கண்ணன் அருகில் இருப்பவர்...
உபவாசம் என்பதன் அர்த்தத்திற்கு ஸ்ரீமத் பாகவதத்தில் ஒரு கதை உண்டு. பிருந்தாவன கோபியர் சிலர் மோர், தயிர், வெண்ணெய் விற்கஅக்கரைக்குச் சென்றனர். மாலை வீடு திரும்பும் போது வெள்ளம் கரை புரண்டு ஓட, நேரமோ இருட்ட ஆரம்பித்துவிட்டது. சுற்றுமுற்றும் பார்த்த கோபியர், வியாசர்தவத்தில் இருந்ததைப் பார்த்து, முனிவரான அவர் உதவக்கூடும் என்று அவரிடம் அபயம் கேட்டனர். அவரும் அவர்களிடம் மீதமுள்ள மோர், தயிர், வெண்ணெய்
வேண்டுமென நிபந்தனை இட்டார்.
மழை காரணமாக விற்காத அனைத்தையும்
கோபியர்கள் கொடுத்தார்கள். அவரும் எல்லாவற் றையும் சாப்பிட்டு விட்டுக் கால் நீட்டிப் படுத்து விட்டார். கோபியர் அவரை எழுப்பி, உதவுவதாகச் சொன்னீர்களே, குழந்தைகள் காத்திருப்பார்கள். தயவுசெய்து உதவுங்கள்" என்று இறைஞ்ச, வியாச ரும் நதியின் அருகே சென்று, யமுனையே, நான் நித்திய உபவாசி என்றால் விலகி வழி விடு" என்றார். உடனே யமுனை விலகி வழி விட, முனிவரைப் பின்தொடர்ந்த கோபியர், அக்கரை வந்தவுடன், முனிவராக இருந்தும் இப்படிப் பொய் சொல்லலாமா? எங்களிடம் இருந்ததெல்லாம் வாங்கிச் சாப்பிட்டு விட்டு, நித்திய உபவாசி என்று யமுனையிடம் கூறினீர்களே? அவளும் உண்மை அறியாமல் வெள்ளம் விலக்கி வழிவிட்டாளே" என்று கேட்டார்கள். உடனே வியாசர், ‘உப’ என்றால் ‘அருகில்’ என்று பொருள். ‘வாசம்’ என்றால் வசிப்பது என்று அர்த்தம். என் மனதார நான் நித்தமும் கண்ணன் அருகிலேயே இருக்கிறேன். அதனால் நான் ‘நித்திய உபவாசி’ " என்றார். கண்ணன் அருகில் இருக்கும் அளவுக்கு தவவலிமை உடையவர் வியாசர்.
இதன்மூலம் உபவாசம் என்பதன் இன்னொரு பொருளை அறிந்து கொள்ள முடிகிறது.
அனுமன் சாலிஸாவின் மகிமை!
ஒருமுறை துளசிதாசரை தனது அரசவைக்கு வரவழைத்த முகலாயப் பேரரசர் அக்பர், நீர் பெரிய ராமபக்தர், பல அற்புதங்களைச் செய்கிறீர் என்கிறார்களே... எங்கே, ஏதாவது ஒரு அற்புதத்தைச் செய்து காட்டும்" என்றார்.
நான் மாயாஜாலக்காரன் அல்ல; ஸ்ரீராமரின் பக்தன் மட்டுமே!" என்று துளசிதாசர் சொல்ல, கோபப்பட்ட அக்பர், அவரைச் சிறையில் அடைத் தார். ‘எல்லாம் ஸ்ரீராமனின் சித்தம்’ என்று கலங்காமல் சிறை சென்ற துளசிதாசர், தினமும் ஆஞ்சநேயர் மீது ஒரு போற்றிப் பாடல் இயற்றி வழி பட்டார். இப்படி நாற்பது பாடல்களை எழுதியதும், திடீரென எங்கிருந்தோ வந்த ஆயிரக்கணக்கான வானரங்கள் அரண்மனையில் புகுந்து தொல்லை செய்ய ஆரம்பித்தன. படை வீரர்கள் எவ்வளவோ முயன்றும் விரட்ட முடியவில்லை.
அக்பரிடம் சென்ற சிலர், ‘ராமபக்தரான துளசிதாசரைக் கொடுமைப்படுத்துவதால் ஆஞ்சநேயருக்குக் கோபம் வந்திருக்கிறது. துளசிதாசரை விடுவித் தால் பிரச்னை நீங்கிவிடும்’ என்று ஆலோசனை அளித்தனர். அதையடுத்து, துளசிதாசரை விடுவித்து வருத்தம் தெரிவித்தார் அக்பர். மறுகணமே, வானரப் படைகள் மாயமாய் மறைந்தன.
துளசிதாசர் சிறையில் இருந்தபோது பாடிய போற்றிப் பாடல்கள்தான் ‘ஸ்ரீ அனுமன் சாலிஸா’. இதைத் தினமும் பாராயணம் செய்தால், துன்பங்கள் நீங்கும்; நன்மைகள் தேடி வரும்!
பகவானுடைய சம்பந்தம்!
அக்பரும், தான்சேனும் குதிரையில் சென்று கொண்டிருந்தார்கள். வழியில் சூர்தாஸ் பாடிக் கொண்டிருந்ததைப் பார்த்தார்கள். அக்பர் மனம் உருகினார். உடனே அவர் தான்சேனைப் பார்த்து, தான்சேன்! தாங்கள்தான் மிகச் சிறந்த பாடகர் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், சூர்தாஸ் தங்களை விட நன்றாகப் பாடுகிறாரே!" என்றார்.
அதற்குத் தான்சேன், அவருடைய பாட்டு என்னுடையதை விட ஏன் உயர்ந்ததாக இருக்காது? அவர் பகவானைப் பற்றிப் பாடுகிறார். நான் தங் களைப் பற்றிப் பாடுகிறேன்" என்று சொன்னார்.
யார் துணை?
புத்தர் நிர்வாணம் (மோக்ஷம்) அடைவதற்கு முன் சிஷ்யனான ஆனந் தன், அழுது புரண்டான். நீங்க போயிட்டா எனக்குத் துணையாக இனி யார்? " என்று கண்ணீர் விட்டான்.
உனக்குத் துணை நீதான். மற்ற ஒருவருக்கும் அது முடியாது" என்று புத்தர் ஆசுவாசப்படுத்தினார்.
குருவின் கிருபையால் ஒவ்வொருவரும் நாட வேண்டியது அவரவரிடமுள்ள நம்பிக்கைதான். அதுதான் குருவிலிருந்துகிடைக்க வேண்டிய மிகப் பெரிய சொத்து. அந்த நம்பிக்கைதான் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய குணம்" என்றாராம் புத்தர்.

Comments
Post a Comment