சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து 27 கி.மீ தொலைவில் இருக்கிறது இரணியூர். இங்கு கோயில் கொண்டிருக் கும் ஆட்கொண்ட நாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார்.
காலை 6 மணியிலிருந்து பகல் 12 மணி வரையிலும் மாலை 4.30 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4.30 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையிலும் மாலை 4.30 மணியிலிருந்து 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
நரசிம்மர் சிவனை வழிபட்டபோது, திருமாலின் உக்கிரக் காட்சியைக் கண்டு தானும் உக்கிரம் அடைந்து நவ துர்கையாக வெளிப்பட்ட அம்பாள், சிவனை வழிபட்டுச் சாந்தம் அடைந்ததால் “சிவ புரந்தேவி” என்று பெயர் பெற்றாள்.
ஆட்கொண்ட நாதருக்கு நரசிம்மேஸ்வரர் என்றும் திருநாமம் உண்டு. இரண்யகசிபுவை வதம் செய்ததால் நரசிம்ம மூர்த்திக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியருளியதால், இந்தச் சிவனாருக்கு நரசிம்மேஸ்வரர் என்று திருப்பெயர் வந்ததாம்.
சிற்பங்கள் நிறைந்த இந்தக் கோயிலுக்கு சிற்பக் கோயில் என்றும் சிறப்பு உண்டு. அஷ்டலட்சுமி, அதிகாலசம்ஹாரர், வல்லப கணபதி, ருத்ர மூர்த்தி, கல்யாண சுந்தரர், பிச்சாடனர், வீரபத்திரர், முப்புரம் எரித்தவர், ருத்ர துர்கை, ஸ்தல துர்கை, மகா துர்கை, ஜலதுர்கை, நவதுர்கை, மாதொரு பாகர், விஷ்ணு துர்கை, பிரம்ம துர்கை, இரணிய சம்ஹாரம் முதலான தூண் சிற்பங்கள்
கொள்ளை அழகுடன் திகழ்கின்றன.
அம்பாளின் சந்நிதிக்கு அருகேயுள்ள தூண்களில் உக்கிரமான அம்பாளை நினைவுபடுத்தும் வகையில் நவ துர்கையின் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.
தம்பதிகளுக்கு நடத்தப்படும் சஷ்டியப்தபூர்த்தி, பீமரத சாந்தி, சதாபிஷேக வழிபாடுகள் இங்கே நடைபெறுகின்றன.நவராத்திரி விழாவும் மீனாட்சி திருக்கல்யாணமும் இக்கோயி லில் அதிவிமரிசையாக கொண்டாடப்படுகின்றன.
திருமண வரம் வேண்டுவோர்க்கு இக்கோயிலில் சுயம்வர பார்வதி ஹோமமும், தொழில் பகை நீங்க திருஷ்டி யாகமும், குழந்தைப் பேற்றுக்கு புத்திர சந்தான ஹோமமும் இங்கு நடைபெறுகின்றன.
விடுதலைப் போராட்டக் காலத்தில் திருப்பணிகள் நடைபெற்ற இந்த ஆலயத்தில் பாரத மாதாவுக்கும், மகாத்மா காந்திக்கும் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு.
இந்தக் கோயிலை குபேரக் கோயில் என்று சிறப்பிப்பார்கள். இங்கே குதிரையில் வீற்றிருக்கும் குபேரருக்கு வளர்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நிகழும். இதில் கலந்துகொண்டால் தொழில் விருத்தி ஏற்படும் என்பது ஐதீகம். ஐப்பசி மாத வளர்பிறை அஷ்டமி வழிபாட்டுக்கு வெகுசிறப்பு உண்டு.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து கீழச்செவல்பட்டியை அடைந்தால், அங்கிருந்து இரணியூர் திருக்கோயிலுக்குச் செல்ல ஷேர் ஆட்டோக்கள் வசதி உண்டு.
முன் மண்டபத்திலிருந்து மூலவரையும் கருவறை விமானத்தையும் ஒரே தருணத்தில் தரிசிப்பதும், கருவறை விமானத்தை தரிசித்தாலே மூலவரை தரிசித்த பலன் கிடைப்பதும் இத்தலத்தின் சிறப்பு.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து 27 கி.மீ தொலைவில் இருக்கிறது இரணியூர். இங்கு கோயில் கொண்டிருக் கும் ஆட்கொண்ட நாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார்.
காலை 6 மணியிலிருந்து பகல் 12 மணி வரையிலும் மாலை 4.30 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4.30 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையிலும் மாலை 4.30 மணியிலிருந்து 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
காலை 6 மணியிலிருந்து பகல் 12 மணி வரையிலும் மாலை 4.30 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4.30 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையிலும் மாலை 4.30 மணியிலிருந்து 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
கொள்ளை அழகுடன் திகழ்கின்றன.
விடுதலைப் போராட்டக் காலத்தில் திருப்பணிகள் நடைபெற்ற இந்த ஆலயத்தில் பாரத மாதாவுக்கும், மகாத்மா காந்திக்கும் சிற்பங்கள் அமைக்கப்பட்டிருப்பது இக்கோயிலின் தனிச்சிறப்பு.
இந்தக் கோயிலை குபேரக் கோயில் என்று சிறப்பிப்பார்கள். இங்கே குதிரையில் வீற்றிருக்கும் குபேரருக்கு வளர்பிறை அஷ்டமி தினங்களில் சிறப்பு வழிபாடுகள் நிகழும். இதில் கலந்துகொண்டால் தொழில் விருத்தி ஏற்படும் என்பது ஐதீகம். ஐப்பசி மாத வளர்பிறை அஷ்டமி வழிபாட்டுக்கு வெகுசிறப்பு உண்டு.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலிருந்து 27 கி.மீ தொலைவில் இருக்கிறது இரணியூர். இங்கு கோயில் கொண்டிருக் கும் ஆட்கொண்ட நாதர், சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார்.
காலை 6 மணியிலிருந்து பகல் 12 மணி வரையிலும் மாலை 4.30 மணியிலிருந்து இரவு 7.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். விசேஷ நாட்களில் மட்டும் அதிகாலை 4.30 மணியிலிருந்து மதியம் 2 மணி வரையிலும் மாலை 4.30 மணியிலிருந்து 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.
Comments
Post a Comment