நவசக்தி ஜோதி தீபம்

சாக்லெட் பிரசாதம்
அரக்கோணத்துக்கு அருகில் நெமிலியில் அமைந்துள்ளது பாலா திருக்கோயில். இக்கோயிலில் குழந்தை வடிவில் பாலா வீற்றிருப்பதால் குழந்தைகள் விரும்பும் சாக்லெட் பிரசாதமாக வழங்கப்படுகிறது. மேலும் சரஸ்வதியின் அம்சமாக பாலா திகழ்வதால் மாணவர்களுக்கு பூஜையில் வைக்கப்பட்ட பேனாக்கள் வழங்கப்படுகின்றன. மாணவர்கள் இத்தேவியை வணங்குவதன் மூலம் கிரகிப்புத்திறன், ஞாபக சக்தி பெற்று கல்வியில் சிறந்து விளங்குவர்.

நவசக்தி ஜோதி தீபம்
வேலூர் பழைய பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில். இக்கோயில் அம்பாள் சன்னிதியின் எதிரில், ‘அணையா நவசக்தி ஜோதி தீபம்’ இருக்கிறது. இத்தீபத்தின் வடிவில் அம்பாள் நவசக்திகளாக அருளுகிறாள். வெள்ளிக் கிழமைகளில் இந்த விளக்குக்கு மேளதாளத்துடன், சுத்தன்ன நைவேத்யம் படைத்து விசேஷ பூஜை நடக்கிறது.

குகைக்குள் காளி
ஏலகிரி மலையடிவாரத் தில் உள்ளது குண்டுரெட்டியூர் கிராமம். இங்குள்ள மலையைக் குடைந்து சுரங்கப்பாதை அமைத்துள்ளனர். இச்சுரங்கப் பாதையைக் கடக்க பத்து நிமிடங்கள் ஆகின்றன. இக்குகைப் பாதையின் சுவரில் காளியம்மன் படம் வரையப்பட் டுள்ளது. இந்தக் காளி பல நூறு ஆண்டுகளாக பக்தர்களால் வழிபடப் பட்டு வருகிறாள்.

பில்லி சூனியம் விலக...
வேலூர் மாவட்டம், ஆரணிக்கு அருகில் வாழைப் பந்தலில் உள்ளது பச்சையம்மன் திருக்கோயில். இக்கோயில் கருவறையில் அம்பிகை பச்சைத் திருமேனியளாய் சுதை வடிவில் காட்சி தருகிறாள். சன்னிதியில் பக்தர்களுக்கு பச்சை நிற குங்குமமே பிரசாதமாக அளிக்கப்படுகிறது. பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் நிவாரணம் கிடைக்க இந்த அம்மனை பிரார்த் தனை செய்து பலனடைகின்றனர்.

 

Comments