பஞ்சபூத திருத்தலங்களில் ஒன்றான சிதம்பரத்தில் திருமூல நாதரே மூலவர். எனினும், நடராஜப்பெருமானே பிரதான மூர்த்தியாகச் சிறப்பிக்கப்படுகிறார்.
மூவர் பாடிய தேவார திருப்பதிகங்கனை உலகுக்குத் தந்த திருத்தலம் இது.
காளஹஸ்தி - காளத்திநாதரின் லிங்கத் திருமேனி சிறப்பு வாய்ந்தது. இதன் அடிப்பாகத்தில் சிலந்தி, இரு யானைத் தந்தங்கள், உச்சியில் ஐந்து தலை நாகம் உருவம், வலக்கண்ணில் கண்ணப்பர் தமது கண்ணைப் பெயர்த்து அப்பியதைத் தெரிவிக்கும் வடு ஆகியவை காணப்படுகின்றன.
கர்நாடக மாநிலம், ஹுப்ளிக்கு அருகில் உள்ள தலம் திருக்கோகர்ணம். இங்கு அருளும் ஸ்வாமிக்கு மகாபலேஸ்வரர் என்றும், அம்பிகைக்கு தாம்பிர கௌரி என்றும் திருப்பெயர்கள். மாசி மாதத்தில் பிரம்மோற்ஸவமும், குறிப்பாக சிவராத்திரி அன்று தேரோட்டம் நடக்கும் தலம் இது. சிவராத்திரி புண்ணிய தலத்தில் இந்தத் தலத்தை தரிசித்து வழிபடுவதை வெகு விசேஷமாகச் சொல்கின்றன புராணங்கள்.
பக்த மார்க்கண்டேயனுக்காக சிவனார் யமனை உதைத்த இடம் திருக்கடையூர். பக்தனுக்காக சிவனார் லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டது, ஒரு சிவராத்திரியின் மூன்றாம் ஜாமத்தில். ஆக, சிவராத்திரியில் திருக்கடையூர் சென்று வழிபட, ஆயுள்பலம் கூடும்.
சிதம்பரத்தில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது ஓமாம்புலியூர். சிவனார் உமையம்மைக்கு ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்த தலம் இது. ப்ரணவ வியாக்ரபுரம் எனவும் திருப்பெயர் கொண்ட இந்தத் தலமும் சிவராத்திரி தரிசனத்துக்கு உகந்தது.
பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களைப் பொத்தியதால் உலகம் இருண்டது; உயிர்கள் வருந்தின. பின்னர், சிவம் தமது நெற்றிக் கண்ணை திறந்து உலகுக்கு ஒளி தந்தது. எனினும், உயிர்கள் இன்னலுறக் காரணமானதால் ஏற்பட்ட பாவம் நீங்கும் பொருட்டு, அம்பிகை சிவனாரைப் பூஜித்த இடம் காஞ்சிபுரம். உலகம் இருண்டபோது ருத்திரர்கள் இங்கு பூஜை செய்தனர். இந்தக் காரணத்தையொட்டி ஆனந்த ருத்ரேசம், மகா ருத்ரேசம், ருத்திர கோடிசம் போன்ற ஆலயங்கள் இவ்வூரில் உள்ளன. காஞ்சியின் ஒரு பகுதி முற்காலத்தில் ‘ருத்ர சோலை’ என்றே வழங்கப்பட்டதாம்.
செங்கல்பட்டுக்கு அருகில் உள்ள ஊர் திருக்கழுக்குன்றம். இந்த ஊரை ருத்திரகோடி என்பார்கள். கோடி ருத்ரர்கள் சிவராத்திரி காலத்தில் பூஜை செய்த இடம் இது. எனவே இந்தக் கோயிலை சிவராத்திரி நாளில் வழிபடுவது மிகவும் விசேஷம்.
மூவர் பாடிய தேவார திருப்பதிகங்கனை உலகுக்குத் தந்த திருத்தலம் இது.
காளஹஸ்தி - காளத்திநாதரின் லிங்கத் திருமேனி சிறப்பு வாய்ந்தது. இதன் அடிப்பாகத்தில் சிலந்தி, இரு யானைத் தந்தங்கள், உச்சியில் ஐந்து தலை நாகம் உருவம், வலக்கண்ணில் கண்ணப்பர் தமது கண்ணைப் பெயர்த்து அப்பியதைத் தெரிவிக்கும் வடு ஆகியவை காணப்படுகின்றன.
கர்நாடக மாநிலம், ஹுப்ளிக்கு அருகில் உள்ள தலம் திருக்கோகர்ணம். இங்கு அருளும் ஸ்வாமிக்கு மகாபலேஸ்வரர் என்றும், அம்பிகைக்கு தாம்பிர கௌரி என்றும் திருப்பெயர்கள். மாசி மாதத்தில் பிரம்மோற்ஸவமும், குறிப்பாக சிவராத்திரி அன்று தேரோட்டம் நடக்கும் தலம் இது. சிவராத்திரி புண்ணிய தலத்தில் இந்தத் தலத்தை தரிசித்து வழிபடுவதை வெகு விசேஷமாகச் சொல்கின்றன புராணங்கள்.
பக்த மார்க்கண்டேயனுக்காக சிவனார் யமனை உதைத்த இடம் திருக்கடையூர். பக்தனுக்காக சிவனார் லிங்கத்தில் இருந்து வெளிப்பட்டது, ஒரு சிவராத்திரியின் மூன்றாம் ஜாமத்தில். ஆக, சிவராத்திரியில் திருக்கடையூர் சென்று வழிபட, ஆயுள்பலம் கூடும்.
சிதம்பரத்தில் இருந்து சுமார் 24 கி.மீ. தொலைவில் உள்ளது ஓமாம்புலியூர். சிவனார் உமையம்மைக்கு ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் பொருளை உபதேசித்த தலம் இது. ப்ரணவ வியாக்ரபுரம் எனவும் திருப்பெயர் கொண்ட இந்தத் தலமும் சிவராத்திரி தரிசனத்துக்கு உகந்தது.
பார்வதிதேவி விளையாட்டாக சிவபெருமானின் கண்களைப் பொத்தியதால் உலகம் இருண்டது; உயிர்கள் வருந்தின. பின்னர், சிவம் தமது நெற்றிக் கண்ணை திறந்து உலகுக்கு ஒளி தந்தது. எனினும், உயிர்கள் இன்னலுறக் காரணமானதால் ஏற்பட்ட பாவம் நீங்கும் பொருட்டு, அம்பிகை சிவனாரைப் பூஜித்த இடம் காஞ்சிபுரம். உலகம் இருண்டபோது ருத்திரர்கள் இங்கு பூஜை செய்தனர். இந்தக் காரணத்தையொட்டி ஆனந்த ருத்ரேசம், மகா ருத்ரேசம், ருத்திர கோடிசம் போன்ற ஆலயங்கள் இவ்வூரில் உள்ளன. காஞ்சியின் ஒரு பகுதி முற்காலத்தில் ‘ருத்ர சோலை’ என்றே வழங்கப்பட்டதாம்.
Comments
Post a Comment