வேண்டியதை நிறைவேற்றும் ம்ருத்யுஞ்ஜயேஸ்வரர்!

பூனாவில் கோத்ருட் என்கிற ஏரியாவில், கர்வே சாலையில், ம்ருத்யுஞ்ஜயேஸ்வரர் கோயில் உள்ளது. மிகவும் புராதனமான
கோயில் இது. பேஷ்வா காலத்தில் கட்டப்பட்ட தாகச் சொல்கிறார்கள். கல் தூணில் விளக்கு ஏற்ற வசதியாக அமைந்திருக்கிறது.
கோயிலுக்குள் நுழையும் போதே, ஏதோ நந்தவனத்தில் நுழைவது போல் தோன்றுகிறது. பச்சைப் பசேல் புல்வெளி, தோட் டம் என்று அமர்க்களமாக இருக்கிறது. பூ, பழம், வில்வம் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால், நாம் மெய்மறந்து கோயிலின் அழகில் அப்படியே ஸ்தம்பித்து நின்று விடுவோம்.
சிவனின் அலங்காரம் கண்கொள்ளாக் காட்சி. த்ரிகால பூஜை களைகட்டுகிறது. சதா கோயிலில் கூட்டம் இருப்பதன் காரணம், கோயிலில் எதை வேண்டினாலும், உடனே பலன்கிடைப்பதாக, அனுபவித்தவர்கள் சொல்கிறார்கள். கலியுகத்தில், கண்கண்ட தெய்வமாகப் போற்றுகிறார்கள்.
சிவராத்திரி அன்று, நாள் முழுவதும் கோயில் திறந்து இருக்கும். பெண்கள் கூட்டமாக சிவ ஸ்துதி சொல்லியபடி இருப்பார்கள். சிலர் உபவாசம் இருப்பதால் நெய் விளக்கு ஏற்றி, காலையிலிருந்து பாராயணத்தில் ஈடுபட்டிருப்பார்கள். எங்கும் ‘நமசிவாய’ மந்திரம் ஒலித் துக்கொண்டே இருக்கும்.
ம்ருத்யுஞ்ஜயேஸ்வரர் கோயில் என்று சொன்னால் போதும். எல்லா
ஆட்டோக்காரர்களும் கோயில் வாசலில் இறக்கிவிட்டுப் போவார்கள். பஸ் வசதியும் உள்ளது. பூனா ஸ்டே ஷன், ஸ்வார்கேட் பஸ் ஸ்டான்ட், சிவாஜி நகர் பஸ் ஸ்டாப் என்று பல இடங்களிலிருந்தும் 15 நிமிஷத்திற்கு ஒரு பஸ் புறப்படுகிறது.
கட்டாயம் பார்த்து ரசிக்க வேண் டிய கோயில் இது. நம்முடைய
வேண்டுதலை ஈஸ்வரன் நிறை வேற்றிவைப்பார் என்கிற நம்பிக்கை யுடன் வீடு திரும்புவது உறுதி.


எண்களின் வரிசையில் இராமாயணம்!
ஏக பத்னி விரதன் சீதா ராமன்
இரண்டு மகன்களான லவ குசனின் தந்தை ஸ்ரீராமன்.
மூன்று அன்னையர்களான கௌசல்யா, சுமித்ரா, கைகேயியின் மடிகளில் வளர்ந்தவன் ஸ்ரீராமன்.
நான்கு புதல்வர்களான ராமன், லட்சுமணன், பரதன், சத்ருக்கனின் தந்தை, தசரத ராஜன்.
ஐம்புலன் அடக்கமுள்ளவள் சீதா தேவி. வேடன்குகனை ஐந்தாவது உடன்பிறப்பாக ஏற்றுக்கொண்டவன் ஸ்ரீராமன்.
ஆறு எழுத்து இராமாயணமும், ஸ்ரீராமஜெயமும் ஆருயிர்களின் வாழ்க்கைக்கு ஊட்ட மருந்தாக இருக்கின்றது.
ஏழு காண்டங்களான (பால, அயோத்தியா, ஆரண்ய, கிஷ்கிந்தா, சுந்தர, யுத்த, உத்தர காண்டம்) இராமாயணம், ஒரு நல்ல அகராதி.
எட்டு எழுத்து எழிலான சுந்தர காண்டத்தின் நாயகன் ஆஞ்சநேயன்.
நவமி திதியில் சூரியகுலத்தில் மானிடனாக அவதரித்தவன் ஸ்ரீராமன்.
பத்து தலை அரக்கன் இராவணனை அழித்தவன் ஸ்ரீராமன்.
 

Comments