துயர் தீர்க்கும் துளசி!

சிருமால் பாற்கடலில் பள்ளிகொண்டவர். துளசியால் அர்ச்சனை செய்வதும், துளசி மாலை சாத் துவதும் ஸ்ரீமஹாவிஷ்ணுவுக்கு மிகவும் ப்ரீதியானது. ‘பிருந்தா’ எனும் பெயரும் துளசிக்கு உண்டு.
‘பிருந்தா, பிருந்தாவனி விஷ்வபூஜிதா விஷ்வபாவனி
புஷ்பசாரா, நந்தினி க்ருஷ்ண ஜீவனி துளசித்வாம் ரக்ஷ ரக்ஷமாம்’
என்று கூறி, மஞ்சள், குங்குமம், புஷ்பம் முதலி யவற்றால் துளசிச் செடியை அர்ச்சித்து கற்பூர ஹாரத்தி காட்டலாம். துளசியை பூஜிப்பதால் அஷ்ட ஐஸ்வர்யம், புத்திர சம்பத்து, நல்ல கணவன், புகழ், மோட்சம் என அனைத்தும் கிடைக்கும். துளசியைக் கொண்டு ஸ்ரீமஹாவிஷ்ணுவை அர்ச்சிப்பதால் நான்கு லட்சம் முறை நமஸ்காரம் செய்த பலன் கிடைக்கும். ஒருமுறை அர்ச்சித்த துளசியை நீரில் அலம்பிவிட்டு மீண்டும் உபயோகிக்கலாம். துளசிக்கு நிர்மால்ய தோஷம் கிடையாது.
செவ்வாய், வெள்ளிக்கிழமை, ஏகாதசி மற்றும் இரவு நேரங்களில் துளசியை பறிக்கக்கூடாது. துளசி செடிக்கு தண்ணீர் அளிப்பது மிகவும் புண்ணியம். இதை ஆண், பெண் என அனைவரும் செய்யலாம்.
அறிவியல் பயன்கள்: துளசி இலைகளை பச்சையாக மென்று தின்பதால் சளி நீங்கும். பனிக்காலத்தில் பனங்கற்கண்டு இட்ட சூடான துளசி தேநீர் அருந்துதல் உடல் நலம் தரும். தாகம், சுரம், வயிறு உளைச்சல், மாந்தம் இவையெல்லாம் தூய துளசியினால் குறையும். தினமும் நான்கு துளசி இலை சாப்பிட்டால் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.
வீட்டைச் சுற்றி துளசிச் செடி வளர்த்தால் கொசுக்கள் வராது. துளசி மணி மாலை அணியும்போது அதிலி ருந்து மின் அதிர்வுகள் ஏற்பட்டு பல நோய்களிலிருந்தும் தீய சக்திகளிலி ருந்தும் நம்மைக் காப்பாற்றுகிறது. சரும நோய்களுக்கு துளசி சிறந்த நிவாரணி. துளசிச் சாறுடன் எலுமிச்சை சாறு கலந்து வாரம் ஒருமுறை தலை யில் தேய்த்து, ஒரு மணி நேரம் ஊற வைத்து நீராட, பேன், பொடுகு தொல்லை நீங்கும். வைரஸ் காய்ச்சல், பன்றிக் காய்ச்சல் முதலியவற் றுக்கும் துளசி அருமருந்தாகும்.
அனைத்துத் தாவரங்களுமே பகலில் கார்பன்-டை ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு ஆக்சிஜனை வெளியிடுகின்றன. இரவில் ஆக்சிஜனை எடுத்துக்கொண்டு கார்பன்-டை ஆக்ஸைடை வெளியிடுகின்றன. ஆனால், துளசி மாத்திரம் பகல், இரவு எந்நேரமும் ஆக்சிஜனை வெளியிடும்திறன் படைத்தது. இதனால், தூய காற்றை சுவாசித்து நாம் ஆரோக்கியமாக வாழலாம். இத்தனை சிறப்புகளுடைய துளசியை வளர்த்து, வணங்கி, உண்டு உயர்வு பெறுவோம்!

Comments