'ஓம் வரோத்பவாயை நம’ என்பார்கள் சான்றோர்கள். அதாவது, வரங்களைத் தருவதற்காகவே தோன்றியவளாம் ஸ்ரீ மகாலட்சுமி. அவளை, அவளு டைய அவதார தினத்தில் போற்றி வழிபடுவதால், சகல வரங்களையும் வாரி வழங்குவாள். முப்பது முக்கோடி
தேவர்களும் அவளைப் போற்றித் துதித்து லட்சுமி கடாட்சம் பெற்றார்கள் என்கிறது தேவிமஹாத்மியம். அந்தத் துதிகளில் சில வரிகள் இங்கே உங்களுக்காக.
நம: கமலவாஸின்யை நாராயண்யை நமோநம:
கிருஷ்ணப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோநம:
பத்மபத்ரேக்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோநம:
பத்மாஸனாயை பத்மின்யை வைஷ்ணவ்யை ச நமோநம:
ஸர்வஸம்பத் ஸ்வரூபிண்யை ஸர்வாராத்யை நமோநம:
ஹரிபக்தி ப்ரதாத்ர்யை ச ஹர்ஷதாத்ர்யை நமோநம:
கிருஷ்ணவக்ஷ: ஸ்திதாயை ச கிருஷ்ணேஸாயை நமோநம:
சந்த்ரஸோபாஸ்வரூபாயை ரத்னபத்மே ச ஸோபனே
ஸம்பத்யதிஷ்டாத்ருதேவ்யை மஹா தேவ்யை நமோநம:
நமோ வ்ருத்திஸ்வரூபாயை வ்ருத்திதாயை நமோநம:
கருத்து: தாமரைப்பூவில் வசிக்கின்ற ஸ்ரீ மகா லட்சுமிக்கு நமஸ்காரம். ஸ்ரீ நாராயணன் மனைவிக்கு நமஸ்காரம். ஸ்ரீ கிருஷ்ணரின் மனைவியான ஸ்ரீ மகாலட்சுமிக்கு எப்போதும் நமஸ்காரம். தாமரை இதழ் போன்ற கண்கள் உள்ளவளும், தாமரை போன்ற முகம் கொண்டவளுமான ஸ்ரீ மகா லட்சுமிக்கு நமஸ்காரம். தாமரையை ஆசனமாகக் கொண்டவளும், கையில் தாமரையை தரித்தவளும், விஷ்ணு பத்தினியுமான ஸ்ரீ லட்சுமிக்கு நமஸ்காரம்.
சர்வ சம்பத்துகளின் உருவாக இருப்பவளும், யாவராலும் ஆராதிக்கத் தகுந்தவளுமான ஸ்ரீ லட்சு மிக்கு நமஸ்காரம். விஷ்ணு பக்தியையும், சந்தோஷத்தையும் அளிப்பவளான ஸ்ரீ மகாலட்சுமிக்கு நமஸ்காரம். ஸ்ரீ கிருஷ்ணனின் மார்பில் வசிப்பவளும், ஸ்ரீ கிருஷ்ணனை கணவனாக உடையவளுமான ஸ்ரீ மகாலட்சுமிக்கு நமஸ்காரம். சந்த்ரிகையின் சொரூபமாக இருப்பவளும், அழகிய பத்மராகம் எனும் கல்லில், சகல சம்பத்துக்களுக்கும் நாயகி யாகத் திகழும் திருமகளுக்கு நமஸ்காரம். ஐஸ்வரியங்களில் வளர்ச்சியின் ரூபமாகவும், அந்த வளர்ச்சியை உருவாக்குபவளுமான ஸ்ரீ மகா லட்சுமிக்கு நமஸ்காரம்.
தினமும் மூன்று வேளை இந்தத் துதிகளைக் கூறி திருமகளை வழிபட, குபேரனுக்கு நிகரான செல்வகடாட்சத்தை பெறலாம்.
தேவர்களும் அவளைப் போற்றித் துதித்து லட்சுமி கடாட்சம் பெற்றார்கள் என்கிறது தேவிமஹாத்மியம். அந்தத் துதிகளில் சில வரிகள் இங்கே உங்களுக்காக.
நம: கமலவாஸின்யை நாராயண்யை நமோநம:
கிருஷ்ணப்ரியாயை ஸததம் மஹாலக்ஷ்ம்யை நமோநம:
பத்மபத்ரேக்ஷணாயை ச பத்மாஸ்யாயை நமோநம:
பத்மாஸனாயை பத்மின்யை வைஷ்ணவ்யை ச நமோநம:
ஸர்வஸம்பத் ஸ்வரூபிண்யை ஸர்வாராத்யை நமோநம:
ஹரிபக்தி ப்ரதாத்ர்யை ச ஹர்ஷதாத்ர்யை நமோநம:
கிருஷ்ணவக்ஷ: ஸ்திதாயை ச கிருஷ்ணேஸாயை நமோநம:
சந்த்ரஸோபாஸ்வரூபாயை ரத்னபத்மே ச ஸோபனே
ஸம்பத்யதிஷ்டாத்ருதேவ்யை மஹா தேவ்யை நமோநம:
நமோ வ்ருத்திஸ்வரூபாயை வ்ருத்திதாயை நமோநம:
சர்வ சம்பத்துகளின் உருவாக இருப்பவளும், யாவராலும் ஆராதிக்கத் தகுந்தவளுமான ஸ்ரீ லட்சு மிக்கு நமஸ்காரம். விஷ்ணு பக்தியையும், சந்தோஷத்தையும் அளிப்பவளான ஸ்ரீ மகாலட்சுமிக்கு நமஸ்காரம். ஸ்ரீ கிருஷ்ணனின் மார்பில் வசிப்பவளும், ஸ்ரீ கிருஷ்ணனை கணவனாக உடையவளுமான ஸ்ரீ மகாலட்சுமிக்கு நமஸ்காரம். சந்த்ரிகையின் சொரூபமாக இருப்பவளும், அழகிய பத்மராகம் எனும் கல்லில், சகல சம்பத்துக்களுக்கும் நாயகி யாகத் திகழும் திருமகளுக்கு நமஸ்காரம். ஐஸ்வரியங்களில் வளர்ச்சியின் ரூபமாகவும், அந்த வளர்ச்சியை உருவாக்குபவளுமான ஸ்ரீ மகா லட்சுமிக்கு நமஸ்காரம்.
தினமும் மூன்று வேளை இந்தத் துதிகளைக் கூறி திருமகளை வழிபட, குபேரனுக்கு நிகரான செல்வகடாட்சத்தை பெறலாம்.
Comments
Post a Comment