேச்சு குறையும். மனமும் தூமையாகும். இப்படி ஜபிப்பதை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்தால் அது, அந்தக் காலத்து ரிஷிகள் ஜபித்ததை விட அதிக முறை என கணக்கு வரும்.
திருமணங்கள் இப்போதெல்லாம் சீக்கிரமாகவே ரத்து செயப்படுகின்றன. ஒரு வீட்டில் மனைவிக்குப் பிடிக்காத வண்ணத்தை கணவன் சுவருக்கு அடித்தான் என்பதற்காக அவனை விவாகரத்து செது விட்டாள் மனைவி! கணவன் மூன்று வேளையும் சந்தியாவந்தனம், மாத்தியான்னிகம் செய்கிறான் என்பதற்காக அவனை விட்டு ஒதுங்கி விட்டாள் மனைவி. இப்படிச் செய்வதனால் சமுதாயத்தில் அடுத்த தலைமுறைக் குழந்தைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். நமது இந்து மதத்தில் திருமணம் என்பது முப்பத்து முக் கோடி தேவர்கள் சாட்சியாக நடப்பது என்பதனால் அதில் ரத்து என்ற பேச்சுக்கே இடமில்லை.
கணவனும் மனைவியும் ஒருவர் மீது ஒருவர் அன்பும், பாசமும் செலுத்தி, விட்டுக்கொடுத்து வாழ்ந்தால் பிரிவு என்ற நிலை ஏன் வரப்போகிறது? கணவன் ஆபீசிலிருந்து வந்தவுடன் கோபத்துடன் சப்தம் போட ஆரம்பித்தால், ‘இந்தாங்க, காபி ஆறிப் போவிடும். சாப்பிட்ட பிறகு சண்டை போடுங்க’ என்று சொன் னால் கணவனுக்கு வந்த கோபம் பறந்தே போய்விடும். அவன் ஏதாவது பேசினாலும், ‘நீங்கள் எவ்வளவோ செய்கிறீர்கள். என்னிடம் கோபித்துக்கொள்ள உங்களுக்கு உரிமையில்லையா?’என்று மனைவி
சொல்லிப் பார்க்கட்டும். கணவன் ஆபீசுக்கு லீவ் போட்டுவிட்டு மனைவியின் எல்லா வேலைகளிலும் உதவி செய்வான். பிரிந்து போவிடுவது பெரிய விஷயமா? நம் சாஸ்திரங்கள் பிரிவு என்பதைப்
பற்றி பேசவேயில்லை. ஒற்றுமையாக இருந்து அடுத்தத் தலைமுறையை நல்லவிதமாக வளர்க்கலாமே!"
Comments
Post a Comment