வெளிநாடுகளில் தைப்பூசம்!

மலேசியாவில் பத்து மலை முருகன் கோயில் மிகவும்
பிரசித்திபெற்றது. கோலாலம்பூரி லிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள இது, ஒரு மலைக் கோயில். இம்மலை சுண்ணாம்புப் பாறைகளாலானது. மலையை ஒட்டி சுங்கை பத்து ஆறு ஓடுகிறது. தைப்பூச நன்னாளில் பக்தர்கள் கோலாலம்பூர் மாரியம்மன் கோயிலிலிருந்து பத்து மலைக்கு அதிகாலையிலிருந்து ஊர்வலமாக நடந்து வருகிறார்கள். பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். சுங்கை பத்து ஆற்றில் நீராடி விட்டு மலைக் கோயிலுக்கு 272 படிகள் ஏறி வருகிறார்கள்.
மலேசியாவின் பினாங்கு மாநிலத்தில், ஜோர்ஜ் டவுன் மாநகரம் அருகே உள்ள தண்ணீர் மலைக் கோயிலில், தைப்பூசம் மிக விமரிசையாகக் கொண் டாடப்படுகிறது. தமிழர்கள் மட்டுமின்றி, சீனர்களும் தைப்பூசத்தைக் கொண்டாடுகிறார்கள். மூன்று நாட்கள் நடைபெறும் திருநாளை பினாங்கு மாநில அரசு பொது விடுமுறையாக அறிவித்துள்ளது.
மொரீஷியசில் தைப்பூசத் தினத்தன்று சுப்பிரமணியருக்கு காவடி எடுப்பது, அலகு குத்துதல் போன்ற நேர்த்திக்கடன்கள் நடைபெறுகின்றன.
ஆஸ்திரேலியாவில் விக்டோரியாவில் உள்ள சிவா விஷ்ணு கோயிலில் இந்துக் கழகத்தின் சார் பில்தைப்பூசத் திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றையதினம் தேரோட்டம் நடைபெறும். பக்தர் கள் பால் குடம் எடுத்து வருவார்கள்.
சிங்கப்பூர் முருகன் கோயிலில் வேல்தான் மூலவர். தைப்பூசத்தன்று முருகன் வெள்ளித் தேரில், லயன் சித்தி விநாயகர் கோயில் வரை ஊர்வலமாக வலம்வருவார். மாலை தேர் திரும்பவும் முருகன் கோயிலை வந்தடையும். இங்கும் பக்தர்கள் காவடி எடுத்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்து கிறார்கள்.

அன்பு என்பது என்ன?


ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்
ஒரே பரமாத்மாதான் எல்லா உயிர்களுமாக ஆகியிருக்கிறது. பல உயிர்களாகும்போது ஒன்றையொன்று வேறுபடுத்தி வைத்து மாய ப்ரபஞ்ச நாடகம் நடக்கிறது. இதிலேயே எதிர் டைரக்ஷனில், ரொம்பவும் உத்தமமான அம்சமாக, வேறுபட்டவற்றை ஒன்றாக ஐக்யப்பட வைக்கவும் பரமாத்மா அநுக்ரஹித்திருக்கிற force தான் அன்பு. பொதுவாக மற்றவரிடமிருந்து நமக்கு ஒன்றைப் பெற்று லாபமடை வதாகவே மநுஷ்ய மனப்பான்மை இருக்கும். அதற்கு எதிர் மருந்தாக நம்மை இன்னொருவருக்குக் கொடுத்து அதில் நிறைவு பெறச் செய்வது அன்பு. ஆசைக்கும் அன்புக்கும் இதுதான் வித்யாஸம்: நாம் ஒன்றிடம் ஆசையாயிருக்கிறோமென்றால் நமக்கு அதனிடமிருந்து ஸந்தோஷம் தேடிக் கொள்கிறோம்; அன்பாயிருக்கும்போது நம்மால் அதற்கு ஸந்தோஷம் உண்டாக்குகிறோம். ஆசை என்பது வாங்கல்; அன்பு - கொடுக்கல். ‘நமக்கு’ ஸந்தோஷம் என்பது அந்த உயிரிடம் ரூப ஸம்பத்து, குண ஸம்பத்து- திரவிய ஸம்பத்து கூடத்தான்- இவை அல்லது இந்த மாதிரி வேறு எதை நாம் அதனிடமிருந்து பெற்றால் நமக்கு ஸந்தோஷம் உண்டாகுமோ அவை இருந்தால்தான் ஏற்படும். இவற்றுக்காகவே அதனிடம் நமக்கு உண்டாகிற பற்றுதான் ஆசை. தப்பாக அதை அன்பு என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
அன்பு என்பது அந்தஃகரணம் உசந்த நிலையில் உள்ளபோது உண்டாவது. அப்போது மனஸும் புத்தியும் அஹங்காரத்திற்குள்ளே இழுக்கப்பட்டு, அந்தஃகரணம் ஹ்ருதயத்திற்கு இடம் மாறி அங்கே யிருந்து வேலை செய்யும். அம்பாள் அன்பு மயமானவளாகையால் அவளுடைய ஸ்ருஷ்டியிலே ரொம்பவும் க்ரூரமான ஜீவராசிகளுக் குங்கூட ஒவ்வொரு ஸமயத்திலாவது அன்பு உண்டாகுமாறு அநுக்ர ஹித்திருக்கிறாள். ஸாதனையால் மனஸும் புத்தியும் பண்பட்ட வர்களுக்கோ எப்போதுமே அன்பு சுரக்கக்கூடிய நிலை வாக்கிறது. அந்தஃகரணத்தின் பெர்பனென்ட் ஸ்தானமாகவே அப்போது ஹ்ருதயம் ஆகிவிடும்.

Comments