துள்ளிக் குதித்து ஓடிய அந்த அழகிய, தங்க மய மானைக் கண்டு மயங்கித்தான் போனாள் சீதை. அண்ணல் ராமனிடம் அதைப் பிடித்துத் தரக் கேட்க, மானைத் துரத்திய ராமன், ஓர் இடத்தில் அதை அம்பிட்டு சாத்தான். மானை சாத்த இடமே மான்பூண்டித்தலம் ஆனதாம். ‘பூண்டி’ என்ற சொல்லுக்கு ‘சாத்த’ என்பது பொருள்.
‘மாமுண்டிச் சீமை’ என்று பழங்காலத்தில் மக்கள் இந்த இடத்தை அழைத்தனர். மாமுண்டி ஆறு ஓடி வரும் இங்கே, ஆற்றுக் கரையின் இரு மருங்கும் மணம் மிக்க மலர்களைத் தாங்கிய சொலை. ‘மணப் பாறை’ என்று ஊரின் பெயரே இதனை ஒட்டி வந்தது தானாம். இப்பகுதியின் தலைவனாக விளங்கிய மா வீரன் மாமுண்டி, நீதிநெறியோடு ஆட்சி புரிந்ததோடு, ஆன்மிக வழியிலும் சிறந்து விளங்கினான். பில்லிப் பிணி அகற்றுவதில் சிறந்த சித்தனாகத் திகழ்ந்தான்.
இத்தகு சிறப்பு வாந்த மாமுண்டிச் சித்தன் உறையும் திருத்தலமே இம்மாமுண்டி நல்லாண்டவர் திருக்கோயில். கோயில் சன்னிதி எழும்பும் முன்னரே, பொந்துப்புளி கருப்பண்ணசுவாமி இங்கே இருந்துள்ளார். இவர் மாமுண்டி ஆண்டவரின் இதயம் நிறைந்த இறைவன். மாதவம்பட்டியில் மக்களை அச்சத்தில் ஆழ்த்திய புளியமரப் பொந்துகள் அதிகம் இருந்தன. இதனால் பயந்த மக்கள் மரத்தை வெட்ட முயன்ற போது, ‘எனக்குக் கோயில் கட்டி வணங்கினால் உங்கள் அச்சத்தைப் போக்குவேன்’ என அசரீரி ஒலிக்க, மக்கள் அங்கே கோயில் எழுப்பி வழிபட்டனர்.
பக்தி இலக்கியங்கள் இறைவனை, ‘ஆண்டவன்’ எனும் பொதுச்சொல்லால் போற்றி மகிழ்கின்றன. சைவ - வைணவ சிறப்புகளைத் தாங்கிய திருத்தலமாக இக்கோயில் திகழ்கிறது. திருநீறும், துளசி தீர்த்தமும் திருவடியும் இங்கே பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
பிராஹ்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, மாகேந்திரி, சாமுண்டி ஆகிய ஏழு கன்னிமார்களும் இத்திருக்கோயிலின் வடமேற்கில் உள்ள குளத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது, அவர்களின் ஆடையை குறும்புக்கள்வர் திருடிச் சென்றனர். கண் கலங்கி நின்ற அவர்களை தைரியப்படுத்தும் விதத்தில், அவர்களின் ஆடைகளை ஒருவர் கரையின் ஓரத்தில் வைத்துச் சென்றார். இதனால் மனம் மகிழ்ந்த எழுவரும், அவரை ‘அண்ணா’ என்று அழைத்தனர். இதுவே, பிற்காலத்தில் நல்லண்ணா, நல்லாண்டவர் என வழங்கப்பட்டதாம்.
நல்லாண்டவர்க்கு ராஜகோபாலன், இலக்கையன், நல்லையா, நல்லேந்திரன் ஆகிய திருநாமங்களும் உண்டு. இங்கே, முதல் பூஜை சப்த கன்னியர்க்கே. காலில் விலங்கு பூட்டப்பட்டு, கையில் கமண்டலமும் காலில் ஆணியால் செய்த செருப்பை யும் அணிந்திருக்கும் பிரம்மச்சரிய கடவுளான லாட சன்யாசி, சகல நோகளையும் தீர்க்கும் வைத்தியராகத் திகழ்கிறார். சித்தனான இவர், யானை மலைக்குச் செல்லும் வழியில், இக்கோயிலில் உள்ள ஏழு கருப்பு பேச்சியாத்தாள் முதலிய தெய்வங்களின் ஆற்றலைக் கண்டு வியந்து, தனது சக்தியால் அத்தெய்வங்களின் ஆற்றலை ஒரு கலயத்துக்குள் திரட்டிச் செல்ல முயல, முத்துக்கருப்பர் இதை முறியடிக்கிறார். பின்னர் தாம் செய்த தவறை உணர்ந்த சித்தர், ‘லாட சன்னியாசி’ என இங்கேயே முத்துக்கருப்பனின் அரு கில் அமர்ந்து விடுகிறார். இந்தக் கோயிலில் இரண்டா வது பூஜை இவருக்கே. மூன்றாவது பூஜைதான் நல்லாண்டவருக்கு.
சிறிய ராஜகோபுரம். மதுரை நோக்கிச் செல்லும் வழியில் தனது துணைவியரான வெள்ளையம்மாள், பொம்மியம்மாள் இருவரோடும் களைப்பாறிய இடத் தில் மதுரை வீரனுக்கு சிறிய கோயில் ஒன்று எழுப் பப்பட்டுள்ளது. ணூஒரே கல்லில் ஏழு கருப்பு தெய்வங்களின் வடிவங்கள் செதுக்கப்பெற்று வழிபாடு நடந்து வருகிறது. இந்த ஏழு கருப்பரின் ஏவலரா கம்பீரத் தோற்றத்தில் மகாமுனீஸ்வரர் இருவர் எழுப்பப் பெற்றுள்ளனர். நான்கு கரங்களுடன் துவார பாலகர்கள் காவல் தெவங்களாக உள்ளனர். மகாமண்டபத்தின் இடதுபுறம் கருடாழ்வார், முன் மண்டபத்தின் வலது புறம் ஆஞ்சநேயர் மற்றும் பேச்சியம்மன், ஓங்கார விநாயகர், தெப்பக் குளக்கரை முருகன் உள்ளிட்ட தெவங்கள் காண்போரை வியக்க வைக்கிறது.
பெண்கள், தங்கள் வீட்டில் ஏற்படும் குடும்பப் பிரச்னைகளுக்கு நல்லாண்டவரிடம் வேண்டினால் ஒரு வாரத்திலேயே தீர்த்து வைப்பார். ஏழு கருப்பண்ண சாமியை வேண்டினால் அதிர்ஷ்டம் கைகூடும்.
இங்கே, தைப் பொங்கல் சிறப்பு வழிபாடு, ஸ்ரீராம நவமி, சித்திரை வருடப் பிறப்பு, ஆடி முதல் வெள்ளி பால்குடம், இரண்டாம், மூன்றாம் வெள்ளி சுவாமி வீதியுலா, நான்காம் வெள்ளி ஸ்ரீநல்லாண்டவர் குதிரை வாகனப் புறப்பாடு, பெருந்திருவிழா, கோகுலாஷ்டமி உறியடி, மஹாளய அமாவாசை, திருக்கார்த்திகை உற்ஸவம் ஆகியவை விசேஷ நாட்கள்.
செல்லும் வழி: திருச்சியிலிருந்து 40கி.மீ., தொலைவில் செக்போஸ்ட் அருகில் கோயில். திண்டுக்கல்லில் இருந்து அயலூர் வழியாக 60 கி.மீ.,
‘மாமுண்டிச் சீமை’ என்று பழங்காலத்தில் மக்கள் இந்த இடத்தை அழைத்தனர். மாமுண்டி ஆறு ஓடி வரும் இங்கே, ஆற்றுக் கரையின் இரு மருங்கும் மணம் மிக்க மலர்களைத் தாங்கிய சொலை. ‘மணப் பாறை’ என்று ஊரின் பெயரே இதனை ஒட்டி வந்தது தானாம். இப்பகுதியின் தலைவனாக விளங்கிய மா வீரன் மாமுண்டி, நீதிநெறியோடு ஆட்சி புரிந்ததோடு, ஆன்மிக வழியிலும் சிறந்து விளங்கினான். பில்லிப் பிணி அகற்றுவதில் சிறந்த சித்தனாகத் திகழ்ந்தான்.
இத்தகு சிறப்பு வாந்த மாமுண்டிச் சித்தன் உறையும் திருத்தலமே இம்மாமுண்டி நல்லாண்டவர் திருக்கோயில். கோயில் சன்னிதி எழும்பும் முன்னரே, பொந்துப்புளி கருப்பண்ணசுவாமி இங்கே இருந்துள்ளார். இவர் மாமுண்டி ஆண்டவரின் இதயம் நிறைந்த இறைவன். மாதவம்பட்டியில் மக்களை அச்சத்தில் ஆழ்த்திய புளியமரப் பொந்துகள் அதிகம் இருந்தன. இதனால் பயந்த மக்கள் மரத்தை வெட்ட முயன்ற போது, ‘எனக்குக் கோயில் கட்டி வணங்கினால் உங்கள் அச்சத்தைப் போக்குவேன்’ என அசரீரி ஒலிக்க, மக்கள் அங்கே கோயில் எழுப்பி வழிபட்டனர்.
பக்தி இலக்கியங்கள் இறைவனை, ‘ஆண்டவன்’ எனும் பொதுச்சொல்லால் போற்றி மகிழ்கின்றன. சைவ - வைணவ சிறப்புகளைத் தாங்கிய திருத்தலமாக இக்கோயில் திகழ்கிறது. திருநீறும், துளசி தீர்த்தமும் திருவடியும் இங்கே பிரசாதமாக வழங்கப்படுகின்றன.
பிராஹ்மி, மாகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வாராஹி, மாகேந்திரி, சாமுண்டி ஆகிய ஏழு கன்னிமார்களும் இத்திருக்கோயிலின் வடமேற்கில் உள்ள குளத்தில் நீராடிக் கொண்டிருந்தபோது, அவர்களின் ஆடையை குறும்புக்கள்வர் திருடிச் சென்றனர். கண் கலங்கி நின்ற அவர்களை தைரியப்படுத்தும் விதத்தில், அவர்களின் ஆடைகளை ஒருவர் கரையின் ஓரத்தில் வைத்துச் சென்றார். இதனால் மனம் மகிழ்ந்த எழுவரும், அவரை ‘அண்ணா’ என்று அழைத்தனர். இதுவே, பிற்காலத்தில் நல்லண்ணா, நல்லாண்டவர் என வழங்கப்பட்டதாம்.
பெண்கள், தங்கள் வீட்டில் ஏற்படும் குடும்பப் பிரச்னைகளுக்கு நல்லாண்டவரிடம் வேண்டினால் ஒரு வாரத்திலேயே தீர்த்து வைப்பார். ஏழு கருப்பண்ண சாமியை வேண்டினால் அதிர்ஷ்டம் கைகூடும்.
செல்லும் வழி: திருச்சியிலிருந்து 40கி.மீ., தொலைவில் செக்போஸ்ட் அருகில் கோயில். திண்டுக்கல்லில் இருந்து அயலூர் வழியாக 60 கி.மீ.,
Comments
Post a Comment