நரசிம்மர் சயனக் கோலம்...
பள்ளிகொண்ட கோலத்தில் அரங்கனை தரிசித்துள்ளோம். ஹிரண்யனை சம்ஹாரம் செய்த நரசிம்மமூர்த்தியும் களைத்துப் போய் சயன கோலத்தில் காட்சி அளிப்பதை திருவதிகை (பண்ருட்டி அருகில்) சரநாராயண திருத்தலத்தில் தரிசிக்கலாம். ஸ்ரீ நரசிம்மர் சயனக் கோலக் காட்சியை இக் கோயிலில் மட்டுமே காணலாம்.
அனுமன் காலடியில்...
அனுமன் காலடியில் ஒரு பெண்ணை மிதித்துக் கொண்டிருப்பது போல் உள்ள சிலைகளை வடஇந்தியாவில் காணலாம். எல்லோருக்கும் துன்பங்கள் கொடுத்து வந்த ‘பன்வதி’ என்னும் அரக்கியே அவள். அந்த அரக்கியைக் காலடியில் மிதித்து, அடக்கி, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் அனுமன்.
இதேபோல் சனிபகவானை தன் காலடியில் போட்டு மிதித்திருக்கும் திருக்கோலத்தை செங்கல்பட்டு திருத்தலத்தில் அமைந்துள்ள ஸ்ரீ கோதண்டராமர் கோயிலில் தரிசிக்கலாம். இங்கு அனுமன் காலின் கீழ் சனி கூப்பிய கரத்தினனாய் அஞ்சலி செலுத்தியிருக்க, சனியின் மீது நின்றபடி அனுமன் காட்சி தருகிறார்.
திருமண வரமருளும் கண்ணன்...
தென்காசிக்கு வடக்கே மூன்று கிலோ மீட்டர் தொலைவில், இலத்தூரில் நவநீதகிருஷ்ணன் அருள் பாலிக்கிறார். ஒருமுறை இந்தக் கண்ணனைத் தரிசித் தவர்கள் அடுத்த முறை தரிசிக்க வருவதற்குள் வாழ்வில் முன்னேற்றம் அடைகின்றனர் என்னும் நம்பிக்கை இங்கு நிலவுகிறது. இவரைத் தரிசனம் செய்துவர, தடைபட்ட திருமணம் உடனே கைகூடும்.
அப்ப அபிஷேகம்!
திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாப ஸ்வாமி திருக்கோயிலில் மேற்கு வாசலுக்கு எதிரில் திருமூர்த்தி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோருக்குத் தனித்தனி சன்னதிகள் உள்ளன. பிரம்மாவின் சன்னதிக்கு அருகில் திருஉருவில் எழுந்தருளி உள்ளார் கணபதி. இவர் ‘அப்ப மூடல் கணபதி’ என்று பக்தர்களால் போற்றப்படுகிறார். தாங் கள் நினைத்த காரியம் நிறைவேற இந்த கணபதியை தரிசித்து அப்பத்தால் அபிஷேகம் செய்வதாக வேண்டிக் கொள்கின்றனர் பக்தர்கள்.
ஒரு பெரிய அண்டா நிறைய அப்பத்தை கணபதியின் முன்வைத்துப் பூஜிப்பார்கள். பிறகு அபிஷேகம் செய்கிறார்கள். அப்பங்கள் சிதறாமல் இருக்க விநாயகரைச் சுற்றி ஒரு கம்பி வலை பாதுகாப்பாக உள்ளதால், அப்பங்கள் வெளியே சிதறாமல் இருக்கின்றன. அப்பங்களை அபிஷேகம் செய்தபின் மீண்டும் பூஜை நடைபெறும். பின்னர், அவை பக்தர்களுக்குப் பிரசாத மாகத் தரப்படுகிறது.
.
ரத சப்தமி
தை அமாவாசையை அடுத்து ஏழாம் நாள் ‘ரத சப்தமி’ பண்டிகை. அன்று சூரிய பகவானின் தேர் மேற்கே திரும்புவதாக ஐதிகம். அன்று பெண்கள் ஏழு எருக்கம் இலைகளை (அடுக்கி) வைத்து அதன் மேல் அரிசியும் வைத்து தலைமீது வைத்துக் கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும் என்பது ஐதிகம்.
ஆண்கள் இலையில் (எருக்கம் இலையில்) அரிசி மாத்திரம் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்ய வேண்டும். அன்று பூஜை யறையில் தேர்க் கோலம் போட்டு, காவி இட்டு, சர்க்கரைப் பொங்கல், வடை நைவேத்தியம் செய்து தேங்காய் உடைத்து, கற்பூரம் ஏற்றி பூஜை செய்வார்கள்.
தொற்றுக் கிருமிகளைத் துரத்தும் தர்ப்பை!
தர்ப்பைப் புல் புண்ணிய பூமியில் மட் டுமே வளரும். இப் புல்லிலேயே காரமும், புளிப்பும் இருப்பதால் செப்புப் பாத்திரங்கள், ஐம்பொன் ஆகியவற்றை இந்தப் புல்லின் சாம்பலினால் தேய்த்தால், பல நாட்கள் ஒளியுடனும் ஆற்றல் குறையாமலும் இருக்கும். இந்தப் புல் தண்ணீர் இல்லாவிட்டாலும் வாடாது. நீரினுள் பல நாட்கள் இருந்தாலும் அழுகாது. ‘அம்ருத வீரியம்’ என்று இதற்குப் பெயர். சூரியகிரகணத்தின் பொழுது தர்ப்பைக்கு வீரியம் அதிகமாகும். தொற்றுநோய்கள் தர்ப்பையின் காற்றுப் பட்டாலே நீங்கி விடும். தொற்றுக்கிருமிகள் அண்டாது.

Comments
Post a Comment