மாசி மாத பௌர்ணமி அன்று அபிஷேகம் முடிந்ததும், கிருத கம்பளம் சாத்துவார்கள். கம்பளி ஒன்றை நெய்யில் நனைத்து சாத்துவதை ‘கிருத கம்பளம்’ என்பர். இந்த வழிபாட்டினைத் தரிசித்தால் தேக
ஆரோக்கியம் சிறக்கும். ‘கிருத கம்பளம்’ சாற்றுதல் திருவையாறில் ஈஸ்வரனுக்கு நடைபெறும்.
சிவாலயங்களில் பிரதோஷ காலத்தில் பிராகாரத்தை வலம்வரும் போது சண்டிகேசுவரர் வரை வந்து திரும்பிச் சென்று தட்சிணாமூர்த்தியை வழிபட்டு திரும்பவும் வந்து சண்டிகேசுவரரை வணங்கி, பின்னர் சிவனாரை வழிபட
வேண்டும். இதுபோல் மூன்று முறை வழிபட வேண்டும். இதற்கு சொம சூத்திர பிரதட்சணம் என்று பெயர்.
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள
சதுரகிரி மலையில் ஸ்ரீசுந்தர மகாலிங்கேஸ்வரர்
கோயில் அமைந்துள்ளது. இந்த மலையில் பல அபூர்வ விருட்சங்களும், மூலிகைச் செடிகளும் நிறைந்துள்ளன. இக்கோயிலின் அருகில் ஜோதி விருட்சம் என்ற மரம் காணப்படுகிறது. இந்த மரத்தின் இலைகள் மட்டும் ‘எண்ணெய் அகல் விளக்கில்’ சுடர்விட்டுப் பிரகாசமாக எரிகின்றன. பஞ்சு மற்றும் நூல் திரிக்குப் பதில் கோயிலில் இந்த ஜோதி மரத்தின் இலைகளையே பயன்படுத்துகிறார்கள். இந்த ஜோதி விருட்சத்தின் ஒரு இலைக்கீற்று, எண்ணெய்யில் 15 மணி நேரம் தொடர்ந்து எரிந்து பிரகாசமாக விளங்குகிறது. இந்த மரத்தின் இலைகளை வீட்டிற்குக் கொண்டு வந்து பயன்படுத்துவார்கள். அமாவாசை, பௌர்ணமி, பிரதோஷம்,
சிவராத்திரி போன்ற நாட்களில் விளக்கு ஏற்றினால் சிவனருள் கிட்டும் என்பது ஐதீகம்.
தஞ்சை மாவட்டம் ஐயன்பேட்டை
சிவாலயத்தில் அருள்புரியும் சுவாமியின் பெயர் - செட்டியப்பர். அம்பாள் - படியளந்த நாயகி. இங்கு, உற்சவமூர்த்தியின் கையில் தராசு பிடித்துக் கொண்டும், அம்பாள் எடைக் கல்லை வைத்துக் கொண்டும் காட்சி தருகிறார்கள். இது ஓர் அபூர்வமான தரிசனம்.
பிரதோஷத்தன்று
சிவபெருமானுக்கும், நந்திதேவருக்கும்
அபிஷேகம் செய்யும் பொருட்களினால்
ஏற்படும் நன்மைகள்:
பால் - நீண்ட ஆயுள்கிடைக்கும்.
நோய் நீங்கும்.
தயிர் - வளமை பெருகும்.
இளநீர் - நல்ல மக்கட்பேறு கிட்டும்.
எண்ணெய் - சுகவாழ்வு உண்டாகும்.
தேன் - இனிமையான சாரீரம் உண்டாகும்.
சர்க்கரை - எதிர்ப்புகள் மறையும்.
சந்தனம் - சிறப்பான சக்திகள் பெறலாம்.
கரும்புச் சாறு - உடல் ஆரோக்கியம்
எலுமிச்சை - மரண பயம் நீங்கும்
மலர்கள் - தெய்வ தரிசனம் கிட்டும்.
கலிங்க நாட்டை ஆட்சி செய்து வந்த குணவந்தி என்ற மன்னன் சிவராத்திரி அன்று சிவாலயங்களில் விளக்குகள் ஏற்றி ஒளிமயமாக விளங்கச் செய்து வழிபட்டான். அதன் பலனாக அவன் அடுத்த பிறவியில் குபேரனாகப் பிறந்தான். அவனை இறைவன் தனக்குத் தோழனாக இருக்கும்படி அருளினார்.
விபரிசன் என்ற மன்னன் முற்பிறவிகளை அறியும் ஆற்றல் பெற்றவன். ‘இந்த சக்தி தங்களுக்கு எப்படி வந்தது?’ என்று அவன் மனைவி குமுதவல்லி கேட்டாள். அதற்கு அவன், ‘நான் முற்பிறவியில் ஒரு நாயாக இருந்தேன். அப்பொழுது ஒருநாள் சிவன்
கோயிலில் இரவு முழுக்க வழிபாடுகள் நடந்துகொண்டிருந்தன. அந்த நாள்
சிவராத்திரி. நான் ஒன்றும் அறியாமல்
யதேச்சையாக அந்தக் கோயிலை பூஜை
வேளையில் சுற்றிச் சுற்றி வந்தேன். அதுவே எனக்கு இப் பிறவியில் முற்பிறவிகளை அறியும் சக்தியையும், அரச பதவியும் கிடைப்பதற்கும் காரணமானது’ என்றார்.
நமக்கெல்லாம் தெரிந்தது ஒரு சிவராத்திரிதான். ஆனால், ஐந்து வகையான சிவராத்திரிகள்
சொல்லப்பட்டிருக்கின்றன. மாக சிவராத்திரி, யோக
சிவராத்திரி, நித்யசிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, மாத சிவராத்திரி என்பவையே அவை.
மாக சிவராத்திரி: மகா சிவராத்திரி என்பது இதுவே. மாசி மாதத் தேபிறை சதுர்தசியான இந்த மகா சிவராத்திரிக்கு ‘வருஷ சிவராத்திரி’ என்ற பெயரும் உண்டு.
யோக சிவராத்திரி: யோக சிவராத்திரியில் நான்கு வகைகள் உண்டு. அவை: 1. திங்கட்கிழமை அன்று சூரிய உதயம் முதல் இரவு முழுவதும், அதாவது பகல்-இரவு சேர்ந்த 60 நாழிகையும் (24 மணி நேரமும்) அமாவாசை இருந்தால், அன்று
யோக சிவராத்திரி.
2. திங்கட்கிழமை அன்று சூரிய அஸ்தமனம் முதல் இரவு 4 ஜாமங்களும் (மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை) தேபிறை சதுர்த்தசி இருந்தால், அதுவும் யோக சிவராத்திரி.
3. திங்கட்கிழமை அன்று இரவின் நான்காம் ஜாமத்தில் (இரவு 3 மணி முதல் 6 மணி வரை) அமாவாசை அரை நாழிகை அதாவது பன்னிரண்டு நிமிடங்கள் இருந்தாலும் அன்று யோக சிவராத்திரி.
4. திங்கட்கிழமையன்று இரவின் நான்காம் ஜாமத்தில் தேபிறை சதுர்த்தசி திதி அரை நாழிகை (12 நிமிடங்கள்) இருந்தால், அன்றும் யோக
சிவராத்திரி. திங்கட்கிழமையன்று வரும் இந்த நான்கு யோக சிவராத்திரிகளில், ஏதாவது ஒரு யோக சிவராத்திரி யன்று விரதம் இருந்தாலும் அது மூன்று கோடி சிவராத்திரி விரதம் இருந்த பலனைத் தரும்.
மார்கழி மாத வளர்பிறை சதுர்த்தசி, திருவாதிரை நட்சத்திரத்துடன் சேர்ந்து வந்தாலும், மாசி மாதத் தேபிறை சதுர்த்தசி, செவ்வா அல்லது ஞாயிற்றுக் கிழமையில் வந்தாலும் அந்த சிவராத்திரியும் மூன்று கோடி சிவராத்திரிக்கு சமமாகச் சொல்லப்படுகிறது.
நித்ய சிவராத்திரி: வருடத்தில் 12 மாதங்களிலும் வரும் வளர்பிறை, தேபிறை சதுர்தசி திதி இடம் பெறும் 24 நாள்களும் நித்ய சிவராத்திரி.
பக்ஷ சிவராத்திரி: தை மாதத் தேபிறை பிரதமையன்று தொடங்கி 13நாள்கள் தினந்தோறும் ஒரு வேளை உணவு உண்டு, பதினான்காம் நாளான சதுர்தசியன்று முறைப்படி விரதம் இருப்பது பக்ஷசிவராத்திரி எனப்படும்.
மாத சிவராத்திரி: இதுவரை நாம் பார்த்த
சிவராத்திரி எல்லாம் பொதுவாக, அமாவாசை அல்லது சதுர்தசியை அனுசரித்தே வரும்.
ஆனால் மாதசிவராத்திரி என்பது மாதத்தின்
மற்ற திதிகளிலும் வரும். அவை: மாசிமாதத் தேபிறை சதுர்த்தசி, பங்குனி மாத வளர்பிறை திருதியை, சித்திரை-தேபிறை அஷ்டமி, வைகாசி-வளர்பிறை அஷ்டமி, ஆனி-வளர்பிறை சதுர்த்தசி, ஆடி-தேபிறைப் பஞ்சமி, ஆவணி -வளர்பிறை அஷ்டமி, புரட்டாசி - வளர்பிறை திரயோதசி, ஐப்பசி - வளர்பிறை துவாதசி, கார்த்திகை - வளர்பிறை சப்தமி + தேபிறை அஷ்டமி, மார்கழி - வளர்பிறை சதுர்த்தசி+ தேபிறை சதுர்த்தசி, தை-வளர்பிறை திரிதியை-ஆகிய 14 நாள்களும் மாத சிவராத்திரி எனப்படும்.
இந்த மகா சிவராத்திரி தினத்தில் நேரிடும் திரயோதசி பரமசிவத்திற்குத் தேகமாகவும், சதுர்த்தசி தேகியாகவும் கூறப்பட்டுள்ளது. அன்றி சக்தியாகவும், சிவமாகவும் கூறப்பட்டிருக்கிறது.
சிவராத்திரி முதல் ஜாமம் முதல் நான்கு ஜாமங்களிலும் ஆத்மார்த்த, பரார்த்த (பிறர் பொருட்டாக) பூஜை நடத்தி தானம் செய்ய
வேண்டும்.கிருதயுகத்தில் விநாயகரும், திரேதாயுகத்தில் கந்தமூர்த்தியும், துவாபர யுகத்தில் பிரம்மனும், கலியுகத்தில் விஷ்ணுவும் இந்த விரதத்தை அனுஷ்டித்தனர். இது பிரம்மன், விஷ்ணு ஆகியோரின் விருப்பப்படி சிவபெருமான்
லிங்கோற்பவராய் எழுந்தருளிய போது தேவர்கள் பூஜித்த காலம் எனக் கூறுவர்.
ஒரு பிரம கல்பத்தில் சக்தி நான்கு ஜாமத்தி லும் சிவபூஜை செய்து, ‘தாம் பூஜித்த காலம்
சிவராத்திரியாக ஆகட்டும்’ எனச் சிவபெரு மானை வரம் வேண்டி பெற்ற நாள் இது. சக்தி, விளையாட்டாகச் சிவனின் மூன்று கண்களையும் மூட, உலகங்கள் இருண்டன. அப்போது சிவ பெருமானை தேவர்கள் வணங்கிய காலம் இது.
பாற்கடலில் தோன்றிய விஷத்தை உண்ட
சிவபெருமானை விஷம் அணுகாமல் தேவர்கள் இரவு முழுவதும் பூஜித்த காலம் இது. ஒரு கல்பத்தில் அண்டங்கள் எல்லாம் இருள் சூழ்ந்திட, ருத்திரர் அந்த இருள் நீங்க சிவத்தை பூஜித்த காலம் இது எனவும் புராணங்கள் கூறுகின்றன.
சிவராத்திரி விரதம் அனுஷ்டித்தவர் அசுவமேதயாகம் செய்த பலன் பெறுவர். இந்த விரதத்தால் இம்மையில் உத்தம மக்களைப் பெறுதல், தானம், சௌபாக்கியம், சம்பத்து, மறுமையில் சுவர்க்க போகம் கிடைக்கும்.

Comments
Post a Comment