’சொக்கநாதப்பெருமான்’ என்றாலே மதுரை , ஸ்ரீமீனாட்சி அம்மன் கோயிலில் அருள்பாலிக் கும் சிவபெருமான் ஸ்ரீசோக்கநாதர்தான் நமது நினைவுக்கு வருவார். ஆனால், சோக்கநாத ஸ்வாமி என்ற திரு நாமத்தோடு ஸ்ரீ மஹாவிஷ்ணு எழுந்தருளியிருக்கும் திருகோயில் ஒன்று பெங்களூரு விமான நிலையத்தின் அருகில், தோம்ளூரில் அமைந்துள்ளது. மிகப் பழை மையான இக்கோயில், 10ஆம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்டதாகக் கருதப்படுகிறது.
புராண காலத்தில் இப்பகுதியில் தன்னைக் குறித்துத் தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவருக்காக, ஸ்ரீ மஹாவிஷ்ணு இங்கே எழுந்தருளி, தன்னை
ஸ்ரீ சோக்கநாதப் பெருமாளாகப் பிரதிஷ்டை செய்து, ஆலயம் அமைத்து வணங்குமாறு கூறியதை அடுத்து, அந்த முனிவரால் ஆலயம் எழுப்பப்பட்டதாக தல வரலாறு.
சோக்கம் என்பது அழகைக் குறிக்கும். பெயருக் கேற்ற வகையில், கருவறையில் ஸ்ரீ மகாவிஷ்ணு
சோக்கநாத ஸ்வாமி என்ற திருநாமத்துடன், நான்கு கரங்களோடு ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக அழகாகக் காட்சி தருகிறார். பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், முன் வலக்கையை வரத ஹஸ்தமாகக் கொண்டும், முன் இடக்கை கடி ஹஸ்தமாகக் கொண்டும் அருள்பாலிக்கிறார். இந்த விக்கிரகங்கள் சாளக்ராம
சிலையில் வடிக்கப்பட் டுள்ளதாகத் தல வரலாறு தெரிவிக்கிறது.
சற்று உயரமான இடத்தில் பிரதிஷ்டை செயப்பட்டுள்ள மூல விக்கிரகம் எட்டு திசைகளிலிருந்தும் பிராண சக்தியை ஈர்த்து வெளியிட்டு வருவதாகவும், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து மார்ச் முதல் வாரம் வரை பல நாட்களுக்கு சூரிய கிரணங்கள் மூலவர் மீது விழுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். ஸ்ரீ சோக்கநாத ஸ்வாமியை மனதார பிரார்த்தித்து, கருவறையை வலம் வந்தால் நினைத்தது கைகூடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.
சோழ மன்னர்கள் காலத்தில் தற்போதைய பெங்களூருவின் ஒரு பகுதியாக இருந்த எலஹங் காவை மன்னன் ராஜராஜசோழன் படையெடுத்து கைப்பற்றினான் என்று கூறப்படுகிறது. சோழ மன்னர்கள் காலத்தில் இப்பகுதி, ‘ராஜேந்திர சோழ வளநாடு’ என்றும், தற்போதைய எலஹங்கா சோழர் காலத்தில் ‘இளைப்பாக்க நாடு’ என்றும் அழைக்கப்பட்டுள்ளன.
சிவ பக்தர்களாகத் திகழ்ந்த சோழ மன்னர்கள் இங்கு ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்கு ஆலயம் எழுப்பியிருக்க முடியாது என்றும், எலஹங்காவில் வாழ்ந்த வைணவர் களின் பொருட்டு இங்கு முதலில் இருந்த
சிவாலயமே பிற்காலத்தில் வைணவ ஆலயமாக மாற்றப்பட்டது என்றும் ஒரு கருத்து நிலவுகிறது. பத்தாவது நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத் தமிழ்க் கல்வெட்டுகளும், 13 மற்றும் 14வது நூற்றாண்டுகளைச் சேர்ந்த விஜயநகர மன்னர்கள் இந்த ஆலயத்துக்கு அளித்த மானியங்கள் குறித்த கல்வெட்டுகளும் இந்த ஆலயத்தில் காணப்படு கின்றன. தேசி மாணிக்கப்பட்டணத்து தாழைக்காட்டு இரவி திரிபுராந்தகச் செட்டியார் என்பவரும் இன்னும் இருவரும் பெருமாளுக்கு திருவாராதனக் காணிக்கை யாகவிட்ட ஜாலப்பள்ளி நஞ்சை புஞ்சை நிலங்கள் நிபந்தம் பற்றியும் குறிப்பிடுகிறது.
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் தசாவதாரச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ள ஆலய முகமண்டபத் தூண்களில் காணப்படும் தமிழ் கல்வெட்டுகள் கன்னட மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டுகளில் தற்போதைய தோம்ளூர், ‘தொம்பாளூர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்குள்ள கருவறை அக்காலத்தில் ஒரு குகை போன்று இருந்திருக்கிறது. விலை உயர்ந்த ஆபரணங் களைப் பாதுகாக்கும் பொருட்டு கருவறை வாயில் மிகக் குறுகலாக அமைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப் படுகிறது. அதோடு, இந்த அறையில் ஒரு ஐந்து தலை நாகம் அந்த ஆபரணங்களைக் காத்து வந்தது என்றும் கூறப்படுகிறது. தமிழக பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோயில், பின்னர் விஜயநகர ஆட்சியிலும், தொடர்ந்து கெம்பே கௌடா மன்னர்களாலும் விரி வாக்கம் பெற்றுள்ளது. விஜயநகர பாணியில் அமைந்த நவரங்க மண்டபத்தின் தூண்களில் நுணுக்கமான பல புடைப்புச் சிற்பங்களில், பெண்களின் கோலாட்ட ஊர்வலம், வாலி சுக்ரீவ யுத்தம் போன்றவை குறிப் பிடத்தக்கன.
இக்கோயில் வளாகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் நின்று, தியானம் செதால் பிராண சக்தி அதிகரிப்பதாகக் கூறுகிறார்கள். பக்தர்கள் இவ்வாறு தியானிக்கும் பொருட்டு, வெளிப்பிராகாரத்தில் அந்த இடங்களை வெள்ளை நிறத்தால் சதுரமாக கட்ட மிட்டுக் காட்டியுள்ளனர். அவை மூன்று உள்ளேயும், ஐந்து ஆலய வெளிப்பிராகாரத்திலும் அமைந்துள்ளன.
அனைத்து வைணவ ஆலயங்கள் போன்றே இங்கும் மார்கழி மாதம் ஆண்டாள் அருளிய திருப்பாவை பக்தியோடு இசைக்கப்படுகிறது. ஆலய வளாக நவரங்க மண்டபத்தில் ஸ்ரீ கோபாலகிருஷ்ணர், ஆழ்வார்கள், ஆச்சார்யர்களின் சன்னிதிகள் உள்ளன.
சற்றுத் தொலைவில் அமைந்துள்ள அனுமன் ஆலயக் கருவறையில் பிரதிஷ்டை செயப்பட்டுள்ள அனுமன் விக்கிரகத்தின் சிரசு ஸ்ரீசோக்கநாதரின் திருப்பாதங் களுக்கு நேராக ஒரே கோட்டில் அமைந்திருக்கிறது.
செல்லும் வழி: பெங்களூரு எம்.ஜி.சாலை, விமான நிலையச் சாலை வழியாக 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 11 வரை. மாலை 5.45 மணி முதல் 8.30 வரை.
புராண காலத்தில் இப்பகுதியில் தன்னைக் குறித்துத் தவம் செய்து கொண்டிருந்த ஒரு முனிவருக்காக, ஸ்ரீ மஹாவிஷ்ணு இங்கே எழுந்தருளி, தன்னை
ஸ்ரீ சோக்கநாதப் பெருமாளாகப் பிரதிஷ்டை செய்து, ஆலயம் அமைத்து வணங்குமாறு கூறியதை அடுத்து, அந்த முனிவரால் ஆலயம் எழுப்பப்பட்டதாக தல வரலாறு.
சோக்கம் என்பது அழகைக் குறிக்கும். பெயருக் கேற்ற வகையில், கருவறையில் ஸ்ரீ மகாவிஷ்ணு
சோக்கநாத ஸ்வாமி என்ற திருநாமத்துடன், நான்கு கரங்களோடு ஸ்ரீதேவி - பூதேவி சமேதராக அழகாகக் காட்சி தருகிறார். பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரம் ஏந்தியும், முன் வலக்கையை வரத ஹஸ்தமாகக் கொண்டும், முன் இடக்கை கடி ஹஸ்தமாகக் கொண்டும் அருள்பாலிக்கிறார். இந்த விக்கிரகங்கள் சாளக்ராம
சிலையில் வடிக்கப்பட் டுள்ளதாகத் தல வரலாறு தெரிவிக்கிறது.
சற்று உயரமான இடத்தில் பிரதிஷ்டை செயப்பட்டுள்ள மூல விக்கிரகம் எட்டு திசைகளிலிருந்தும் பிராண சக்தியை ஈர்த்து வெளியிட்டு வருவதாகவும், ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி கடைசி வாரத்திலிருந்து மார்ச் முதல் வாரம் வரை பல நாட்களுக்கு சூரிய கிரணங்கள் மூலவர் மீது விழுவதாகவும் பக்தர்கள் கூறுகின்றனர். ஸ்ரீ சோக்கநாத ஸ்வாமியை மனதார பிரார்த்தித்து, கருவறையை வலம் வந்தால் நினைத்தது கைகூடும் என்ற நம்பிக்கை பக்தர்களிடையே உள்ளது.
சோழ மன்னர்கள் காலத்தில் தற்போதைய பெங்களூருவின் ஒரு பகுதியாக இருந்த எலஹங் காவை மன்னன் ராஜராஜசோழன் படையெடுத்து கைப்பற்றினான் என்று கூறப்படுகிறது. சோழ மன்னர்கள் காலத்தில் இப்பகுதி, ‘ராஜேந்திர சோழ வளநாடு’ என்றும், தற்போதைய எலஹங்கா சோழர் காலத்தில் ‘இளைப்பாக்க நாடு’ என்றும் அழைக்கப்பட்டுள்ளன.
சிவ பக்தர்களாகத் திகழ்ந்த சோழ மன்னர்கள் இங்கு ஸ்ரீ மஹாவிஷ்ணுவுக்கு ஆலயம் எழுப்பியிருக்க முடியாது என்றும், எலஹங்காவில் வாழ்ந்த வைணவர் களின் பொருட்டு இங்கு முதலில் இருந்த
ஸ்ரீ மகாவிஷ்ணுவின் தசாவதாரச் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ள ஆலய முகமண்டபத் தூண்களில் காணப்படும் தமிழ் கல்வெட்டுகள் கன்னட மொழியில் பொறிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்வெட்டுகளில் தற்போதைய தோம்ளூர், ‘தொம்பாளூர்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இங்குள்ள கருவறை அக்காலத்தில் ஒரு குகை போன்று இருந்திருக்கிறது. விலை உயர்ந்த ஆபரணங் களைப் பாதுகாக்கும் பொருட்டு கருவறை வாயில் மிகக் குறுகலாக அமைக்கப்பட்டிருந்ததாகவும் கூறப் படுகிறது. அதோடு, இந்த அறையில் ஒரு ஐந்து தலை நாகம் அந்த ஆபரணங்களைக் காத்து வந்தது என்றும் கூறப்படுகிறது. தமிழக பாணியில் கட்டப்பட்டுள்ள இக்கோயில், பின்னர் விஜயநகர ஆட்சியிலும், தொடர்ந்து கெம்பே கௌடா மன்னர்களாலும் விரி வாக்கம் பெற்றுள்ளது. விஜயநகர பாணியில் அமைந்த நவரங்க மண்டபத்தின் தூண்களில் நுணுக்கமான பல புடைப்புச் சிற்பங்களில், பெண்களின் கோலாட்ட ஊர்வலம், வாலி சுக்ரீவ யுத்தம் போன்றவை குறிப் பிடத்தக்கன.
இக்கோயில் வளாகத்தில் குறிப்பிட்ட சில இடங்களில் நின்று, தியானம் செதால் பிராண சக்தி அதிகரிப்பதாகக் கூறுகிறார்கள். பக்தர்கள் இவ்வாறு தியானிக்கும் பொருட்டு, வெளிப்பிராகாரத்தில் அந்த இடங்களை வெள்ளை நிறத்தால் சதுரமாக கட்ட மிட்டுக் காட்டியுள்ளனர். அவை மூன்று உள்ளேயும், ஐந்து ஆலய வெளிப்பிராகாரத்திலும் அமைந்துள்ளன.
அனைத்து வைணவ ஆலயங்கள் போன்றே இங்கும் மார்கழி மாதம் ஆண்டாள் அருளிய திருப்பாவை பக்தியோடு இசைக்கப்படுகிறது. ஆலய வளாக நவரங்க மண்டபத்தில் ஸ்ரீ கோபாலகிருஷ்ணர், ஆழ்வார்கள், ஆச்சார்யர்களின் சன்னிதிகள் உள்ளன.
சற்றுத் தொலைவில் அமைந்துள்ள அனுமன் ஆலயக் கருவறையில் பிரதிஷ்டை செயப்பட்டுள்ள அனுமன் விக்கிரகத்தின் சிரசு ஸ்ரீசோக்கநாதரின் திருப்பாதங் களுக்கு நேராக ஒரே கோட்டில் அமைந்திருக்கிறது.
செல்லும் வழி: பெங்களூரு எம்.ஜி.சாலை, விமான நிலையச் சாலை வழியாக 6 கி.மீ. தொலைவில் உள்ளது.
தரிசன நேரம்: காலை 6 மணி முதல் 11 வரை. மாலை 5.45 மணி முதல் 8.30 வரை.
Comments
Post a Comment