தகப்பனார் இருக்கும்போது பவித்ர மோதிரம் அணியக்கூடாது என்பது சரிதானா?
சாஸ்திரங்களில் இது இரு வகையாக இருக்கிறது. ‘தர்ஜனீ’ என்று வெள்ளியில் செய்த மோதிரம், ‘பவித்ரம்’ என்று தங்கத்தில் செய்த மோதிரம் இவைகளை தகப்பனார் இருக்கும்போது போட்டுக்கொள்ளும் வழக்கம் கிடையாது. தகப்பனார் காலமான பிறகுதான் கர்மாக்களைச் செயய் வேண்டும் என்றபோது, ஸுத்தியாகிற தூமை வேண்டும் என்பதற்காக அதைப் போட்டுக்கொள்ளும் வழக்கம் வந்தது. சிலர், சில சம்பிரதாயத்தைச் சேர்ந்தவர்கள்,
தர்ப்பணம் செய்பவர்கள் சூரிய உதயத்துக்கு முன்செய்யக் கூடாது என்ற நியதி ஏன் ஏற்பட்டது?
பொதுவாகவே, தேவதைகளுடைய வழிபாட்டுக்கும் பிதுர்களின் வழிபாட்டுக்கும் வித்தியாசம் உண்டு. தேவதைகளின் வழிபாட்டை மதியம் 12 அல் லது ஒரு மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது.
பிதுர்களின் வழிபாட்டை 12 மணிக்கு மேல்தான் முடிக்க வேண்டும். இதை, ‘அபராங்க வ்யாத்தி’ என்று சொல்வர். காலை 10 மணிக்குத் தொடங்கி, மதியம் 3 மணி வரை பிதுர்களின் வழிபாட்டுக்கு உகந்த நேரம். ஒருகாலத்தில் திதி, சிராத்தங்கள் செய்வதெல் லாம், 11 மணிக்கு மேல் தொடங்கிச் செய்வர். மதியம் 3 மணி அளவில்தான் பிண்டப் பிரதானம் செய்ய வேண்டும் என்பது சாஸ்திரங்களில் சொல்லப்பட்ட விதி. ஆனால், இன்று அவரவர் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொண்டுள்ளனர்.
ஆனால், அமாவாசை என்பது நம் முன்னோர்க்கு மாசம் ஒரு நாள் கொடுக்கப்படும் தர்ப்பணம் என்பதால் அன்று சூரியனுக்கு முக்கியமான, சக்தி மிகுந்த நாள். பிதுர்களுக்கு நாம் செய்ய வேண்டிய தர்ப்பணத்தை, சூரியனுக்கு சக்தி மிகுந்த நேரத்தில் செய்வதுதான் சிறப்பு. அதிகாலை நேரத்தில் செய்தோம் என்றால், அதற்கு ஒரு சக்தியும் இல்லை என்று சாஸ்திரம் சொல்கிறது. விதிப்படி காலையில் ஒன்பது மணிக்கு மேல்தான் தர்ப்பணம் செய்ய வேண்டும்!
நிச்சயமாக வழிபடலாம். சாஸ்திரங்களில் தெய்வங்களின் வடிவத்தைத்தான் வழிபடச் சோல்லியிருக்கிறது. நாம் வீட்டிலேயே சுவாமி படம் வைத்துள்ளோம். அந்தப் படம், வெறும் பேப்பரா, அட்டையா, பெயின்டா, ஓரங்களில் இரும்பு, கண்ணாடி இதையெல்லாம் நாம் பார்ப்பதில்லை அல்லவா! அதில் உள்ள உருவத்தைத்தான் பார்க்கிறோம். அதனால், பகவானின் உருவத்துக்குத்தான் சாஸ்திரங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறது.
பகவானின் உருவம் உலகப் பொருள்களுக்கு அப்பாற்பட்டது. ஆனந்தமயமானது, ஞானமயமானது என்று சாஸ்திரங்கள் சோல்கின்றன. நாமோ, இந்த உலகத்தில் இருப்பதால் நாம் அறிந்த, நமக்குப் பழக்க மான பொருளைக் கொண்டுதான் அந்த வடிவத்தைக் கொண்டுவர வேண்டியுள்ளது, நம் கண்முன் நிறுத்து வதற்கு! அதிலும், தெய்விகத் தன்மை பொருந்திய பொருள்கள் என்று, மகரிஷிகள் எட்டுவித பொருள்களை எடுத்துக் காட்டியுள்ளனர். மரங்களில் சிலவகை மரம், பஞ்ச உலோகங்கள், கருங்கல் என்று பிரிக்கிறார்கள். அவை எல்லாம் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்வதற்கான பொருள்கள்.
நம் வீட்டில் வழிபடும்போது, நம் விருப்பத்துக்கு உகந்த வகையில் செய்து வழிபடுகிறோம். சுவாமி படம் போல், நாம் அதற்கு ஆவாஹனம் செய்ய வில்லை, அதற்கு உயிரும் கொடுக்கவில்லை வெறுமனே வழிபடுகிறோம். ஆனால், கோயில் என்று வந்துவிட்டால் அங்கு, இதுபோல் கான்கிரீட்டில் செயப்பட்ட உருவங்களை பிரதிஷ்டை செய்ய முடியாது. ஏனென்றால், அதில் இரும்புக் கம்பி கலந்திருக்கும். சுண்ணாம்பு மட்டுமில்லாமல், வேறு வகை வேதிப் பொருட்களும் அதில் கலக்கப்படுகிறது. ஆகையினால்தான், அதில் சற்று எச்சரிக்கை தேவைப் படுகிறது. நாம் வீட்டில் வழிபடுவதற்கு வேண்டு மானால் இதுபோல் சுதையாகச் செய்து வழிபட வைத்துக் கொள்ளலாம். எப்படி இருந்தாலும், நிச்சய மாக சுவாமிக்கு நைவேத்யம் செய்யாமல் சாப்பிடக் கூடாது. இது ஒருவகை மனசில் ஏற்படும் பாவம் - பாவனைதான்! எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் கடவுள், இந்தப் பொருளிலும் இருக்கிறார் இல்லையா? எனவே, நிச்சயமாக அவ்வாறு வைத்து வழிபடலாம்!
Comments
Post a Comment