இளைஞர்களுக்கு அப்துல் கலாம் சொன்ன யோசனைகளில் ஒரு ஐந்து மட்டும் இங்கே...
கனவு காணுங்கள்! இங்கே நான் சொல்லும் கனவு, உறங்கும் போது வருவது அல்ல; ஒன்றை நிறைவேற்றி முடிக்கும்வரை உங்களை உறங்கவிடாமல் செய்வது.
வாழ்வில் வரும் துன்பங்கள் உங்களை அழிப்பதற்காக வருவ தில்லை. உங்கள் உள்ளே மறைந்திருக்கும் ஆற்றலையும் திறமைகளையும் உங்களுக்கு உணர்த்துவதற்காகவே வருகின்றன.
தோல்வி எனும் நோயைக் கொல்லக்கூடிய மருந்து நம்பிக்கையும் உழைப்புமே!
சீக்கிரம் கிடைக்கக்கூடிய செயற்கையான சந்தோஷங்களைத் தேடி ஓடாமல், செறிவான இலக்கை அடைய அர்ப்பணிப்போடு செயல்படுங்கள்.
முதல் வெற்றிக்குப் பின் ஓய்வெடுக்காதீர்கள்! இரண்டாவ தில் தோற்க நேர்ந்தால், ஏராளமான உதடுகள் காத்திருக்கும், உங்களின் முதல் வெற்றி உங்கள் உழைப்பாலோ திறமையாலோ அன்றி, வெறும் அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று சொல்ல!
''இந்தப் பாழாப்போன செல்போனை எவன் கண்டுபிடிச்சானோ தெரியலஞ் பய புள்ளைக என்னடான்னா பொழைப்பைப் பார்க்கிறதை விட்டுப்புட்டு, சோறு தண்ணி இல்லாம நாளும் பொழுதும் செல்போனும் கையுமாவே உக்காந்திருக்குதுங்க. பொண்ணுங்களைப் பத்திக் கேக்கவே வேணாம்! செல்பியோ குல்பியோஞ் தன்னைத்தானே இப்படித் திரும்பி ஒரு போட்டோ, அப்படித் திரும்பி ஒரு போட்டோன்னு போட்டோவா எடுத்துத் தள்ளுதுங்க. மலை உச்சியில ஒரு செல்பி, மயானத்துல செல்பி, ரயிலுக்கு முன்னாடி செல்பின்னு செல்பி பைத்தியம் புடிச்சி அலையுதுங்க. பொண்ணுங்ககூட பரவால்ல போலிருக்கு, இந்தப் பசங்க படுத்தற பாடுஞ்
அப்பப்பா! இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னால ஓடற கார்ல செல்பி எடுத்து நாலு இளந்தாரிக ஆபத்தை வெத்திலை பாக்கு வெச்சுக் கூப்பிட்டுதுங்களே! தேவையா இதெல்லாம்? வாட்ஸப்பாம்ஞ் வைஃபையாம்ஞ் என்ன கண்றாவியோ! எனக்கு ஒண்ணும் புரியலப்பா!'
சமீபத்துல ஒரு ஃப்ரெண்டோட அம்மாவோடு பேசிட்டிருந்தப்போ, அவங்க டைரக்டா தன் புள்ளையப் பத்திச் சொல்லாம, பொதுவா இந்தக் காலத்து இளைஞர்கள் பத்தி அலுப்பும் சலிப்புமா வெச்ச விமர்சனம்தான் இது. யாரோ ஒரு வயசான அம்மாவின் புலம்பல்னு இதை விட்டுட முடியல. அவங்க சொன்னதுலயும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது. கம்ப்யூட்டர், இன்டர்நெட், ஸ்மார்ட்ஃபோன் இதெல்லாம் வந்தப்போ, நம்மளோட பொன்னான நேரத்தை ரொம்பவே மிச்சம் பிடிக்கலாம்னு நம்பினோம். ரயில் டிக்கெட் புக் பண்ண க்யூவுல நிக்க வேணாம்; எலெக்ட்ரிக் பில் கட்ட க்யூ, பேங்க்ல நம்ம அக்கவுன்ட்லேர்ந்து பணத்தை எடுக்க க்யூன்னு மணிக்கணக்கா நின்னு நேரத்தை வேஸ்ட் பண்ண வேணாம். இருந்த இடத்துலேர்ந்தே நிமிஷத்துல எல்லா வேலையையும் சுலபமா முடிச்சுடலாம்.
எல்லாம் சரி... ஆனா, டெக்னாலஜியை எந்த அளவுக்கு உருப்படியா யூஸ் பண்ணிக்க முடியுமோ அப்படிப் பண்ணிக்கிறதுதான் புத்திசாலித்தனம். மத்தபடி, அது நம்ம நேரத்தைக் கொல்றதுக்கு இடம் கொடுக்கக்கூடாது. அதுக்கு நாமா பாஸா இருக்கணுமே தவிர, நமக்கு அது பாஸா இருக்கக்கூடாது, ப்ரோ! என்ன, ஒத்துக்கறீங்களா?
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறதால, பல நல்ல விஷயங்களை உடனுக்குடன் பலரோடு பகிர்ந்துக்க முடியுது. இது ஒரு பாசிட்டிவ்வான, சந்தோஷமான விஷயம்.
வாட்ஸப்ல அடிக்கடி பல நல்ல ஷார்ட் ஃபிலிம்களை ஷேர் பண்ணிக்கிறாங்க. அப்படி சமீபத்துல பார்த்த ஒரு படம் மனசைத் தொட்டது. கதை, வசனம், டைரக்ஷன்: ப்ராஜீஷ் திவாகரன்.
அப்பாவை முதியோர் இல்லத்துல சேர்க்க அழைச்சிட்டுப் போவான் பையன். நல்ல வசதியான அறையா இருக்குதா, ஏ.சி. இருக்குதா, டி.வி. இருக்குதான்னு பார்த்துப் பார்த்து விசாரிச்சுப் பணம் கட்டுவான். 'தீபாவளிக்கு வீட்டுக்கு வந்துடுவாரா அப்பா?’ன்னு கேப்பா அவன் வொய்ஃப். 'தீபாவளின்னா வீட்டுல ஸ்வீட் பண்ணுவோம். உங்கப்பாவுக்கு ஷுகர். ஸ்வீட் ஆகாது. அப்புறம் பசங்க வெடி வெடிப்பாங்க. உங்கப்பாவுக்கு தலைவேதனையா இருக்கும்’னு அவ சொல்லிட்டே போக, 'சரி சரி, நான் பார்த்துக்கறேன்’னு சொல்லிட்டு, கார்லேர்ந்து அப்பாவோட லக்கேஜை எடுத்துட்டுப் போவான். போகும்போது அந்த இல்லத்தை நடத்துற பாதிரியார்கிட்ட, 'ஃபாதர், அப்பாவோட ரொம்ப நேரம் பேசிட்டிருந்தீங்களே, அப்பாவை இதுக்கு முன்னாடி உங்களுக்குத் தெரியுமா?’ன்னு கேப்பான் பையன். 'ஆமா, தெரியும். முப்பது வருஷத்துக்கு முன்னால இங்கிருந்துதான் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துட்டுப் போனார் உங்கப்பா. உன்கிட்டே சொல்ல வேணாம்னுதான் சொன்னார். ஆனா, எனக்குதான் மனசு கேக்கலே!’ன்னு சொல்லிட்டு நகர்வார் ஃபாதர்.
ரொம்ப டச்சிங்கா இருந்தது.
இது மாதிரி, டெக்னாலஜியை நல்ல முறையில, நல்ல விஷயங்களைப் பகிர்ந்துக்கப் பயன்படுத்திக்கிட்டா சந்தோஷம்.
லிஃப்ட் நாலாவது மாடியில நின்னிருக்கும். கிரௌண்ட் ஃப்ளோர்ல ஒரு கர்ப்பிணிப் பெண் பட்டனை அமுக்கி அமுக்கிப் பார்ப்பா. லிஃப்ட் கதவை சரியா மூடாததால, அது கீழே வராது. நாலு மாடி ஏறிப் போகணுமான்னு ஆயாசமா பார்ப்பா. அப்போ ஒரு குட்டிப் பையன் கிடுகிடுன்னு நாலாவது மாடிக்கு ஓடிப்போய் லிஃப்ட்டை மூடி, கீழே இறக்கிக் கொண்டு வருவான். அந்தக் கர்ப்பிணிப் பெண் நன்றியோடு அவனைப் பார்த்துட்டு, லிஃப்ட்ல ஏறிப் போவா. மனசை நெகிழ்த்தின படம் இது.
இப்படி... பணமோ, பொருளோ, திறமையோ, உழைப்போஞ் நம்ம கிட்ட இருக்கிற ஏதோ ஒண்ணை தேவைப்படுறவங்களுக்குத் தேவைப்படுற நேரத்துல கொடுத்து உதவுற சுகம் இருக்கே, அதுக்கு ஈடு இணை எதுவும் இல்லை, ப்ரோ!
ஆனா, நம்ம கிட்ட என்ன இருக்குன்னு நம்மள்ல பலருக்கே தெரியறதில்லை. தெரிஞ்சுடுச்சுன்னா சந்தோஷத்தின் சாவியை கைப்பத்திட்டோம்னு அர்த்தம். இதைத்தான் 'உன்னையே நீ அறிவாய்’னு சொன்னார் தத்துவ ஞானி சாக்ரடீஸ்.
திருமந்திரத்தில் திருமூலர் இதை இன்னும் விளக்கமாவே சொல்றார்
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.
தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு மறுமையும், இம்மையும்
தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே!
அவ்வளவுதாங்க மேட்டரு! உங்களை நீங்க புரிஞ்சுக்கிட்டீங்கன்னா உங்களுக்கு நீங்கதாங்க பாஸு!
கனவு காணுங்கள்! இங்கே நான் சொல்லும் கனவு, உறங்கும் போது வருவது அல்ல; ஒன்றை நிறைவேற்றி முடிக்கும்வரை உங்களை உறங்கவிடாமல் செய்வது.
வாழ்வில் வரும் துன்பங்கள் உங்களை அழிப்பதற்காக வருவ தில்லை. உங்கள் உள்ளே மறைந்திருக்கும் ஆற்றலையும் திறமைகளையும் உங்களுக்கு உணர்த்துவதற்காகவே வருகின்றன.
தோல்வி எனும் நோயைக் கொல்லக்கூடிய மருந்து நம்பிக்கையும் உழைப்புமே!
சீக்கிரம் கிடைக்கக்கூடிய செயற்கையான சந்தோஷங்களைத் தேடி ஓடாமல், செறிவான இலக்கை அடைய அர்ப்பணிப்போடு செயல்படுங்கள்.
முதல் வெற்றிக்குப் பின் ஓய்வெடுக்காதீர்கள்! இரண்டாவ தில் தோற்க நேர்ந்தால், ஏராளமான உதடுகள் காத்திருக்கும், உங்களின் முதல் வெற்றி உங்கள் உழைப்பாலோ திறமையாலோ அன்றி, வெறும் அதிர்ஷ்டத்தால் கிடைத்தது என்று சொல்ல!
''இந்தப் பாழாப்போன செல்போனை எவன் கண்டுபிடிச்சானோ தெரியலஞ் பய புள்ளைக என்னடான்னா பொழைப்பைப் பார்க்கிறதை விட்டுப்புட்டு, சோறு தண்ணி இல்லாம நாளும் பொழுதும் செல்போனும் கையுமாவே உக்காந்திருக்குதுங்க. பொண்ணுங்களைப் பத்திக் கேக்கவே வேணாம்! செல்பியோ குல்பியோஞ் தன்னைத்தானே இப்படித் திரும்பி ஒரு போட்டோ, அப்படித் திரும்பி ஒரு போட்டோன்னு போட்டோவா எடுத்துத் தள்ளுதுங்க. மலை உச்சியில ஒரு செல்பி, மயானத்துல செல்பி, ரயிலுக்கு முன்னாடி செல்பின்னு செல்பி பைத்தியம் புடிச்சி அலையுதுங்க. பொண்ணுங்ககூட பரவால்ல போலிருக்கு, இந்தப் பசங்க படுத்தற பாடுஞ்
அப்பப்பா! இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னால ஓடற கார்ல செல்பி எடுத்து நாலு இளந்தாரிக ஆபத்தை வெத்திலை பாக்கு வெச்சுக் கூப்பிட்டுதுங்களே! தேவையா இதெல்லாம்? வாட்ஸப்பாம்ஞ் வைஃபையாம்ஞ் என்ன கண்றாவியோ! எனக்கு ஒண்ணும் புரியலப்பா!'
சமீபத்துல ஒரு ஃப்ரெண்டோட அம்மாவோடு பேசிட்டிருந்தப்போ, அவங்க டைரக்டா தன் புள்ளையப் பத்திச் சொல்லாம, பொதுவா இந்தக் காலத்து இளைஞர்கள் பத்தி அலுப்பும் சலிப்புமா வெச்ச விமர்சனம்தான் இது. யாரோ ஒரு வயசான அம்மாவின் புலம்பல்னு இதை விட்டுட முடியல. அவங்க சொன்னதுலயும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்யுது. கம்ப்யூட்டர், இன்டர்நெட், ஸ்மார்ட்ஃபோன் இதெல்லாம் வந்தப்போ, நம்மளோட பொன்னான நேரத்தை ரொம்பவே மிச்சம் பிடிக்கலாம்னு நம்பினோம். ரயில் டிக்கெட் புக் பண்ண க்யூவுல நிக்க வேணாம்; எலெக்ட்ரிக் பில் கட்ட க்யூ, பேங்க்ல நம்ம அக்கவுன்ட்லேர்ந்து பணத்தை எடுக்க க்யூன்னு மணிக்கணக்கா நின்னு நேரத்தை வேஸ்ட் பண்ண வேணாம். இருந்த இடத்துலேர்ந்தே நிமிஷத்துல எல்லா வேலையையும் சுலபமா முடிச்சுடலாம்.
தகவல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறதால, பல நல்ல விஷயங்களை உடனுக்குடன் பலரோடு பகிர்ந்துக்க முடியுது. இது ஒரு பாசிட்டிவ்வான, சந்தோஷமான விஷயம்.
வாட்ஸப்ல அடிக்கடி பல நல்ல ஷார்ட் ஃபிலிம்களை ஷேர் பண்ணிக்கிறாங்க. அப்படி சமீபத்துல பார்த்த ஒரு படம் மனசைத் தொட்டது. கதை, வசனம், டைரக்ஷன்: ப்ராஜீஷ் திவாகரன்.
அப்பாவை முதியோர் இல்லத்துல சேர்க்க அழைச்சிட்டுப் போவான் பையன். நல்ல வசதியான அறையா இருக்குதா, ஏ.சி. இருக்குதா, டி.வி. இருக்குதான்னு பார்த்துப் பார்த்து விசாரிச்சுப் பணம் கட்டுவான். 'தீபாவளிக்கு வீட்டுக்கு வந்துடுவாரா அப்பா?’ன்னு கேப்பா அவன் வொய்ஃப். 'தீபாவளின்னா வீட்டுல ஸ்வீட் பண்ணுவோம். உங்கப்பாவுக்கு ஷுகர். ஸ்வீட் ஆகாது. அப்புறம் பசங்க வெடி வெடிப்பாங்க. உங்கப்பாவுக்கு தலைவேதனையா இருக்கும்’னு அவ சொல்லிட்டே போக, 'சரி சரி, நான் பார்த்துக்கறேன்’னு சொல்லிட்டு, கார்லேர்ந்து அப்பாவோட லக்கேஜை எடுத்துட்டுப் போவான். போகும்போது அந்த இல்லத்தை நடத்துற பாதிரியார்கிட்ட, 'ஃபாதர், அப்பாவோட ரொம்ப நேரம் பேசிட்டிருந்தீங்களே, அப்பாவை இதுக்கு முன்னாடி உங்களுக்குத் தெரியுமா?’ன்னு கேப்பான் பையன். 'ஆமா, தெரியும். முப்பது வருஷத்துக்கு முன்னால இங்கிருந்துதான் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துட்டுப் போனார் உங்கப்பா. உன்கிட்டே சொல்ல வேணாம்னுதான் சொன்னார். ஆனா, எனக்குதான் மனசு கேக்கலே!’ன்னு சொல்லிட்டு நகர்வார் ஃபாதர்.
ரொம்ப டச்சிங்கா இருந்தது.
இது மாதிரி, டெக்னாலஜியை நல்ல முறையில, நல்ல விஷயங்களைப் பகிர்ந்துக்கப் பயன்படுத்திக்கிட்டா சந்தோஷம்.
பொதுவா, சந்தோஷத்துலயே அதிக சந்தோஷம், அடுத்தவரைச் சந்தோஷப்படுத்திப் பார்க்கிறதுதான்னு சொல்வாங்க. ஃபேஸ்புக்ல பார்த்த ஒரு வீடியோ சூப்பர்!
இப்படி... பணமோ, பொருளோ, திறமையோ, உழைப்போஞ் நம்ம கிட்ட இருக்கிற ஏதோ ஒண்ணை தேவைப்படுறவங்களுக்குத் தேவைப்படுற நேரத்துல கொடுத்து உதவுற சுகம் இருக்கே, அதுக்கு ஈடு இணை எதுவும் இல்லை, ப்ரோ!
ஆனா, நம்ம கிட்ட என்ன இருக்குன்னு நம்மள்ல பலருக்கே தெரியறதில்லை. தெரிஞ்சுடுச்சுன்னா சந்தோஷத்தின் சாவியை கைப்பத்திட்டோம்னு அர்த்தம். இதைத்தான் 'உன்னையே நீ அறிவாய்’னு சொன்னார் தத்துவ ஞானி சாக்ரடீஸ்.
திருமந்திரத்தில் திருமூலர் இதை இன்னும் விளக்கமாவே சொல்றார்
தன்னை அறியத் தனக்கொரு கேடில்லை
தன்னை அறியாமல் தானே கெடுகின்றான்
தன்னை அறியும் அறிவை அறிந்தபின்
தன்னையே அர்ச்சிக்கத் தானிருந் தானே.
தானே தனக்குப் பகைவனும், நண்பனும்
தானே தனக்கு மறுமையும், இம்மையும்
தானே தனக்கு வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே!
அவ்வளவுதாங்க மேட்டரு! உங்களை நீங்க புரிஞ்சுக்கிட்டீங்கன்னா உங்களுக்கு நீங்கதாங்க பாஸு!
Comments
Post a Comment