பரிகாரங்கள்

குடும்பத்துல அமைதியே இல்லை, எதற்கெடுத்தாலும் பிரச்னை. இந்த நிலை மாற என்ன செய்யணும்’னு ரொம்பவும் வருத்தப்பட்டு கேட்டார் ஒருவாசகர். குடும்ப தோஷம் இருந்தாலும் இதுபோன்ற பிரச்னைகள் இருக்கும். இதுக்கு ஒரு எளிய பரிகாரம். நெல், அட்சதை, விரலி மஞ்சள், ஒரு ரூபா காசு, வெத்தலை பாக்கு, அதோட, உங்க குடும்பத்துல கால மான மூதாதையர்களோட பெயரை (உங்க ஞாபகத்துல உள்ள வரை) ஒரு வெள்ளைத் தாளில் எழுதுங்க. அனைத்தையும் ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில கட்டி, பூஜை அறைல வச்சு அதுக்கு ஊதுபத்தி, சாம் பிராணி காட்டி, மனசார உங்க இஷ்ட தெவத்தை வணங்கி வாங்க. கூடிய சீக்கிரம் உங்க குடும்பத்துல சந்தோஷம் பெருகும், அமைதி ஏற்படும்.
அடுத்து, காரிய சித்தி தொடர்பா நிறைய பேர் பரிகாரம் கேக்கறதால இன்னும் ஒரு பரிகாரத்தை சோல்றேன். சுத்தமான கலச சோம்புல நல்ல பசும் பாலை எடுத்துக்குங்க. அதை பூஜை அறைல வச்சு உங்களோட இஷ்ட தெவத்தைப் பிரார்த்தனை பண்ணிக்குங்க. அதில் கற்கண்டு, மஞ்சள் பொடியை சேத்துக்குங்க. பிறகு, அதை வேப்ப மர அடியிலோ அல்லது அரச மர அடியிலோ கொட்டி வணங்குங்க. பாலில் கற்கண்டு கரைவது மாதிரி உங்களோட பிரச்னைகள் கரைந்து போகும். மஞ்சள் மங்கலத்தின் அடையாளம் இல்லையா? அதனால நீங்கள் மேற்கொள்ளும் அனைத்துக் காரியங்களும் மங்களகரமா முடியும்.
அடுத்ததா, மாணவர்களுக்குத் தேர்வு நெருங்கிக் கிட்டிருக்கு. அவங்களுக்கு ஞாபக சக்தி கூடவும், பரீட்சைல அதிக மதிப்பெண் பெறவும் சில விஷயங்களைச் சோல்றதா சோல்லியிருந்தேன். அரசமரத் தோட பட்டைய நல்லா விழுது மாதிரி அரைச்சு தேர்வு எழுதப்போற மாணவர்கள் நெத்தியில தடவி வாங்க. குறிப்பா, வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமை நாட்கள்ல இரவு நேரத்துல இதைப் பூசுங்க. இது மூளை நரம்புகளுக்கு வலு கூட்டும். படிச்சதும் தெளிவா நினைவுல இருக்கும்.
சில குழந்தைகளுக்கு படிச்சதை உள் வாங்கிக்கிற திறமை கொஞ்சம் குறைவா இருக்கும். அவங்களை மந்தம்னு திட் டாம, வல்லாரைப் பொடி 100 கிராம், வசம்பு 15 கிராம் சேர்த்து அரைச்சு, அதை 5 கிராம் தேன்ல கலந்து சாப்பிடக் கொடுத்து வந்தா, மந்தத் தன்மை மாறும். குழந்தைகளின் புத்தியும் கற்பூரமா பிரகாசிக்கும்.
ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஞானக் கடவுள் தட்சிணாமூர்த்திக்கு எண்ணெ அபி ஷேகம் செய்து, அந்த எண்ணெயை நீங்கள் தினசரி உபயோகப்படுத்தும் எண்ணெயோடு கலந்து, படிக்கும் உங்களது குழந்தைகளின் தலைக்குத் தேத்துவர, அவர்களது நினைவாற்றல் பெருகும். ஞானம் கூடும். அதோட, ஹயக்ரீவ துதி, காயத்ரி துதி, சரஸ் வதி துதி போன்றவற்றை 32 தடவை சோல்லி வந்தாலும் பலனுண்டு. அதாவது, ஒவ்வொன்றையும் 32 தடவை சோல்லணும். மொத்தமா இல்லை. தமிழ்ல சரஸ்வதி அந்தாதி, சகலகலாவல்லிமாலையும் இருக்கு. இதையும் பாராயணம் செயலாம்.
மேதா சூக்தம், மேதா தட்சிணாமூர்த்தி ஸ்தோத்திரம், சரஸ்வதி அஷ்டோத்திரம், வித்யா லக்ஷ்மி அஷ்டோத்திரம் இதெல்லாம்கூட படிக்கலாம். சரஸ்வதி வழிபாடு நல்ல பலன் தரும். உடனே கூத்தனூர் போன்ற கோயில்களுக்கு அலைய வேண்டாம். வீட்லயே சரஸ் வதி படத்துக்கு முன்னால, ஒரு நெ தீபத்தை ஏத்தி வெச்சு வழிபடுங்க. ஆனா, அது காமாட்சி விளக்கா இருக்கணும். அதோடு, மாணவர்கள் தினமும் காலை, மாலை இரு வேளையும்,
ஸ்ரீகிருஷ்ண கிருஷ்ண மஹாகிருஷ்ண
சர்வக்ஞ த்வம் ப்ரஸீதமே நரமா ரமண விஸ்வேஸ வித்யா மாசு ப்ரயச்சமே நந’
என்ற சுலோகத்தை 108 முறை கூறி வந்தாலும் நினைவாற்றல் பெருகும்.
முக்கியமாக, தேர்வு எழுதப் போகும் மாணவர்கள்,
ஸரஸ்வதீ திவ்யம் த்ருஷ்டா வீணாபுஸ்தக தாரிணீ ந
ஹம்ஸவாஹ ஸமாயுக்தா வித்யா தாநகரீ மம நந
ப்ரதமம் பாரதீ நாம த்விதீயம்ச சரஸ்வதி ந
த்ருதீயம் சாரதா தேவீ சதுர்த்தம் ஹம்ஸவாஹினீநந
பஞ்சமம் ஜகதீக்யாதம் ஷஷ்டம வாகீஸ்வரீ ததாந
கௌமாரீ ஸப்தமம் ப்ரோக்தா அஷ்டமம் ப்ரஹ்மசாரிணீ நந
நவமம் புத்திதாத்ரீ ச தசமம் வரதாயினீ ந
ஏகாதசம் க்ஷூத்ரகண்டா த்வாதசம் புவனேச்வரீநந
ப்ராஹ்மி த்வாதச நாமாணி த்ரிசந்த்யம் யஹ் படேன் நர: ந
ஸர்வஸித்திகரீ தஸ்ய
ப்ரஸன்னா பரமேச்வரீ நந
ஸா மே வஸது ஜிஹ்வாக்ரே
ப்ரஹ்மரூபா ஸரஸ்வதீ: நந’
எனும் ஸ்ரீசரஸ்வதி த்வாதச நாம ஸ்தோத்திரத்தை தினமும் பாராயணம் செய்து வர, நல்ல ஞாபக சக்தி கூடும். மாணவ செல்வங்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெற வாழ்த்துக்கள்.
அடுத்து, 22.2.2016 அன்னிக்கு மகாமகம். பன்னிரெண்டு வருஷத்துக்கு ஒருமுறை வரும் அபூர்வ திருநாள். தேவகுரு பிருஹஸ் பதி சிம்ம ராசியில், மக நட்சத்திரத்தில் சந்திரனுடன் சஞ்சரிக்கும்போது கும்ப ராசியிலுள்ள சூரியனால் நேர் ஏழாம் பார்வையாகப் பார்க்கப்படும் பௌர்ணமி நாளே மகாமகம். இதை ‘மஹாமாகீ பூர்ணிமா’ என்றும் கூறுவர். இன்று மதியம் 11.30 மணியளவில் ரிஷப லக்னத்தில் கும்பகோணம் மகாமகம் குளத்தில் ஸ்ரீமங்க ளாம்பிகை சமேத ஸ்ரீஆதிகும் பேஸ்வரரின் தீர்த்தவாரி நடை பெறும். அச்சமயம் நாமும் அதில் ஸ்நானம் செய்ய, பிரம்மஹத்தி போன்ற அனைத்து பாபங்கள் தீரும். ஆரோக்கியம், ஆயுள், மன சாந்தி, குடும்ப கே்ஷமம் பெருகும்.
அதேபோல், அன்றே அக்குளத்தில் ஸ்நானம் செய்ய வேண்டும் என்கிற கட்டாயமில்லை. சுமார் மூன்று நாட்கள்வரை அதன் சக்தி அக்குளத்திலேயே தங்கி இருக்கும் என்பதால் கூட்ட நெரிசலில் சிரமப் படாமல், மறுநாளோ அல்லது அதற்கு அடுத்த நாளோ கூட ஸ்நானம் பண்ணலாம். அதோடு, ஸங்கல்பம், தர்ப்பணம் போன்றவற்றையும் அனுஷ்டிக்கலாம். முழுப் பலன் கிடைக்கும்.
இன்றைய தினமே ஸ்ரீலலிதா ஜயந்தி. தசமஹா வித்யா தேவியரில் பத்தாவது அவதாரம் ஸ்ரீலலிதா திரி புரசுந்தரி. இத்தேவியின் அவதாரம் மாக மாதம் பௌர்ணமியன்று மாலையில் நிகழ்ந்தது. இன்று மாலை ஸ்ரீலலிதா தேவியின் விக்ரகம் அல்லது படத்தை நன்கு அலங்கரித்து, அதன் முன் அமர்ந்து ஸ்ரீலலிதா த்ரிசதீ, லலிதா அஷ்டோத்திரம் சோல்லி அர்ச்சித்து பூஜை செய வேண்டும். அம்பாளுக்கு சர்க்கரைப் பொங்கல் நிவேதனம் செது சுமார் ஒன்பது சுவாஸினிகளுக்கு தாம்பூலம் தர வேண்டும். அதோடு, இன்று இரவு சந்திர ஒளி உடலில் படுமாறு அமர்ந்து, ஸ்ரீலலிதா
சஹஸ்ரநாம பாராயணம், தியானம் செய்வது மிகுந்த பலனைத் தரும். குறிப்பா, பெண்கள் இதைச் செய்ய சகல சௌபாக்கியம், ஆயுள், ஆரோக்கியம் ஏற்படும்.
அடுத்து, 26.2.2016 அன்னிக்கு சங்கடஹர
சதுர்த்தி. இன்று பகல் முழுவதும் உபவாசம் இருந்து ‘கணாணாம்த்வா’ என்று தொடங்கும் ஸ்லோகத்தைச் சோல்லி விநாயகப் பெருமானை வணங்க, விக்னங்கள் நீங்கும், பாபங்கள் அகலும்.

Comments